Home Blog Page 3501

இன்றும் மழை பெய்யும் – சீரற்ற காலநிலையால் 43,890 குடும்பங்கள் பாதிப்பு

சப்ரகமுவ, மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (09) 75 மில்லிமீற்றர் வரை மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் திணைக்களம் மேற்படி திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், சீரற்ற காலநிலையால் பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.

வெள்ளம் மற்றும் மண்சரிவால் 1,095வீடுகள் பகுதியளவும், 21 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.

’60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை’ – நுவரெலியாவில் தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பம்!

நுவரெலியா மாவட்டத்தில் வாழ்பவர்களுக்கான கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றும் பணி இன்று (09.06.2021) ஆரம்பமானது.

நுவரெலியா காமினி தேசிய பாடசாலையில் வைத்து ஆரம்பமான தடுப்பூசி திட்டத்தில் முதற்கட்டமாக அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச ஊழியர்கள், தோட்ட அதிகாரிகள் மற்றும் தோட்டத்தொழிலாளர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது.

நுவரெலியா மாவட்டத்துக்கென 50 ஆயிரம் சினோ பாம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் கொரோனா வைரஸ் பரவும் அபாயமுள்ள கிராம சேவகர் பிரிவுகளில் வாழும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 40 ஆயிரம் தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஏனைய 10 ஆயிரம் தடுப்பூசிகள் பொலிஸார், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச ஊழியர்கள் மற்றும் பெருந்தோட்டத்தொழிற்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

காமின தேசிய பாடசாலையில் ஆரம்பமான தடுப்பூசி ஏற்றும் பணியை இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் இன்று நேரடி பயணம் மேற்கொண்டு கண்காணித்தார். தோட்டப்பகுதிகளில் தடுப்பூசி ஏற்றுவதற்கான உட்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுத்தார்.

க.கிசாந்தன்

நுவரெலியாவில் மேலும் 119 பேருக்கு கொரோனா – இதுவரை 4,979 பேர் பாதிப்பு

நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 119 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

2020 ஒக்டோபர் 4 ஆம் திகதியிலிருந்து இதுவரை கொரோனாவால் நுவரெலியா மாவட்டத்தில் 4 ஆயிரத்து 979 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, கண்டி மாவட்டத்தில் 99 பேருக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில் 119 பேருக்கும், பதுளை மாவட்டத்தில் 35 பேருக்கும் நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களை ஒடுக்கவே விசேட கண்காணிப்புக்குழு – சஜித் அணி குற்றச்சாட்டு

போலி தகவல்களை பரப்புவோரை கைது செய்கின்றோம் என்ற போர்வையில் சமூக ஊடகங்களை ஒடுக்குவதற்கு அரசு முயற்சிக்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார குற்றஞ்சாட்டினார்.

நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

இதன்போது சமூகவலைத்தளங்களைக் கண்காணிக்க விசேட சி.ஐ.டி. குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார். இது தொடர்பில் மனுஷ நாணயக்கார எம்.பி. மேலும் கூறியதாவது,

” போலி தகவல்களை பரப்புவோரை கைது செய்ய நடவடிக்கை என்ற போர்வையில் சமூக ஊடகங்கள் தணிக்கைக்கு உட்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. எவராவது போலி தகவல் பரப்பினால் அதற்கு நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை ஏற்கின்றோம்.

ஆனால், சமூக ஊடகங்களை மிரட்டி, நாட்டின் உண்மையான நிலைவரம் தொடர்பான தகவல்கள் மக்களுக்கு சென்றடைவதை தடுப்பதற்காக ஒடுக்குமுறையை அரசு கையாண்டு, கைது படலத்தையும் ஆரம்பித்துள்ளது. இது தொடர்பில் அரசின் உண்மையான நிலைப்பாடு என்ன” – என்றார்.

இரசாயன உரத்துக்கான தடையால் உணவு தட்டுப்பாடு ஏற்படுமா?

” இரசாயன உரப் பாவனை கடந்த நான்கு வருடங்களில் நூற்றுக்கு 300 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இதனால் இரசாயன உரப் பாவனையால் ஆரோக்கியமற்ற சமூகமொன்று உருவாகி வருகிறது. இது மிகவும் ஆபத்தானதொரு நிலையாகும். இதனை தடுத்து நிறுத்தி,சேதனை பசளை முறைக்கு விவசாயத்தை நகர்த்தும் அரசின் தேசிய வேலைத்திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டுமென விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை விவசாய அமைச்சின் விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

“உலகில் இரசாயன உரத்தை பயன்படுத்தி விவசாயத்தில் ஈடுபட்டுவந்த பல நாடுகள் தற்போது சேதனை பசளை உரத்தை பயன்படுத்தி விவசாயம் செய்யும் நிலையை நோக்கி நகர்ந்து வருகின்றன.இரசாயன உர பாவனையால் சுற்றுச் சூழல் மற்றும் சுகாதாரத்துக்கு ஏற்படும் ஆபாத்தமான நிலையை ஆய்வுகள் மூலம் உணர்ந்து அந்தச் செயற்பாடு கைவிடப்பட்டு வருகிறது. உலகில் 187 நாடுகள் சேதனை பசளை முறையை நோக்கி நகர்ந்துள்ளன.

