Home Blog Page 3785

8,285 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர் – 5100 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 562 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 285 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 5 ஆயிரத்து 100 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 419 ஆக அதிகரித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவைமீறிய 2,832 பேர் கைது!

முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் பொது வெளியில் நடமாடிய நூற்றுக்கும் மேற்பட்டோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 150 பேர் கடந்த 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை, கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இதுவரையான காலப் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டுக்காக 2 ஆயிரத்து 832 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 390 இற்கும் மேற்பட்ட வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

‘மேல் மாகாணத்தில் 23 பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் முடக்கம்’

மேல் மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனமைப்படுத்தல் ஊரடங்கு நாளை காலை 5.00 மணிக்கு நீக்கப்படுவதாக இராணு தளபதி லெப்டினென் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இனங்காணப்பட்ட 12 பொலிஸ் பிரிவுகள் மற்றும் ஆபத்தான பகுதிகளாக இனங்காணப்பட்டுள்ள தொடர்மாடி கட்டிடங்கள் சிலவற்றை தனிமைப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

இதுவரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள அனைத்து பிரதேசங்களிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை (09) காலை 5.00 மணிக்கு நீக்கப்படுவதாக கொவிட் – 19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இருப்பினும் கீழ் குறிப்பிடப்படும் பிரதேசங்கள் மீண்டும் அறிவிக்கும் வரையில் தனிமைப்படுத்தல் பிரதேசங்களாக பெயரிடப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டத்தில்
• மட்டக்குளி பொலிஸ் பிரிவு
• முகத்துவாரம் பொலிஸ் பிரிவு
• புளுமெண்டல் பொலிஸ் பிரிவு
• கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு
• கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவு
• கரையோர பொலிஸ் பிரிவு
• ஆட்டுப்பட்டித் தெரு பொலிஸ் பிரிவு
• மாளிகாவத்தை பொலிஸ் பிரிவு
• தெமட்டகொட பொலிஸ் பிரிவு
• வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவு
• பொரள்ளை பொலிஸ் பிரிவு
• வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவு

கம்பஹா மாவட்டம்
• வத்தளை பொலிஸ் பிரிவு
• பேலியகொடை பொலிஸ் பிரிவு
• கடவத்த பொலிஸ் பிரிவு
• ராகம பொலிஸ் பிரிவு
• நீர்கொழும்பு பொலிஸ் பிரிவு
• பமுனுகம பொலிஸ் பிரிவு
• ஜா-எல பொலிஸ் பிரிவு
• சப்புகஸ்கந்த பொலிஸ் பிரிவு
களுத்துறை மாவட்டம்
• ஹொரணை பொலிஸ் பிரிவு
• இங்கிரிய பொலிஸ் பிரிவு
• வேக்கட கிராம உத்தியோகஸ்தர் பிரிவு

குருநாகல் மாவட்டம்
• குருநாகல் மா நகர எல்லை பகுதிக்குள்
• குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவு

கேகாலை மாவட்டம்
• மாவனல்ல பொலிஸ் பிரிவு
• ரூவான்வெல்லை பொலிஸ் பிரிவு

இதேபோன்று கீழ் குறிப்பிட்ட வீடமைப்பு திட்டத்தில் கொவிட் – 19 தொற்று பரவல் தொடர்பில் கடும் அனர்த்தத்துடனான இடமாக அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் இந்த வீடமைப்பு திட்டங்களில் வாழும் பொது மக்கள் வீடுகளுக்கிடையில் நடமாடுவது தவிர்த்து பயணங்களை வரையறுத்து தமது வீடுகளுக்குள்ளேயே தங்கியிருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

• மெத்சந்த செவன
• மிஹிஜய செவன
• மோதர ரன்மிண செவன
• சிரிசந்த உயன தெமட்டகொட
• மாளிகாவத்தை  வீடமைப்பு

‘கொரோனா’ தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 கோடியை தாண்டியது!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்து 56 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

தற்போதைய நிலவரப்படி, 5 கோடியே 2 லட்சத்து 63 ஆயிரத்து 958 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் ஒரு கோடியே 34 லட்சத்து 57 ஆயிரத்து 645 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 91 ஆயிரத்து 807 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவில் இருந்து 3 கோடியே 55 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் இதுவரை 592,218 பிசிஆர் பரிசோதனைகள்!

