Home Blog Page 3780

‘நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட நகரங்களை மூடுவதற்கு தீர்மானம் இல்லை’

நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட நகரங்கள் நாளை 12 ஆம் திகதி நள்ளிரவுடன் மூடப்படவுள்ளன என்று வதந்திகள் பரப்பட்டுவருகின்றன. இதனை நம்ப வேண்டாம். இன்னும் அவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்படவில்லை – என்று நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் ரவி குழந்தை வேலு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் கூறியதாவது,

” நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் வர்த்தக நிலையங்களை மூடுவதற்கான தீர்மானம் எடுக்கப்படவில்லை. இது தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள், நகர வர்த்தக சங்கம் மற்றும் பொலிஸ் நிலையங்களோடு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருகின்றன.

கொரோனா வைரஸ் தடுப்பு செயலணியின் தீர்மானத்தின் பிரகாரமே முடிவுகள் எடுக்கப்படும். கடைகளை மூடுவதாக இருந்தால் அது தொடர்பில் உரிய வகையில் அறிவிக்கப்படும். ” – என்றார்.

தகவல் – நீலமேகம் பிரசாந்த்

‘கொரோனா’வால் மேலும் ஒருவர் உயிரிழப்பு! 11 நாட்களில் 22 மரணங்கள்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பானதுறை பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய ஆணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கும்வேளையிலேயே அவர் உயிரிழந்துள்ளார். அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட மரண பரிசோதனையின்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் ஏற்பட்ட மாரடைப்பே மரணத்துக்கான காரணம் என கூறப்படுகின்றது.

இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 11 நாட்களில் மாத்திரம் 22 மரணங்கள் பதிவாகியுள்ளன.

 

‘பொலிஸ் கொத்தணி’ – இதுவரை 612 பேருக்கு கொரோனா!

பொலிஸ் திணைக்களத்தில் பரவிவரும் கொவிட் தொற்று காரணமாக இதுவரை 612 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.

இவ்வாறு பாதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களில் 145 விசேட அதிரடி படை உறுப்பினர்களும் அடங்குவதாக அந்த மையம் குறிப்பிடுகின்றது.

நேற்றைய தினத்தில் மாத்திரம் 91 பொலிஸாருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில் 82 பேர் கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுவோர் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும், பொலிஸ் தலைமையகத்தில் கடமையாற்றும் 6 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

14 ஆம் திகதி பதுளை மாவட்டத்தில் மதுபானசாலைகளுக்கு பூட்டு!

தீபாவளிப் பண்டிகை தினத்தன்று மட்டும் பதுளை மாவட்டத்தில் மதுபான வகைகள் விற்பனை செய்யும் நிலையங்களை மூடிவிடும்படி, இலங்கை மதுவரித் திணைக்கள தலைமையக பிரதி ஆணையாளர், பதுளை மாவட்ட அரச அதிபருக்கு, அனுப்பியுள்ள சுற்று நிரூபமொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார், இலங்கை மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்பியிருந்த கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையிலேயே, மேற்படி சுற்றுநிரூபம் அனுப்பப்பட்டுள்ளது.

தீபாவளிப் பண்டிகை தினத்தன்று, மக்கள் நலன் கருதி, மதுபான வகைகள் விற்பனை செய்யும் நிலையங்களை மூடிவிட உத்தரவிடுமாறு, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார், இலங்கை மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு கடிதமொன்றினை அனுப்பியிருந்தார்.

மதுவரித் திணைக்கள தலைமையக பிரதி ஆணையாளர், பதுளை மாவட்ட அரச அதிபருக்கு அனுப்பியுள்ள சுற்றுநிருபத்தின் பிரதியொன்றையும், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமாருக்கும் அனுப்பியுள்ளார்.