2017 ஆம் ஆண்டு நான்கு இலட்சம் மெற்றிக்தொன் இரசாயன உரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இவ்வருடத்துக்கு மெட்றிக் தொன் 1.2 மில்லியன் இரசாயன உரம் அவசியமென கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது கடந்த நான்கு வருடத்தில் நூற்றுக்கு 300 சதவீதத்தால் இரசாயன உர பயன்பாடு நாட்டில் அதிகரித்துள்ளது.இது மிகவும் அவதானமிக்க நிலையாகும். இவ்வளவு இரசாயன பயன்பாடு அதிகரித்தும் உற்பத்திகள் அதிகரிக்கவில்லை. விவசாயம் செய்யும் நிலப்பரப்பும் அதிகரிக்கவில்லை. எமது நாட்டில் 15 லட்சம் ஹெக்டேயர் நிலப்பரப்பில்தான் விவசாயம் செய்யப்படுகிறது. நெல், தேங்காய், இறப்பர், தேயிலை, மரக்கறி என அனைத்து தேவைகளுக்கு 15 லட்சம் ஹெக்டேயர் நிலப்பரப்புதான் பயன்படுத்தப்படுகிறது. என்றாலும் அதில் தற்போது உற்பத்தி செய்யப்படுவது 13 லட்சம் ஹெக்டேயர்தான்.

விவசாயத்துக்கு இரசாயன உரத்தைதான் பயன்படுத்த வேண்டுமென அனைவரும் நினைக்கின்றனர்.1965ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழகங்களிலும் இதனைதான் கற்றுக்கொடுத்து வருகின்றனர். சேதனை பசளை என்றால் கொம்போஸ் உரம் மாத்திரம்தான் என நினைக்கின்றனர். இன்று தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ளது. எமது நாட்டில் சேதனை பசளையை உற்பத்தி செய்ய தேவையான மூலப்பொருட்கள் உள்ளன. இரசாயன உரம் பாவிக்காத ஒரு காலம் எமது நாட்டில் இருந்தது.

தற்போது அடுத்த போகத்துக்குத் தேவையான உரத்தை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது. சேதனை பசளை உற்பத்தியாளர்கள் விவசாயிகளுடன் கலந்துரையாடல்கள் நடாத்தி வருகின்றனர். விவசாயிகளுக்குத் தேவையான உரத்தை உரிய நேரத்தில் பெற்றுக்கொடுப்போம். அதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.

இரசாயன உரத்துக்கான தடையால் உணவு தட்டுப்பாடு ஏற்படவும் இடமளிக்கமாட்டோம். மக்களுக்கு நச்சுத்தன்மையற்ற உற்பத்தி பொருட்களை வழங்குவதே எமது நோக்கமாகும்.

1994 இல் முதல் சிறுநீரக நோயாளி கண்டறியப்பட்டார். இன்று 65ஆயிரத்திற்கும் அதிகமான நோயாளர்கள் உள்ளனர். சிறுநீரக நோய்க்கு இரசாயன உரம்தான் காரணம் என்பது ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளின் சிறுநீரகத்தை பாதுகாக்க வேண்டும். வடமேல் மாகாணத்தில் 25 சதவீதமானவர்களுக்கு நீரிழிவு நோய் உள்ளது. இதுபோன்று பல நோய்கள் இரசாயன உரம் பாவனையால் ஏற்பட்டுள்ளது.

ஆகவே, இதனை அரசியல்மயப்படுத்த வேண்டாமென எதிர்க்கட்சியினரிடம் கோரிக்கை விடுக்கின்றோம். எமது எதிர்கால சந்ததியினரை பாதுகாக்க வேண்டும். இந்த தேசிய வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைக்குமாறு கோருகிறோம். 100 பில்லியன் வர்த்தகத்துடன்தான் நாம் போராடுகிறோம் .” – என்றார்.

‘கொரோனா’ சட்டத்தை மறந்த மேலும் 1,034 பேர் கைது!

தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் ஆயிரத்து 34 பேர் கடந்த 24 மணி நேரத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் தனிமைப்படுத்தல் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட கடந்த ஒக்டோபர் முதல் இதுவரை அச்சட்டத்தைமீறிய 26 ஆயிரத்து 920 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புறக்கோட்டையில் பாரிய கட்டிடமொன்றில் தீ விபத்து

கொழும்பு, புறக்கோட்டை டேம் வீதியில் உள்ள 05 மாடி கட்டமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயினை கட்டுப்படுத்த 5 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

‘கொரோனா’வால் மேலும் 54 பேர் உயரிழப்பு – பலி எண்ணிக்கை 1,843 ஆக அதிகரிப்பு

நாட்டில் மேலும் 54 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. மே 10 முதல் மே 31 ஆம் திகதிவரை  15 பேரும் ஜுன் 2 முதல் ஜுன் 7வரை 39 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

32 ஆண்களும்,  22 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 843 ஆக அதிகரித்துள்ளது.