நாட்டில் நேற்று 11 ஆயிரத்து 620 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன், இதுவரையில் 5 லட்சத்து 92 ஆயிரத்து 218 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 28 தனிமைப்படுத்தல் மையங்களில் 2 ஆயிரத்து 454 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரையில் 63 ஆயிரத்து 784 பேர் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்துகொண்டு வெளியேறியுள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 60 ஆக உயர்வடைந்துள்ளது.
இவர்களில் 7 ஆயிரத்து 723 பேர் குணமடைந்துள்ளனர்.
5 ஆயிரத்து 622 பேர் தொடர்ந்தும் சிகிச்சை
34 பேர் உயிரிழந்துள்ளனர்.

‘ஜோ பைடனின் வெற்றி இலங்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்’ – ராதா

மதசார்பற்ற, சிறுபான்மையினத்தவர்களையும் அரவணைத்து பயணிக்ககூடிய ஜோ பைடன் அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளமையானது, எதிர்காலத்தில் ஏனைய நாடுகளிலும் மாற்றத்துக்கு வழிவகுக்கும் – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு மலையக மக்களின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துள்ள ராதாகிருஷ்ணன், இது தொடர்பில் மேலும் கூறியதாவது,

” அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்க விடயம். மத சார்பின்றி, சிறுபான்மையினம் – பெரும்பான்மையினம் என்ற பாகுபாடுகளுக்கு அப்பால் மக்களின் நன்மதிப்பை அவர் பெற்றுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஒபாமா, கருப்பினத்தை சேர்ந்தவர் என்றபோதிலும் பெரும்பான்மையின மக்களும் அவருக்கு வாக்களித்தனர். அனைவரையும் அனுசரித்தே ஒபாமாவின் பயணம் அமைந்தது. அதேபோல் ஜே பைடனும் சிறுபான்மையின மக்களையும் அரவணைத்துக்கொண்டே முன்னோக்கிச்செல்வார். அனைத்து இன மக்களும் அவருக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளனர்.

அதுமட்டுமல்ல ஜோ பைடனின் வெற்றி என்பது சிறுபான்மையின மக்களை அனுசரித்துபோகவேண்டிய ஒரு தலைவர் உலகில் இருக்கிறார் என்ற செய்தியை உறுதிப்படுத்தியுள்ளது. மதசார்பற்ற, சிறுபான்மையின மக்களை புறந்தள்ளாது செயற்படும் நபரே ஜோ பைடன் என்ற நம்பிக்கையும் எமக்கு உள்ளது.

எதிர்காலத்தில் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளிலும் இவ்வாறான மாறுதல்கள் ஏற்படலாம். அதாவது மதசார்பற்ற, மொழிபேதமற்ற தலைவர்களை மக்கள் மதிக்ககூடிய சூழ்நிலை உருவாகும். ” – என்றார்.

‘ஜோ பைடனும் இணைந்து செயற்பட இலங்கை விருப்பம்’

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ஜோ பைடனுக்கும், உப ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள கமலா ஹாரிசுக்கும் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
” இலங்கைக்கும் அமெரிக்காவுக்குமிடையில் 72 வருடகால இராஜதந்திர உறவு நீடிக்கின்றது. அதனை வலுப்படுத்துவதற்கு இருவருடனும் இணைந்து பயணியாற்ற தயார். ” எனவும் பிரதமர் மஹிந்த தனது டுவிட்டர் பக்கத்தல் பதிவிட்டுள்ளார்.

யார் இந்த கமலா ஹாரிஸ்?

அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இதன் மூலம் அமெரிக்க துணை ஜனாதிபதி பதவிக்கு தேர்வான முதல் கருப்பின மற்றும் முதல் ஆசிய அமெரிக்க பெண்ணாகிறார் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ்.

முன்னதாக ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கான உள்கட்சி போட்டியில் கடுமையாக ஈடுபட்டு தோற்றவர் கமலா.

இதையொட்டி கமலா ஹாரிஸுக்கும் குடியரசு கட்சி துணை ஜனாதிபதி வேட்பாளர் மைக் பென்ஸுக்கும் அக்டோபர் 7ஆம் திகதி விவாதம் நடைபெற்றது.

இதற்கு முன்பு இரண்டு முறை மட்டுமே பெண்கள், துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டுள்ளனர். 2008 ஆம் ஆண்டு குடியரசுக் கட்சியின் சார்பாக சாரா பாலினும், 1984 ஆம் ஆண்டு ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஜெரால்டின் பெரொரோவும் போட்டியிட்டுள்ளனர். ஆனால் இவர்கள் வெற்றி பெறவில்லை.

