Home Blog Page 3776

பட்ஜட் உரையின் முக்கிய அம்சங்கள் (LIVE)

பட்ஜட் உரையின் முக்கிய அம்சங்கள்!
?✍️ திரிபோஷ உற்படுத்தியை அதிகரிக்க 1500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

?✍️ தொழில்நுட்ப துறையை மேம்படுத்துவதற்கு 8 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

?✍️ 2020 ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட வரிக் கொள்கை தொடரும். நூற்றுக்கு 8 வீத வெற் வரி நடைமுறையும் மாற்றமின்றி தொடரும்.

?✍️ தேசிய பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவதற்கு முப்படையினருக்கும் நவீன சாதனங்கள். கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்தவும் நடவடிக்கை. சைபர் குற்றங்கள் தொடர்பான புதிய சட்டங்கள்.

?✍️ கடன்களை குறைக்க, வறுமையை ஒழிக்க, சமூகநலன்களை மேம்படுத்த நடவடிக்கை

?✍️ இறக்குமதிகளைக் கட்டுப்படுத்தி ஏற்றுமதிகளை ஊக்குவித்து – உற்பத்தி பொருளாதாரத்தை மேம்படுத்த விசேட திட்டம்.
இவற்றை முன்னெடுக்க நிதி ஒதுக்கீடு.

?✍️6 வீத பொருளாதார வளர்ச்சி எதிர்ப்பார்ப்பு – பணவீக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை.

?✍️அரச சேவை பலப்படுத்தப்படும். அரசியல் பழிவாங்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

https://www.facebook.com/SriLankanParliament/videos/2419704431658075

இரகசியமாக மிட்போட் டிவிசனுக்கு வந்தவருக்கு கொரோனா!

மஸ்கெலியா சுகாதார பரிசோதகர் பிரிவுக்கு உட்பட்ட நோட்டன் பிரிஜ் , மிட்போட் பிரிவை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
36 வயதுடைய ஆண் ஒருவருக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
குறித்த நபர் கௌனிய சீனி வியாபார நிலையம் ஒன்றின் களஞ்சியசாலையில் தொழில் புரிந்துள்ளார். இவர் கடந்த 15.11.2020 அன்று பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அதன் பெறுபேறு பெற்றுக் கொள்வதற்கு முன்பதாக கடந்த 16.11.2020 அன்று யாருக்கும் அறிவிக்காமல் நோட்டன் பகுதிக்கு தனது இல்லத்திற்கு வருகை தந்துள்ளார்.
இதனை தொடர்ந்து அவரிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகளின்படி அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மஸ்கெலியா சுகாதார வைத்திய பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
இவருடன் தொடர்பில் இருந்தவர்களை இனம் கண்டு அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.கொரோனா தொற்றாளரை கொரோனா கட்டுப்பாட்டு நிலையம் ஒன்றிற்று அனுப்பிவைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு

‘மலையக மாணவியின் மகத்தான சாதனை’

” கனவு மனிதனுக்கு வாய்த்த நல்ல வரம். தனது குறிக்கோள்களை நோக்கி அவனை உந்துகிற ஆற்றல் மிகுந்த விசை கனவு. உறக்கத்தில் வருவதன்று கனவு. நம்மை உறங்க விடாமல் செய்வதுதான் கனவு என்று இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான அமரர் அப்துல் கலாம் ஐயா அறிவுரை வழங்கியுள்ளார்.

இந்நிலையில் அவரின் அந்த கூற்று உண்மைதான் என்பதை நிரூபித்துள்ளார்  புஸல்லாவை, சரஸ்வதி மத்திய கல்லூரியில் கல்வி பயின்ற உயர்தர மாணவி ஜி.வேதராகினி.மாணவி ஜி.வேதராகினி தனது கல்லூரியில் கல்வி பயிலும்போது தான் ஒரு சட்டதரணியாக வரவேண்டும் என கனவு கண்டார். தன்னை ஒரு சட்டத்தரணியாக கருதியே செயற்பட்டார்.

தனது புத்தகங்களிலும் அப்பியாச கொப்பிகளிலும் தனது கனவு நனவாகும் என எழுதிக் கொண்டதோடு, தனக்கான சட்டதரணி முத்திரையும் பதித்துக் கொண்டார். அதுமட்டுமல்ல சிறப்பாக கல்வி கற்றார். பயிற்சிகளில் ஈடுபட்டார். இதன் பயனாக உயர்தரப்பரீட்சையில் சித்தியடைந்து அவர் இன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் சட்டபீடத்துக்கு தெரிவாகியுள்ளார்.
இவருக்கு அதிபர், ஆசிரியர்கள் உட்பட பாடசாலை நிர்வாகத்தினரும், பழைய மாணவர்கள் சங்கத்தினரும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவிக்கின்றனர்.
மலையக மாணவர்களே, கல்வி புரட்சிமூலமே மலையகத்தில் நிரந்தர மாற்றத்தை ஏற்படுத்த முடியும். எனவே, நீங்களும் இலட்சியத்தை நோக்கி பயணிக்கும் வகையில் ‘கனவு காணுங்கள். நாளை நமதாகும்.
மக்கள் செய்தியாளர் – பா.திருஞானம்

667 விக்கெட்டுகளை வீழ்த்தி மலிந்த புஷ்பகுமார சர்வதேச மட்டத்தில் சாதனை!

