Home Blog Page 3773

1000 ரூபாவுக்கான நிதி ஒதுக்கீடு எங்கே? வேலுகுமார் கேள்வி!

” அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின்கீழ் மூன்று பெருந்தோட்ட நிறுவனங்கள் இருக்கின்றன. எனவே, குறித்த பெருந்தோட்டங்களின்கீழ் வேலைசெய்யும் தொழிலாளர்களுக்கு நாளை வேண்டுமானாலும் ஆயிரம் ரூபாவை வழங்கலாம். அதற்கான நிதி ஒதுக்கீடு அரசாங்கத்திடம் இருக்கின்றதா?” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (19) நடைபெற்ற வரவு – செலவுத்திட்டம்மீதான விவாதத்தில் உரையாற்றிய ஆளுங்கட்சி எம்.பியான சாமர சம்பத் தசநாயக்க,

” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்கும் யோசனை வரவு – செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை வேலுகுமார், இராதாகிருஷ்ணன்போன்றவர்கள் விமர்சிக்கின்றனர். நல்லாட்சியின்போது அவர்களால் ஏன் பெற்றுக்கொடுக்கமுடியாமல்போனது? முதலாளிமார் சம்மேளனத்தின் இணக்கம் தேவையில்லை. நாம் சம்பள உயர்வை வழங்குவோம்.” – என்று குறிப்பிட்டார்.

இதன்போது குறுக்கீடு செய்த வேலுகுமார் எம்.பி.,

” நாட்டில் 25 பெருந்தோட்ட நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை, எல்கடுப பிளான்டேசன் ஆகிய மூன்று நிறுவனங்களும் அரசின் உடையது. எனவே, அந்நிறுவனங்களில்கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு நாளை வேண்டுமானாலும் சம்பளத்தை வழங்கலாம். ஆனால் அதற்கான நிதி ஒதுக்கீடு எங்கே” – என்று வினா எழுப்பினார்.

அடுத்த மாதம் வழங்குவதா அல்லது எப்போது வழங்குவது என்பதை நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம் என பதிலளித்தார் சாமர சம்பத் தசநாயக்க.

அதேவேளை, முற்போக்கு கூட்டணி எம்.பிக்கள்மீது அவர் கடும் விமர்சனங்களையும் முன்வைத்தார்.

இளம் தொழில் முனைவோரை உருவாக்க பலம் சேர்க்கிறது எயார்டெல்

இலங்கையின் பலமான எதிர்கால இளம் தொழில் முனைவோரை உருவாக்க ‘21FOR21’ திட்டத்திற்கு பலம் சேர்க்கிறது எயார்டெல் லங்கா நிறுவனம்

இலங்கையின் இளம் தலைமுறையினர் மத்தியில் தொழில் முனைவோரை மேம்படுத்தும் நோக்கில் ‘21FOR21’ தொனிப்பொருளில் 2020 உலக இளைஞர் திறன்கள் தினம் (WYSD) மற்றும் சர்வதேச இளைஞர் தினம் (IYD) ஆகியவற்றை நினைவுகூறும் முகமாக எயார்டெல் லங்கா நிறுவனம் USAID நிறுவனத்தின் நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் தொழில்முனைவு திட்டமான YouLead உடன் கைகோர்த்துள்ளது. இந்த செயற்திட்டத்தின் நோக்கமானது 21ஆம் நூற்றாண்டில் இளைஞர் வேலை வாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் குறித்த 21 நெருக்கடிகள் உள்ளடக்கிய திறன்களை அறிமுகம் செய்வதாகும்.

இந்த ஆண்டு WYSD & IYD தினமானது ஒரு சவாலான காலத்தில் அனுஷ்டிக்கப்படுகின்றது. கொவிட் – 19 தொற்றுநோய் பரவும் அபாயத்துடன் lockdown நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டதனால் உலகம் முழுவதிலும் செயற்பாடுகள் மந்த கதியில் நடைபெற்றதுடன் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டதனால் கல்வி செயற்பாடுகளுக்கு இடையூறுகள் ஏற்பட்டன. மீண்டும் வழமையான நிலைக்கு வருவதற்கான முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு எயார்டெல் நிறுவனம் தொற்றுநோயின் பின்னர் online ஊடாக தொடர்ச்சியாக திறன்களை மேம்படுத்துவதற்காக இளம் சமூகத்தினருக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் YouLead உடன் இணைந்தது.