அச் சுற்றுநிருபத்தில் பதுளை மாவட்டத்தில் மஹியங்கனை மற்றும் ரிதிமாலியத்தை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளை தவிர்த்து, மாவட்டத்தின் ஏனைய பிரதேச செயலகப் பிரிவுகளின், மதுபான வகைகள் விற்பனை செய்யும் நிலையங்களை, தீபாவளிப் பண்டிகை தினத்தன்று மட்டும் அனுமதியளித்துள்ளேன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எம். செல்வராஜா, பதுளை

‘மெனிங் சந்தைக்கு பதிலாக பேலியகொடவில் விரைவில் புதிய சந்தை’

கொழும்பு மெனிங் சந்தை மூடப்பட்டமையால் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள மரக்கறி வியாபாரிகளுக்கு தங்களது உற்பத்திகளை விற்பனை செய்து கொள்ளும் பொருட்டு பேலியகொட பிரதேசத்தில் புதிய இடமொன்றை ஒதுக்கீடு செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இதற்கென அரச பொறியியலாளர் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான இடமொன்றை ஒதுக்குவதற்கு எதிர்பார்க்கப்படுவதுடன், சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்றி விரைவில் மெனிங் சந்தையில் கொடுக்கல் வாங்கல்களை ஆரம்பிக்குமாறு (2020.11.10) அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.

தற்போதுள்ள கொவிட் தொற்றுக்கு மத்தியில் பல தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து நேற்று முதல் மீண்டும் மெனிங் சந்தை மூடப்பட்டுள்ளதுடன், அதன் காரணமாக மரக்கறிகளை விற்பனை செய்வதற்காக மெனிங் சந்தைக்கு ஒரு நாளைக்கு வருகைத்தரும் 150 முதல் 200 மரக்கறி லொறிகளை வேறு பொருளாதார மத்திய நிலையங்களுக்கு திருப்பி அனுப்ப வேண்டியுள்ளது.

விவசாய உற்பத்திகளுக்காக விவசாயிகளுக்கு சிறந்த விலையை பெற்றுக் கொடுக்கவும், அதன் மூலம் மரக்கறி தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நுகர்வோருக்கு தேவையான மரக்கறிகளை விநியோகிப்பதற்கும் எதிர்பார்ப்பதுடன், பீ.சீ.ஆர். பரிசோதனைகளை தொடர்ந்து முழுமையான சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்றி புதிய சந்தை நடவடிக்கைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் கௌரவ அமைச்சர்களான பந்துல குணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே, எஸ்.எம்.சந்திரசேன, சி.பீ.ரத்நாயக்க உள்ளிட்ட அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

‘இரத்தினபுரி மாவட்டத்தில் சதமடித்தது கொரோனா’!

இரத்தினபுரி மாவட்டத்தின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்று 100 ஆக அதிகரித்துள்ளதாக இரத்தினபுரி மாவட்டச் செயலாளர் மாலனீ லொகு போதாகம நேற்று தெரிவித்தார்.

நேற்று முன்தினம் வரை 91 ஆக கா ணப்பட்ட கொரோனா நோயாளர்க ளின் எண்ணிக்கை நேற்று திடீரெ ன 9 ஆல் அதிகரித்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

இவ்விடயம் குறித்து ஊடகங்களுக்கு தகவல் வழங்குகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவர்கள் அனைவரும் சப்ரகமுவ மாகாணத்திலுள்ள 5 கொரோனா சிகிச்சை நிலையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதுடன் 1668 குடும்பங்களைசேர்ந்த 5316 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் பிரன்டிக்ஸ், துறைமுக, மீன்குழு என 8 குழுக்களாக வகுக்கப்பட்டு வெவ்வேறாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

2ஆம் அலைக்கு மத்தியிலும் அமைச்சரவை மறுசீரமைப்பு?

இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு விரைவில் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவியொன்று வழங்கப்படவுள்ளது என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

அத்துடன், அவர் வகித்த உள்ளாட்சி மற்றும் மாகாணசபைகள் இராஜாங்க அமைச்சு பதவி, ஆளுங்கட்சி எம்.பியொருவருக்கு வழங்கப்படவுள்ளது.

அரசியலமைப்பின் பிரகாரம் 30 அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்களையும், 40 இராஜாங்க அமைச்சர்களையும் நியமிக்கமுடியும். எனினும், இதுவரையில் 27 பேரே அமைச்சரவை அமைச்சு பதவிகளை வகிக்கின்றனர்.

இந்நிலையிலேயே சரத் வீரசேகர அமைச்சரவைக்கு உள்வாங்கப்படவுள்ளார். அதேபோல கம்பஹா மாவட்டத்தில் உள்ள மற்றுமொரு இராஜாங்க அமைச்சருக்கும், அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளது.

இதனால் ஏற்படும் வெற்றிடத்துக்கு 20 இற்கு ஆதரவாக வாக்களித்த டயானா நியமிக்கப்படுவார்.

அதேவேளை, பஸில் ராஜபக்சவுக்காக எஞ்சிய அமைச்சு பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற பின்னர் அமைச்சு பதவி கையளிக்கப்படும்.

அஸ்திரத்தை கையிலெடுத்தார் அரவிந்தகுமார்! பின்வாங்குமா ம.ம.மு.?

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்ததால் அரவிந்தகுமாரை கட்சியில் இருந்து இடைநிறுத்தும் முடிவை மலையக மக்கள் முன்னணி எடுத்திருந்தது. அத்துடன், கட்சியின் எந்தவொரு செயற்பாட்டிலும் பங்கேற்கக்கூடாது எனவும் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தனக்கு வாக்களித்த மக்களுக்காக மனசாட்சியின் பிரகாரம் தான் செயற்பட்டுவருவதாக அரசியல் விஞ்ஞான விளக்கம் வழங்கியுள்ள அரவிந்தகுமார், சில நாட்களுக்கு முன்னர் ஊவா மாகாண ஆளுநரை சந்தித்திருந்தார்.மேற்படி சந்திப்புக்கு மலையக மக்கள் முன்னணியின் பதுளை மாவட்ட அமைப்பாளர்களையும், செயற்பாட்டாளர்களையும் அவர் அழைத்துச்சென்றிருந்தார்.

கட்சி செயற்பாடுகளில் பங்கேற்க அவருக்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் கட்சி உறுப்பினர்களை எவ்வாறு சந்திப்புக்கு அழைத்துச்செல்ல முடியும் என்ற சர்ச்சை தற்போது வெடித்துள்ளது. இதன் பின்னணியில் அரசியல் காய்நகர்த்தல் இருப்பதாக கருதப்படுகின்றது.

அதாவது தனக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டால் பதுளை மாவட்டத்தில் மலையக மக்கள் முன்னணிக்கு அரசியல் எதிர்காலம் இருக்காது எனவும், செயற்பாட்டாளர்கள் எல்லாம் தனது பக்கமே நிற்கின்றனர் என்பதையுமே இச்சந்திப்புமூலம் அரவிந்தகுமார் காட்டியுள்ளார்.

இதனால் அரவிந்தகுமாருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் மலையக மக்கள் முன்னணி சற்று தயக்கம் காட்டிவருவதை காணமுடிகின்றது.

14,715 பேருக்கு கொரோனா – 9,537 பேர் குணமடைவு – 41 பேர் பலி!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2 ஆவது அலைமூலம் இதுவரையில் 11 ஆயிரத்து 237 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 430தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

இலங்கையில் ஒரே நாளில் அதிகளவான தொற்றாளர்கள் (866) கடந்த 23 ஆம் திகதி அடையாளம் காணப்பட்டனர். ஒரே நாளில் அதிகளவானவர்கள் (765) நேற்று (5) குணமடைந்தனர்.

