Home Blog Page 3774

‘ 1000 ரூபா என்பது பாட்டி வடை சுட்டக் கதையாக இருக்ககூடாது’

” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும். கூட்டு ஒப்பந்தத்துக்கும், பட்ஜட் முன்மொழிவுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.” – என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2020 தை மாதம் முதல் ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்படும் என ஜனாதிபதி தேர்தலின்போது கோட்டாபய ராஜபக்ச உறுதியளித்திருந்தார். அந்த உறுதிமொழி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் 2021 தை மாதம் முதல் ஆயிரம் ரூபா வழங்கப்படும் என்ற முன்மொழிவை பிரதமர் முன்வைத்துள்ளார்.

ஆனால் அந்த முன்மொழிவு – உறுதிமொழியானது பாட்டி வடை சுட்ட கதையாக இருக்ககூடாது. ஏற்கனவே அந்த கதைகளைக் கேட்டுவிட்டோம். எனவே, எவ்வித நிபந்தனையும் இன்றி அடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும். தொழில் சுமைகள் அதிகரிக்கப்படக்கூடாது.

கூட்டு ஒப்பந்தம் என்பது வேறு, அரசு வழங்கியுள்ள உறுதிமொழி வேறு. எனவே, அரசாங்கம் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றவேண்டும். கூட்டு ஒப்பந்தத்தை நாம் பார்த்துக்கொள்கின்றோம். ” – என்றார்.

 https://www.facebook.com/api.official.lk/videos/432819831451721

‘கொரோனா 2ஆவது அலை’ – கண்டி நகரம் ஆபத்தில்!

” பழைய போகம்பரை சிறைச்சாலை கொரோனா தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றப்பட்டுள்ளதால் கண்டி நகருக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது.” – என்று எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்‌ஷ்மன் கிரியல்ல எம்.பி.தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (18) ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பி இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பழைய போகம்பரை சிறைச்சாலை அமைந்துள்ள பகுதியிலேயே கண்டி பொதுச்சந்தை, ரயில் நிலையம், பஸ் தரிப்பிடம் ஆகியன அமைந்துள்ளன. சிறைச்சாலையில் வேலை செய்யும் சுமார் 50 அதிகாரிகள் நாளாந்தம் நகர்ப்பகுதிக்கு வந்துசெல்கின்றனர். நேற்று கைதிகள்கூட தப்பியோட முயற்சித்துள்ளனர்.

குறித்த சிறைச்சாலை தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது, ஆரம்பத்தில் 100 பேரே கொண்டுவரப்படுவார்கள் எனக்கூறப்பட்டாலும் அந்த எண்ணிக்கை 800வரை அதிகரித்துள்ளது. இதனால் கண்டி நகரம் ஆபத்தில் இருக்கின்றது. எந்நேரத்திலும் கொரோணா கொத்தணியொன்று உருவாகலாம். எனவே, குறித்த தனிமைப்படுத்தல் நிலையத்தை கண்டி நகரில் இருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.” – என்றார் லக்‌ஷ்மன் கிரியல்ல.

இலங்கையில் வீதி விபத்துகளால் வருடாந்தம் 3 ஆயிரம் பேர் பலி!

நாட்டில் வருடாந்தம் வீதி விபத்துக்களினால் சுமார் மூவாயிரம் பேர் உயிரிழப்பதுடன் 20 ஆயிரம் பேர் காயங்களுக்குள்ளாவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப்பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அவர்களில் 15 ஆயிரம் பேர் அங்கவீனர்களாகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

அண்மைக்காலங்களில் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை சற்று குறைவடைந்திருந்தபோதும் தற்போது வீதி விபத்துக்கள் மீண்டும் அதிகரித்து வருகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை ஆரம்பிப்பதற்கு முன் கடந்த அக்டோபர் 4 ஆம் திகதிக்கு முன்னர் நாட்டில் 7 அல்லது 8 பேர் தினமும் வீதி விபத்துக்களில் உயிரிழந்தனர். எனினும் அதற்கு பின்னர் அந்த எண்ணிக்கை குறைவடைந்து வந்துள்ளது.

அதேவேளை கடந்தசில தினங்களாக வீதி விபத்துக்கள் மீண்டும் அதிகரித்துக் காணப்படுகின்றன.அதற்கிணங்க தினமும் பத்துக்கு மேற்பட்ட விபத்துக்கள் தற்போது இடம்பெறுவதை காண முடிகின்றது. அதனை தவிர்த்துக் கொள்வதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம். ” – என்றார்.

நாட்டில் மேலும் 233 பேருக்கு கொரோனா!

நாட்டில் மேலும் 233 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 308 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் இதுவரையில் 66 பேர் உயிரிழந்துள்ளனர். 12 ஆயிரத்து 210 பேர் குணமடைந்துள்ளனர்.