அமெரிக்காவின் இரு முக்கிய கட்சிகளான குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி இரண்டுமே ஜனாதிபதி வேட்பாளராக கருப்பின பெண்ணை நிறுத்தியதில்லை. இதுவரை யாரும் ஜனாதிபதியாக இருந்ததும் இல்லை.

யார் இந்த கமலா ஹாரிஸ்?

கமலா ஹாரிஸுக்கு 55 வயதாகிறது. கமலா ஹாரிஸின் தாய் இந்தியாவை சேர்ந்தவர், தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர்.

கமலா ஹாரிஸின் தாய் தமிழகத்தைச் சேர்ந்தவர். அவரது உறவினர்கள் சென்னையில் வசிக்கிறார்கள். இவர்களின் பூர்விகம் தமிழ்நாட்டின் திருவாரூரில் உள்ள துளசேந்திரபுரம்.

கமலாவின் தாயார் புற்றுநோய் குறித்த ஆராய்ச்சியாளர் மற்றும் சிவில் உரிமை ஆர்வலர்.

கமலாவின் தாயார் இந்தியாவிற்கு செல்லும்போதெல்லாம் அவருடன் இந்தியாவிற்கு பயணம் செய்துள்ளார் கமலா. மேலும் தனது இந்திய பாரம்பரியத்துடன் இணைந்தே வளர்ந்தார் கமலா.

இருப்பினும் தனது தாய் ஒக்லாந்தின் கருப்பின கலாசாரத்திற்கு தன்னை மாற்றிக் கொண்டார் என்றும், தனது இரு மகள்களையும் அவ்வாறே வளர்த்தார் என்றும் கமலா தெரிவித்துள்ளார்.

“எனது தாய் இரு கருப்பின மகள்களை வளர்க்கிறோம் என்று புரிந்துகொண்டே எங்களை வளர்த்தார்.” என தனது சுயசரிதையான `தி ட்ரூத்ஸ் வி ஹோல்ட்` புத்தகத்தில் கமலா குறிப்பிட்டுள்ளார்.

“நாங்கள் வாழச் சென்ற இடம் என்னையும் எனது சகோதரியையும் கருப்பின பெண்களாகதான் பார்க்கும் எனவே நாங்கள் தன்நம்பிக்கைக் கொண்ட கருப்பின பெண்களாக வளர்க்கப்பட வேண்டும் என்பதில் எனது தாய் உறுதியாக இருந்தார்,” என கமலா குறிப்பிட்டிருந்தார்.

டிசம்பர் மாதம் ஜனநாயகக் கட்சிக்குள் நடந்த அதிபர் வேட்பாளர் போட்டியில் தோல்வி அடைந்தார் நிலையில் தற்போது துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் கமலா ஹாரிஸ்.

கமலா ஹாரிஸ் ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். பல்கலைக்கழக வாழ்க்கை தனது வாழ்க்கையை செதுக்குவதில் பெரிதும் உறுதுணையாக இருந்தது என ஹாரிஸ் குறிப்பிடுவார்.

தனது அடையாளம் குறித்து தனக்கு எந்த ஒரு அசெளகரியமும் இதுவரை ஏற்படவில்லை என்றும், எளிமையாக சொல்லவேண்டுமானால் `நான் ஒரு அமெரிக்கர்` என்றும் கமலா ஹாரிஸ் குறிப்பிடுவார்.

2019ஆம் ஆண்டு வாஷிங்டன் போஸ்டுக்கு பேசிய அவர், “நிறத்தாலோ அல்லது பின்புலத்தாலோ ஒருவர் அரசியல்வாதியாக கூடாது. “நான் யாரோ அதில் சிறப்பாக உள்ளேன். உங்களுக்கு தெளிவு தேவைப்படலாம் ஆனால் நான் சிறப்பாக உள்ளேன்,” என தெரிவித்திருந்தார்.

துணை அதிபர் போட்டியில் கமலா வெற்றி பெற்றால் 2024ஆண்டுக்குள் அதிபர் போட்டியில் மீண்டும் பங்குபெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. இன்றளவில் அவர் ஜனநாயகக் கட்சியில் எதிர்காலத்திற்கான ஒரு வலுவான சக்தியாக உள்ளார் என பிபிசியின் வட அமெரிக்க செய்தியாளர் ஆண்டனி சுர்சர் தெரிவிக்கிறார்

நான்கு வருட ஹாவார்ட் பல்கலைக்கழக படிப்புக்கு பின் கமலா கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார் அலமேடா கவுண்டியின் மாவட்ட அட்டர்னி அலுவலகத்தில் தனது பணியை தொடங்கினார்.

