Home Blog Page 3710

T- 10 தொடரில் கெயில், திஸர பெரேரா பங்கேற்பு!

4ஆவது 10 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் 2021 ஜனவரி 28 ஆம் திகதி முதல் பெப்ரவரி  6 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் சபை மற்றும் ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியம் அனுமதியுடன் அரங்கேறும் இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் மராத்தா அராபியன்ஸ் உள்பட 8 அணிகள் கலந்து கொள்கின்றன.

விறுவிறுப்பு நிறைந்த இந்த போட்டியில் பங்கேற்பதை அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் (வெஸ்ட்இண்டீஸ்), அப்ரிடி, சோயிப் மாலிக் (இருவரும் பாகிஸ்தான்), வெய்ன் பிராவோ, ஆந்த்ரே ரஸ்செல், சுனில் நரேன் (மூவரும் வெஸ்ட்இண்டீஸ்), திசர பெரேரா, இசுரு உதனா (இருவரும் இலங்கை) ஆகியோர் உறுதி செய்துள்ளனர் போட்டி அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

 

நாட்டில் மேலும் 364 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 218 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி இன்று மாத்திரம் 364 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 631 ஆக அதிகரித்துள்ளது.

2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 33  ஆயிரத்து 954 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

செந்தில் தொண்டமானுக்கு கிடைத்துள்ள புதிய பதவிகள்!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவரும் பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் , 8 பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களின் துணைத் தலைவர் மற்றும் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதிச் செயலணியினால், செந்தில் தொண்டமானுக்கான இந்த நியமனங்கள், இன்று (21) வழங்கப்பட்டுள்ளன.

இந்தப் புதிய நியமனங்களுக்கான கடிதங்கள், மாவட்டச் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், பசறை, லுணுகலை, எல்ல, பண்டாரவளை, ஹப்புத்தளை, ஹல்துமுல்லை, ஹாலிஎல, ஊவாபரணகம ஆகிய பிரதேசங்களுக்கான நியமனக் கடிதங்களே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளன.

பிரதேச ரீதியான பிரச்சினைகளை இணங்காணல், அபிவிருத்திகளை முன்னெடுத்தல், திட்டமிடல் உள்ளிட்ட பாரிய பொறுப்புகளைக் கொண்டிருக்கும் இந்தப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கள் பலவற்றுக்கு, ஒரே தடவையில் தமிழர் ஒருவர் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை, இதுவே முதல் முறையாகும்.

அந்த வகையில், மேற்படி பிரதேசங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுக்களில் செந்தில் தொண்டமான் உள்வாங்கப்பட்டுள்ளமையானது, அப்பிரதேசங்களில் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேலும் விரைவுபடுத்தும் என்று, செயலணி எதிர்பார்க்கின்றது.

பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின், ‘கிராமத்துடன் கலந்துரையாடல் ஊடான வேலைத்திட்டத்துடன் மீண்டும் கிராமத்துக்கு’ எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் பதுளையில் இடம்பெற்றிருந்த நிலையில், மேற்படி பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்திகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டிருந்தன.

அரசாங்கத்தின் இவ்வாறான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் விரைவுபடுத்தப்பட வேண்டுமென்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் ஆலோசனை வழங்கியுள்ள நிலையில், செந்தில் தொண்டமான் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்தப் புதிய நியமனங்கள் முக்கியத்துவமாகின்றன.

கிளிநொச்சியில் ஆயுதங்கள் மீட்பு!

கிளிநொச்சி அறிவியல் நகர் காட்டுப்பகுதியில் பயன்படுத்த முடியாத நிலையிலான ரி- 56 ரக துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் இவை புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் பெய்த அடை மழையினால் அவை வெளியே வந்துள்ளன.

இது விடயம் தொடர்பில் தகவலறிந்த விசேட அதிரடிப்படையினர் அவற்றை இன்று
மீட்டுள்ளனர்.