இலங்கை உள்ளூர் கிரிக்கெட்டில் அதிக அனுபவம் பெற்ற வீரரான மலிந்த புஷ்பகுமார, கடந்த தசாப்தத்தில் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் உலகில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் வரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.ஆஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தரவு ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.

இதன்படி 2010 இல் இருந்து 2019/2020 பருவத்தில் கொழும்பு கிரிக்கெட் கழகத்திற்காக ஆடும் 33 வயதான புஷ்பகுமார 667 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். நியுசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஜீதன் படேல் முதலிடத்தை பிடித்திருப்பதோடு இந்தக் காலப்பிரிவில் அவர் மொத்தம் 695 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

எனினும் படேல் இலங்கை வீரர் புஷ்பகுமாரவை விடவும் மேலதிகமாக 95 போட்டிகளில் ஆடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரீமியர் லீக் சம்பியன் அணியான கொழும்பு கிரிக்கெட் கழகத்தின் பிரதான பந்துவீச்சாளரான புஷ்பகுமார இலங்கை அணிக்காக 4 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 14 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அவர் ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் ஆடியுள்ளார்.

எனினும் முதல்தர போட்டிகளில் அதிக அனுபத்தை பெற்றவராக அவர் தனது கிரிக்கெட் வாழ்வில் 139 முதல்தரப் போட்டிகளில் 793 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அத்துடன்,  2019 இல் சரசென்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் 37 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 10 விக்கெட்டுகளை வீழ்த்தியது இலங்கை முதல்தர இன்னிங்ஸ் ஒன்றில் சிறந்த பந்துவீச்சாக சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு லும்பினி கல்லூரியில் தனது கிரிக்கெட் வாழ்வை ஆரம்பித்த புஷ்பகுமார இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி மற்றும் இலங்கை ஏ அணிகளுக்காக ஆடியபோதும் ரங்க ஹேரத்தின் ஓய்வுக்குப் பின்னரே தேசிய அணியில் விளையாட வாய்ப்பை பெற்றார்

2ஆம் அலைமூலம் 14,154 பேருக்கு கொரோனா! 48 மரணங்கள்!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2 ஆவது அலைமூலம் இதுவரையில் 14 ஆயிரத்து 154 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 382 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

இலங்கையில் ஒரே நாளில் அதிகளவான தொற்றாளர்கள் (866) கடந்த 23 ஆம் திகதி அடையாளம் காணப்பட்டனர். ஒரே நாளில் அதிகளவானவர்கள் (765) கடந்த 5 ஆம் திகதி குணமடைந்தனர்.

மினுவாங்கொட கொத்தணிமூலம் 3 ஆயிரத்து 106 பேருக்கும், பேலியகொடை கொத்தணிமூலம் 11 ஆயிரத்து 48 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் இதுவரை 8 ஆயிரத்து 381 பேர் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் நேற்று மாத்திரம்10 ஆயிரத்து 713பிசிஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை 6 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிசிஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இலங்கையில் கொரோனா மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 674 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 11 ஆயிரத்து 806 பேர் குணமடைந்துள்ளனர். 5 ஆயிரத்து 810 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. 61 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஐ.நாவின் உயர்மட்ட தலைவர் கொழும்பு வருகை!

ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட பிரதிநிதியொருவரை செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரெஸ், விரைவில் இலங்கைக்கு அனுப்பவுள்ளார் என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இதன்படி ஐ.நாவின் அரசியல் பிரிவு தலைவர் ரோஸ்மேரி டிகார்லோவே (Rosemary A. DiCarlo) கொழும்பு வரவுள்ளார் எனவும், இங்கு உயர்மட்ட சந்திப்புகளில் ஈடுபடுவார் எனவும் தெரியவருகின்றது.

ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் மட்டுபடுத்தப்பட்ட சில சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடனும் அவர் சந்திப்புகளை நடத்துவதற்கு எதிர்ப்பார்த்துள்ளார். அனைத்து சந்திப்புகளும் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியிலேயே இடம்பெறவுள்ளது.

ஐ.நாவின் கிளை அமைப்புகளுள் ஒன்றான மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலிருந்து இலங்கை அரசாங்கம் விலகியுள்ள நிலையில், பொறுப்புகூறல் கடப்பாட்டை நிறைவேற்றுவதற்கு முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பில் அவதானம் செலுத்துவதை மையப்படுத்தியே ரோஸ்மேரி டிகார்லோவின் இலங்கை பயணம் அமையும் என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

நாட்டில் இன்று மாத்திரம் 382 பேருக்கு கொரோனா!

நாட்டில் மேலும் 153 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

இன்று இதுவரையில் 382 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 674 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் இதுவரையில் 61 பேர் உயிரிழந்துள்ளனர். 11 ஆயிரத்து 806 பேர் குணமடைந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கொரோனா 2 ஆவது அலைமூலம் ( மினுவாங்கொட, பேலியகொட கொத்தணிகள்) இதுவரை 14 ஆயிரத்து 170 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

‘கொரோனா’ – இலங்கையில் மேலும் மூவர் உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்கள் இருவரும், பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்கள் மூவரும் 60 வயதைக்கடந்தவர்கள்.

இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.

மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த 84 வயதுடைய பெண்ணொருவர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு கொரோனா வைரசும் தொற்றியமையே மரணத்துக்கு காரணம்.

கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த 78வயதுடைய ஆணொருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார். சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட அவருக்கு கொரோனாவும் தொற்றியமையே மரணத்துக்கு காரணம்.

கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய ஆணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போது உயிரிழந்துள்ளார். தொற்றா நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு கொரோனாவும் தொற்றியதாலேயே மரணித்துள்ளார்.

அனுசா தலைமையில் மலையகத்தில் மலர்கிறது புதிய கட்சி!

மலையகத்தில் விரைவில் புதியதொரு அரசியல் கட்சி உதயமாகவுள்ளது என நம்பகரமான அரசியல் வட்டாரங்களில் இருந்து ‘மலையக குருவி’க்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் அமரர் சந்திரசேகரனின் புதல்வி  சட்டத்தரணி அனுசா சந்திரசேகரன் தலைமையிலேயே இக்கட்சி மலர்கின்றது எனவும் இது தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்படவுள்ளது எனவும் மேற்படி வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

புதிய கட்சிக்கான பூர்வாங்க நடவடிக்கைகள் யாவும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன எனவும், மலையகத்தில் அரசியல் மற்றும் சமூகமாற்றத்தை விரும்பும் இளைஞர்கள் சிலரும் இக்கட்சியில் இணையவுள்ளன.

அத்துடன், புதிய கட்சியின்கீழ் இணைந்து செயற்படுவது தொடர்பில் மலையகத்திலுள்ள சில சிவில் அமைப்புகளும் தற்போது ஆலோசனை நடத்திவருகின்றன.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் நேரடி சந்திப்புகள் இடம்பெறாதபோதிலும், நவீன் தொழில்நுட்பம் வாயிலான கலந்துரையாடல்கள்மூலம் இதற்கான நடவடிக்கைகள் இறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

மலையக மக்கள் முன்னணியின் பிரதி பொதுச்செயலாளராக செயற்பட்ட அனுசா சந்திரசேகரன், நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் தனித்து களமிறங்கி 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றார்.

எனினும், அவரை கட்சியில் இருந்து இடைநிறுத்தும் முடிவை மலையக மக்கள் முன்னணி எடுத்தது. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே புதிய கட்சியை அனுசா ஆரம்பிக்கின்றார். அதேவேளை, மலையக மக்கள் முன்னணியை என்றாவது ஒருநாள் கைப்பற்றுவேன் என அனுசா சூளுரைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

94.5% திறன்கொண்ட கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு!

அமெரிக்காவின் மார்டனா மருந்து நிறுவனம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி 94.5 சதவீதம் திறன் கொண்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த கொடிய வைரசுக்கு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகள் களமிறங்கியுள்ளன.

ரஷியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் உள்ளன. தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் உலகம் முழுவதும் 11 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

இந்த நிறுவனங்களில் அமெரிக்காவின் மார்டனா இங்க் மருந்து நிறுவனமும் ஒன்று. அந்நிறுவனம் கொரோனா கொரோனா தடுப்பூசி ஒன்றை உருவாக்கி இருந்தது. இந்த தடுப்பூசியின் இறுதிகட்ட பரிசோதனைகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், மார்டனா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி 94.5 சதவீதம் திறன் கொண்டது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

30 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் தடுப்பூசி 94.5 சதவீதம் கொரோனா வைரசை கடுப்படுத்துவது உறுதியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரசால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களிடமும் இந்த மார்டனா தடுப்பூசி நல்ல செயல்திறனை கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மற்றொரு அமெரிக்க மருந்து நிறுவனமான பிப்சர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி 90 சதவீதம் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மனிதர்களை பாதுகாக்கிறது என ஆய்வு முடிவில் தெரியவந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

0
IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 51-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 8 விக்கெட்டுகளை வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி...

சிறந்த சமூக ஈடுபாட்டிற்கான விருதை வென்றார் ஆசிரியர் நீலன்!

0
2025 ஆம் ஆண்டுக்கான தேசிய கல்வி விருதுகள் (National Education Awards - 2025) வழங்கும் நிகழ்வில், பாடசாலைப் பிரிவில் 'சிறந்த சமூக ஈடுபாட்டிற்கான' (Community Engagement Award) விருதை நு/ ஆதித்யா...

கம்பளையில் விபத்து: நால்வர் காயம்!

0
கம்பளை, நாவலப்பிட்டிய பிரதான வீதியில் ஜயமாலபுர பகுதியில் லொறியொன்று மின் கம்பதில் மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் காயமடைந்துள்ளனர். லொறியில் பயணித்த நால்வரே காயமடைந்த நிலையில் கம்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்,லொறிக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. விபத்து தொடர்பில்...