நெருக்கடிகளை உள்ளடக்கிய சிந்தனை, புத்தாக்கம், தொழில்நுட்ப அறிவு மற்றும் பன்முகத்தன்மை போன்ற எயார்டெல் நிறுவனத்தின் முக்கியமான திறன்களை ஆதரிக்கும் இந்த நடவடிக்கையில் youlead.lk/skills, என்ற தளம் இடம்பெற்றதுடன், இது வெற்றிகரமான வாழ்க்கையில் இந்த திறன்களின் பங்கை எடுத்துக்காட்டுகின்ற தொடர்ச்சியான வீட்டியோக்கள் மற்றும் நடைமுறையான நடவடிக்கைகள் குறித்த மேலதிக அறிவைப் பெற்றுக் கொடுக்கும் பல்வேறு Webinarகளும் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த பங்குடைமை குறித்து கருத்து தெரிவித்த எயார்டெல்லின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் முகாமைத்துவப் பணிப்பாளருமான அஷீஷ் சந்திரா, “சம்பிரதாய தொழில்நுட்பத்தில் இருந்து தகவல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்திற்கு வேகமாக பயணம் செய்து டிஜிட்டல் யுகத்தை நோக்கி நாம் முன்னேரியுள்ளோம். அதனால், எமது இளைய சமூகத்தினர் அவர்களது அதிகரித்து வரும் இளம் திறமைகளை அடையாளம் கண்டு டிஜிட்டல் யுகத்திற்கு அமைய வடிவமைப்பது மிகவும் முக்கியமாகும். அவ்வாறு செய்வதன் மூலம் புதிய தொழில்முனைவு சந்தர்ப்பங்கள் ஏற்படும்.  இலங்கை இளைஞர்களை பலப்படுத்தும் சிறந்த மொபைல் தொலைதொடர்பு சேவை வழங்குநராக எதிர்கால சந்ததியினருக்கு புத்தாக்கங்கள், சிக்கல்களைத் தீர்த்தல், நெருக்கடிகளை உள்ளடக்கிய சிந்தனை, தொழில்நுட்ப அறிவு மற்றும் எதிர்கால தொழில்புரியும் நிறுவனத்தின் முன்னேற்றங்களுக்கு அவர்களுக்கு தேவையான ஏனைய பல்வேறு திறன்கள் குறித்தும் எதிர்கால சந்ததியினரை பயிற்சியளிப்பதற்கு YouLead உடன் ஒன்றிணைவதற்கு கிடைத்தமையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம்.” என தெரிவித்தார்.

அமெரிக்க மக்களினால், நிதி வழங்கப்படும் YouLead வேலைத்திட்டத்தின் தொழில்நுட்ப மற்றும் தொழில் ரீதியான கல்வியினை மேம்படுத்துதல் மற்றும் பயிற்சியளித்தல், பெரும் திறமைகளுடன் கூடிய ஒரு வலுவான சக்தியை உருவாக்குதல் மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள், நிறுவன மற்றும் தொழில் முனைவோருக்கான ஒத்துழைப்புக்கு பலமாகவுள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டு தொழிலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. அமெரிக்காவின் பிரதான அபிவிருத்தி நிறுவனமான சர்வதேச அபிவிருத்தி தொடர்பிலான அமெரிக்க நிறுவனம் (USAID) இதற்கு ஒத்துழைப்பு வழங்குகிறது.

‘21FOR21’ பிரசார நடவடிக்கையானது தொழில் புரியும் இடங்களில் நடத்தப்பட்ட “Skills in Action” எனும் தொனிப் பொருளின் கீழ் இடம்பெற்ற புகைப்பட போட்டியில் நிறைவடைந்தது. இந்த போட்டியில் வெற்றிபெற்றோருக்கு பெறுமதியான ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிக்கு பயன்படுத்தப்படும் சாதனம் ஒன்றும் வழங்கப்பட்டது. இந்த சாதனத்தை வீட்டிலிருந்து வேலை/ கல்வி நடவடிக்கைகளுக்காக ளபயன்படுத்த முடியும்.

