Home Blog Page 3779

நாட்டில் மேலும் 317 பேருக்கு கொரோனா!

நாட்டில் மேலும் 317 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி இன்று இதுவரையில் 626 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 350 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் இதுவரையில் 46 பேர் உயிரிழந்துள்ளனர். 10 ஆயிரத்து 183 பேர் குணமடைந்துள்ளனர்.

விஜய் மக்கள் இயக்கத்திற்கு புதிய நிர்வாகிகள் நியமனம்

விஜய் மக்கள் இயக்கத்திற்கு மாவட்ட வாரியாக புதிய நிர்வாகிகளை நடிகர் விஜய் நியமித்துள்ளார்.

விஜய் மக்கள் இயக்கத்திற்கு புதிதாக மாவட்டத் தலைவர்கள், இளைஞர் அணி தலைவர்களை சென்னை, காஞ்சிபுரம், கோவை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இயக்கத்தின் பெயர், புகைப்படம், கொடி உள்ளிட்ட அனைத்திற்கும் அனுமதி பெற வேண்டும் என்றும் இல்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கடந்த வாரம் கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ததையடுத்து நடிகர் விஜய் தனது இயக்கத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தோட்ட குடியிருப்பில் புதையல் தோண்டிய மந்திரவாதி உட்பட நால்வர் கைது!

பெருந்தோட்டப் பகுதி குடியிறுப்பொன்றில் புதையல்தோண்டிக் கொண்டிருந்த நால்வரை ஹாலி-எல பொலிஸார் இன்று (11-11-2020) கைது செய்துள்ளனர். அத்துடன் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணத் தொகுதி மற்றும் பூஜைப் பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டன.

பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட நால்வரில் ஒருவர் மந்திரவாதியாவார்.

ஹாலி-எல பகுதியில் நேப்பியர் பெருந்தோட்ட கீழ்ப்பிரிவு குடியிறுப்பொன்றிலேயே, இவ்வாறு புதையல் தோண்டப்பட்டுள்ளது.

மலசலகூடகுழியொன்று தோண்டும் போர்வையிலேயே மேற்படி செயற்பாடு இடம்பெற்றதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

கொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 45 ஆக உயர்வு!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு 10 மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட மரண பரிசோதனையின்போதே கொவிட் – 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் ஏற்பட்ட உயர்குருதி அழுத்தத்தாலேயே இம்மரணம் ஏற்பட்டுள்ளது.

இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களிக் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது.

‘தொற்றா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை பாதுகாக்கவும்’

தொற்றா நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை கொவிட் நோய்த்தொற்றில் இருந்து பாதுகாப்பதற்கு விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஏனைய நாடுகளைப் போன்று எமது நாட்டிலும் பதிவாகியுள்ள கொவிட் மரணங்களின் எண்ணிக்கையில் 93 வீதமானவற்றுக்கு காரணம் தொற்றா நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாகும் என்று வைத்தியர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

இருதய நோய், நீரிழிவு, சிறுநீரக நோய் மற்றும் புற்றுநோய் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மிக வேகமாக கொவிட் நோய்த்தொற்றுக்கு உள்ளாகின்றனர். பெரும்பாலானவர்கள் நோய் அறிகுறிகள் இன்றியே மரணத்தை தழுவியுள்ளனர். பின்னர் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனைகளின் போது அவர்கள் கொவிட் நோய்த்தொற்றுக்கு உள்ளாகியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி தொற்றாத நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை பாதுகாப்பதற்கும் கொவிட் நோய்த்தொற்றிலிருந்து விலகியிருப்பதற்கும் தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் தினமும் சந்திக்கும் கொவிட் விசேட செயலணியுடனான சந்திப்பு இன்று (11) முற்பகல் இடம்பெற்றது. இதன் போதே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன்றைய கூட்டத்தின் போது கொவிட் பரவல் மற்றும் அதனை கட்டுப்படுத்தல் தொடர்பான தற்போதைய நிலை குறித்தும் எதிர்காலத்தில் எழக்கூடிய வைரசுடன் தொடர்புடைய நோய்களை கட்டுப்படுத்தல் மற்றும் மக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் ஆராயப்படவேண்டிய துறைகள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது.

பிரதான வைத்தியசாலைகளுக்கு வருவதில் மக்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களை இனம்கண்டு ஒரு காலத்தில் நாடுபூராகவும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட பிரதேச மருந்தகங்களை (டிஸ்பென்சரி) உடனடியாக செயற்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். அதற்குத் தேவையான மருத்துவர்கள், தாதிகள் மற்றும் ஏனைய பணிக்குழாமினரை உடனடியாக நியமிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளுடன் சம்பந்தப்படும் தரப்பினர் சரியாக நடைமுறைகளை பேணுகின்றனரா என்பதை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும். அப்பிரதேசங்களிலிருந்து உட்செல்வதற்கோ வெளியேறுவதற்கோ எவருக்கும் இடமளிக்கக் கூடாது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சிறைச்சாலைகளின் நிலைமைகள் மற்றும் நோய்ப்பரவலை தவிர்ப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

கொவிட் நோய்த்தொற்றுடையவர்கள் அதிகம் இனம்காணப்பட்டுள்ள மேல் மாகாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கான பயணங்களை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, பாராளுமன்ற உறுப்பினர்களான பிரேமனாத் சீ தொலவத்த, பிரமித பண்டார தென்னகோன், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோரும் கொவிட் செயலணி உறுப்பினர்களும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

2ஆவது அலையால் பவித்ராவுக்கு சிக்கல்! வருகிறது நம்பிக்கையில்லாப் பிரேரணை!!

சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது என்று சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த பிரேரணையில் சில எம்.பிக்கள் இன்று கையொப்பமிட்ட நிலையில் ஏனையோர் நாளை (12) கையொப்பமிடுவார்கள் எனவும் தெரியவருகின்றது.

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்காமை, மக்கள் மத்தியில் தவறான தகவல்களை வெளியிட்டமை உட்பட மேலும் சில குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக்கொண்டே குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.

‘மேல்மாகாணத்திலிருந்து வெளியேறத்தடை’!

உடன் அமுலுக்குவரும் இன்றிலிருந்து எதிர்வரும் 15 ஆம் திகதி நள்ளிரவுவரை மேல் மாகாணத்தில் இருந்து வெளியிடங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று  இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

‘பட்ஜட்’மீது 19 நாட்கள் விவாதம்! டிசம்பர் 10 வாக்கெடுப்பு!!

2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் எதிர்வரும் 17ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அதனை 19 நாட்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை வரவுசெலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் முன்னெடுக்கப்படவிருப்பதுடன், நவம்பர் 21ஆம் திகதி பிற்பகல் 5 மணிக்கு இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் இடம்பெறும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.

அதன் பின்னர் நவம்பர் 23 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் குழுநிலை விவாதம் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி நிறைவுபெறும். அன்றையதினம் பிற்பகல் 5 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் செயலாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில் இன்று (11) கூடிய பாராளுமன்றம் அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

வரவுசெலவுத்திட்ட விவாதத்தின்போது சபை அமர்வுகள் தினமும் 9.30 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 5.30 மணிவரை முன்னெடுக்கப்படும். நவம்பர் 18ஆம் திகதி முதல் நவம்பர் 20ஆம் திகதி வரையான காலப்பகுதியில் முற்பகல் 9.30 மணி முதல் முற்பகல் 10.30 மணிவரை பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான கேள்விநேரத்துக்காக ஒதுக்கப்படவிருப்பதுடன் நவம்பர் 25ஆம் திகதி முதல் டிசம்பர் 10ஆம் திகதிவரையான காலப் பகுதியில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்துக்காக முற்பகல் 9.30 மணி முதல் முற்பகல் 10.00 மணிவரையும் நேரம் ஒதுக்கப்படும்.

பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் சபை முதல்வர் தினேஷ் குணவர்த்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆளும் கட்சியின் முதற்கோலாசான் ஜோன்ஸ்டன் பெர்னாந்து, எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் லக்ஷ்மன் கிரியல்ல, அமைச்சர்களான நிமல்சிறிபால.டி.சில்வா, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், டளஸ் அலகப்பெரும, பிரசன்ன ரணதுங்க,

வாசுதேவ நாணயக்கார, அலி சப்ரி ஆகியோரும் பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த சமரசிங்க, ரஞ்சித் மத்தும பண்டார, கயந்த கருணாதிலக, ரவூப் ஹக்கீம், டிலான் பெரேரா, அனுர திஸாநாயக்க மற்றும் மனோ கணேசன் ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.

அத்துடன் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க மற்றும் பிரதிச் செயலாளர் நாயகமும் பணியாட்தொகுதி பிரதானியுமான நீல் இத்தவல ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்

‘கொரோனா’ தொற்றாளர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது!

நாட்டில் மேலும் 309 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி இலங்கையில் கொரோனா 2ஆவது அலைமூலம் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 24 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் இதுவரையில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். 10 ஆயிரத்து 183 பேர் குணமடைந்துள்ளனர்.

பதுளையில் தோட்டத்தொழிலாளிமீது முறிந்து விழுந்தது மரக்கிளை! தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!!

பதுளை பகுதியில் வீசிய பலத்த காற்றினால் கின்ரோஸ் பெருந்தோட்டப் பிரிவில் பாரிய மரமொன்றின் கிளை முறிந்து விழுந்ததில் பெண் தொழிலாளியொருவர் படுகாயமடைந்து பதுளை அரசினர் மருத்துமனை தீவிர சிகிச்சைப் பிரிவில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வனர்த்தம் 11-11-2020 (இன்று) பிற்பகல்கின்ரோஸ் பெருந்தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

கின்ரோஸ் பெருந்தோட்டப் பிரிவைச் சேர்ந்த எஸ். ஜானகி என்ற 54 வயது நிரம்பிய பெண் தொழிலாளிமீதே மரக்கிளை முறிந்து விழுந்துள்ளது. அவ்வேளையில் ஏனைய தொழிலாளர்கள் பெண் தொழிலாளி மீது விழுந்த மரக்கிளையை அகற்றிவிட்டு அத்
தொழிலாளியை மீட்டு, பதுளை வைத்தியசாலைக்கு கொண்டுசென்றனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அப்பெண் தொழிலாளியின் நிலை கவலைக்கிடமாகஇருப்பதால் அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து தீவிசிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.

எம். செல்வராஜா

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

“திருகோணேச்சரம் ஆலய வளாகத்தில் ரேடார் நிறுவப்படாது” இலங்கை விமானப்படை

0
திருகோணமலையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க திருகோணேச்சரம் ஆயல வளாகத்தில் ரேடார் அமைப்பை நிறுவும் திட்டங்கள் எதுவும் இல்லை என கடற்படை தெரிவித்துள்ளது. திருகோணமலையில் உள்ள திருகோணேச்சேரம் ஆலய நிர்வாக சபையின் வாழ்நாள் உறுப்பினர் சி....

எரிபொருள் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆஸ்திரேலியா புது வியூகம்!

0
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் உர விநியோகச் சிக்கல்களைச் சமாளிக்கும் நோக்கில், 10 பில்லியன் டாலர் மதிப்பிலான பிரம்மாண்ட பாதுகாப்புத் திட்டத்தை பெடரல் அரசு அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஒரு பில்லியன் லிட்டர் எரிபொருளை...