Home Blog Page 3709

அடிப்படை நாட் சம்பளமாகவே ஆயிரம் ரூபா வேண்டும் – தொழிலாளர்கள் திட்டவட்டம்!

தமக்கு அடிப்படை நாட் சம்பளமாகவே ஆயிரம் ரூபா அவசியம் என்று பெருந்தோட்டத் தொழிலாளர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.

ஆயிரம் ரூபா என்ற உறுதிமொழி 5 ஆண்டுகாலமாக நிறைவேற்றப்படாமல் உள்ள நிலையில், தற்போது எல்லா கொடுப்பனவையும் சேர்த்து ஆயிரம் ரூபா வழங்கும் சம்பள சூத்திரம் தயாரிக்கப்படுமானால் அதனை ஏற்பதற்கு தாம் ஒருபோதும் தயாரில்லை எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

அத்துடன், கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் வெளிப்படைதன்மை அவசியம் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களில் பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்களே கூட்டாக இக்கோரிக்கையை விடுத்துள்ளனர்.

அதேவேளை, கொரோனா வைரஸ் நெருக்கடி காலத்திலும் பெருந்தோட்டத்துறையை பாதுகாத்து ஏற்றுமதி பொருளாதாரத்துக்கு நாம் தோள்கொடுத்துள்ளோம். ஆகவே, எமக்கு அடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்குமாறு கம்பனிகளுக்கு அரசாங்கம் உரிய அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் எனவும் குறிப்பிடுகின்றனர்.

‘தலவாக்கலை நகரையும் சுற்றுலா நகரமாக்கவேண்டும்’

” நுவரெலியாவில் வசந்த காலம் நடைபெறுவதுபோல, தலவாக்கலை நகரையும் ஒரு சுற்றுலா நகரமாக மாற்றமுடியும். அப்பகுதியில் உள்ள நீர்த்தேக்கத்தின் ஒரு பகுதி பாதுகாப்பு இல்லாமல் இருக்கின்றது. தற்கொலைகள் இடம்பெறுகின்றன. எனவே உரிய முறையில் பாதுகாப்பு வேலி அமைத்து, அதனை பாதுகாப்பு பிரிவினரிடம் ஒப்படைத்து சுற்றுலா தளமாக அதனை மாற்றுவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று வனஜீவ ராசிகள் அமைச்சர் சீ.பி. ரத்னாயக்க தெரிவித்தார்.

நுவரெலியா மாநகர சபை கேட்போர் கூடத்தில் நுவரெலியா அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

நுவரெலியா மாநகர சபையின் முதல்வர் சந்தணலால் கருணாரத்ண தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி.திசாநாயக்க, நிமல் பியதிஸ்ஸ, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய சி.பி. மேலும் கூறியவை வருமாறு,

” இன்று ஜனாதிபதியின் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ், நுவரெலியா கிடுமுட்டி ,அக்கரபத்தனை ,பொகவந்தலாவ, பலாங்கொடை வழியாக கதிர்காமம் செல்வதற்கான ஒரு பாதையை அபிவிருத்தி செய்வதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.

அதனை செய்ய முடியுமாக இருந்தால் நுவரெலியா வசந்த காலத்தை இன்னும் சிறப்பாக முன்னெடுக்க முடியும். இதன் மூலம் அதிகமான உல்லாச பிரயாணிகளை இங்கு வரவழைக்க முடியும். உல்லாசத்துறையை அபிவிருத்தி செய்தால் எங்களுடைய உல் நாட்டு உற்பத்திகளுக்கும் ஏனைய வியாபாரிகளுக்கு சிறந்த ஒரு இலாபத்தை ஈட்ட முடியும்.அதுவே எங்களுடைய எதிர்பார்ப்பாகும்.

அதே நேரத்தில் நாங்கள் எந்த காரணம் கொண்டும் அமெரிக்காவின் எம்.சி.சி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட மாட்டோம்.ஏனெனில் எங்களுடைய நிகழ்ச்சி நிரலை அமெரிக்கா தீர்மானிக்க முடியாது. எங்களுடைய நிகழ்ச்சி நிரலை தயாரிக்க வேண்டியவர்கள் நாங்களே.