இலங்கை அரசின் யோசனையின் கீழ் 2014 டிசெம்பரில் ஐக்கிய நாடுகள் அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட உலகளாவிய வேலைத் திட்டமாக, உலக இளைஞர் திறன்கள் தினம் (WYSD) இளைய தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்காக இளம் சமூகத்தினருக்கு மற்றும் கல்வியாளர்கள் என இருபிரிவினருக்கும் தேவையான மற்றும் தொழில் வாய்ப்பை இலக்காகக் கொண்ட உயர் தரத்திலான தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை திறன்களை வளர்ப்பதற்கான நினைவூட்டலாக இது செயல்படுகிறது.

அண்மையில் நிறைவடைந்த 21FOR21 ‘Skills at Work’ புகைப்பட போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு உலக வர்த்தக மத்திய நிலையத்தில் அமைந்துள்ள எயார்டெல் லங்கா பிரதான அலுவலகத்தில் அண்மையில் இடம்பெற்றதுடன் (இடமிருந்து வலமாக): வெற்றிபெற்ற மூவரான நிஷாந்த ராஜசேகரம், தரித்து திலீப மற்றும் காஞ்சன ஹேரத், எயார்டெல் லங்காவின், பிரதான விற்பனை அதிகாரி, சந்திரசேகர் சிங் சௌவான், இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான USAID நடவடிக்கை பணிப்பாளர், ரீட் ஏஷ்லிமன், YouLead ஒத்துழைப்பு பணிப்பாளர், விந்தியா சில்வா மற்றும் Head – Contact Experience Airtel, ஃபவாஸ் நிஷம்தீன் ஆகியோர் படத்தில் இருப்பதைக் காணலாம்.

 

Bharti Airtel Lanka வை பற்றி

2009 ஜனவரி 12ஆம் திகதி இலங்கையில் தமது நடவடிக்கைகளை ஆரம்பித்த பாரதி எயார்டெல் (எயார்டெல் லங்கா) நிறுவனம் தற்போது ஒருமில்லியன் வாடிக்கையாளர் மட்டத்தை நெருங்கிய இலங்கையின் வேகமான தகவல் தொலைத்தொடர்பு வலயமாகும். தமது வணிக செயற்பாடுகளை ஆரம்பித்த 2009ஆம் ஆண்டிலிருந்து 3 வருட குறுகிய காலப்பகுதிக்குள் எயார்டெல் நாட்டில் எல்லா பகுதிகளிலும் பரந்து விரிந்த சேவையை வழங்கியதோடு இன்று நாடு முழுவதிலும் தமது சேவையை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கை முதலீட்டுச் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள எயார்டெல் லங்கா தொலைத்தொடர்பு வலயமைப்பு சேவைகள் மற்றும் நிறுவன ரீதியான தீர்வுகள் உட்பட டிஜிட்டல் தொலைத்தொடர்பு சேவைகள் பலவற்றையும் வழங்குகின்றது.

பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் நவம்பர் 23 ஆம் திகதி ஆரம்பம்!

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்தவிர நாட்டில் ஏனையப் பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கை நவம்பர் 23 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

தரம் 6 முதல் 13 வரையான மாணவர்களே பாடசாலை வரவேண்டும் எனவும் அவர் கூறினார்.

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மாகாணவர்கள் வெளியிடங்களில் உள்ள பாடசாலைகளுக்கு செல்லமுடியாது எனவும் சுட்டிக்காட்டினார்.

 

தென்னாபிரிக்க சுற்றுப்பணத்தில் 32 பேர் கொண்ட இலங்கை அணி!

எதிர்வரும் தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்தில் 32 பேர் கொண்ட இலங்கை அணிக்கு தங்குமிட வசதிகளை வழங்குவதற்கு தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை இணங்கியுள்ளது.

சுற்றுப்பயணம் ஒன்றில் பொதுவாக 15 தொடக்கம் 16 வீரர்களே இடம்பெறுவர். எனினும் கொரோனா தொற்றினால் உள்ள கட்டுப்பாடுகள் காரணமாக காயமடையும் வீரர்களுக்கு உடன் மாற்று வீரர்களை அனுப்ப முடியாத சூழல் இருந்து வருகிறது. இந்நிலையில் சுற்றுலாவில் பங்கேற்கும் மேலதிக வீரர்களுக்கு இலங்கை செலவுகளை ஏற்க வேண்டிய தேவை இல்லை.