‘சமூக வலைத்தளங்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை’

சமூக வலைதளங்களில் உரிமையாளர் இல்லாத கணக்குகள், சமூக வலைத்தளங்களினூடாக பல்வேறு வழிகளில் நாட்டிற்கும், மக்களுக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் தீங்கு விளைவிக்கும் செயல்களை வேண்டுமென்றே உருவாக்கும் நபர்கள் தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (8) தெரிவித்தார்.

இன்று (8) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

‘சமூக வலைத்தளங்களில் வெளியாகின்ற செய்திகளை புலனாய்வு செய்வதற்காக குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தை நியமித்துள்ளதாக நேற்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார். உண்மையிலேயே, சமூக ஊடகங்கள் அரசாங்கத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கிறதா’ என்பது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

சில வாரங்களுக்கு முன்பு இதுதொடர்பாக அமைச்சரவைக்கு அறிக்கையொன்று முன்வைக்கப்பட்டது. அதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக கூறிய அமைச்சர், இலங்கையில் மட்டுமல்ல, இந்தியா, அவுஸ்திரேலியா போன்ற உலகின் பல நாடுகளிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதுபோன்ற உண்மைகளை நேர்மறையான முறையில் முன்வைத்த ஊடகவியலாளர்கள் காரணமாக சில பிரச்சினைகள் முன்வந்தன.

ஊடகவியலாளர்களின் சரியான வழிகாட்டுதலை வேறு பரிமாணங்களுக்கு கொண்டு செல்ல முடியும். இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்ளும் நபர்களால் இவ்வாறான சூழ்நிலைகள் ஏற்படுகின்றன. பிற நிகழ்ச்சி நிரல்களை செயல்படுத்த மக்கள் மறைமுகமாக பங்களிப்பதே இதற்குக் காரணம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதன்படி, நேர்மறையான உண்மைகளை முன்வைக்கும் ஊடகவியலாளர்களைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தான் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பதுளையில் தோட்டப்புற மக்களுக்கு நாளை முதல் தடுப்பூசி!

பதுளை மாவட்டத்துக்கு முதற்கட்டமாகக் கிடைத்துள்ள 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகளை, அம்மாவட்ட மக்களுக்கு, நாளை (09) முதல் ஏற்றும் பணிகள் முன்னெடு்க்கப்படவுள்ளன.

அந்த வகையில், ஹப்புத்தளை, எல்ல, பண்டாரவெல போன்ற பிரேதேசங்களில், நாளைய தினம் தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று, பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான செந்தில் தொண்டமான்  தெரிவித்தார்.

செந்தில் தொண்டமானின் அறிவுறுத்தல்களுக்கமைய, தோட்டப் புறங்களுக்குள்ளேயே தடுப்பூசி ஏற்றும் நிலையங்கள் உருவாக்கப்பட்டு, மிகவும் பாதுகாப்பான முறையில் இந்தத் தடுப்பூசி ஏற்றல் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று தெரிவித்த சுகாதாரத் துறையினர், பதுளை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் அதிகரித்துள்ள தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு, முன்னுரிமை அடிப்படையில் இந்தத் தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன என்றும் குறிப்பிட்டனர்.

சினிமா

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

செய்தி

புடினை விமர்சிக்கும் ஓவியர் போலந்தில் சுட்டுக்கொலை

0
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினைத் தொடர்ந்து விமர்சித்து வந்த பிரபல ரஷ்ய ஓவியர் ஒருவர், போலந்து நாட்டில் 'மரணதண்டனை' பாணியில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இக்கொலைச் சம்பவம் தொடர்பில் போலந்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். Semyon...

பதுளை பகுதியில் கோர விபத்து: பெண் பலி – இருவர் படுகாயம்

0
பதுளை - தென்னபங்குவ வீதியின் வெலிஹிந்த பகுதியில் உள்ள சரிவான வீதியில், இன்று (16) முச்சக்கர வண்டி ஒன்று பேருந்தை (பஸ்) முந்திச் செல்ல முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்தில்...

முச்சக்கர வண்டி மீது முறிந்து விழுந்த பைனஸ் மரம் – தந்தை, மகன் தெய்வாதீனமாக உயிர் தப்பினர்

0
கண்டி - கலஹா பிரதான வீதியின் கலஹாகுறுப் பகுதியில், பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றின் மீது இன்று பைனஸ் மரம் முறிந்து விழுந்து விபத்தொன்று சம்பவித்துள்ளது. பாடசாலை முடிந்ததும் தனது மகனை முச்சக்கர...