Home Blog Page 3783

‘வத்தளையில் தமிழ் குடும்பம்மீது மொட்டு கட்சி உறுப்பினர் தாக்குதல்’

வத்தளை, ஹெந்தலை பகுதியில் தமிழ் குடும்பமொன்றின்மீது தாக்குதல் நடத்தி அவர்களின் வீட்டை கைப்பற்ற முனைந்த ஆளுங்கட்சி உறுப்பினருக்கு எதிராக உரிய சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என சட்டம், ஒழுங்கு அமைச்சர் ராஜபகச, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனிடம் உறுதியளித்துள்ளார்.

” வத்தளை ஹெந்தலை பிரதேசத்தில் ராமலிங்கம் தங்கராஜா, விமலா சுப்பிரமணியம் என்ற தமிழ் குடும்பத்தை துன்புறுத்தி வீட்டை கைப்பற்ற முனைந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுங்கள். இந்த குடும்பத்து தமிழ் பெண்ணை தாக்கியுள்ள நபர்களை கைது செய்யுங்கள்.

பாதிக்கப்பட்ட  தமிழ் குடும்பத்தவர்கள், வத்தளை பொலிஸ் நிலையத்தில் கடந்த மாதம் 4 ஆம், 13 ஆம் மற்றும் இம்மாதம் 7ஆம் திகதிகளில் முறைப்பாடுகள் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

யோஹான் விக்ரமசிங்க என்ற பொதுஜன பெரமுனவின்  வத்தளை பிரதேச சபை உறுப்பினருக்கும், அவரை சார்ந்த நபர்களுக்கும் எதிராக முன்வைத்த முறைப்பாடுகள் தொடர்பில், வத்தளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி செலோகம ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் கண்டறியுங்கள்.” – என்று மனோ கணேசன் நேற்று குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன்,  ” இது தொடர்பில் எமது கம்பஹா மாவட்ட அமைப்பாளர் சசிகுமார் உட்பட ஆதரவாளர்கள் மற்றும் சம்பந்தபட்ட குடும்பத்தினர் ஏன்னிடம் நேரடியாக முறைப்பாடு செய்துள்ளனர்.” என்று மனோ கணேசன் எம்பி, இன்று சட்ட ஒழுங்கு துறை அமைச்சர் சமல் ராஜபக்சவிடம், நேரடியாக எடுத்து கூறினார்.

இதன்போது ஆளும் கட்சி அரசியல்வாதியாக இருந்தாலும், இந்த பிரதேச சபை உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அமைச்சர் சமல் ராஜபக்ச,  மனோ கணேசனிடம் உறுதியளித்தார்.

இதையடுத்து, மனோ கணேசன் எம்பி, வத்தளைக்கு பொறுப்பான மேல்மாகாண வடக்கு பிரதி பொலிஸ் மாதிபர் விஜயஸ்ரீயை தொடர்பு கொண்டு, இவ்விடயம் பற்றி பிரஸ்தாபித்து, வத்தளை பொலிஸ் பொறுப்பதிகாரியின் அசமந்த போக்கு மற்றும் அரசியல் சார்ந்த செயற்பாடு பற்றி கவனிக்கும்படியும், வத்தளை கெரவலபிடிய பகுதியில் வசிக்கும் தமிழ் குடும்பங்களை அச்சுறுத்தி, அவர்களது காணி, வீடுகளை அபகரிக்கும் திட்டமா இது என விசாரிக்கும்படியும் அறிவுறுத்தினார்.

இது தொடர்பில் உடன் நடவடிக்கை எடுப்பதாக, பிரதி பொலிஸ் மாதிபர் விஜயஸ்ரீ, மனோ கணேசன் எம்பியிடம் உறுதியளித்தார்.

சற்று முன், வத்தளை பொலிஸ் பொறுப்பதிகாரி செலொகமவை தொடர்பு கொண்ட மனோ எம்பி, இத்தகைய முறைப்பாடுகள் உம்மீது வத்தளை வாழ் தமிழ் மக்கள் கூறாத வண்ணம் நடந்துக்கொள்ளும் என கூறியுள்ளார்.

‘இலங்கையில் 14 ஆயிரத்தை தாண்டியது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை’

நாட்டில் மேலும் 172 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி இலங்கையில் கொரோனா 2ஆவது அலைமூலம் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று இதுவரையில் 172 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 101 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் இதுவரையில் 35 பேர் உயிரிழந்துள்ளனர்.  8 ஆயிரத்து 880 பேர் குணமடைந்துள்ளனர்.