தென்னாபிரிக்க சுற்றுப்பணம் மேற்கொள்ளும் இலங்கை அணி ஐ.சி.சி டெஸ்ட் சம்பியன்சிப் தொடரின் ஓர் அங்கமான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளது. இதன் முதல் போட்டி டிசம்பர் 26 ஆம் திகதி செஞ்சூரியனில் ஆரம்பமாகவிருப்பதோடு இரண்டாவது போட்டி ஜொஹன்னஸ்பேர்க்கில் ஜனவரி 3ஆம் திகதி ஆரம்பமாகும்.

இதற்காக 22 வீரர்கள், அணி மருத்துவர் ஒருவர் உட்பட 10 உதவி ஊழியர்கள் கொண்ட 32 பேர் கொண்ட குழாத்தை தென்னாபிரிக்கா அனுப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

ஐ.சி.சியின் புதிய வழிகாட்டலில் அணியுடன் மருத்துவர் ஒருவரை அனுப்புவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாணத்தில் இதுவரை 4046 பேருக்கு டெங்கு!

மத்திய மாகாணத்தில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை.விடுத்துள்ளது.

மத்திய மாகாண தொற்று நோய் தடுப்பு விஞ்ஞானப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் இதுவரையில் மத்திய மாகாணத்தில் மாத்திரம் 4046 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது; கண்டி மாவட்டத்தில் 3,305 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 574 பேரும், மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் 167 பேருமாக மத்திய மாகாணத்தில் மொத்தம் 4046 பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவும் அபாயம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுவதால் பொது மக்கள் தத்தமது சுற்றாடலை டெங்கு நோய் பரவாமல் சுத்தமாக வைத்திருக்குமாறு மத்திய மாகாண சுகாதார திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

2ஆவது அலைமூலம் 14,889 பேருக்கு கொரோனா! 56 பேர் உயிரிழப்பு!!

இலங்கையில் கொரோனா வைரஸ் 2 ஆவது அலைமூலம் நேற்றிரவுவரை (18) 14 ஆயிரத்து 889 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் இதுவரையில் 56 பேர் பலியாகியுள்ளனர்.

மினுவாங்கொட கொத்தணிமூலம்  ஆயிரத்து 59 பேருக்கும், பேலியகொடை கொத்தணிமூலம் 11 ஆயிரத்து 830 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது. ஏ

இவ்வாறு 2ஆவது அலைமூலம் கொரோனா தொற்றியவர்களில் நேற்றுவரை 9 ஆயிரத்து 162 பேர் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் நேற்று 11 ஆயிரத்து 105 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதேவேளை, இலங்கையில் நேற்றுவரை மொத்தமாக 18 ஆயிரத்து 402 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 12 ஆயிரத்து 587 பேர் குணமடைந்துள்ளனர். 69 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்னும் 3 வருடங்கள் கொரோனாவுடன் வாழவேண்டும்!

” கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் இன்னும் மூன்று வருடங்களாவது வாழவேண்டிவரும். எனவே, கொரோனா முதலாவது  அலையைக் கட்டுப்படுத்துவதற்கு கையாளப்பட்ட நடைமுறைகளை தற்போது முழுமையாக பின்பற்றமுடியாது.” – என்று சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில்  ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பிக்களால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவைவருமாறு,

” கொரோனா வைரஸ் என்பது உலகளாவிய தொற்றாகும். வைரசுக்கு பெயரிடுதல், எவ்வாறான சுகாதார அணுகுமுறைகளைக் கையாளவேண்டும் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் உலக சுகாதார நிறுவனமே ஆலோசனைகளை, வழிகாட்டல்களை வழங்கும்.

முதலாவது அலை ஏற்பட்டபோது பொது முடக்க முறைமை (லொக்டவுன்) கையாளப்பட்டது. ஆனால் 2ஆவது அலையின்போது பெரும்பாலான நாடுகள் ஆரம்பத்தில் கடைபிடித்த நடைமுறைகளை பின்பற்றுவதில்லை. தற்போது உலக சுகாதார அமைப்பு வழிகாட்டல்களை வழங்கிவருகின்றது.