இன்று பல கருத்து முரண்பாடுகள் இருக்கின்றன. இதை நான் ஏற்றுக் கொள்கின்றேன். அதே நேரம் உங்கள் அனைவருடைய கருத்துக்களையும் செவிமடுப்பதற்கு நான் தயாராக இருக்கின்றேன். நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த நகரத்தையும் நாட்டையும் அபிவிருத்தி செய்வதற்கு ஒன்றுபட்டு செயற்படுவோம் என்பதையே நான் உங்களிடம் கூற விரும்புகின்றேன்.” – என்றார்.

நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு

தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய 1,675 பேர் கைது!

தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய ஆயிரத்து 675 பேர் கடந்த 30 ஆம் திகதி முதல் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

அத்துடன் கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகக்கவசம் அணியாத, சமூக இடைவெளியை பேணாத மற்றும் முடக்கப்பட்ட பகுதிகளில் பொதுவெளியில் நடமாடியமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டயகம மேற்கு பிரிவில் 8 பேருக்கு கொரோனா! மூவருக்கு தொற்று இல்லை என உறுதி!!

டயகம மேற்கு 4ஆம் பிரிவு தோட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என நேற்று செய்தி வெளியாகியிருந்தது.
 
ஆனால் இக்குடும்பத்தில் 8 பேருக்கு மட்டுமே வைரஸ் தொற்றியுள்ளது. பிசிஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் மூவருக்கு வைரஸ் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அக்குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். இந்த தகவலை சுகாதார அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
 
தொற்றுக்குள்ளான 8 பேரும் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.

‘கம்பனி பல்லவி பாடாது ஆயிரம் ரூபா கட்டாயம் வேண்டும்’ – மனோ வலியுறுத்து!

” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்கப்படும் என்ற உறுதிமொழியை அரசாங்கம் கட்டாயம் நிறைவேற்றவேண்டும். ” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வலியுறுத்தினார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற முன்மொழிவை பிரதமரும், நிதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்ச வரவு – செலவுத்திட்ட உரை ஊடாக முன்வைத்தார். ஆனாலும் அதற்காக பட்ஜட்டில் ஒருசதம்கூட ஒதுக்கப்படவில்லை.

2021 ஜனவரி முதல் கொடுப்பனவு வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. அந்த உறுதிமொழி கட்டாயம் நிறைவேற்றப்படவேண்டும். அவ்வாறு இல்லாமல் கம்பனி வழங்கவில்லை, அவர்கள் தரவில்லை, இவர்கள் இணங்கவில்லை என கதைகூறக்கூடாது. கம்பனிகள்தர மறுத்தால் தோட்டங்களை அரசாங்கம் சுவீகரிக்கவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் நிதி ஒதுக்கி தாம் அதனை வழங்கவேண்டும்.

ஆயிரம் ரூபா என்பது ஐந்து வருடங்களுக்கு முன்னர் முன்வைக்கப்பட்ட கோரிக்கையாகும். எனவே, தற்போது 2 ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும். ஆனாலும் ஆயிரத்தை ஏற்கின்றோம். அதனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். ” – என்றார்

‘கம்பனி கதை’ கூறாது 1000 ரூபா கட்டாயம் வேண்டும்! மனோ வலியுறுத்து!!

” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்கப்படும் என்ற உறுதிமொழியை அரசாங்கம் கட்டாயம் நிறைவேற்றவேண்டும். ” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வலியுறுத்தினார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற முன்மொழிவை பிரதமரும், நிதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்ச வரவு – செலவுத்திட்ட உரை ஊடாக முன்வைத்தார். ஆனாலும் அதற்காக பட்ஜட்டில் ஒருசதம்கூட ஒதுக்கப்படவில்லை.

