Home Blog Page 3778

‘குளவிக் கூடுகளால் பலாங்கொடை தொழிலாளர்கள் அச்சத்தில்’

பலாங்கொடை பிரதேசத்தின் தேயிலைத் தோட்டங்களில் காணப்படும் குளவிக்கூடுகளால் அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் பல நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

தோட்டப் பகுதிகளில் உள்ள தேயிலைச் செடிகளிலும் மரங்களிலும் குளவிகள் பெருமளவில் கூடுகளை கட்டி இருப்பதால் தொழிலாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

தேயிலைச் செடிகளிலும் மரங்களின் கிளைகளிலும் குளவி கூடுகட்டி இருப்பதால் எச்சந்தர்ப்பத்திலும் ஆபத்துக்கள் நேரிடலாம் என்ற அச்சத்தில் இவர்கள் தொழில் செய்வதாகவும் தெரிவிக்கின்றனர்.

சில சந்தர்ப்பங்களில் தொழிலாளர்கள் பணியாற்றும் போது குளவிகள் விரட்டியதால் தொழிலாளர்கள் தப்பி பிழைத்து ஒடிய சம்பவங்களும் ஏற்பட்டுள்ளதாக இவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். எனவே தொழிலாளர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ள குளவிக் கூடுகளை அகற்றுவதற்கு தோட்ட நிர்வாகங்கள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர்.

ராஸ்ஸகல, மாரதென்ன, சமனலவ, தந்த ஹிடுவல, வலேபொட வெலே, கும்புற ஹெரமிட்டிகல, ஊவெல்லறை தோட்டம் , ஓபநாயக்க ஆகிய தோட்டப் பிரதேசங்களிலேயே இவ்வாறு குளவிகள் கூடுகள் கட்டியுள்ளதால் அச்சுறுத்தல் நிலை தொடர்வதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதனால் தமக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை தோட்ட நிர்வாகங்கள் மேற்கொள்ள வேண்டும் என இவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

‘சாமிமலை டீசைட் தோட்டத்தில் 15 நாட்கள் கடந்தும் இன்னும் பிசிஆர் பரிசோதனை இல்லை’

மஸ்கெலியா, சாமிமலை டீசைட் தோட்டத்தில் கடந்த மாதம் 28 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் இதுவரையில் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்படவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த தோட்டத்தைச்சேர்ந்த ஏழு பேர் , பேலியகொடை பகுதியில் நிர்மாணிக்கப்படும் கட்டடமொன்றில் கூலித்தொழிலாளிகளாக வேலைசெய்துள்ளனர்.எனினும், கொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து ஊருக்கு திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து அவர்களும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் 28 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தப்பட்டனர். இன்றுடன் 15 நாட்கள் கடந்துள்ள நிலையிலும் இவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதா என்பதை கண்டறிவதற்கான பிரிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை.

இது தொடர்பில் தோட்ட நிர்வாகத்தால், மஸ்கெலியா பிரதேச சபை மற்றும் பொலிஸ் நிலையங்களுக்கு இரண்டு தடவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்றும், இன்னும் உரிய பதில் கிடைக்கவில்லை எனவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் தெரிவித்தனர்.

” தோட்டத்தில் வேலை நாட்கள் குறைவு என்பதாலேயே பேலியகொடை பகுதிக்கு வேலைக்கு சென்றோம். அசாதாரண சூழ்நிலையில் திரும்பிவரவேண்டி ஏற்பட்டது. அவ்வாறு வந்தும் பல நாட்கள் ஆகிவிட்டன. இன்னும் எங்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை.

அந்த பரிசோதனை மேற்கொண்டு, முடிவு வந்ததால்தான் வேலை வழங்கப்படும் என தோட்ட நிர்வாகம் சொல்கின்றது. எனவே, எங்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும். வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.” – என்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் தெரிவித்தனர்.

சாமிமலை நிருபர் – ஞானராஜ்

ஹட்டன் கல்வி வலயத்திலிருந்து 990 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் படி ஹட்டன் கல்வி வலயத்திலிருந்து 990 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக வலயக்கல்விப் பணிப்பாளர். பி.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

ஹட்டன் கல்வி வலயத்தின் உயர்தர பெறுபேறுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்கள் தொடர்பான வெட்டுப்புள்ளிகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அண்மையில் வெளியிட்டிருந்தது.

