Home Blog Page 3781

ஐ.பி.எல். தொடர் – வெற்றிவாகை சூடியது மும்பை அணி!

ஐ.பி.எல். தொடரில் 5 தடவைகள் வெற்றிவாகைசூடி மும்பை இந்தியன்ஸ் அணி சாதனை படைத்துள்ளது.

2020 ஐ.பி.எல்.மகுடத்தை வெல்லப்போவது யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி துபாயில் இன்றிரவு நடைபெற்றது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்ரீட்சை நடத்தின.

முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்களைக் குவித்தது. ஸ்ரேயாஸ் அய்யர் 65 ஓட்டங்களைப் பெற்றார்.

பின்னர் 157 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி  18.4 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்து, 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. அணித்தலைவர் ரோஹித் சர்மா 4 சிக்ஸர்கள் அடங்களாக 51 பந்துகளில் 68 ஓட்டங்களைப் பெற்றார்.

ஐ.பி.எல். போட்டி தொடரில் ஏற்கனவே 4 தடவைகள் (2013, 2015, 2017, 2019) கிண்ணம் வென்று ஆதிக்கம் செலுத்தி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி  இம்முறையும் வெற்றிநடைபோட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சிவிப்பாளராக மஹேல ஜயவர்தன செயற்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் 125 பேருக்கு கொரோனா – தொற்றாளர்களின் எண்ணிக்கை 14,715 ஆக உயர்வு!

நாட்டில் மேலும் 125 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி இலங்கையில் கொரோனா 2ஆவது அலைமூலம் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 715 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் இதுவரையில் 41பேர் உயிரிழந்துள்ளனர். 9 ஆயிரத்து 537 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழ் குடும்பத்தை துன்புறுத்தி வீட்டை கைப்பற்ற முனைந்த விவகாரம் : வத்தளை ஓ.எஸ்.சியிடம் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல்!

வத்தளை ஓ.எஸ்.சியிடம் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல்!

வத்தளை ஹெந்தலை பிரதேசத்தில் ராமலிங்கம் தங்கராஜா, விமலா சுப்பிரமணியம் என்ற தமிழ் குடும்பத்தை துன்புறுத்தி வீட்டை கைப்பற்ற முனைந்த விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தின் ஊடாக உரிய தீர்வை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கையெடுக்குமாறு வத்தளை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவர் செந்தில் தொண்டமான் ஆலோசனை வழங்கியுள்ளதுடன், இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லப்படும்வரை அப்பகுதியில் எவ்வித அசம்பாவிதங்களும் முறுகல்களும் இடம்பெறாத வகையில் நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் பணிப்புரை வழங்கியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் அறிந்தவுடனே உடனடியாக வத்தளை ஓ.எஸ்.சிக்கு அழைப்பை ஏற்படுத்தியுள்ள செந்தில் தொண்டமான், இந்த விடயத்தை நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்வதன் ஊடாக இருதரப்பினரும் உரிய தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு பதலளித்துள்ள வத்தளை ஓ.எஸ்.சி., 81ஆவது பிரிவின் கீழ் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போது நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாதென்பதால் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதும் வழக்குத் தாக்கல் செய்வதாகவும் செந்தில் தொண்டமானிடம் கூறியுள்ளார்.

‘O/L பரீட்சைக்கூட சித்தியடையாத 290 பேர் ஊவாவில் முன்பள்ளி ஆசிரியர் பணியில்’

ஊவா மாகாணத்தில் ஆயிரத்து 493 முன்பள்ளிகள் இருந்து வருகின்றன. இம் முன்பள்ளிகளில் கடமையிலுள்ள ஆசிரியைகளில் 290 பேர் க.பொ.த. சாதாரண தரப்பரீட்சைகளில் சித்தி பெறாதவர்கள் என்று மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்து தெரியவந்துள்ளதாக, ஊவா மாகாண சிறுவர் அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் டி.எம்.சி. திசாநாயக்க கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ஊவா மாகாண முன்பள்ளிகளில் 35 ஆயிரம் சிறார்கள் கல்வி கற்று வருகின்றனர். 2ஆயிரத்து 549 ஆசிரியைகள் கல்வி கற்பிக்கும் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர். தமிழ் மொழி மூலமான முன்பள்ளிகளில் 4ஆயிரத்து 462 சிறார்கள் தமிழ் மொழியில் கல்வி கற்று வருகின்றனர்.
பெருந்தோட்டப் பகுதிகளில் சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் 160 உள்ளன.

