Home Blog Page 3711

அக்கரபத்தனை பிரதேச சபை தலைவருக்கு மீண்டும் பிசிஆர் பரிசோதனை!

அக்கரபத்தனை பிரதேச சபையின் தவிசாளரிடம் பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் இன்று (21.12.2020) மீண்டும் பெறப்பட்டுள்ளன.

அக்கரபத்தனை பிரதேச சபையின் தவிசாளரிடம் கடந்த 16 ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெற்றப்பட்டன. பரிசோதனை முடிவில் அவருக்கு வைரஸ் தொற்று நேற்று உறுதியானது.

இந்நிலையிலேயே அவர் மீண்டும் பி.சி.ஆர்  பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் அக்கரபத்தன பிரதேச சபை மற்றும் தலாவக்கலை – லிந்துலை நகரசபை ஆகியன இன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

வைரஸ் தொற்று என உறுதிப்படுத்தப்பட்ட தவிசாளர் பல நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளார். அதில் ஆளுங்கட்சி பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டிருந்த நிலையில், முடிவுகள் வெளிவருவதற்கு முன்னரே அவர் பல இடங்களுக்கு சென்றுள்ளார் எனவும் கூறப்படுகின்றது.

பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பான விசேட அறிவிப்பு

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளைத் தவிர, நாட்டில் ஏனைய பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் தரம் ஒன்று முதல்  5 வரையான வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 11 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று  கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

அத்துடன், மேற்படி பகுதிகளில் ஆரம்ப பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் அதே தினத்தில் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

மேல் மாகாணத்தில் எகிறும் தொற்றாளர்களின் எண்ணிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை மேல் மாகாணத்தில் 27 ஆயிரத்து 32 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட 594 தொற்றாளர்களில் 426 பேர் மேல் மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்று வரை கொழும்பு மாவட்டத்தில் 16 ஆயிரத்து 109 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 2ஆயிரத்து  617 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 8 ஆயிரத்து 306 பேருக்கும் இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

அத்துடன் மேல் மாகாணத்திலேயே அதிகளவு உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கோல்டன் குளோப் விருது விழாவில் சூரரைப் போற்று, அசுரன்

சூரரைப் போற்று, அசுரன் ஆகிய படங்கள் 78ஆவது கோல்டன் குளோப் விருது விழாவில் திரையிட தெரிவாகியுள்ளது.

ஆஸ்கார் விருதுக்கு அடுத்தபடியாக உலக அளவில் உயரிய விருதாக கருதப்படுவது கோல்டன் குளோப் விருதுகள்.

ஆண்டு தோறும் சிறந்த திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் விருது வெல்லும் படங்கள் மற்றும் நடிகர்களுக்கு ஆஸ்கார் விருது கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

78 ஆவது கோல்டன் குளோப் விருது விழா அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஓ.டி.டி தளங்களில் வெளியாகும் திரைப்படங்களும் போட்டியில் பங்கேற்க தகுதி உள்ளவை என்று அறிவிக்கப்பட்டு இருந்தன.

இந்தப் போட்டிக்கு வெளிநாட்டு படங்கள் பிரிவில் திரையிட உலக அளவில் பல்வேறு மொழிகளில் இருந்து 127 படங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றில் 50 படங்கள் திரையிட தேர்வாகி இருக்கின்றன. இந்த பட்டியலில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப் போற்று, வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் மற்றும் மலையாள படமான ஜல்லிக்கட்டு ஆகிய படங்கள் இடம்பெற்று உள்ளன.

இது படக்குழுவினருக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சூரரைப் போற்று படம் ஓ.டி.டி தளத்தில் வெளியானது. அசுரன் படம் கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட ஏற்கனவே தேர்வாகி இருக்கிறது. ஜல்லிக்கட்டு ஆஸ்கார் விருதுக்காக இந்தியா சார்பில் போட்டியிட அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

‘விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததால் பாலியல் மிரட்டல்’

விவசாயிகளின் போராட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்ததால் தனக்கு பாலியல் மிரட்டல்கள் வருகின்றன என்று நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.

தமிழில் தாம்தூம் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், தற்போது ஜெயலலிதா வாழ்க்கை கதையான தலைவி படத்தில் நடித்து முடித்துள்ளார். அடிக்கடி சர்ச்சைக் கருத்துக்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்தி நடிகர்களுக்கு போதைப் பொருள் பழக்கம் இருப்பதாக குற்றம் சாட்டினார். மராட்டிய அரசையும் கடுமையாக சாடினார். இதனால் மும்பையில் அமைந்துள்ள அவரது அலுவலகம் இடிக்கப்பட்டது.

இந்நிலையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தையும் தற்போது விமர்சித்துள்ளார். இதனால் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. “சமூக வலைத்தளத்தில் எனக்கு கற்பழிப்பு மற்றும் கொலை மிரட்டல்கள் வருகிறது” என்று கங்கனா ரணாவத் குற்றம் சாட்டி உள்ளார்.

