Home Blog Page 3782

மஸ்கெலியா – பிரொக்மோர் பிரிவில் 12 வயது மாணவிக்கு கொரோனா!

மஸ்கெலியா காட்மோர் தோட்டத்தில் – பிரொக்மோர் பிரிவில் மேலும் ஒரு கொரோனா வைரஸ் தொற்றாளர் இன்று (10) அடையாளம் காணப்பட்டார் என்று சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

12 வயதுடைய மாணவியொருவருக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. கடந்த 5 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டிருந்த நிலையில் இன்று காலை பிசிஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகின. இதில் குறித்த மாணவிக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டது.

சிறுமியின் தந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்றிருப்பது கடந்த 5 ஆம் திகதி உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அவர் அம்பாந்தோட்டையிலுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

கொழும்பில் மேசன் வேலையில் ஈடுபட்டிருந்த அவர் அண்மையில்வீட்டுக்குவந்திருந்தவேளை வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் இதுவரையில் 16 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

க.கிசாந்தன்

மா மரம் முறிந்து விழுந்ததால் வீடு சேதம் – பஸ்சுக்கும் பாதிப்பு

100 வருடங்கள் பழமையான மா மரமொன்று முறிந்து விழுந்ததால் வீடொன்றும், பஸ்ஸொன்றும் சேதமடைந்துள்ளன.

நுவரெலியா, ஹங்குராங்கெத்த – உடவத்த ஊடான கலவுட வீதியில் உடவத்த கல்லூரிக்கு அருகிலுள்ள நிலத்தில் இருந்த மரமொன்றே இவ்வாறு முறிந்து விழுந்துள்ளது. இதனால் குறித்த பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பஸ் சேதமடைந்துள்ளது.

அத்துடன், இம்மரத்தின் கிளையொன்று அருகில் இருந்த மற்றுமொரு மரம்மீது விழுந்தில் அம்மரமும் சரிந்து விழுந்துள்ளது. இதனால் வீடொன்றுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

இப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், தொலைபேசி சேவையும் இடம்பெறவில்லை.

“ மக்கள் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் குறித்த மரத்தை வெட்டி அகற்றுவதற்கு பிரதேச சபை அனுமதி வழங்கியுள்ளது. எனினும், தாமதம் ஏற்பட்டதாலேயே அவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.” – என்று ஹங்குராங்கெத்த பிரதேச சபையின் தலைவர் தெரிவித்தார்.

இன்றைய தினத்துக்குள் குறித்த வீதியில் போக்குவரத்து நடவடிக்கை வழமைக்கு திரும்பும் அதுவரையில் மாற்று வழியை பயன்படுத்துமாறும் அவர் கோரினார்.

க.கிசாந்தன்

ஐ.பி.எல். வெற்றி மகுடம் யாருக்கு? மும்பை, டெல்லி இன்று பலப்பரீட்சை!

ஐ.பி.எல். மகுடத்தை வெல்லப்போவது யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி துபாயில் இன்றிரவு அரங்கேறுகிறது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்ரீட்சை நடத்துகின்றன.

4 முறை (2013, 2015, 2017, 2019) கோப்பையை வென்று ஆதிக்கம் செலுத்தி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி 2010-ஆம் ஆண்டில் மட்டுமே இறுதிப்போட்டியில் தோல்வியை (சென்னையிடம்) சந்தித்தது. மற்றபடி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற எல்லா தடவையும் வெற்றி வாகை சூடி அசத்தி இருக்கிறது.

இம்முறை தொடரில் 9 வெற்றியுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்ததுடன் முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மும்பையின் துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சு வலுவானதாக விளங்குகிறது.

8 வெற்றி, 6 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 2-வது இடத்தை பிடித்த டெல்லி அணி தொடரின் தொடக்கத்தில் வீறு நடைபோட்டது. ஆனால் தற்போது சற்று தடுமாறுகிறது. முதலாவது தகுதி சுற்று உள்பட கடைசி 6 ஆட்டங்களில் 5-ல் தோல்வியை சந்தித்த அந்த அணி 2-வது தகுதி சுற்றில் ஐதராபாத்துக்கு ஆப்பு வைத்து இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது.

நடப்பு தொடரில் 2 லீக் ஆட்டங்களிலும் முறையே 5 விக்கெட் மற்றும் 9 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை பந்தாடிய மும்பை அணி முதலாவது தகுதி சுற்றிலும் 57 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அந்த அணிக்கு எதிராக தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் மும்பை அணியே இறுதிப்போட்டியிலும் கோலோச்ச அதிக வாய்ப்பு இருக்கிறது.