இந்நிலையங்களில் 1983 பேர் டிப்ளோமா தரமுள்ள ஆசிரியைகளாவர். 566 பேர் டிப்ளோமா தரமற்றவர்களாவர். க.பொ.த. சாதாரண தர சித்தி பெறாதவர்கள் 290 ஆசிரியைகளும் இருந்து வருகின்றனர்.
மேலும், பொது இடங்களில் இருந்து வரும் 260 முன்பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக இல்லாதுள்ளன.

ஒருசில முன்பள்ளிகளின் கட்டிடங்கள் உடைந்த நிலையிலும் காணப்படுகின்றனவென்றும், மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்து தெரிய வந்துள்ளன.
இதுவிடயம் தொடர்பாக கல்வி அமைச்சிற்கும் அறிவித்துள்ளேன். ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டத்திற்கமைய முன்பள்ளிகளில் கடமையாற்றும் ஆசிரியைகளுக்கு நியாயமான கொடுப்பனவுகள் வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

அத்துடன், அனைத்து முன்பள்ளிகளிலும் பொதுவானதொரு வேலைத்திட்டமொன்றிற்கமைய பாடநெறியொன்றையும் அறிமுகப்படுத்தவேண்டுமென்று கல்வி அமைச்சிற்கு யோசனையொன்றையும் முன்வைத்துள்ளேன்” என்றும் கூறினார்.

எம். செல்வராஜா, பதுளை

‘பூச்சாண்டி படத்தில் பேயாக அஞ்சலி’

பூச்சாண்டி என்ற படத்தில் அஞ்சலி, யோகிபாபு பேயாக நடித்து வருகிறார்கள்.

அஞ்சலி கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார். பொலிஸ் அதிகாரியாக நடித்த சைலன்ஸ் படம் சமீபத்தில் ஓ.டி.டி.யில் வெளியானது. அடுத்து பூச்சாண்டி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் அவர் பேயாக வருகிறார். இதில் யோகிபாபுவும் நடிக்கிறார். அவருக்கும் பேய் கதாபாத்திரம்தான். பேய் படங்கள் வரிசையில் இதுவும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என்று படக்குழுவினர் நம்புகின்றனர்.

கே.எஸ்.சினீஷ் தயாரிக்கும் இந்த படத்தை கிருஷ்ணன் ஜெயராஜ் டைரக்டு செய்கிறார். படத்தின் முதல் தோற்றம் வெளியாகி உள்ளது.

படம் குறித்து இயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ் கூறும்போது, “குழந்தைகளை மையமாக வைத்து வேடிக்கைகள் நிறைந்த பொழுதுபோக்கு படமாக பூச்சாண்டி தயாராகி உள்ளது. அஞ்சலி அற்புதமான நடிப்பால், படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

அஞ்சலியும், யோகிபாபுவும் பேயாக நடித்துள்ள பகுதிகளை, குழந்தைகள் நூறுசதவீதம் வயிறு வலிக்க சிரித்து மகிழ்ந்து கொண்டாடுவார்கள்” என்றார். இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடக்கிறது. படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

நுவரெலியா பிரதேச சபையின் ‘பட்ஜட்’ நிறைவேற்றம்!

நுவரெலியா பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இன்று (10) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

நுவரெலியா பிரதேச சபையின் விசேட அமர்வு இன்று நடைபெற்றது. இதன்போது பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜார் வரவு – செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டது.

இதன்போது சபையின் அனைத்து உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்தனர்.

தகவல் – நீலமேகம் பிரசாந்த்

‘கொரோனா’ – மேலும் ஒருவர் உயிரிழப்பு! 10 நாட்களில் 21 மரணங்கள்!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ராகம பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஆணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர் வீட்டில் இருந்தவேளையிலேயே உயிரிழந்துள்ளார். ராகம வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட மரண பரிசோதனையின்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 10 நாட்களில் மாத்திரம் 21 மரணங்கள் பதிவாகியுள்ளன.