‘கட்சிபேதமின்றி காங்கிரஸின் சேவைகள் தொடரும்’ – ரமேஷ்

“கட்சி பேதங்களுக்கு அப்பால் மலையக மக்களுக்கான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சேவைகள் தொடரும்.” – என்று காங்கிரஸின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்சவின் “சௌபாக்கிய நோக்கு” எனும் எண்ணக்கருவுக்கமைய புறநெகும திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட நுவரெலியா பிரதேச சபை பல்நோக்கு கட்டத்தின் திறப்பு விழா இன்று (09.11.2020) இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மருதபாண்டி ராமேஷ்வரன் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நுவரெலியாவிலும் ஏனைய சில இடங்களிலும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஆளுகையின் கீழ் உள்ளாட்சிமன்றங்கள் இருக்கின்றன. எனினும், கட்சி பேதம் பார்த்து எமது கட்சி சேவை வழங்குவதில்லை. அனைத்து மக்களுக்கும் காங்கிரஸின் சேவைகள் தொடரும்.

கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒற்றுமையாக மக்களுக்கு சேவை வழங்குமாறு காங்கிரஸின் உள்ளாட்சிமன்ற தலைவர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் மறைந்த எமது தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் ஆலோசனை வழங்கியுள்ளார். தற்போதைய எமது தலைவர் ஜீவன் தொண்டமானிடமும் அதே எண்ணம்தான் காணப்படுகின்றது.

அதேவேளை, 10 ஆயிரம் வீட்டுத்திட்டத்தை விரைவில் ஆரம்பிக்ககூடியதாக இருக்கும். கட்சி வேறுபாடின்றி மக்களுக்கான காங்கிரஸின் சேவைகள் எதிர்காலத்திலும் தொடரும்.

அத்துடன், மற்றுமொரு விடயத்தையும் குறிப்பிடவேண்டும். தீபாவளி பண்டிகை எமக்கு முக்கியம்தான், அதனைவிடவும் சமூக பாதுகாப்பு முக்கியம். எனவே, சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றுமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.

க.கிசாந்தன்

‘மலையகத்தில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவோம்’ – ஜீவன் உறுதி

” மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதே எமது இலக்கு. அதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. சில விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. கொரோனா பிரச்சினையால் சிற் சில பணிகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. எனினும், மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்சவின் “சௌபாக்கிய நோக்கு” எனும் எண்ணக்கருவுக்கமைய புறநெகும திட்டத்தின்கீழ் நிர்மாணிக்கப்பட்ட நுவரெலியா பிரதேச சபை பல்நோக்கு கட்டத்தின் திறப்பு விழா இன்று (09.11.2020) இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ரமேஷ்வரன், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேல், நுவரெலியா மற்றும் அக்கரப்பத்தனை பிரதேச சபை தலைவர்கள், நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பிதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

” கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளது. எனவே, அனைவரும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை முழுமையாக பின்பற்றி வாழவேண்டும். கட்டாயம் முகக்கவசம் அணியவும், சுகாதார நடைமுறைகளை எவராவது பின்பற்ற மறுத்தால் அவர்களுக்கு நிலைமையை தெளிவுபடுத்தவும். அப்போதுதான் கொரோனா சவாலை எதிர்கொள்ள முடியும்.

அதேவேளை, வெளியில் இருந்து தோட்டப்பகுதிகளுக்கு வருபவர்கள் தொடர்பில் அவதானமாகவே இருக்கவேண்டும். அவ்வாறு வருபவர்கள் தோட்டங்களில் உரிய தரப்புகளிடம் பதிவுகளை மேற்கொள்ளவேண்டும்.

சிலர் தனிமைப்படுத்தல் நடைமுறையை சிறை தண்டனைபோல் நினைக்கின்றனர். அவ்வாறு அல்ல, உங்களின் பாதுகாப்புக்காகவும், ஏனையோரின் பாதுகாப்புக்காகவுமே தனிமைப்படுத்தல் முன்னெடுக்கப்படுகின்றது. எனவே, அதற்கு அஞ்சவேண்டியதில்லை. சுகாதார மற்றும் பாதுகாப்பு தரப்புகளுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கவும்.

மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவே நாம் வந்துள்ளார். அரசாங்கத்தின் எதிர்ப்பார்ப்பும் அதுவே. கொரோனாவால் சிற்சில பணிகள் ஸ்தம்பித்துள்ளன. விரைவில் வீட்டுத்திட்டம் ஆரம்பிக்கப்படும். ஏற்கனவே கட்டப்பட்டுள்ள வீடுகளில் நீர், மின்சாரம் என உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை. அவற்றை முழுமைப்படுத்திய பின்னர் புதிய திட்டம் ஆரம்பிக்கப்படும். இந்திய தரப்புக்கும் இது பற்றி தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் நிச்சயம் சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்போம்.” – என்றார் ஜீவன் தொண்டமான்.

க.கிசாந்தன்

13,929 பேருக்கு கொரோனா – 8,880 பேர் குணமடைவு! 35 பேர் பலி!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 595 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 880 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 5 ஆயிரத்து 14 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 929 ஆக அதிகரித்துள்ளது.

‘மேல்மாகாணத்தில் இருந்து மலையகத்துக்கு வந்தவர்கள் திருப்பி அனுப்பட்டனர்’

மேல் மாகாணம் உட்பட கொரோனா வைரஸ் வேகமாக பரவும் அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து மலையக பெருந்தோட்டப்பகுதிகளுக்கு இன்று (09.11.2020) வருகை தந்த வாகனங்களும், அதில் பயணித்தவர்களும் திருப்பியனுப்பட்டனர்.

மேல் மாகாணத்திலும் நாட்டில் ஏனைய சில பகுதிகளிலும் பிறப்பிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் இன்று காலை (09.11.2020) 5 மணிக்கு தளர்த்தப்பட்டது. எனினும், வெளிமாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்த்துகொள்ளுமாறு மக்களிடம் கோரப்பட்டுள்ளது.

அதேபோல மேல் மாகாணம் உட்பட கொரோனா வைரஸ் பரவக்கூடிய பகுதிகளில் உள்ளவர்கள், தீபாவளி பண்டிகைக்காக மலையக பெருந்தோட்டப்பகுதிகளுக்கு வருகைத்தர வேண்டாம் எனவும், அவ்வாறு வந்தால் குடும்பத்தோடு சுய தனிமைக்கு உட்படுத்தப்படுவீர்கள் எனவும் சுகாதார வைத்திய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் வெளியிடங்களில் இருந்து மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் வருபவர்களை தடுப்பதற்கும், கண்காணிப்பதற்கும் பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து கூட்டு சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்படி அட்டன்  – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை தியகல, கலுகல பகுதியிலும், அட்டன் – கண்டி பிரதான வீதியில் கினிகத்தேனை பகத்தொழுவ பகுதியிலும் விசேட சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 24 மணிநேரமும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இவ்வீதிகள் ஊடாக வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்குட்படுத்தப்படும். இந்நிலையில் அநாவசியமான முறையில் பெருந்தோட்டப்பகுதிகளுக்கு இன்று (09.11.2020) செல்ல முற்பட்ட வாகனங்களும், அதில் பயணித்தவர்களும் திருப்பி அனுப்பட்டனர்.

அத்துடன், வருபவர்கள் தொடர்பான தகவல்களும் திரட்டப்படுகின்றன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருபவர்களை அவர்கள் தங்கி இருக்கும் இடத்திலேயே 14 நாட்களுக்கு தனிமைப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

க.கிசாந்தன்

5 வருடங்களாக காத்திருப்பு! 1000 ரூபா எப்போது கிடைக்கும்?

