இலங்கையின் 75ஆவது பட்ஜட் நாளை சமர்ப்பிப்பு – டிசம்பர் 10 இறுதி வாக்கெடுப்பு!
20 ஐ ஆதரித்த அரவிந்தகுமாருக்கு ஆளுங்கட்சி பக்கம் ஆசனம்!
அரவிந்தகுமார், டயானா கமகே ஆகியோருக்கு பாராளுமன்றத்தில் ஆளுங்கட்சி பக்கத்தில் ஆசனங்களை ஒதுக்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சி பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவால் இதற்கான கோரிக்கை சபாநாயகரிடம் முன்வைக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளது.
அத்துடன், அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்த எதிர்க்கட்சியின் ஏனைய ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சி பகுதியிலேயே தனியாக ஆசனங்களை ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
’20’ இற்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய மக்கள் சக்தியிலுள்ள உறுப்பினர்களுக்கு ஆளுங்கட்சி பக்கம் ஆசனங்களை ஒதுக்குமாறு, எதிரணி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியல்ல அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊவா மாகாணத்தில் சாதனை படைத்த மாணவி!
கொழும்பு மாவட்டத்தில் 43 நாட்களில் 5,668 பேருக்கு கொரோனா!
கொழும்பு மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 541 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் கடந்த ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் நேற்றுவரை கொழும்பு மாவட்டத்தில் 5 ஆயிரத்து 668 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட ரீதியிலான தொற்றாளர்களின் விபரம் வருமாறு,

’20’ ஐ ஆதரித்த டயானாவுக்கு ஆப்பு வைத்தார் சஜித்!
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த டயானா கமகேவை கட்சியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி, அது தொடர்பான விளக்க கடிதத்தை டயானாவுக்கு அனுப்பிவைத்துள்ளது.
20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த டயானாவை நாடாளுமன்றக்குழுவில் இருந்து நீக்குவதற்கு ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்திருந்தது.
இந்நிலையிலேயே அடுத்தக்கட்ட நடவடிக்கையாக கட்சி உறுப்புரிமையில் இருந்து அவர் நீக்கப்படவுள்ளார். இதற்கான சட்டபூர்வமான அறிவித்தலே சஜித்தால் அனுப்பட்டுள்ளது.

கம்பளை இந்துக் கல்லூரி மாணவி வரலாற்று சாதனை!
கம்பளை, இந்துக் கல்லூரி வரலாற்றில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் முதல் முறையாக 192 புள்ளிகளைப்பெற்று மாணவியொருவர் சாதனை படைத்துள்ளார்.
கம்பளை கோணடிக்கா தோட்டத்தைச் சேர்ந்த ராஜா, கனகவள்ளி தம்பதியினரின் மகளான
பானு சதுர்சிகா என்ற மாணவியே இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
கோணடிக்கா தோட்டத்திலிருந்து பாடசாலை வருவதற்கு உரிய நேரத்தில் பஸ்கள் இல்லை. அதுமட்டுமல்ல அப்பகுதியில் பிரத்தியேக வகுப்புகளும் இல்லை. அப்படி இருந்தும் பரீட்சையில் சாதனை படைத்த மாணவிக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கல்லூரியின் அதிபர் எஸ்.ரகு, வகுப்பாசிரியர் ஆர். கிஷாந்தி உட்பட ஆசிரியர் குழாமுக்கு பழைய மாணவர்களும் கல்விச்சமூகத்தினரும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

பிக்பாஸ் புழக் லாஸ்லியாவின் தந்தை காலமானார்
ப/விக்னேஸ்வரா தமிழ் வித்தியாலயத்தில் 11 மாணவர்கள் சித்தி!

களுத்துறை மாவட்டத்தில் 803 பேருக்கு கொரோனா!
களுத்துறை மாவட்டத்தில் இதுவரை 803 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அப்பிரதேச சுகாதாரச் சேவை பணிப்பாளர் உதய ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, களுத்துறையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில் 18 பேர் கர்ப்பிணிகள் என்பதுடன் 9 பேர் பல்வேறு நோய்களால் பீடிக்கப்பட்டுள்ளவர்கள்.
குறித்த தொற்றாளர்களில் 121பேர் ஹொரணை பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், களுத்துறை- அகவலவத்தை பகுதியில் 23 பேரும், பண்டாரகம பகுதியில் 70 பேரும், புளத்சிங்கள பகுதியில் 41 பேரும், தொடங்கொட பகுதியில் 04 பேரும், பேருவளை பகுதியில் 77 பேரும், இங்கிரிய பகுதியில் 90 பேரும், களுத்துறை பகுதியில் 57 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேபோன்று, மதுராவல பகுதியில் 51 பேரும், மதுகம பகுதியில் 67 பேரும், மில்லனிய பகுதியில் 37 பேரும், பாலிந்தநுவர பகுதியில் 11பேரும், பாணந்துறை பகுதியில் 69 பேரும், வாத்துவ பகுதியில் 63 பேரும், வலல்லாவிட பகுதியில் 22 பேரும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘சூரரைப்போற்று’ படத்தால் கதறி அழுத வடிவேலு!
சூர்யாவின் சூரரைப்போற்று வெளியாகி இருக்கும் நிலையில், அவர் திரையில் அழும் போது நானும் அழுதேன் என்று வடிவேலு தெரிவித்துள்ளார்.
சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ திரைப்படம் தீபாவளி விருந்தாக வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு ரசிகர்கள், ஊடகங்கள், திரை விமர்சகர்கள் ஆகியோர் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். ஓடிடி வரலாற்றில் இந்த படம் வசூலில் புதிய சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ’சூரரைப்போற்று’ படத்தில் சூர்யாவின் நடிப்பிற்கு திரையுலக பிரமுகர்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் தற்போது வடிவேலு தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’சூர்யா இந்தப் படத்தில் அழுதபோது எனக்கு கண்ணீர் வந்தது’ என்று கூறியுள்ளார். அவர் இது குறித்து கூறியதாவது:
தம்பி சூர்யாவின் சூரரைப்போற்று படத்தை பார்த்தேன். அவர் அழும் இடங்களில் நம்மை அறியாமலே கண்ணீர் வருகிறது. இத்தகைய படைப்பை எம்மக்களுக்கு கொடுத்த படக்குழுவினருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்… இவ்வாறு அவர் பதிவு செய்து இருக்கிறார்.