இன்னும் மூன்றரை வருடங்களாவது கொரோனாவுக்கு மத்தியில் வாழவேண்டிய நிலை ஏற்படும் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. புதிதாக வெளியிடப்பட்ட வழிகாட்டலில் நாட்டை முடக்கும் யோசனை, வழிகாட்டல் இல்லை. அவ்வாறு நாட்டை தொடர்ச்சியாக முடக்கி வைத்திருக்கவும் முடியாது.  எனவே, முதலாவது அலையின்போது செயற்பட்டதுபோல தற்போது செயற்படமுடியாது.

சுகாதார சேவைகள் பணிப்பாளராக செயற்பட்ட அனில் ஜயசிங்கவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு சுற்றாடல்துறை அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரை கொரோனா தடுப்பு கூட்டங்களில் பங்கேற்குமாறு தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.” – என்றார்.

சி.வி.வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு தினம் இன்று

தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிர்வாகப் பொறுப்பாளர்  மக்கள் கவிமணி அமரர் சி.வி. வேலுப்பிள்ளை அவர்களின் 36 ஆவது நினைவு தினம் இன்று (19)  அனுஷ்டிக்கப்படுகிறது.
வட்டகொடை மடக்கும்புர தோட்டத்திலுள்ள அன்னாரின் சமாதிக்கு அருகில் நாளை காலை 10 மணிக்கு நினைவு நினைவு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இந்த நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளஉள்ளனர்.
அமரர்   சி. வி. வேலுப்பிள்ளை
=================================
சி. வி. வேலுப்பிள்ளை (செப்டம்பர் 14, 1914 – 1984) இலங்கை மலையகத்தின் முன்னோடி எழுத்தாளர்களுள் ஒருவர். ஆசிரியர், அரசியல்வாதி, தொழிற்சங்கவாதி, கவிஞர், பத்திரிகை ஆசிரியர் எனப் பன்முக ஆளுமையாளராகத் திகழ்ந்தவர். கவிதைகள், நாவல்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ள இவர் இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினராக 1947 ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்டார்.
வாழ்க்கைக் குறிப்பு
===================
வேலுப்பிள்ளை இலங்கையின் மலையகத்தில் மடக்கொம்பரையில் பெரிய கங்காணிக்கு மகனாக பிறந்தார். அவர் கொழும்பில் நாலந்தா கல்லூரியில் கல்வி கற்றார். சேக்ஸ்பியர் முதலியோரின் ஆக்கங்களை இவர் படித்துத் தேறினார்.
ஆசிரியராகப் பணியாற்றினார்.
எழுத்துலகில்….
=============
இலங்கை வானொலியான வொயிஸ் ஒஃப் லங்கா (Voice of Lanka) அவரது Tea Pluckers என்ற ஆங்கிலக் கவிதையை அறிமுகம் செய்தது. அவரது திறமையை வியந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் எஸ். தொண்டமான் தனது “காங்கிரஸ் நியூஸ்” என்ற ஏட்டின் ஆசிரியராக அமர்த்திக் கொண்டார்.
கதை என்னும் இலக்கிய இதழ், மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மாவலி என்ற மாத இதழ் ஆகியவற்றின் ஆசிரியராக இருந்து செயல்பட்டார். அந்நாளில் தினகரன் ஆசிரியராக இருந்த பேராசிரியர் க. கைலாசபதி மலையகப் படைப்பாளிகளை ஊக்குவித்து மலையக இலக்கியங்களை வெளியிட்டு வந்தார். அவர் சி. வி. வேலுப்பிள்ளையின் நிறைய படைப்புகளை வெளிக்கொணர்ந்தார். பொன். கிருஷ்ணசாமி இவரது ஆங்கிலக் கவிதைகளை மொழிபெயர்த்து தினகரனில் வெளியிட்டார்.]
1934 ஆம் ஆண்டில் இரவீந்திரநாத் தாகூர் இலங்கை வந்­தி­ருந்த போது அவரை 1934 மே 14 இல் கொழும்பில் சந்தித்து தன்னுடைய விஸ்மாஜினி என்ற இசை நாடக நூலை வழங்கி ஆசி பெற்றார்,
1961 இல் வீரகேசரியில் “காலம் பதில் சொல்லட்டும், சாக்குக்காரன் என்ற இரு சிறுகதைகளை இவர் எழுதினார்.
அரசியலில்….
==============
1947 இல் சோல்பரி அரசியல் சாசனப்படி இடம்பெற்ற முதலாவது நாடாளுமன்ற தேர்தலில் மலையகத்திலிருந்து சென்ற 7 பேரில் ஒருவராக தலவாக்கலை பிரதேசத்திற்கு தெரிவு செய்யப்பட்டார். ஆயினும் அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசு நிறைவேற்றிய பிரசா உரிமைச் சட்டத்தால் அவர்கள் உறுப்புரிமை இழந்தனர். என்றாலும் மேற்படி சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 7 பிரதிநிதிகளும் வெளிநடப்பு செய்தனர்.
பின்னாளில் அவர் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசில் இருந்து விலகி வி. கே. வெள்ளையன் தலைமையில் 1965 இல் அமைந்த தொழிலாளர் தேசிய சங்கத்தில் இணைந்து கொண்டார். 1977 நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இவரது படைப்புக்கள்
==========================
விஸ்மாஜினி (இசை நாடகம்)
Way Farer (1949)
In Ceylon’s Tea Garden (1952)
இலங்கை தேயிலைத் தோட்டத்திலே (தமிழாக்கம்: சக்தி பாலையா)
வீடற்றவன்
இனிப்படமாட்டேன்
வாழ்வற்ற வாழ்வு (புதினம், தமிழாக்கம்: பொன். கிருஷ்ணசாமி)
எல்லைப்புறம் (புதினம், தமிழாக்கம்: பொன். கிருஷ்ணசாமி)
காதல் சித்திரம் (புதினம், தமிழாக்கம்: பொன். கிருஷ்ணசாமி)
நாடற்றவர் கதை (கட்டுரைகள்)
மலைநாட்டு மக்கள் பாடல்கள் (நாட்டார் பாடல்களின் தொகுப்பு)