தோட்டத் தொழிலாளர்களுக்கு உடனடியாக ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்க கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கும்,முதலாளிமார் சம்மேளனத்திற்கும், அரசாங்கத்திற்கும் மலையகத்தில் உள்ள ஏனைய தொழிற்சங்கங்களும், அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புகளும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என விவசாயத் தோட்ட தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆர்.எம்.கிருஸ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” 1000 ரூபாய் சம்பள உயர்வு விடயத்தில் தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருவதுடன், அதிகரித்து வரும் வாழ்க்கை செலவுக்கு ஏற்ப தற்போதைய வருமானத்தில் வாழ்க்கையை கொண்டு நடத்த முடியாமல் திண்டாடி வருகின்றனர்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டுமென மறைந்த அமைச்சர் அமரர் ஆறுமுகம் தொண்டமான் 4 வருடங்களுக்கு முன்னர் முதலாளிமார் சம்மேளனத்திடம் கோரிக்கை முன்வைத்தார். இக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டதன் காரணமாக தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைக்கப்பட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு பொது அமைப்புகளும் மலையக இளைஞர்களும் பேராதரவை வழங்கினர். நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியில் பங்குதாரராக இருந்த தமிழ் முற்போக்கு கூட்டணியும் அரசாங்கத்திற்கு அழுத்தத்தை பிரயோகித்த போதும் சம்பள உயர்வு கோரிக்கை வெற்றி பெறவில்லை.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தற்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தான் தேர்தலில் வெற்றி ஈட்டியதும் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளம் வழங்கப்படும் எனக் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற மன்ற தேர்தல் காலத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான அமரர் ஆறுமுகம் தொண்டமானின் இறுதி கிரியையில் கலந்து கொண்ட பிரதமர் மகிந்த ராஜபக்ச அங்கு இரங்கல் உரையாற்றும் போது அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் இறுதியாக என்னை சந்தித்த போது தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000ரூபாய் சம்பள உயர்வு பெற்றுக் கொடுக்க வேண்டுமென கூறினார். நான் பிரதமரானதும் நிச்சயமாக சம்பள உயர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என்றார்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தொழிலாளர்களுக்கு 1500ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்படும் என தலவாக்கலை தேர்தல் பிரசார கூட்டத்தில் வாக்குறுதி அளித்தார். இதற்கு மேலதிகமாக இ.தொ.கா. பொதுச்செயலாளரும், இராஜங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் அமைச்சு பதவியை பொறுப்பேற்றதும் உடனடியாக தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளத்தை பெற்றுக் கொடுத்து தந்தையின் கனவை நனவாக்குவேன் என்றார்.

இவை அனைத்தும் நடந்து பல மாதங்கள் கடந்துள்ள போதும் சம்பள உயர்வு வழங்கப்படாமல் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டு விரக்தி அடைந்துள்ளனர். எனவே சம்பள உயர்வை பெற அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து அழுத்தம் பிரயோகிக்க முன்வர வேண்டும் என்றார்.

நவம்பர் 23 ஆம் திகதி பாடசாலைகள் மீள திறக்கப்படும்- கல்வி அமைச்சர்

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் நவம்பர் 23 ஆம் திகதி மீள திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இன்று தெரிவித்தார்.

பாடசாலைகளை இன்று (9) மீள திறக்கப்படும் என கல்வி அமைச்சு ஏற்கனவே அறிவித்திருந்தது. எனினும், மாணவர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டே மேலும் இரு வாரங்களுக்கு விடுமுறையை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் கல்வி அமைச்சர் கூறினார்.

நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று!

தெலுங்கு திரைப்பட நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.  கொரோனா தொற்றால் பாமர மக்கள் முதல் அரசியல் கட்சி தலைவர்கள், மந்திரிகள், பல்வேறு திரைபிரபலங்களும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆச்சார்யா படத்தின் படப்பிடிப்பின் போது தனக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது.

அறிகுறிகள் இல்லாத நிலையில் தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். கடந்த 5 தினங்களுக்கு முன்பு வரை தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள். விரைவில் நான் மீண்டு வந்ததை அறிவிப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் தமன்னா, அர்ஜுன் கபூர், மலைகா அரோரா, ஜெனிலியா, ராஜமெளலி உள்ளிட்ட பலரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு மீண்டு உள்ளனர்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு – அடங்க மறுத்த 2,923 பேர் கைது!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரப் பகுதியில் 91 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் 12 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதேவேளை, ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இதுவரை 2 ஆயிரத்து 923 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
483 வாகனங்கும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

போர் நிறுத்தத்தை அப்பட்டமாகமீறும் ஈரான்!

0
போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறுவதாகக் ஈரான் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் Mohammad Ghalibaf, குற்றம் சாட்டியுள்ளார். ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்காவின் நடவடிக்கைகள் கப்பல் போக்குவரத்து மற்றும் எரிசக்தி பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்கா...

மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கு விசேட இராப்போசன விருந்துபசாரம்!

0
மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கு இலங்கை ஜனாதிபதியால் விசேட இராப்போசன விருந்துபசாரம் - முகமது முய்சுவின் விஜயத்துடன் இலங்கை - மாலைதீவு இடையிலான நெருங்கிய நட்புறவு மேலும் பலமடையும் - இலங்கை ஜனாதிபதி ஒவ்வொரு காலகட்டத்திலும்...