Home Blog Page 3784

‘தோல்வியை ஏற்க மறுக்கும் டரம்ப் – அதிரடிக்கு தயாராகும் பைடன்’

அமெரிக்காவில் பைடன், கமலா ஹாரிஸ் இருவரும் ஆட்சி மாற்றத்துக்கான இணையதளத்தை தொடங்கியதுடன், நிர்வாகப் பணிகளை தொடங்குமாறு ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் தேர்வாகியுள்ளார். அதேபோல், துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெற்றிபெற்றுள்ள போதும் அவர் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 20-ம் திகதிதான் முறைப்படி அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ளார். அவர் வெள்ளை மாளிகை செல்வதற்கு இன்னும் 70 நாட்களுக்கு மேல் உள்ளன.

தேர்தல் முடிவுகள் வெளியான உடன் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் கூட்டாக வெற்றிவிழா நிகழ்ச்சியில் பங்கேற்று தங்கள் செயல்திட்டங்களை தெரிவித்தனர். அதேசமயம் தோல்வியை ஒப்புக்கொள்ள மீண்டும் மறுத்துள்ளார் டிரம்ப். அத்துடன் தேர்தல் முடிவுகள் குறித்த சந்தேகங்களை சட்டரீதியாக எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். டிரம்பிடம் ஏராளமான ஆதாரங்கள் இருப்பதாகவும், விரைவில் வழக்குகள் தொடரப்படும் என்றும் அவரது வழக்கறிஞர் கூறி உள்ளார்.

இதுஒருபுறமிருக்க, வெள்ளை மாளிகைக்கு செல்வதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை பைடன் தொடங்கி உள்ளார். பைடன், கமலா ஹாரிஸ் இருவரும் ஆட்சி மாற்றத்துக்கான இணையதளம் (BuildBackBetter.comமற்றும் டுவிட்டர் கணக்கை தொடங்கி, நிர்வாகப் பணிகளை முதல் நாளில் இருந்தே தொடங்குமாறு தமது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

பைடன் தொடங்கி உள்ள ஆட்சிமாற்ற இணையதளத்தில், கொரோனா, பொருளாதார மீட்பு, இன சமத்துவம் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகிய 4 அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா பஸ் தரிப்பிடத்தின் அவலநிலை…!

நுவரெலியா நகரில், நுவரெலியா மாநகர சபையால் நிர்வகிக்கப்பட்டுவரும் பஸ் தரிப்பிடமே இது.

குறித்த பஸ் தரிப்பிடத்தில் உள்ள சுவர்களில் – ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவின், நாட்டை சுத்தமாக வைத்திருப்போம் என்ற செயற்திட்டத்திற்கு அமைவாக, அண்மையில் இளைஞர் யுவதிகளினால் சமூகத்திற்கு தேவையான கருத்துகளையும், அறிவுரைகளையும் எடுத்துரைக்கும் விதத்திலான சித்திரங்கள் வரையப்பட்டிருந்தன.இதனையடுத்து பஸ் தரிப்பிடமும் வண்ணமயமானது. அழகாக காட்சியளித்தது.

எனினும், பஸ் தரிப்பிடத்தை மாநகரசபை முறையாக பராமரிக்காததால் சுற்றுசுழல் அசுத்தமாக காணப்படுவதுடன், பயணிகள் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்கின்றனர்.

அத்துடன், பஸ் தரிப்பிடத்தில் காணப்படும் அனைத்து இருக்கைகளும் சேதமடைந்துள்ளன. இதனால் பஸ்களுக்காக நெடுநேரம் காத்திருப்பவர்களுக்கு அமர்வதற்குகூட உரிய வசதிகள் இல்லை.

நுவரெலியா என்றதும் பசுமையும் அதன் அழகுமே அனைவரினது மனத்திரைகளுக்குள்ளும் வந்துசெல்லும். இவ்வாறான அழகிய நகரில் உள்ள பஸ் தரிப்பிடத்தை இவ்வாறு வைத்திருக்கலாமா? சுத்தமாக, பாவனைக்கு ஏற்ற வகையில் வைத்திருக்கவேண்டியது மாநகரசபையின் கடமை அல்லவா?

கொழும்பு, கண்டி, குருணாகலை, யாழ்ப்பாணம், வெலிமடை , பண்டாரவளை, பதுளை, கதிர்காமம், காலி, ஹட்டன், புஸல்லாவை, பூண்டுலோயா, ராகலை, உடபுஸ்ஸல்லாவை, மீபிலிமான, கந்தபளை, வலப்பனை போன்ற இடங்களுக்கும், நுவரெலியாவை சூழவுள்ள தோட்ட மற்றும் கிராமங்களுக்கு செல்லும் தனியார் மற்றும் அரச பஸ்கள் குறித்த பஸ் தரிப்பிடத்திலேயே நிறுத்தப்படும்.