இந்த வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் ஹட்டன் கல்வி வலயத்தில் 1 ஏபி,1 சி 38 தமிழ் , சிங்கள பாடசாலைகளிலிருந்து 990 மாணவர்கள் இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளனர்.

இதில் தமிழ் மொழி மூலம் 715 மாணவர்களும் சிங்கள மொழி மூலம் 275 மாணவர்களும் தெரிவாகியுள்ளனர்.

இதில் உயிரியல் விஞ்ஞானப்பிரிவில் தமிழ் மூலம் 60 மாணவர்களும் சிங்கள மொழிமூலம் 20 மாணவர்களும் பௌதீக விஞ்ஞானப்பிரிவில் தமிழ் மூலம் 40 சிங்கள மொழிமூலம் 20, வர்த்தக பிரிவில் தமிழ் மொழி மூலம் 150 சிங்களம் 60 மாணவர்களும்,

கலைத்துறையில் தமிழ் மொழி மூலம் 400 மாணவர்களும் சிங்கள மொழி மூலம் 120 மாணவர்களுமாக தொழில்நுட்ப பாடங்களில் தமிழ் மொழிமூலம் 65 பேரும் சிங்கள மொழி மூலம் 55 பேருமாக 990 பேர் தெரிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சூரரைப்போற்று படம் எப்படி? குவியும் பாராட்டுகள்

இந்தியாவில் குறைந்த விலையில் விமானப் பயணங்களைச் சாத்தியமாக்கிய ஏர் டெக்கானின் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கைக் கதையைத் தழுவி உருவாக்கப்பட்ட படம், சூரரைப் போற்று.

ஒரு விமானம் சென்னை விமான நிலைய ஓடுபாதையில் இறங்குவதற்கு அனுமதி கேட்கிறது. அனுமதி மறுக்கப்படவே, அருகில் உள்ள தாம்பரம் விமானப்படை விமான தளத்தில் எச்சரிக்கையை மீறி இறக்கப்படுகிறது. ராணவ வீரர்கள் விமானத்தைச் சுற்றி வளைக்கிறார்கள். இப்படி ஒரு விறுவிறுப்பான காட்சியோடு துவங்குகிறது சூரரைப் போற்று.

மதுரை சோழவந்தானைச் சேர்ந்த நெடுமாறனுக்கு (சூர்யா) குறைந்த விலையில் எல்லோரும் பயணம் செய்யும்வகையில் ஒரு விமான நிறுவனத்தைத் துவங்க வேண்டுமென ஆசை. ஆனால், அந்தக் கனவு எளிதில் கைகூடுவதாயில்லை. ஏற்கனவே அந்தத் தொழிலில் இருப்பவர்களும் அதிகாரவர்க்கமும் சேர்ந்துகொண்டு முட்டுக்கட்டை போடுகிறார்கள். நெடுமாறனின் திட்டங்களைச் சீர்குலைக்கிறார்கள். இதை மீறி, நெடுமாறனால் தன் விமான நிறுவனத்தை செயல்பட வைக்க முடிந்ததா என்பதுதான் கதை.

ஏர் டெக்கான் நிறுவனத்தைத் துவங்கிய கேப்டன் ஜி.ஆர். கோபிநாத் தான் நினைத்ததைத் திட்டமிட்டு, உடனடியாக முடித்தேயாகவேண்டுமென்ற தீவிரம் கொண்டவர். சைனிக் பள்ளியில் சேர்ந்து, தேசிய ராணுவ அகாடெமியில் படித்து, போரில் பங்கேற்று, விவசாயம் செய்து, தேர்தலில் போட்டியிட்டு, ஹெலிகாப்டர் வாடகைக்குவிடும் நிறுவனத்தைத் துவங்கி, பிறகு குறைந்த கட்டண விமான நிறுவனத்தைத் துவங்கியவர்.

கோபிநாத்தின் இவ்வளவு நீண்ட சாகசத்தில் ஒரு குறிப்பிட்ட அத்தியாத்தை மட்டும் எடுத்து திரைக்கதையாக்கியிருக்கின்றனர் சுதா கொங்கராவும் அவரது குழுவினரும். இது ஒரு புத்திசாலித்தனமான முடிவு. இதனால் படத்தின் இலக்கு தெளிவாகிவிடுவதால், அந்த இலக்கை நோக்கி கதாநாயகனோடு சேர்ந்து நாமும் பரபரப்பாக பயணிக்கும் உணர்வு ஏற்படுகிறது.