அவர் மேலும் கூறும்போது,

“சினிமா துறையில் நான் நேர்மையாக இருந்து இருக்கிறேன். அந்த துறையில் உள்ள பலருக்கு என்னை பிடிக்கவில்லை. மணிகர்ணிகா படம் வெளியானபோது கர்னி சேனாவுடன் மோதியதால் அந்த அமைப்புக்கும் என்னை பிடிக்கவில்லை. நான் ஓட்டுகளை சிதறடிப்பதால் எந்த அரசியல் கட்சியும் என்னை விரும்பவில்லை என்கின்றனர். என் மனசாட்சிப்படி வாழ்கிறேன்” என்றார்.

‘பெருந்தோட்டத்துறை சுகாதாரம் தேசிய மயப்படுத்தப்பட வேண்டும்’

இலங்கை பெருந்தோட்டத்துறை சுகாதாரமானது, அரச சுகாதாரதுறையுடன் இணைக்கப்பட வேண்டும். பெருந்தோட்ட சுகாதாரம் தேசிய மயப்படுத்தல் தொடர்பில் கடந்த பல வருடங்களாக பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டுள்ள போதும் அசாதாரண சூழ்நிலைகளின்போது தோட்ட மக்களுக்கு ஏற்படும் சுகாதார ரீதியான பாதிப்பை குறைப்பதற்கு அரசு  நடவடிக்கையை துரிதகதியில் நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று மனித அபிவிருத்தி தாபனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பி. பி. சிவப்பிரகாசம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மனித அபிவிருத்தி தாபனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் மனித அபிவிருத்தி தாபனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பி. பி. சிவப்பிரகாசம் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இலங்கை பெருந்தோட்டத்துறை சுகாதார நிலைமைகள் காலனித்துவக் காலத்துடன் ஒப்பிடுகையில் இன்று வரை குறிப்பிடத்தக்களவு முன்னேற்றத்தை அடைந்துள்ளமை அவதானிக்கத்தக்கது. எவ்வாறெனினும் ஏனைய துறைகளுடன் பார்க்கும்போது பெருந்தோட்ட சுகாதாரம் மற்றும் சமூக,பொருளாதாரதுறைகள் மிக பின்தங்கிய நிலைமையிலேயே காணப்படுகின்றன.

இலங்கையில் இன்றைய சுகாதார கொள்கை அனைவருக்கும் சமத்துவத்தை வலியுறுத்துகின்றது.எனினும் சில பிரித்தானிய கால சட்ட விதிகள் திருத்தப்பட வேண்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் பெருந்தோட்ட மக்களின் சுகாதார பிரச்சினைகளை கருத்தில் கொண்டு மனித அபிவிருத்தி தாபனமானது பெருந்தோட்ட சுகாதாரம் தேசிய மயப்படுத்தல் தொடர்பாக கடந்த பல வருடங்களாக பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு வந்துள்ளது.

எனவே இவ்வாறான அசாதாரண சூழ்நிலைகளின் போது மலையக தோட்டத்துறை சுகாதாரம் தேசிய நீரோட்டத்துடன் இணைந்து காணப்பட்டால் அம்மக்களுக்கு ஏற்படும் சுகாதார ரீதியான பாதிப்பை குறைப்பதற்கு வழிவகுக்கும்.” – என்றார்.

‘லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை- 70 சிறார்களுக்கு கொரோனா தொற்று’

கொழும்பு, லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் ஜீ. விஜேயசூரிய தெரிவித்துள்ளார்.

இதுவரை 70 சிறுவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தினமும் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வரும் சிறுவர்களில் ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வரும் சிறுவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் தற்செயலாக மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனைகளின் போது தினமும் ஐந்துக்கு குறையாத நபர்கள் வைரஸ் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வாறு வருபவர்கள் வைரஸ் தொற்றுக்குள்ளாகி உள்ளார்களா? என்பதை இனங்காணும் வகையிலேயே பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அவ்வாறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் போதே வைரஸ் தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.20 நாள் குழந்தைகளில் இருந்து 14 வயது சிறுவர்கள் வரை வைரஸ் தொற்று நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சிறு குழந்தைகளே பெருமளவில் இருக்கின்றனர். பெற்றோர்கள் அல்லது உறவினர்கள் அவர்களை ஸ்பரிசிக்கின்றமையே அதற்கு முக்கிய காரணம். அதேபோன்று பெற்றோர்கள் கவனயீனமாக பிள்ளைகளை சமூகத்தில் உலவ விடுவதும் அதற்கு ஒரு காரணமாகுமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