மினுவாங்கொட கொத்தணிமூலம் ஆயிரத்து 41 பேருக்கும், பேலியகொடை கொத்தணிமூலம் ஆயிரத்து 7 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது. ஏனைய 9 ஆயிரத்து 189 பேரும் இவர்களுடன் தொடர்பை பேணியவர்களாவர்.

நாட்டில் நேற்று மாத்திரம் 8 ஆயிரத்து 272 பிசிஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை 6 லட்சத்து 19 ஆயிரத்து 108 பிசிஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இலங்கையில் கொரோனா மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 715 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 9 ஆயிரத்து 537 பேர் குணமடைந்துள்ளனர். 5 ஆயிரத்து 137 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. 41 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஐ.பி.எல். தொடரில் விருது வென்ற வீரர்கள்

ஐ.பி.எல். தொடரில் 670 ஓட்டங்கள் குவித்த கே. எல் ராகுல் ‘ஆரஞ்சு’ தொப்பியை கைப்பற்றியுள்ளார். ரபாடாவுக்கு ‘பர்பிள்’ தொப்பி கிடைத்துள்ளது.

ஐபிஎல் 13ஆவது சீசன் கடந்த செப்டம்பர் மாதம் ஆரம்பமாகியது. தொடர்ந்து நடைபெற்ற 60 ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தன.

இந்த லீக் ஆட்டங்களில் அதிக ஓட்டங்கள் குவிக்கும் துடுப்பாட்ட வீரருக்கான ஆரஞ்சு தொப்பியும், அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தும் பந்து வீச்சாளருக்கு பர்பிள் தொப்பியும் வழங்கப்படும்.

அதன்படி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைவர் கேஎல் ராகுல் 14 போட்டிகளில் ஒரு சதம், 5 அரைசதங்களுடன் 670 ஓட்டங்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியுள்ளார்.

17 போட்டிகளில் 30 விக்கெட்டுக்கள் வீழ்த்திய ரபாடா பர்பிள் தொப்பியை கைப்பற்றியுள்ளார்.

மேலும் விருது பெற்றவர்கள்:

வளர்ந்து வரும் வீரர்( எமர்ஜிங் பிளேயர்) – தேவ்தத் படிக்கல் (ஆர்சிபி)

பேர் பிளே விருது – ரோகித் சர்மா (மும்பை)

கேம் சேஞ்சர் விருது – கேஎல் ராகுல் (பஞ்சாப்)

சூப்பர் ஸ்டிரைக்கர் விருது – பொல்லார்டு (மும்பை)

அதிக சிக்சர் அடித்த வீரருக்கான விருது – இஷான் கிஷண் – (மும்பை- 30 சிக்சர்)

பவர் பிளேயர் விருது – டிரெண்ட் போல்ட் (மும்பை)

மதிப்பு மிகுந்த வீரர் – ஜோப்ரா ஆர்ச்சர் (ராஜஸ்தான்)

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

இலங்கை விஜயம் வெற்றிகரமாக நிறைவு! நாடு திரும்பினார் மாலைதீவு ஜனாதிபதி!!

0
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துகொண்டு, மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு (Mohamed Muizzu) உள்ளிட்ட தூதுக்குழுவினர் இன்று (06) முற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றனர். மாலைதீவு...

நீதித்துறையின் சுயாதீனம் பாதுகாக்கப்பட வேண்டும்!

0
தற்போதைய அரசு நாட்டின் நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடுவதோடு, மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்து வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளார். ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், "சட்டவாக்கம்,...

தமிழக முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்?

0
தமிழகத்தின் முதல்வராக தவெக தலைவர் விஜய் நாளை பதவியேற்கவுள்ளார் என தெரியவருகின்றது. ஆளுநர் அழைப்பு விடுக்கும்பட்சத்தில் பதவியேற்பு நிச்சயம் நடக்கும் என தெரிகின்றது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழாவை பிரம்மாண்டமாக நடத்த...