மும்பைக்கு எதிரான 3 ஆட்டங்களிலும் தோல்வி கண்டு இருக்கும் டெல்லி அணி அதற்கு பதிலடி கொடுக்க முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

அதிக முறை கோப்பையை வென்று இருக்கும் மும்பை அணி 5-வது முறையாக மகுடம் சூடி தனது ஆதிக்கத்தை நிலை நாட்டுமா? அல்லது முதல்முறையாக கோப்பையை வென்று நீண்ட நாள் தாகத்தை தீர்த்து டெல்லி அணி சரித்திரம் படைக் குமா? என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

இலங்கை நேரப்படி இன்றிரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.

நாட்டில் மேலும் ஒரு வைத்தியருக்கு கொரோனா தொற்று

திருகோணமலை வைத்தியசாலையில் மூன்று வைத்தியர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் ஒரு வைத்தியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜகத் விக்ரமரத்ன இன்று (10) தெரிவித்தார்.

கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த வைத்தியருக்கு கடந்த 27 ஆம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவ்வைத்தியருடன் தொடர்புகளைப் பேணி வந்த மூன்று வைத்தியர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலை விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர்.

இந்நிலையில் மூவருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் ஒரு வைத்தியருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த வைத்தியரை ஐ.டி.எச். மருத்துவமனைக்கு அனுப்புவதற்குரிய நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார்.

2ஆவது அலைமூலம் 460 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா

2ஆம் அலைமூலம் இதுவரையில் 460 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இவர்களுள் சிலர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து சுமார் 3 ஆயிரம் பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டனர், அவர்களில் இருந்தே தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். மாறாக பொலிஸாருக்கிடையில் சமூகதொற்று இல்லை என்றும் அவர் கூறினார்.

அதேவேளை, முகக்கவசம் அணிகின்றபோதிலும் சமூகஇடைவெளியை மக்கள் பின்பற்றுவதில்லை. தொடர்ந்தும் இவ்வாறு செயற்படும்பட்சத்தில் கைது செய்யவேண்டிய நிலை ஏற்படும் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார்.

அநுராதபுரத்தில் யாசகர் ஒருவருக்கு கொரோனா – 81 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

அநுராதபுரம் நகரைச் சேர்ந்த யாசகர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை அடுத்து குறித்த பகுதியில் உள்ள மேலும் 81 யாசகர்களை தனிமைப்படுத்த நேற்று பிற்பகல் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என அனுராதபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறியுள்ளார்.

மேலும், அநுராதபுரம் நகரில் உள்ள 81 யாசகர்களை பொலிஸாரின் உதவியுடன் கைது செய்து தனிமைப்படுத்த அனுராதபுரம் நகராட்சி மன்றம் நடவடிக்கை எடுத்ததுஎ ன்றும் அவர் கூறினார்.

கொரோனா தொற்று உறுதியான 80 வயதுடைய குறித்த யாசகர் தற்போது அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

14,285 பேருக்கு கொரோனா – 8,880 பேர் குணமடைவு – 36 பேர் பலி!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2 ஆவது அலைமூலம் இதுவரையில் 10 ஆயிரத்து 807 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 356 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

இலங்கையில் ஒரே நாளில் அதிகளவான தொற்றாளர்கள் (866) கடந்த 23 ஆம் திகதி அடையாளம் காணப்பட்டனர். ஒரே நாளில் அதிகளவானவர்கள் (765) நேற்று (5) குணமடைந்தனர்.

மினுவாங்கொட கொத்தணிமூலம் ஆயிரத்து 41 பேருக்கும், பேலியகொடை கொத்தணிமூலம் ஆயிரத்து 7 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது. ஏனைய 8ஆயிரத்து 759 பேரும் இவர்களுடன் தொடர்பை பேணியவர்களாவர்.
மினுவாங்கொட கொத்தணிமூலம் வைரஸ் தொற்றியவர்களில் இதுவரை 2 ஆயிரத்து 700 இற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் நேற்று மாத்திரம் 7ஆயிரத்து 968 பிசிஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை 6 லட்சத்து 10 ஆயிரத்து 836 பிசிஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இலங்கையில் கொரோனா மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 285 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 8 ஆயிரத்து 880 பேர் குணமடைந்துள்ளனர். 5 ஆயிரத்து 370 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. 36 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சரை பதவி நீக்கம் செய்தார் ட்ரம்ப்

அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்துவந்த மார்க் எஸ்பர், அப்பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

அவருக்கு பதிலாக தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குனர் கிரிஸ்டோபர் மில்லர் அப்பதவிக்கு பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ஜனாதிபதி டிரம்ப் தனது டுவிட்டர் பதிவில் கூறுகையில்,

” மார்க் எஸ்பர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குனர் கிறிஸ்டோபர் மில்லர் அந்த பதவிக்கு நியமிக்கப்படுகிறார். அவர் பாதுகாப்பு துறையின் பொறுப்பு அமைச்சராக உடனடியாக பதவி ஏற்கிறார். எஸ்பரின் பணிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவில் நடைபெற்ற போராட்டங்களை ஒடுக்க பாதுகாப்பு படையினரை ஈடுபடுத்த மறுப்பு தெரிவித்ததில் இருந்தே எஸ்பருக்கும் டிரம்புக்கும் இடையே விரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

‘மலையகத்தில் விகாரையொன்றுக்கு தமிழரின் பெயர் வைத்த தேரர்’

இலங்கையானது பல்லின மக்களும் வாழும் நாடாகும். அவர்களுக்கு தாம் விரும்பும் மதத்தை பின்பற்றி வாழ்வதற்கான உரிமையும் இருக்கின்றது.

எனினும், எங்கள் மதம் பெரியதா அல்லது உங்கள் மதம் பெரியதா என மதம் பிடித்து திரியும் சிலரும் வாழவே செய்கின்றனர். சில அடிப்படைவாத மதத்தலைவர்களாலும் நாட்டில் அவ்வப்போது பிரச்சினைகள் உருவாகின்றன.

இவ்வாறானதொரு நிலையில் இலங்கையில் தமிழ் பெயரில் விகாரையொன்று உள்ளதை அறிவீர்களா?

கண்டி மாவட்டத்தில் கம்பளை தொழுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புப்புரஸ்ஸ கிராம சேவகர் பிரிவிலேயே “சுப்பிரமணியராமய”  என்ற தமிழ் பெயரில் இந்த விகாரை காணப்படுகின்றது.

மலையக தோட்டத்துறை வரலாற்றில் தோட்டங்கள் ஒரு காலத்தில் தனியாருக்குச் சொந்தமானதாக காணப்பட்டது. அவ்வாறான நிலையில் இந்திய வம்சாளியை சேர்ந்த சுப்பிரமணியம் முதலாளி புப்புரஸ்ஸ தோட்டத்தை நிர்வகித்து வந்தார். அந்த அந்நேரத்தில் தமது தோட்டத்தில் ஒரு விகாரை அமைக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை அவரது மனதில் உருவானது.
அதற்கமைய தனது சொந்த காணியில் பௌத்த விகாரைக்கு என ஒருப் பகுதியை வழங்கி 1958 ஆம் ஆண்டு இவ்வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். இவரது பெயர் எம்.எம்.சுப்பிரமணியம் என்பதனால்  “சுப்பிரமணியராமய” என விகாரைக்கு பொறுப்பாக இருந்த வணக்கத்திற்குரிய அமரர் ஸ்ரீ விமலானந்த தேரர் அவர்களினால் இந்த பெயர சூட்டப்பட்டது, தற்போதும் அந்த பெயரிலேயே காணப்படுகின்றது.
இதன் பயனாக இவரது தோட்டத்தில் பௌத்த விகாரை அமைந்ததோடு அந்த பிரதேசத்தில் சிங்கள குடியேற்றங்கள் ஏற்பட்டதுடன் ஒரு புப்புரஸ்ஸ என்ற ஒரு சிறிய நகரமும் உருவானது. தற்போது இந்த பிரதேசத்தில் தமிழர்களும்¸ சிங்களவர்களும் வாழ்ந்து வருகின்றனர்.
குறிப்பாக இந்த “சுப்பிரமணியராமய”  இந்த பிரதேசத்தில் பௌத்த மத சார்பான விடயங்களையும் தாம் பாசல் என அழைக்கப்படும் அறநெறி பாடசாலையும் பௌத்த மக்களுக்கும்¸ இந்து மக்களுக்கும் தேவையான விடயங்களை செய்து வருகின்றது. இதற்கு காரணமாக இருந்த அமரத்துவம் அடைந்த ஸ்ரீ விமலானந்த தேரர் ஆவார்.
இவர் இந்த விகாரையை பல வருடங்களாக நிர்வகித்து வந்ததுடன் பிரதேச மக்களுக்கு ஆன்மீக ரீதியில் பல சேவைகளை செய்து வந்துள்ளார். இடைக்காலப்பகுயில் இந்த பெரை மாற்றுவதற்கு பலர் முயற்சித்தப் போதும் தேரர் அதனை செய்யவிடவில்லை. இவ்வாறு நம் முன்னோர்கள் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக வாழ்ந்து வந்துள்ளமை சமூகத்திலுள்ள ஏனையயோருக்கு ஒரு எடுத்து காட்டாகும்.
எனவே இது போன்ற செயற்பாடுகளை கவனத்தில் கொண்டு செயற்படுவோமானால் நாட்டில் சாந்தி¸ சமாதானம்¸ சமத்துவம் நிலவும் என்பதில் ஐயமில்லை. அதே வேலை தேரர் எந்த அளவுக்கு நன்றி உடையவராக இருந்துள்ளார் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் இது அனைவரையும் சிந்திக்கவும் பெருமைப்படவும் வைக்கின்றது.
மக்கள் செய்தியாளர் – பா. திருஞானம்

