Home Blog Page 3775

‘மக்களுக்காக வாழ்நாளில் மூன்றிலிரண்டு பகுதியை அர்ப்பணித்தவர்’

” தனது வாழ்நாளில் மூன்றில் இரண்டுப் பகுதியை மக்கள் சேவைக்காக அர்ப்பணித்து, தற்போதைய நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டுப் பெரும்பான்மை ஏற்படுத்திக்கொண்ட பெருமையுடன்  மக்கள் ஆட்சி புரிந்துகொண்டிருக்கும் மகத்தான மக்கள் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு , 75ஆஆவது பிறந்ததின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.”

இவ்வாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவரின் ஊடகப்பிரிவு அனுப்பியுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

“வாழ்கையில் ஏற்றத்தாழ்வுகள் சகஜமானவை. அரசியலில் அவ்வாறான சூழ்நிலைகளை எதிர்கொள்வாரெனப் பல சூழ்ச்சிகளை ஏற்படுத்தி, சதிவலை பின்னி, இலவுகாத்த கிளி போல் காத்திருந்த பலருக்கும், தன் பொறுமை எனும் ஆயுதத்தால், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதை மீண்டும் நிரூபித்த பெருமைக்குரியவரே பிரதமர் மஹிந்த ராஜபக்ச.

சர்வதேசமே தரித்திடக் காத்திருந்த போதிலும், தன் மக்கள் சக்தியை மாத்திரம் நம்பி, நாட்டு மக்களுகாய் தன் வாழ்வின் பெரும் பகுதியை அர்ப்பணித்திருக்கும் பெருந்தலைவராகவே அவரை மக்கள் போற்றுகின்றனர்.

“எத்தகைய தடைகள் வந்தாலும், தளராத மனத்திடத்துடன், அத்தடைகளை மக்கள் சக்தி மூலம் உடைத்தெறியும் “அரசியல் வல்லமை”, “அரசியல் சாணக்கியம்”, “அரசியல் இராஜதந்திரம்” அனைத்தையும் திரட்டி, வெற்றிவாகை சூடிவந்த பெருமை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களையே சாரும்.

இன்றைய சூழ்நிலையில், நாட்டின் அனைத்து மக்களும் எதிர்பார்க்கும் அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றக்கூடிய ஆளுமை, அவரிடம் இருப்பதாகவே எதிர்பார்க்கப்படுகிறது. இனம், மதம், மொழி பேதமின்றி, அனைத்து மக்களதும் அபிலாசைகளைச் சீர்தூக்கி, சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கித் தரவேண்டுமென்பதையே, பிரதமரிடம் மக்கள் வேண்டி நிற்கின்றனர்.

அதற்கான வல்லமை கிடைக்கப்பெறுவதோடு, நிஜமான மக்கள் தலைவராக, மக்களில் ஒருவராக, மக்களின் துயர் துடைப்பதற்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்திருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு, நீண்ட ஆயுளும் சௌபாக்கியமும் கிடைக்க வேண்டுமென, எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.” – என்றுள்ளது.

 

தவசியின் உடல்நலம் குறித்து விசாரித்தார் ரஜினி

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகர் தவசியிடம் தொலைபேசி மூலம் ரஜினிகாந்த் நலம் விசாரித்துள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் தவசி, சிகிச்சைக்கு போதிய பணமின்றி தவித்து வருவதாகவும் தனக்கு உதவுமாறும் அவர் வேண்டுகோள் விடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதையடுத்து அவருக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

நடிகர்கள் சூரி, சிவகார்த்திகேயன் ஆகியோர் நிதியுதவி அளித்தனர். இவர்களை தொடர்ந்து நடிகர்கள் விஜய் சேதுபதி, சௌந்தர ராஜா ஆகியோர் பணவுதவி செய்தனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், சிகிச்சை பெற்று வரும் தவசியிடம் தொலைபேசி மூலம் பேசினார். மேலும் தற்பொழுது மேற்கொண்டுவரும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

‘அடுத்த படத்துக்கு சூர்யாவிடம் கதைகேட்ட விஜய்’

விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. அடுத்து அவரது 65 ஆவது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்த படத்தை இயக்குவது யார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

ஏற்கனவே 65-வது படத்தை இயக்குவதாக இருந்த ஏ.ஆர்.முருகதாஸ் சம்பள பிரச்சினை காரணமாக விலகி விட்டார். விஜய்யின் புதிய படத்தை இயக்குவோர் பட்டியலில் பேரரசு, மகிழ் திருமேனி, நெல்சன், மோகன் ராஜா, ஹரி உள்ளிட்டோர் உள்ளனர். பேரரசுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக பேசினர்.

கோலமாவு கோகிலா படம் மூலம் பிரபலமான நெல்சன் சொன்ன கதையும் விஜய்யை கவர்ந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் புதிதாக எஸ்.ஜே.சூர்யாவிடம் விஜய் கதை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் கூட்டணியில் வெளியான குஷி படம் பெரிய வெற்றி பெற்றது.

தற்போது எஸ்.ஜே.சூர்யா சொன்ன கதை காதல், திகில், அதிரடி அம்சங்களுடன் இருந்ததாகவும் கதை விஜய்க்கு மிகவும் பிடித்து உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. இந்த படத்தில் விஜய் நடிப்பாரா என்பது விரைவில் தெரியவரும்.

கலஹா ஸ்ரீ சண்முகா ஆரம்ப பாடசாலை மாணவன் சாதனை!

2020 ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சை பரீட்சையில் கண்டி, கலஹா ஸ்ரீ சண்முகா ஆரம்ப பாடசாலை மாணவனான டி. யஸ்வின் 192 புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.