மக்கள் செய்தியாளர் – பா. திருஞானம்

2ஆவது அலைமூலம் 10,451 பேருக்கு கொரோனா! 22 பேர் பலி!!

இலங்கையில் கொரோனா வைரஸ் 2 ஆவது அலைமூலம் நேற்றிரவுவரை (9) 10 ஆயிரத்து 451 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் இதுவரையில் 22 பேர் பலியாகியுள்ளனர்.

மினுவாங்கொட கொத்தணிமூலம் ஆயிரத்து 41 பேருக்கும், பேலியகொடை கொத்தணிமூலம் ஆயிரத்து 7 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது. ஏனைய 8 ஆயிரத்து 403 பேரும் இவர்களுடன் தொடர்பை பேணியவர்களாவர்.

இவ்வாறு 2ஆவது அலைமூலம் கொரோனா தொற்றியவர்களில் நேற்றுவரை 4 ஆயிரத்து 449 பேர் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் நேற்று 10 ஆயிரத்து 632 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரையில் 6 லட்சத்து 2 ஆயிரத்து 850 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதேவேளை, இலங்கையில் நேற்றுவரை மொத்தமாக 13 ஆயிரத்து 929 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 8ஆயிரத்து 285 பேர் குணமடைந்துள்ளனர். 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

குட்டி லண்டனில் வலி சுமந்த ஓய்வு பூங்கா

நுவரெலியா மாநகரசபைக்கு உட்பட்ட பதுளை – நுவரெலியா பிரதான வீதியில் கொல்ப் கிளபிற்கு அருகில் காணப்படும் ஓய்வு பூங்காவே இது.

இப் பூங்காவில் உள்ள சில பகுதிகள் ஆங்காங்கே உடைந்து சிதைவடைந்து காணப்படுகின்றன. பராமரிப்பு பணிகள் நுவரெலியா மாநகர சபைக்கு பொறுப்பானதாக இருக்கின்ற போதும், கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுவது வேதனைக்குரிய விடயமே.

ஓய்வு பூங்காவினை நுவரெலியாவிற்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், நாளாந்தம் தங்கள் தேவைகளுக்காக நுவரெலியா மாநகரத்திற்கு வரும் மக்களும் பயன்படுத்திவருகின்றனர்.

நுவரெலியா நகரத்தின் அழகினை மேலும் அதிகரிப்பதற்றாக மக்கள் பணத்தை செலவு செய்து அமைக்கப்பட்ட இவ்வாறான செயற்திட்டங்களை பராமரிக்க வேண்டியது மாநகர சபையின் கடமையாகும்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் தற்போது நுவரெலியா மாவட்டத்துக்கு சுற்றுலா வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் வெளியில் வருவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனை வாய்ப்பாக பயன்படுத்தியேனும் பூங்காவை புனரமைப்பதற்கு மாநகரசபை நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் செய்தியாளர் – பா.திருஞானம்

‘கொரோனா’ கட்டுக்குள்வர கொட்டகலையில் யாக பூஜை!

கொவிட் – 19 வைரஸ் பரவல் விரைவில் கட்டுப்பாட்டுக்குள் வந்து, அதன் தாக்கத்திலிருந்து நாடும் மக்களும் விடுபட இறையாசிவேண்டிய கொட்டகலை ஸ்ரீ முத்து விநாயகர் ஆலயத்தில் விசேட யாக பூஜை நடைபெற்றது.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்து சமய, கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் நாடு முழுவதிலும் உள்ள இந்து ஆலயங்களில் விசேட பிரார்த்தனை வழிபாடுகளில் ஈடுபடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

இதன்பிரகாரமே கொட்டகலையிலும் பூஜை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விநாயகர் வழிபாடு விசேட பிணி நீக்கும் 27 மூலிகைகளை கொண்ட விசேட யாக பூஜை, இடம்பெற்றதுடன் அதில் 108 தடவை மிருதஞ்ச பெருமானுக்கு நாம அர்ச்சினை இடம்பெற்றன.

நாட்டில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதனால் பூஜை வழிபாடுகள் சுகாதார பொறிமுறைகளுக்கமைவாக குறிப்பிட்ட அளவு எண்ணிக்கை பகதர்களே கலந்து கொண்டு பூஜை வழிபாடுகளில் ஈடுப்பட்டனர்.

அதனை தொடர்ந்து கொரோனா ஒழிய வேண்டும் என விசேட பிரார்த்தனையும் இடம்பெற்றன. இப்பூஜையில் அரசியல் பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.

க.கிசாந்தன்

யாழில் குளத்துக்குள் இருந்து ஐம்பொன் சிலைகள் மீட்பு!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கானை ஓடக்கரை நாகதம்பிரான் ஆலயத்துக்கு அண்மையாக உள்ள குளத்துக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.

இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (நவ.8) மாலை 4 மணியளவில் அந்த இடத்துக்கு வந்த இராணுவத்தினர், குளத்துக்குள்ளிலிருந்து சிலைகளை மீட்டெடுத்தனர்.

சுமார் 68 வருடங்களுக்கு முற்பட்ட முருகன், 3 மயில்கள், கலசம் ஆகிய ஐம்பொன் சிலைகளே மீட்கப்பட்டன. அந்தக் காலப்பகுதியில் தங்கம் அதிகளவு சேர்க்கப்படுவதால் அவற்றின் தற்போதைய பெறுமதி ஒன்றரைக் கோடி ரூபாய் வரும் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

நீண்டகாலத்துக்கு முன்பு அவை புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
மீட்கப்பட்ட சிலைகள் வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

அந்தச் சிலைகளை இந்தியாவுக்கு கடத்தும் நோக்குடன் குளத்துக்குள் புதைத்து வைத்திருக்கலாம் என்றும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

ஐ.பி.எல். வரலாற்றில் முதன் முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது டெல்லி அணி!

ஐ.பி.எல். கிரிக்கெட் தகுதி சுற்றில் ஐதராபாத்தை வீழ்த்தி டெல்லி அணி முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதித்தது.

13ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. ‘கிளைமாக்ஸ்’ கட்டத்துக்கு வந்து விட்ட இந்த கிரிக்கெட் திருவிழாவில் மும்பை இந்தியன்ஸ் முதல் அணியாக இறுதிசுற்றை எட்டியது.

இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் மற்றொரு அணி எது? என்பதை நிர்ணயிக்கும் 2-வது தகுதி சுற்றில் முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொண்டது.

டெல்லி அணியின் தொடக்க வரிசையில் மாற்றம் செய்யப்பட்டது. மிடில் வரிசையில் ஆடி வந்த மார்கஸ் ஸ்டோனிஸ், ஷிகர் தவானுடன் இணைந்து தொடக்க வீரராக அடியெடுத்து வைத்தார்.

இந்த மாற்றத்துக்கு கைமேல் பலன் கிடைத்தது. 3 ரன்னில் கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பித்து அதிரடி காட்டிய ஸ்டோனிஸ், வேகப்பந்து வீச்சாளர் ஜாசன் ஹோல்டரின் ஒரே ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் ஓடவிட்டார். தவானும் மட்டையை சுழட்ட ஸ்கோர் மளமளவென எகிறியது. ‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 65 ரன்கள் திரட்டி அமர்க்களப்படுத்தினர்.

வலுவான அஸ்திவாரம் அமைத்து தந்த இந்த ஜோடியை சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் பிரித்தார். ஸ்கோர் 86 ரன்களை எட்டிய போது (8.2 ஓவர்) ஸ்டோனிஸ் (38 ரன், 27 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) ரஷித்கான் சுழலில் கிளீன் போல்டு ஆனார். அடுத்து கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் வந்தார். 9.4 ஓவர்களில் அந்த அணி 100 ஓட்டங்களை தொட்டது. ஐதராபாத்தின் சொதப்பல் பீல்டிங்கும் டெல்லி பேட்ஸ்மேன்களுக்கு வசதியாக போனது.

இதன் பின்னர் ரஷித்கான், வேகப்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த டி.நடராஜன் ஆகியோர் சாதுர்யமாக பந்துவீசியதால் அடுத்த சில ஓவர்களில் ரன்விகிதம் கொஞ்சம் தளர்ந்தது. ஸ்ரேயாஸ் அய்யர் 21 ரன்களில் (20 பந்து, ஒரு பவுண்டரி) கேட்ச் ஆனார்.

இதையடுத்து ஹெட்மயர், தவானுடன் இணைந்தார். ஹோல்டரின் ஒரே ஓவரில் இருவரும் சேர்ந்து 4 பவுண்டரிகளை தெறிக்க விட்டனர். இதனால் ஸ்கோர் சற்று வேகமெடுத்தது. 19-வது ஓவரின் போது, தவான் 78 ரன்களில் (50 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) எல்.பி.டபிள்யூ. ஆனார். ரீப்ளேயில் பந்து ஸ்டம்பை விட்டு விலகி செல்வது தெரிந்தது. டி.ஆர்.எஸ். முறைப்படி தவான் அப்பீல் செய்திருந்தால் தப்பியிருப்பார்.

அது பற்றி அவர் யோசிக்ககூட இல்லை. நடப்பு தொடரில் 600 ரன்களை (16 ஆட்டத்தில் 603 ரன்) கடந்த 2-வது வீரர் என்ற சிறப்போடு நடையை கட்டினார்.