2021 ஜனவரி முதல் கொடுப்பனவு வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. அந்த உறுதிமொழி கட்டாயம் நிறைவேற்றப்படவேண்டும். அவ்வாறு இல்லாமல் கம்பனி வழங்கவில்லை, அவர்கள் தரவில்லை, இவர்கள் இணங்கவில்லை என கதைகூறக்கூடாது. கம்பனிகள்தர மறுத்தால் தோட்டங்களை அரசாங்கம் சுவீகரிக்கவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் நிதி ஒதுக்கி தாம் அதனை வழங்கவேண்டும்.

ஆயிரம் ரூபா என்பது ஐந்து வருடங்களுக்கு முன்னர் முன்வைக்கப்பட்ட கோரிக்கையாகும். எனவே, தற்போது 2 ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும். ஆனாலும் ஆயிரத்தை ஏற்கின்றோம். அதனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். ” – என்றார்.

‘தரிசு நிலங்களை மலையக இளைஞர்களுக்கு வழங்கவும்’

பெருந்தோட்டங்களில் உள்ள தரிசு நிலைங்களை அரசாங்கம் தனியாருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக அறிய முடிகின்றது.எந்த காரணம் கொண்டும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது.தரிசு நிலங்களை எங்களுடைய மலையக இளைஞர் யுவதிகளுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்
மலையக பெருந்தோட்ட பகுதிகளில் இருக்கின்ற தரிசு நிலங்களை பெருந்தோட்ட மலையக இளைஞர்களுக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ச தான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தெரிவித்திருந்தார்.அவர் அதனை அன்றைய வரவு செலவு திட்டத்திலும் குறிப்பிட்டிருந்தார்.
இதன்படி தொழில் இன்றி இருக்கின்ற எங்களுடைய மலையக இளைஞர் யுவதிகளுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டிருந்ததை நாங்களும் அன்று வரவேற்றோம்.ஆனால் இன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தவுடன் பாதை மாறுகின்றது.
எனவே எந்த காரணம் கொண்டும் எங்களுடைய மக்கள் இருக்கின்ற பெருந்தோட்ட பகுதிகளில் காணப்படுகின்ற  தரிசு நிலங்களை வெளியாருக்கோ அல்லது தனியாருக்கோ கொடுப்பதற்கு இடம் கொடுக்க முடியாது.அப்படி வழங்கப்படுமாக இருந்தால் எங்களுடைய மக்களின் இருப்பு கேள்விக்குறியாகிவிடும்.
ஏதிர்காலத்தில் திட்டமிட்ட அடிப்படையில் நல்ல காணிகளையும் பராமரிக்காமல் தோட்ட நிர்வாகம் கைவிட்டால் அவை தரிசு நிலமாக மாறிவிடும் எனவே அவற்றையும் தனியாருக்கும் வெளியாருக்கு வழங்கினால் ஒரு கால கட்டத்தில் எங்களுடைய மக்களின் இருப்பு என்னாவது?எனவே அந்த காணிகளை எங்களுடைய இளைஞர்களுக்கு வழங்குவதே சிறந்தது.
இன்று மலையக இளைஞர் யுவதிகள் பலரும் இந்த கொரோனா தொற்று காரணமாக தங்களுடைய தொழிலை இழந்துள்ளார்கள் எனவே அவர்களுக்கு இந்த தரிசு நிலங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விடுத்து தனியாருக்கோ அல்லது வெளியாருக்கோ வழங்க முயற்சித்தால் அனைவரும் கட்சி தொழிற்சங்க பேதங்களை மறந்து ஒன்றுபட வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

‘அக்கரபத்தனை பிரதேச சபை தலைவருக்கு எதிராக சட்டநடவடிக்கை’

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் வகையில் செயற்பட்டுள்ள அக்கரபத்தனை பிரதேச சபையின் தவிசாளருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுவரெலியா மாவட்ட சுகாதார பணிப்பாளர் வைத்தியர் இமேஷ் பிரதாபசிங்க தெரிவித்தார்.

நுவரெலியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பிரதேச சபை தவிசாளரிடம் இரண்டாவது தடவையும் பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெற்றப்பட்டுள்ளன. அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டுவருகின்றன. அரசாங்க நிகழ்வுகளில் கலந்துகொண்டபோது அவர் எவ்வாறு செயற்பட்டுள்ளார் என்பதனை ஆராய்ந்த பின்னரே பிரமுகர்களை தனிமைப்படுத்துவது குறித்து தீர்மானிக்கபடும்.