இன்று இதுவரையில் 325 பேருக்கு கொரோனா!

நாட்டில் மேலும் 92 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

இன்று இதுவரையில் 325 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 402 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் இதுவரையில் 69 பேர் உயிரிழந்துள்ளனர். 12 ஆயிரத்து 587 பேர் குணமடைந்துள்ளனர்.

‘நாட்டின் சுபீட்சமே எனது இலக்கு – மனசாட்சியுடன் செயற்படுவேன்’

” நான் எப்போதும் சவால்களுக்கு முகம் கொடுத்து வெற்றிபெற்றவன். நான் அச்சுறுத்தல்களுக்கு பயந்த நபர் அல்ல. பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து அவற்றை தீர்ப்பதன்றி  அவற்றிலிருந்துவிடுபட்டு ஓடும்பழக்கம் என்னிடம் இல்லை. வாக்குகளை மட்டும் எதிர்பார்த்து யாரையும் மகிழ்விக்கவேண்டிய தேவை எனக்கு இல்லை. இந்த நாட்டின் சுபீட்சமே எனது எதிர்பார்ப்பு. அந்த நோக்கத்தை அடைய மனசாட்சியுடன் தேவையான எந்த நடவடிக்கையும் எடுக்க நான் தயங்கமாட்டேன்.”

இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார். நாட்டு மக்களுக்காக இன்று ஆற்றிய விசேட உரையிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் முழுமையான உரை

Tamil-Translation-Special-Address-to-the-Nation-by-H.E-The-President-…18.11.2020

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

“திருமாவளவன் தவெகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்” – ராமதாஸ் கோரிக்கை

0
தமிழகத்தின் நலன் கருதி தமிழக மக்களுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் அரசியல் செய்து வருகின்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தவெகவுக்கு ஆதரவை அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது...

மலையக மக்களின் அறவழி எழுச்சியே தீர்வுக்கு வழிசமைக்கும்!

0
மலையக மக்கள் மத்தியில் அறவழியில் எழும் எழுச்சியே அரசியல், சமூக மற்றும் பொருளாதார விடுதலைக்குரிய தீர்வை நோக்கிய பயணத்தை விரைவுபடுத்தும் என்று கண்டி மாவட்ட காணி உரிமைக்கான தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான...

ராஜதந்திர முயற்சிகளை சீர்குலைக்கும் அமெரிக்காவின் ராணுவ சாகசம்!

0
அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) நேரடி மோதல்கள் அதிகரித்துள்ளன. இராஜதந்திர தீர்வுகள் எட்டப்படும் போதெல்லாம் அமெரிக்கா "முட்டாள்தனமான இராணுவ சாகசங்களில்" ஈடுபடுவதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர்...