20 ஓவர் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட்டுக்கு 189 ரன்கள் குவித்தது. ஒரு கட்டத்தில் டெல்லி அணி 200 ரன்களை சுலபமாக தாண்டும் என்று கணிக்கப்பட்ட நிலையில், ஐதராபாத் பவுலர்கள் 2-வது பகுதியில் கட்டுப்படுத்தி விட்டனர். கடைசி 2 ஓவர்களில் பந்து எல்லைக்கோடு பக்கமே செல்லவில்லை. ஹெட்மயர் 42 ரன்களுடனும் (22 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), ரிஷாப் பண்ட் 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

அடுத்து 190 ரன்கள் இலக்கை நோக்கி ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் டேவிட் வார்னரும், பிரியம் கார்க்கும் இறங்கினர். இந்த முறை வார்னர் (2 ரன்) சோபிக்கவில்லை. ரபடா வீசிய யார்க்கர் பந்து அவரது காலில் பட்டு ஸ்டம்பை தாக்கியது. பிரியம் கார்க் (17 ரன்), மனிஷ் பாண்டே (21 ரன்), ஜாசன் ஹோல்டர் (11 ரன்) சீரான இடைவெளியில் வெளியேறினர்.

இதற்கு மத்தியில் கேன் வில்லியம்சன் அணியை தூக்கி நிறுத்த போராடினார். ரபடா, அக்‌ஷர் பட்டேல், ஸ்டோனிஸ் உள்ளிட்டோரது ஓவர்களில் சிக்சர் பறக்க விட்டார். அவருக்கு அப்துல் சமாத் ஒத்துழைப்பு கொடுக்க ஆட்டத்தில் பரபரப்பு தொற்றியது. முக்கியமான தருணத்தில் அதாவது ஸ்கோர் 147 ரன்களாக உயர்ந்த போது வில்லியம்சன் (67 ரன், 45 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) கேட்ச் ஆகிப்போனார்.

தொடர்ந்து சமாத் 33 ரன்களிலும் (16 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), ரஷித்கான் 11 ரன்னிலும், கோஸ்வாமி ரன் இன்றியும் ரபடாவின் ஒரே ஓவரில் (ஆட்டத்தின் 19-வது ஓவர்) காலியானார்கள். அத்துடன் ஆட்டம் முழுமையாக டெல்லி பக்கம் திரும்பியது.

20 ஓவர்களில் ஐதராபாத் அணியால் 8 விக்கெட்டுக்கு 172 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் டெல்லி அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ரபடா 4 விக்கெட்டும், ஸ்டோனிஸ் 3 விக்கெட்டும் சாய்த்தனர்.

ஐ.பி.எல். வரலாற்றில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ள டெல்லி அணி நாளை (செவ்வாய்க் கிழமை) இரவு 7.30 மணிக்கு துபாயில் அரங்கேறும் மகுடத்துக்கான ஆட்டத்தில் மும்பை இந்தியன்சுடன் மோத உள்ளது.

நாட்டில் மேலும் 227 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 227 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி இலங்கையில் கொரோனா 2ஆவது அலைமூலம் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று இதுவரையில் 510 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 929 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் இதுவரையில் 34 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 22 பேர் கடந்த 20 நாட்களுக்குள் உயிரிழந்துள்ளனர்.

‘கொரோனா’ – இலங்கையில் 35ஆவது மரணம் பதிவானது!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலுமொருவர் உயிரிழந்துள்ளார்.

78 வயதுடைய ஆணொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போது உயிரிழந்தார். மரண பரிசோதனையின்போது அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.

 

2ஆவது அலைமூலம் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரேனா! 21 பேர் பலி!!

நாட்டில் மேலும் 283 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி இலங்கையில் கொரோனா 2ஆவது அலைமூலம் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 702 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் இதுவரையில் 34 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 21 பேர் கடந்த 20 நாட்களுக்குள் உயிரிழந்துள்ளனர்.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

போர் நிறுத்தத்தை அப்பட்டமாகமீறும் ஈரான்!

0
போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறுவதாகக் ஈரான் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் Mohammad Ghalibaf, குற்றம் சாட்டியுள்ளார். ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்காவின் நடவடிக்கைகள் கப்பல் போக்குவரத்து மற்றும் எரிசக்தி பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்கா...

மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கு விசேட இராப்போசன விருந்துபசாரம்!

0
மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கு இலங்கை ஜனாதிபதியால் விசேட இராப்போசன விருந்துபசாரம் - முகமது முய்சுவின் விஜயத்துடன் இலங்கை - மாலைதீவு இடையிலான நெருங்கிய நட்புறவு மேலும் பலமடையும் - இலங்கை ஜனாதிபதி ஒவ்வொரு காலகட்டத்திலும்...