இதன்போது ரி – 56 ரக துப்பாக்கிகள் 05, ரவைக்கூடு ஒன்று மற்றும் 30 ரவைகளும்
மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட பகுதி விடுதலைப்புலிகளின் சூட்டு பயிற்சி இடம்பெறும் பகுதி என்பதால் அவை விடுதலைப்புலிகள் பயன்படுத்தியதாக
இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

மீட்கப்பட்ட பொருட்களை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றின்
அறிவுறுத்தலிற்கு அமைவாக மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் மேலும் 146 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 146 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 407 ஐ தாண்டியுள்ளது.  இவர்களில் 28 ஆயிரத்து 682 பேர் குணமடைந்துள்ளனர்.

டயகமவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேருக்கு கொரோனா!

லிந்துலை சுகாதார மருத்துவ காரியாலயத்திற்குட்பட்ட பிரிவில் பதினைந்து கொரோனா நோயாளிகள் இன்று (21.12.2020) அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரே குடும்பத்தில் 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

டயகம மேற்கு தோட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேருக்கும், அக்கரப்பத்தனை நியூ போர்ட்மோர் தோட்டத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கும், லிந்துலை வோல்ட்ரீம் தோட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்தவகையில், டயகம மேற்கு 4ம் பிரிவு தோட்டத்திற்கு கடந்த 11ம் திகதி கொழும்பிலிருந்து வருகை தந்த சமய தலைவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து வருகை தரும் பொழுது கினிகத்தேனை களுகல பகுதியில் அவருக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்துள்ளனர்.

இதனையடுத்து, அவர் டயகம மேற்கு 4ம் பிரிவு தோட்டத்தில் அவரின் உறவினர் வீட்டில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டது மட்டுமன்றி அப்பகுதியில் நடைபெற்ற பூஜை வழிபாடுகளிலும் பங்கேற்றுள்ளமை விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

அதன்பிறகு, அப்பகுதியில் உள்ள 10 குடும்பங்களை சேர்ந்த 50ற்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இதில் கடந்த 14ம் திகதி குறித்த மத தலைவரின் உறவினர் வீட்டில் இருந்த 12 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 11 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று கண்டறியப்பட்டது.

ஏனைய பகுதிகளில் உள்ள தொற்றாளர்கள் கொழும்பு பகுதிகளிலிருந்து வருகை தந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும், குடும்ப உறுப்பினர்களும் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டுசெல்லப்படவுள்ளனர்.

‘கொரோனா’ உலகளவில் 17 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்தை கடந்துள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, 7 கோடியே 72 லட்சத்து 23 ஆயிரத்து 126  பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து 5 கோடியே 41 லட்சத்து 29  ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.

1000 ரூபா குறித்து இன்றும் இறுதி முடிவு இல்லை! கூட்டு ஒப்பந்த பேச்சு வார்த்தை ஒத்திவைப்பு!!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை நிர்ணயிக்கின்ற கூட்டு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை இன்று (21) தொழில் அமைச்சில் நடைபெற்றது.

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவும் கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது முதலாளிமார் சம்மேளனத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனையில் தொழிலாளர்களுக்கு பாதகமாகவுள்ள விடயங்களை நீக்குவது பற்றி விரிவாக ஆராயப்பட்டுள்ளது. ஆனாலும் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு தொடர்பில் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இதனால் பேச்சுவார்த்தை மீண்டும் டிசம்பர் 31ஆம் திகதி நடைபெறவுள்ளது. 

தமக்கு அடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா வேண்டும் என தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என்ற முன்மொழிவை அரசாங்கமும் முன்வைத்துள்ளது. எனினும், அடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படுமா என்பது பற்றி எதுவும் நடைபெறவில்லை. அதேவேளை, ஆயிரம் ரூபா எவ்வாறு கிடைக்கும் என்பது பற்றி கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களும் எதையும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

நிர்வாகம் கைவிரிப்பு! காடாகமாறிவரும் தேயிலை தோட்டம்!!

கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட புளூம்பீல்ட் தோட்டத்தொழிலாளர்கள் கடந்த ஒன்றரை வருடகாலமாக பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றன. எனினும், அவர்களின் கோரிக்கைக்கு நிர்வாகம் இன்னும் தீர்வை வழங்கவில்லை. இதனால் தோட்டங்கள் காடாகிவருவதுடன், மக்களும் வருமானமின்றி பல்வேறு பொருளாதார பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர்.

தனியாருக்கு உரித்தான இத்தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கான ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் போன்வற்றை முறையாக செலுத்தப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்தே தொழிலாளர்கள் போராடிவருகின்றனர். எனினும், இப்பிரச்சினைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை.

இது தொடர்பாக ஊர் மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

” வேலை நிறுத்தத்துக்கு முன்னைய காலகளில் வேலை செய்ய காலத்தை விட குறைவான தொகையே ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் வழங்கப்படுகின்றனது. ஒருசிலர் அந்த பணத்தை கண்ணில் பார்க்கும் முன்பே இறந்துவிட்டனர். எனவே உரிய தொகையை முழுமையாக வழங்க கோரியே இவ்வாறு பணிபகீஸ்கரிப்பை முன்னெடுத்தோம். ஆனால் முடிவு இது வரையிலும் எட்டப்படவில்லை. இது தொடர்பாக முதராளிமார்களிடம் மறைந்த ஆறுமுகன் தொண்டமான் பலசுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியும் இதுவரையிலும் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.

இதனால் தேயிலை தோட்டங்கள் காடாகிகொண்டு வருகின்றது.தொழிலாளர்களை தொழிலை தேடி குடும்பத்தைவிட்டு பிரிந்து வெளி ஊர்களுக்கும் வெளிநாடுகளுக்கும் சென்றுவிட்டனர்.

கொரோனா காலப்பகுதி என்பதால் பொருளாதாரத்தில் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளதாக தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.தோட்டங்கள் காடாகி வருவதால் பாம்புகளும், பன்றிகளும்,சிறுத்தைகளும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் மறைந்த ஆறுமுகன் தொண்டமான் இதற்கான தீர்வை பெற்றுக்கொடுப்பதற்குள் மறைந்துவிட்டார் தற்போது இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானூடாகவே இதற்கான தீர்வு பெற்றுக்கொடுக்க முடியும். எனவே விரைவில் முழுமையான தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு கேட்கின்றோம்.” – என்றனர்.

தகவல் : நீலமேகம் பிரசாந்த்

கண்டியில் 1,368 பேருக்கும், நுவரெலியாவில் 284 பேருக்கு கொரோனா!

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை மத்திய மாகாணத்தில் ஆயிரத்து 1742 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

மினுவாங்கொட, பேலியகொட கொத்தணிகள்மூலமே இவர்களுக்கு இவ்வாறு வைரஸ் பரவியது.

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 03 பேருக்கு வைரஸ் தொற்றியது. அம்மாவட்டத்தில் இதுவரை 284 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை 1,368 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. மாத்தளை மாவட்டத்தில் 90 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

ஓராண்டு கடந்தும் ஆறாத வடு: கெரண்டியெல்ல பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மலரஞ்சலி!

0
காலங்கள் உருண்டோடி ஒரு வருடம் கடந்தாலும், அந்த கறுப்பு தினத்தின் வடுக்கள் இன்னும் கெரண்டியெல்ல மக்களின் மனங்களிலிருந்து மறையவில்லை. கடந்த ஆண்டு மே மாதம் 11-ஆம் திகதி கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட கெரண்டியெல்ல பகுதியில்...

ஈரானின் பதில் குறித்து ட்ரம்ப் அதிருப்தி!

0
மத்திய கிழக்கில் நிலவும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமெரிக்கா முன்வைத்த அமைதித் திட்டத்துக்கு ஈரான் வழங்கிய பதிலை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் இது குறித்துப்...