‘கொரோனா’ 4ஆவது கட்டத்துக்கு சென்றால் நிலைமை மோசமாகிவிடும்

” இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் நான்காவது கட்டத்துக்குள் சென்றுவிட்டால் அதனை கட்டுப்படுத்தமுடியாத நிலை ஏற்படும். எனவே, அனைவரும் பொறுப்புடனும், பொதுநலன்கருதியும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வாழவேண்டும்.” – என்று சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஜயருவன் பண்டார  தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கொரோனா வைரஸ் தாக்கத்தின் 3ஆவது மட்டத்திலேயே இலங்கை தற்போது இருக்கின்றது. அதாவது வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தக்கூடிய நிலையில் இருக்கின்றோம்.ஆனால் 4ஆவது கட்டத்துக்கு சென்றுவிட்டால் எல்லாம் கைமீறி சென்றுவிடும். உலக சுகாதார அமைப்பு 7 கட்டங்களை பட்டியலிட்டுள்ளது, இருந்தாலும் 4 ஆவது கட்டத்துக்கு வந்துவிட்டாலே பெரும் சவால்தான்.

எனவே, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி (இரண்டு மீற்றர்) , கைகளை கழுவுதல் போன்ற சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றவேண்டும். 4ஆவது கட்டத்துக்கு செல்லாமல் இருப்பதற்கு வேறு மந்திரங்கள் எதுவும் இல்லை. மேற்படி நடைமுறைகளையே பின்பற்றவேண்டும். அத்துடன், களியாட்டம் உட்பட சட்டத்தால் தற்போதைக்கு நிறுத்தப்பட்டுள்ள விடயங்களில் பங்கேற்பதையும் தவிர்த்துக்கொள்ளவேண்டும்.

இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் தற்போது கொரோனாவுடன் வாழ தொடங்கிவிட்டன. இத்தாலி கிறிஸ்மஸ் பண்டிகைக்குகூட தயாராகின்றது. நாமும் சுகாதார பழக்கவழக்கங்களுடன் முன்னோக்கி பயணிக்கவேண்டும்.

அதேவேளை, வீடுகளில் உயிரிழக்கும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. உரிய வகையில் மருந்துகளை எடுக்காமையும் இதற்கு காரணமாக இருக்கலாம். எனவே, உரிய தரப்புகளுக்கு அறிவித்து மருத்துகளை பெற்றுக்கொள்ளுங்கள். வைத்தியசாலைக்கு வருவதற்கு அச்சம் கொள்ளவேண்டாம். சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் வாருங்கள். சிகிச்சையளிப்பதற்கு வைத்தியசாலை கட்டமைப்பு தயாராகவே இருக்கின்றது.” – என்றார்.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

playoff சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியது சென்னை!

0
ஐபிஎல் 2026 தொடரின் நேற்றிரவு நடைபெற்ற 48 ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணயச்சுழற்சியில் வென்று...

மரக்கறி விலைப்பட்டியல் (06.05.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (06) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் மேலும் 5 என்புத் தொகுதிகள் அடையாளம்!

0
யாழ். செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 8ஆம் நாள் அகழ்வின் போது, சிறு குழந்தை ஒன்றின் எலும்புக்கூடு உட்பட 5 புதிய என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில்...