‘பதுளை மாவட்டத்தில் ஒரு கோடியே 21 லட்சம் ரூபாவுக்கு உலர் உணவுப் பொதிகள் பகிர்ந்தளிப்பு’

பதுளை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் ஆயிரத்து 215 குடும்பங்களுக்கு ஒரு கோடியே 21 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டிருப்பதாக, பதுளை மாவட்ட அரச அதிபர் தமயந்தி பரணகம தெரிவித்தார்.

பதுளை மாவட்டத்தில் கொரோனா தொற்று விடயமாக தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் குடும்பத்தினருக்கு அரசினால் வழங்கப்படும் நிவாரண உதவிகள் குறித்து, பதுளை அரச அதிபரிடம் வினவியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது

“பதுளை, பண்டாரவளை, ஹப்புத்தளை, தியத்தலாவை, வெலிமடை, லுணுகலை, பசறை, மகியங்கனை, ஹல்துமுள்ளை, ஹாலி எலை, ஊவா–பரணகமை, மீகாகியுல, சொரணா தொட்டை ஆகிய பிரதேசங்களில் ஆயிரத்து 215 குடும்பங்கள் கொரோனா தொற்று விடயமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இவர்களுக்கான உலர் உணவுப் பொதிகள், அவ்வவ் பிரதேசசெயலாளர்கள் ஊடாக, தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களின் வீடுகளுக்கேகொண்டுசென்று வழங்கப்பட்டுள்ளன.

குடும்பமொன்றிற்கு பத்தாயிரம் ரூபாவிற்கு பெறுமதியான உலர் உணவுப் பொருட்களே, வழங்கப்பட்டுள்ள பொதியில் உள்ளன.
இவ்வகையில், இதுவரைக்கும் ஒருகோடியே இருபத்தொரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவிற்கு,உணவுப் பொதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன” என்றும் குறிப்பிட்டார்.

எம். செல்வராஜா

நாட்டில் மேலும் 305 பேருக்கு கொரோனா!

நாட்டில் மேலும் 305 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி இலங்கையில் கொரோனா 2ஆவது அலைமூலம் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 590 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் இதுவரையில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். 9 ஆயிரத்து 537 பேர் குணமடைந்துள்ளனர்.

 

‘கொரோனா’ மேலும் நால்வர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.

ராஜகிய பகுதியைச் சேர்ந்தவர் 51 வயதுடைய ஆணொருவர் உயிரிழந்துள்ளார். அவர் முதியோர் இல்லத்தில் தங்கியிருந்தவராகும். கடந்த 7ஆம் திகதி அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கொரோனா தொற்றினால் ஏற்பட்ட நியுமோனியா காரணமாக உயிரிழந்துள்ளார்.

கொழும்பு 10 பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளார். அவர் கடந்த 23 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றினால் சுவாச கட்டமைப்பில் ஏற்பட்ட பாதிப்பினால் அவர் உயிரிழந்துள்ளார்.

கம்பஹா உடுகம்பல பிரதேசத்தில் 63 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் கம்பஹா மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலையில் நேற்றைய தினம் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். அவருக்கும் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட நியுமோனியா காரணமாக உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, 55 – 60 வயதிற்குட்பட்ட அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளார். அவரது உடல் கடந்த 8ஆம் திகதி பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்றியமை உறுதியாகியுள்ளது. அவரது மரணத்திற்கு கொரோனா தொற்றியமையே காரணமாகும்.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

நீதித்துறையின் சுயாதீனம் பாதுகாக்கப்பட வேண்டும்!

0
தற்போதைய அரசு நாட்டின் நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடுவதோடு, மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்து வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளார். ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், "சட்டவாக்கம்,...

தமிழக முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்?

0
தமிழகத்தின் முதல்வராக தவெக தலைவர் விஜய் நாளை பதவியேற்கவுள்ளார் என தெரியவருகின்றது. ஆளுநர் அழைப்பு விடுக்கும்பட்சத்தில் பதவியேற்பு நிச்சயம் நடக்கும் என தெரிகின்றது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழாவை பிரம்மாண்டமாக நடத்த...

பது/ கலைமகள் தமிழ் மகா வித்தியாலயத்தில் சாதனை மாணவர்களுக்குக் கௌரவிப்பு

0
பதுளை கலைமகள் தமிழ் மகா வித்தியாலயத்தில் கடந்த ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றி, சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று பாடசாலை அதிபர் நிரோஷன் தலைமையில் மிகவும் சிறப்பாக...