மேற்படி பாடசாலை வரலாற்றில் புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவரொருவர் 192 புள்ளிகளைப் பெற்றமை இதுவே முதன்முறையாகும். கண்டி கல்வி வலயத்தில் தமிழ் மொழி பிரிவிலும் இவர் பெற்ற புள்ளியே இம்முறை அதிகூடிய புள்ளியாகும்.

தெல்தோட்டை ஜத்லெண்ட் பகுதியைச்சேர்ந்த தியாகராஜா – விஜயராணி தம்பதியரின் புதல்வரான யஸ்வினுக்கு தற்போது பலரும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துவருகின்றனர்.

அத்துடன், அதிபர் திருப்பதி, வகுப்பாசிரியர் திருமதி எஸ்.மஞ்சுலா உட்பட ஆசிரியர் குழாமுக்கு பழைய மாணவர்களும், கல்வி சமூகத்தினரும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

இப்பாடசாலையில் வளப்பற்றாக்குறை இருப்பதால் அவற்றை நிவர்த்தி செய்துகொடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பா.திருஞானம்

தப்பியோடிய கைதிகள்மீது துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி!

தனிமைப்படுத்தல் நிலையமாக இயங்கும் கண்டி பழைய போகம்பரை சிறைச்சாலையிலிருந்து நேற்றிரவு தப்பியோடிய கைதிகள்மீது சிறைச்சாலை அதிகாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார். அத்துடன், மேலும் ஒரு கைதி காயமடைந்துள்ளார்.

இரு கைதிகள் பிடிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் தப்பியோடியுள்ளார். அவரை கைது செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றப்பட்டுள்ள பழைய போகம்பரை சிறைச்சாலையில் இருந்து, பிரதான சிறைச்சாலை நோக்கி அழைத்துச்செல்ல முற்படும்போதே 5 கைதிகள் தப்பியோட முயற்சித்துள்ளனர்.

‘பட்ஜட்’டை எதிர்க்க எதிர்க்கட்சிகள் முடிவு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை  விமர்சித்துள்ள பிரதான எதிர்க்கட்சிகள், அதற்கு எதிராகவே வாக்களிக்கப்படும் என அறிவித்துள்ளன.

அத்துடன், அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் சலுகைகள் மற்றும் நிவாரணத் திட்டங்கள் முன்வைக்கப்படவில்லை எனவும், நாட்டை மேலும் கடன் சுமைக்குள் தள்ளும் வகையிலேயே பட்ஜட் முன்மொழிவுகள் உள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளன.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக்கட்சி ஆகியனவே மேற்படி அறிவிப்பை விடுத்துள்ளன.

வரவு – செலவுத் திட்டம்மீதான விவாதம் இன்று (17) நாடாளுமன்றம் நடைபெறவுள்ள நிலையில் அதன்போது பட்ஜட்டிலுள்ள குறைப்பாடுகள் புள்ளிவிபரரீதியாக சுட்டிக்காட்டப்படும் எனவும் குறித்த கட்சிகள் தெரிவித்தன. நடைமுறை சாத்தியமற்ற விடயங்கள்கூட முன்வைக்கப்பட்டுள்ளன எனவும் குற்றஞ்சாட்டின.

‘கொரோனா’ – இலங்கையில் மேலும் ஐவர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 66 ஆக உயர்வு!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பெண்களும், இரு ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்கள் ஐவரும் 60 வயதைக்கடந்தவர்கள்.

இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு 10, இரத்மலானை, கிருலபனை, கொழும்பு 02 மற்றும் தெமட்டகொட ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே உயிரிழந்துள்ளனர்.

‘கொரோனா’ தொற்றாளர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டியது!

நாட்டில் மேலும் 241 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

இன்று இதுவரையில் 398 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 75 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் இதுவரையில் 66 பேர் உயிரிழந்துள்ளனர். 12 ஆயிரத்து 210 பேர் குணமடைந்துள்ளனர்.

‘கொரோனா’ – உலகளவில் 13 லட்சத்து 35 ஆயிரம் பேர் உயிரிழப்பு!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்து 35 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, 5 கோடியே 55 லட்சத்து 37 ஆயிரத்து 817  பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் ஒரு கோடியே 54 லட்சத்து 60 ஆயிரத்து 230 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 99 ஆயிரத்து 896 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவில் இருந்து 3 கோடியே 87 லட்சத்து 42 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் மேலும் 157 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 157 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 831 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் இதுவரையில் 61 பேர் உயிரிழந்துள்ளனர். 12 ஆயிரத்து 210 பேர் குணமடைந்துள்ளனர்.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

ரணிலை மீண்டும் அரசியலுக்கு கொண்டுவர ஏற்பாடு!

0
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை எதிர்வரும் ஜூன் மாதம் மீண்டும் தீவிர அரசியலுக்குக் கொண்டு வரவுள்ளதாகவும், அதன் பின்னர் நாட்டின் அரசியல் களத்தில் பாரிய திருப்பங்கள் ஏற்படும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின்...

யாழ்.வைத்தியசாலைக்கு தடையின்றி மருந்து விநிநோயகம்: ஆளுநர் விஜயம்!

0
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இன்று (09) அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் எரிந்து மிகப் பெரிய சேதத்துக்குள்ளான மருந்துக் களஞ்சியத்தை, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்று காலை நேரில் சென்று...

ராஜஸ்தான், குஜராத் அணிகள் இன்று மோதல்!

0
  ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 52 ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இப்போட்டி ஆரம்பமாகும். இரு...