படத்தில் பல இடங்களில் கண்ணீர் சிந்தவைக்கும், உணர்ச்சிவசமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கோபிநாத் ஒரு விமான நிறுவனத்தை துவங்குவதற்கு முன்பு எதிர்கொண்ட பிரச்சனைகள், சினிமாவுக்கு ஏற்றபடி மாற்றப்பட்டிருக்கின்றன. இந்தச் சின்னச் சின்ன பிரச்சனைகளை விட்டுவிட்டால், ஒரு ரசிக்கத்தக்க படம் இது

கோபிநாத்தின் சுயசரிதையைப் படித்திருந்தால், படத்தில் வரும் பாத்திரங்களை எளிதில் அடையாளம் காணலாம். அப்படிப் படித்திருக்காவிட்டாலும் பாதமில்லை. குறுந்தாடி வைத்துக்கொண்டு கையில் மதுக் கோப்பையோடு, விமான நிறுவனம் நடத்திய பாலைய்யா யார் என்று படம் பார்ப்பவர்கள் எளிதில் புரிந்துகொள்வார்கள்.

இந்தப் படத்தில் நடிகர்கள் தேர்வும் கச்சிதம். சூர்யாவில் துவங்கி வில்லனாக வரும் பரேஷ் வரை எல்லோருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஜி.வி. பிரகாஷின் இசை படத்திற்கு கூடுதல் பலம். பாடல்களும் உறுத்தாத வகையில் இடம்பெற்றிருக்கின்றன.

கேப்டன் கோபிநாத்தின் சுயசரிதையான Simply Fly – A Deccon odyssey மிக விறுவிறுப்பான புத்தகம். ஒரு சுயசரிதை என்னதான் சுவாரஸ்யமாக இருந்தாலும் சரி, அதை சினிமாவாக மாற்றும்போது சுவாரஸ்யமாக இருக்குமென உத்தரவாதம் கொடுக்க முடியாது. ஆனால், சுதா கொங்கரா அதை இந்தப் படத்தில் செய்திருக்கிறார்.

2021 ஐ.பி.எல். தொடரில் 9 அணிகள்!

ஐ.பி.எல். தொடரில் 9ஆவது அணியை இணைப்பதற்கு பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 8 அணிகள் இதில் பங்கேற்றன. 4ஆவது சீசனில் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்த்தப்பட்டது. பின்னர் 8 ஆக குறைக்கப்பட்டது. 2014ஆம் ஆண்டு போட்டியில் இருந்து தற்போது வரை 8 அணிகளே விளையாடி வருகின்றன.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு (2021) நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் கூடுதலாக ஒரு அணியை சேர்க்க கிரிக்கெட் சபை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் 2021 சீசனில் 9 அணிகள் பங்கேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக இந்த ஆண்டு கிரிக்கெட் சபைக்கு மிகப்பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டது. இந்த நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காகவே அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் 9ஆவது அணியை சேர்க்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து உள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெறும் போட்டிக்காக வீரர்கள் அனைவரும் புதிதாக ஏலத்தில் விடப்படுவார்கள் என்று கிரிக்கெட் சபை தகவல் தெரிவிக்கிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வீரர்களின் ஏலம் நடைபெறும். 9-வது அணி அகமதாபாத்தை மையமாக கொண்ட அணியாக இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் மட்டும் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று அபாயம்!

கொழும்பில் ஆறு இலட்சம் பேரில் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்றும் அபாயம் உள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார மருத்துவர் றுவன் விஜயமுணி தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகர சபைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 30 ஆயிரமாக உயர்வடைய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார்.

எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட 400 பிசிஆர் பரிசோதனையில் 19 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனடிப்படையில் நூற்றுக்கு 5 வீதமாக தொற்றாளர்கள் இனங்காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

அந்த விகிதாசாரத்தின் அடிப்படையில் 30 ஆயிரம் பேர் வரையில் வைரஸ் தொற்றுடன் இருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் குறித்த தொற்றாளர்களிடமிருந்து தொற்றுப் பரவுகின்றதா அல்லது உடலிலே உள்ளதா என்பதைத் தீர்மானிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2ஆவது அலைமூலம் 11,857 பேருக்கு கொரோனா! 2 நாட்களில் 10 மரணங்கள்!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2 ஆவது அலைமூலம் இதுவரையில் 11 ஆயிரத்து 857 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 635 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

இலங்கையில் ஒரே நாளில் அதிகளவான தொற்றாளர்கள் (866) கடந்த 23 ஆம் திகதி அடையாளம் காணப்பட்டனர். ஒரே நாளில் அதிகளவானவர்கள் (765) கடந்த 5 ஆம் திகதி குணமடைந்தனர்.