‘1000 ரூபா விடயத்திலும் கோட்டா சேர் பெயில்’- சபையில் குமார் சேர் விளாசல்

“மலையக மக்களை முழுமையாக மறந்த வரவு – செலவுத் திட்டமே 2021 ஆம் ஆண்டுக்காக முன்வைக்கப்பட்டுள்ளது.அத்துடன், ஆயிரம் ரூபா முன்மொழிவுகூட ஏமாற்று வித்தையாகும்.” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத்திட்டம்மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2020 மார்ச் முதலாம் திகதி முதல் ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என்ற உத்தரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 2019 இல் பிறப்பித்திருந்தார்.  இதனையடுத்து சேருடன் விளையாடமுடியாது, கம்பனிகள் கட்டாயம் சம்பள உயர்வை கொடுத்தாக வேண்டும் என ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மார்தட்டினர். அவ்வாறு இல்லையேல் காதை பிடித்து கம்பனிகளை வெளியேற்றுவார் எனவும் சூளுரைத்தனர்.

ஆனால் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்று ஓராண்டு ஆகின்றது. இன்னும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்கப்படவில்லை. இதனால்தான் ஆயிரம் ரூபா விடயத்திலும் ‘கோட்டா சேர் பெயில்’ என நாம் சொல்கின்றோம்.

ஆயிரம் ரூபா தொடர்பான முன்மொழிவு பட்ஜட்டில் உள்ளடக்கப்பட்டிருந்தாலும், அந்த கொடுப்பனவை வழங்கமுடியாது என பெருந்தோட்டக்கம்பனிகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான செய்தி பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன.

2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டமானது மலையக மக்களை முழுமையாக மறந்தே தயாரிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமல்ல மலையக மக்களுக்கு ஆயிரம் ரூபா மட்டுமே பிரச்சினை, வேறு எதுவும் இல்லை எனக்குறிப்பிட்டு ஆயிரம் ரூபாவுக்குள் ஒரு சமூகத்தை மட்டுப்படுத்தும் சதியும் இந்த முன்மொழிவின் பின்னணியில் உள்ளது.” – என்றார்.

அடிப்படை நாட் சம்பளமாகவே 1000 ரூபா இருக்கவேண்டும் – ராதா வலியுறுத்து

” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எவ்வித நிபந்தனைகளுமின்றி அடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும்.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (18) நடைபெற்ற வரவு – செலவுத்திட்டம்மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் அவசியம் என்ற கோரிக்கை 5 வருடங்களுக்கு முன்னர் முன்வைக்கப்பட்டது.தற்போதுகூட ஆயிரம் என்ற எண்ணிக்கையியே இருக்கின்றனர்.

எனினும், ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என்ற பிரதமரின் முன்மொழிவை வரவேற்கின்றோம். ஆனால் எவ்வித தொழில் நிபந்தனைகளும் இன்றி அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா கிடைக்கவேண்டும். அவ்வாறு கிடைக்கப்பெற்றால் முழு ஆதரவையும் வழங்குவோம். ஆயிரம் ரூபா கையில் கிடைக்கும்வரை அது தொடர்பில் நம்பிக்கை கொள்ளமுடியாது.

ஆயிரம் ரூபா என்ற முன்மொழிவைத்தவிர பாதீட்டில் மலையக மக்களுக்கென எதுவும் இல்லை.” என்றும் இராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

‘கொரோனா’ – 12,587 பேர் குணமடைவு! 5,422 பேருக்கு சிகிச்சை!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 377 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 587 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 5 ஆயிரத்து 422 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 61 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 705 ஆக அதிகரித்துள்ளது.

2ஆவது அலை – கொழும்பு மாவட்டத்தில் 5,899 பேருக்கு கொரோனா – நுவரெலியாவில் 48!

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலையால் ஒக்டோபர் 4 ஆம் திகதியில் இருந்து நேற்றுவரை கொழும்பு மாவட்டத்தில் 5 ஆயிரத்து 899 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 201 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், 2ஆவது அலைமூலம் நுவரெலியா மாவட்டத்தில் 48 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் மொத்த தொற்றாளர்கள் – 18,075

குணமடைவு – 12,210

உயிரிழப்பு – 66

சிகிச்சை – 5,799

மாவட்ட ரீதியில் தொற்றாளர்களின் விபரம்

‘கொரோனா ஒழிப்பு கூட்டம்’ – அனில் ஜயசிங்கவுக்கு அழைப்பு!

” கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பில் கூட்டங்களில் வைத்தியர் அனில் ஜயசிங்க இனி பங்கேற்பார்.” – என்று சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி., ஹேஷா விதானகேவால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

” சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக செயற்பட்ட அனில் ஜயசிங்க சுற்றாடல்துறை அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டார். அவருக்கு பதவி உயர்வு வழங்கும் வகையிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனினும், கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பான கூட்டங்களில் பங்கேற்குமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் பேச்சாளராக ஜயருவன் பண்டார தற்காலிகமாகவே நியமிக்கப்பட்டார். அதன் அடிப்படையிலேயே அவர் அப்பதவியில் இருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளார்.” – என்றும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.

2021 ஜனவரியில்கூட 1000 ரூபா கிடைப்பது சந்தேகமே!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2021 ஜனவரி முதலாம் திகதி முதல் நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச  வரவு – செலவுத் திட்ட உரை ஊடாக நேற்று யோசனை முன்வைத்துள்ளார். குறித்த முன்மொழிவு தொடர்பில் பெருந்தோட்டக் கம்பனிகள் தமது நிலைப்பாட்டை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

ஆனாலும் பிரதமரின் முன்மொழிவை அடிப்படையாகக்கொண்டு, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நிச்சயம் ஆயிரம் ரூபா கிடைக்கவுள்ளது என சிலர் பிரச்சாரம் முன்னெடுப்பதுடன், வரவேற்று அறிக்கைகளையும் விடுத்துவருகின்றனர். இது மக்களை ஏமாற்றும் அரசியலாகும் என விமர்சனங்களும் எழுந்துள்ளன.

குறிப்பாக ” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு பட்ஜட் ஊடாக நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை.சம்பள உயர்வை வழங்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பிடம் கோரிக்கை மாத்திரமே விடுக்கப்பட்டுள்ளது. எனவே, முன்மொழிவு என்பது இறுதி தீர்மானம் அல்ல.

அதேபோல பட்ஜட் ஊடாக முன்மொழியப்படும் விடயங்கள் முழுமையாக நிறைவேற்றப்படாத அரசியல் கலாச்சாரமே இலங்கையில் நிலவுகின்றது. இதற்கு முன்னரும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தரிசு நிலங்கள் வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. அத்திட்டம் வெற்றியளித்ததா, இல்லை. ” – என்று மலையக சிவில் சமூக செயற்பாட்டாளர்களும், பொருளாதார நிபுணர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.

சம்பள உயர்வை வழங்காவிட்டால் கம்பனிகளின் முகாமைத்துவ உரிமை பறிக்கப்படும் என இதற்கு முன்னரும் பல தடவைகள் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன. ஆனால் அது சாத்தியப்படவில்லை. இந்நிலையில் இம்முறை விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை எடுபடுமா எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.

பட்ஜட்டில் பிரதமர் முன்வைத்த முன்மொழிவு வருமாறு,

” தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 2021  ஜனவரி முதல்  ரூபா 1,000 வரை அதிகரிப்பதற்கும் முன்மொழிகிறேன்.  இந்த சம்பளத்தை செலுத்த முடியாத  தோட்டக் கம்பனிகளின் முகாமைத்துவ  ஒப்பந்தத்தை மாற்றியமைத்து வெற்றிகரமான வியாபார திட்டத்தை கொண்டதாக கம்பெனிகளுக்கு வாய்ப்புகளை வழங்குகின்ற சட்ட ஏற்பாடொன்றி​னை சனவரி மாதத்தில் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கு நான் எதிர்பார்க்கின்றேன். ​​”

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

மலையக மக்களின் அறவழி எழுச்சியே தீர்வுக்கு வழிசமைக்கும்!

0
மலையக மக்கள் மத்தியில் அறவழியில் எழும் எழுச்சியே அரசியல், சமூக மற்றும் பொருளாதார விடுதலைக்குரிய தீர்வை நோக்கிய பயணத்தை விரைவுபடுத்தும் என்று கண்டி மாவட்ட காணி உரிமைக்கான தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான...

ராஜதந்திர முயற்சிகளை சீர்குலைக்கும் அமெரிக்காவின் ராணுவ சாகசம்!

0
அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) நேரடி மோதல்கள் அதிகரித்துள்ளன. இராஜதந்திர தீர்வுகள் எட்டப்படும் போதெல்லாம் அமெரிக்கா "முட்டாள்தனமான இராணுவ சாகசங்களில்" ஈடுபடுவதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர்...

ரணிலை மீண்டும் அரசியலுக்கு கொண்டுவர ஏற்பாடு!

0
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை எதிர்வரும் ஜூன் மாதம் மீண்டும் தீவிர அரசியலுக்குக் கொண்டு வரவுள்ளதாகவும், அதன் பின்னர் நாட்டின் அரசியல் களத்தில் பாரிய திருப்பங்கள் ஏற்படும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின்...