‘பொங்கியெழுவேன் என்ற தம்பிகள் கம்பனிகளுக்கு அஞ்சுவதேன்’ – சிவநேசன் சீற்றம்

2021 ஜனவரி முதல் அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்று கொடுக்க முடியவில்லை என்றால் கூட்டு ஒப்பந்தத்தில் கைசாத்திடும் தொழிற்சங்கங்கள் உடன் அதிலிருந்து விலக வேண்டும். இல்லையேல் மலையகத்தில் புதுவிதமான புரட்சி வெடிக்கும் – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் பா. சிவநேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” காலம் காலமாக கூட்டு ஒப்பந்தம் எனும் அடிமை சாசனத்தை வைத்து கொண்டு மலையக மக்களை கூட்டாக ஏமாற்றி வரும் தொழிற்சங்கமும் கம்பனிகளும் உழைப்பிற்கு ஏற்ற ஊதியத்தை தர மறுக்கின்றன. இது இன்று மட்டும் அல்ல காலம் காலமாக – பரம்பரை பரம்பரையாக, எமது மக்களை அடகு வைத்து சொகுசு வாழ்க்கை வாழும் அரசியல் பரம்பரைக் கூட்டங்களே இதற்கு முழு பொறுப்பு கூற வேண்டும்.

சம்பள விடயத்தை தவிர கூட்டு ஒப்பந்தம் ஊடாக எமது மக்களுக்கு கிடைக்க கூடிய சலுகைகள் தற்போது கிடைப்பதில்லை. முதுகெலும்பு இல்லாத தலைமைத்துவமே இதற்கு காரணமாகும்.

எனக்கு அங்கிகாரத்தை தாருங்கள் கம்பெனிகாரர்களை விரட்டுவேன் என்று தம்பட்டம் அடித்த தம்பிகள், இன்று கம்பெனிக்கு பயந்து பெட்டி பாம்பாகிவிட்டனர்.

எனவே ஜனவரி 10 ஆம் திகதிக்குள் சம்பளம் 1000/=ரூபாய் பெற்று கொடுக்க முடியவில்லை என்றால் பாரிய புரட்சியை கைசாத்திடும் தொழிற்சங்கங்கள் எதிர் நோக்க வேண்டி வரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.” – என்றார்.

‘கொரோனா’ – மேலும் ஐவர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 176 ஆக உயர்வு!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

நான்கு ஆண்களும், பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.  இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 175 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் முதலாவது அலையின்போது 13 பேர் மாத்திரமே உயிரிழந்தனர். எனினும், 2ஆவது அலை ஏற்பட்ட பின்னர் உயிரிழப்பு எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் விபரம்

டிக்கோயா -கிளங்கன் வைத்தியசாலையின் கட்டுமான பணிகளை அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார்

டிக்கோயா-கிளங்கன் ஆதார வைத்தியசாலை தொடர்பாக பல்வேறுபட்ட முறைப்பாடுகளும் கட்டிட,உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பாக தொடர்ந்தும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு முறைப்பாடுகள் கிடைத்த வண்ணம் உள்ளது.

இதனை தொடர்ந்து திடீரென வைத்தியசாலைக்கு விஜயத்தை மேற்கொண்டு அங்கு நிலவும் பல்வேறு குறைபாடுகளை நேரில் பார்வையிட்டதுடன் வைத்தியர்களின் வேண்டுகோளுக்கிணங்க வைத்தியசாலையின் உட்கட்டமைப்பு வசதிகளை நிவர்த்தி செய்யும் வகையில் இராஜாங்க அமைச்சரின் ஆலோசனைக்கமைவாக பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் 8.5 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்பு வேலைகளை மேற்கொள்வதற்கு அதிகாரிகளுக்கு பணிப்புரைவிடுத்துள்ளார்.

இதனையடுத்து இரண்டு வாரங்களுக்கு முன்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் வைத்தியசாலைக்கு சென்று அங்கு முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைப்பாடுகளை பார்வையிட்டு மிக விரைவில் அதன் கட்டுமான பணிகளை பூர்த்தி செய்து மக்களின் பாவனைக்கு கையளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

– ஊடகப் பிரிவு

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

ஓராண்டு கடந்தும் ஆறாத வடு: கெரண்டியெல்ல பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மலரஞ்சலி!

0
காலங்கள் உருண்டோடி ஒரு வருடம் கடந்தாலும், அந்த கறுப்பு தினத்தின் வடுக்கள் இன்னும் கெரண்டியெல்ல மக்களின் மனங்களிலிருந்து மறையவில்லை. கடந்த ஆண்டு மே மாதம் 11-ஆம் திகதி கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட கெரண்டியெல்ல பகுதியில்...

ஈரானின் பதில் குறித்து ட்ரம்ப் அதிருப்தி!

0
மத்திய கிழக்கில் நிலவும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமெரிக்கா முன்வைத்த அமைதித் திட்டத்துக்கு ஈரான் வழங்கிய பதிலை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் இது குறித்துப்...