நாட்டில் நேற்று மாத்திரம் 10 ஆயிரத்து 27 பிசிஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை 6 லட்சத்து 29 ஆயிரத்து 315 பிசிஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இலங்கையில் கொரோனா மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 350 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 10 ஆயிரத்து 183 பேர் குணமடைந்துள்ளனர். 5 ஆயிரத்து 121 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. 46 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2 நாட்களில் மாத்திரம் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் 5 கோடியே 29 லட்சம் பேருக்கு கொரோனா!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்து 89 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, 5 கோடியே 24 லட்சத்து 29 ஆயிரத்து 682 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் ஒரு கோடியே 44 லட்சத்து 65 ஆயிரத்து 731 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 95 ஆயிரத்து 15 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவில் இருந்து 3 கோடியே 66 லட்சத்து 74 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.

மரக்கிளை விழுந்த பெண்ணுக்கு முன்னுரிமை வழங்க செந்தில் பணிப்புரை

மரக்கிளை விழுந்த பெண்ணுக்கு முன்னுரிமை வழங்க பணிப்புரை

கின்ரோஸ் பெருந்தோட்டப் பிரிவைச் சேர்ந்த 54 வயது பெண் தொழிலாளி ஒருவர் மீது மரக்கிளை முறிந்து விழுந்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் நடைபெற்றிருந்தது.

குறித்த பெண் தொழிலாளியின் நலன்புரியில் அக்கறை செலுத்தத் தவறிய நிலையில், பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான், குறித்த கம்பனி நிர்வாகத்தைத் தொடர்புகொண்டுள்ளார்.

இதன்பின்னர் குறித்த பெண்ணுக்கு மருத்துவக் காப்புறுதி வழங்குவதற்கு ஏற்பாடு செய்வதாக கம்பனி முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இரண்டு வாரங்கள் ஓய்வில் இருக்கும் சந்தர்ப்பத்தில் அவருக்கு சம்பளம் வழங்குவதற்கும், இனிவரும் காலங்களில் தேயிலைக் கொழுந்து பறிப்பதில் இருந்து இலகு வேலைக்கு மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு செந்தில் தொண்டமான் பணிப்புரை வழங்கியுள்ளார். இதனை நடைமுறைப்படுத்துவதற்கு கம்பனி நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளது.

அத்துடன், காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு முன்னுரிமை அடிப்படையில் சிகிச்சயளிக்க வேண்டும் என்றும் சுகாதார அதிகாரிகளுக்கு செந்தில் தொண்டமான் பணிப்புரை வழங்கியுள்ளார்.

  • ஊடகப் பிரிவு

‘கொரோனா’ – நாட்டில் மேலும் ஒருவர் உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இம்புல்கொட பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஆணொருவரே, மஹரகம வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையிலேயே இவர் உயிரிழந்துள்ளார்.  மரண பரிசோதனையின்போதே அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களிக் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

“திருகோணேச்சரம் ஆலய வளாகத்தில் ரேடார் நிறுவப்படாது” இலங்கை விமானப்படை

0
திருகோணமலையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க திருகோணேச்சரம் ஆயல வளாகத்தில் ரேடார் அமைப்பை நிறுவும் திட்டங்கள் எதுவும் இல்லை என கடற்படை தெரிவித்துள்ளது. திருகோணமலையில் உள்ள திருகோணேச்சேரம் ஆலய நிர்வாக சபையின் வாழ்நாள் உறுப்பினர் சி....

எரிபொருள் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆஸ்திரேலியா புது வியூகம்!

0
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் உர விநியோகச் சிக்கல்களைச் சமாளிக்கும் நோக்கில், 10 பில்லியன் டாலர் மதிப்பிலான பிரம்மாண்ட பாதுகாப்புத் திட்டத்தை பெடரல் அரசு அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஒரு பில்லியன் லிட்டர் எரிபொருளை...