அத்துடன், தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய பிரதேச சபை தலைவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் அரசாங்க நிகழ்வுகளை ஏற்பாடு செய்வர்கள் சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றோம். வெளிமாவட்டங்களில் இருந்து பாதுகாப்பின்றி நுவரெலியா பகுதிகளுக்கு சுற்றுலா வருவதனை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

அதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் முதல் இன்று வரை 7 ஆயிரத்து 715 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 334 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.” – என்றார்.

க.கிசாந்தன்

‘கொரோனா’ – 60 வயதுக்கு மேற்பட்ட 115 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை 168 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் 115 பேர் 60 வயதைக்கடந்தவர்களென சுகாதார அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் 10 – 30 வயதுக்கிடைப்பட்ட மூவரும், 31- 40 வயதுக்கிடைப்பட்ட ஐவரும் , 41-50 வயதுக்கிடைப்பட்ட 18 பேரும், 51 -60 வயதுக்கிடைப்பட்ட 26 பேரும், 61-70 வயதுக்கிடைப்பட்ட 33 பேரும், 71 வயதுக்கு மேற்பட்ட 82 பேரும் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் 2ஆவது அலைமூலம் நேற்றிரவுவரை  33 ஆயிரத்து 950  பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 25 ஆயிரத்து 274 பேர் குணமடைந்துள்ளனர்.

மைத்திரி அணிக்கு ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு!

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு தேவையேற்படின் தமது அணியுடன் இணைந்து பயணிக்கலாம் என்று ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு விடுத்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது,

” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாடுகள் தொடர்பில் சுதந்திரக்கட்சி அதிருப்தியில் இருக்கின்றது. எனவே, அக்கட்சி உறுப்பினர்களையும் அரவணைத்துக்கொண்டு பயணிக்கும் எண்ணம் உள்ளதா” என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே எரான் விக்கிரமரத்ன எம்.பி. இவ்வாறு அழைப்பு விடுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஐக்கிய மக்கள் சக்தி என்பது எமது கட்சி.  ஐக்கிய மக்கள் முன்னணி என்பது எமது கூட்டணி. எனவே, எமது கட்சியின் கொள்கையுடன் ஒத்துபோகக்கூடிய எந்த கட்சியும், அமைப்புகளும், நபர்களும் இணைந்து பயணிக்கலாம். கதவுகள் திறந்தே உள்ளன.

ஐக்கிய தேசியக்கட்சிமீதான அதிருப்தியால் அக்கட்சியில் இருந்து வெளியேறியவர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம். ஐக்கிய தேசியக்கட்சிகூட வரலாம். ஆனால் எமது கொள்கைகள் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்.” – என்றார்.

அதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் சம்மேளனத்தில் ஏன் பங்காளிக்கட்சி தலைவர்கள் பங்கேற்கவில்லை என எழுப்பட்ட கேள்விக்கு,

” பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தோம். எனினும், கூட்டம் பதுளையில் நடைபெற்றதால் அவர்களால் பங்கேற்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மற்றும்படி எவ்வித பிரச்சினையும் இல்லை.” – என்றார்.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

வெள்ளக் காடானது பண்டாரவளை நகர்!

0
பண்டாரவளை பகுதியில் இன்று பிற்பகல் வேளையில் பெய்த கன மழையின் காரணமாக பண்டாரவளை நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கடும் மழையினால் நகரில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.வர்த்தக நிலையங்களுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்ததால் விற்பனைக்காக...

ஸ்டாலினை சந்தித்தார் விஜய்: ஆரத் தழுவி வரவேற்றார் உதயநிதி!

0
திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினை, தமிழக முதல்வர் ஜோசப் விஜய், இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். ஸ்டாலினை சந்திக்க ஆழ்வார்பேட்டை இல்லத்துக்கு சென்ற ஜோசப் விஜய்யை, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்...