2003ஆம் ஆண்டு சான் ஃபிரான்ஸிஸ்கோ மாவட்டத்தின் அட்டர்னி ஜெனரல் ஆனார்.

அதன்பிறகு அதிக மக்கள் தொகை கொண்ட கலிஃபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலானார். மேலும் கலிஃபோர்னியாவின் முதல் பெண் மற்றும் முதல் ஆப்ரிக்க அமெரிக்க பெண் அட்டர்னி ஜெனரல் என்ற சிறப்பையும் அவர் பெற்றார்.

இரு முறை அட்டர்னி ஜெனரலாக இருந்த கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சியின் வளரும் நட்சத்திரமாக அறியப்பட்டுள்ளார்.

நன்றி பிபிசி தமிழ்

‘கருப்பின பெண் முதல்முறையாக அமெரிக்காவில் உயர்பதவிக்கு வந்திருப்பது வரலாற்று சிறப்பு’

கருப்பின பெண் முதல்முறையாக நாட்டின் உயர்பதவிக்கு வந்திருப்பது வரலாற்று சிறப்பு மிக்கது என அமெரிக்க புதிய ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இதன் மூலம் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் அமெரிக்காவின் 46-வது அதிபராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அதே வேளையில் ஜனநாயக கட்சியின் துணை ஜனாதபிதி வேட்பாளர் கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் முதல் பெண் துணை ஜனாதிபதியாக தேர்வாகியுள்ளார். இந்த வெற்றியின் மூலம் தெற்கு ஆசியாவைச் சேர்ந்த அமெரிக்காவின் பெண் துணை அதிபர் என்ற பெருமையை கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார்.

தேர்தல் வெற்றிக்குப் பிறகு தனது ஆதரவாளர்கள் மத்தியில் ஜோ பைடன் கமலா ஹாரிஸ் குறித்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

கருப்பின பெண் முதல்முறையாக நாட்டின் உயர்பதவிக்கு வந்திருப்பது வரலாற்று சிறப்பு மிக்கது. மிகச்சிறந்த பெண் துணை அதிபருடன் நான் பணியாற்ற உள்ளேன்.

குடிபெயர்ந்த பெண்ணின் வாரிசான கமலா ஹாரிஸ் முதன்முறையாக துணை அதிபராக தேர்வானதற்கு வாழ்த்துக்கள் எனக்கூறினார்.

அமெரிக்க ஜனாதிபதியாகிறார் ஜோ பைடன்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக்கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றிபெற்றுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த 3ஆம் திகதி நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான டிரம்ப்பை எதிர்த்து ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் போட்டியிட்டார்.

தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது. அமெரிக்க தேர்தலில் மொத்தமுள்ள 538 தேர்தல் சபை வாக்குகளில் 270 தேர்தல் சபை வாக்குகளை பெறும் வேட்பாளர் ஜனாதிபதியாக முடியும்.

இதற்கிடையில்,தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த சில நாட்களாக எண்ணப்பட்டு வந்தன. ஆரம்பம் முதலே ஜோ பைடன் முன்னிலையில் இருந்தார்.

இந்நிலையில், வெற்றியை தீர்மானிக்கும் பென்சில்வேனியா மாநிலத்தின் வாக்குகள் எண்ணிக்கை தற்போது நிறைவு பெற்றது. இந்த மாநிலத்திலும் உள்ள 20 இடங்களையும் ஜோ பைடன் கைப்பற்றினார்.

இதையடுத்து, பெரும்பான்மைக்கு 270 தேர்தல் சபை வாக்குகள் தேவையாக உள்ள நிலையில், ஜோ பைடன் 284 தேர்தல் சபை வாக்குகளை பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் தேர்வாகியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக பைடன் விரைவில் பதவியேற்க உள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி டிரம்பிற்கு 214 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

போர் நிறுத்தத்தை அப்பட்டமாகமீறும் ஈரான்!

0
போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறுவதாகக் ஈரான் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் Mohammad Ghalibaf, குற்றம் சாட்டியுள்ளார். ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்காவின் நடவடிக்கைகள் கப்பல் போக்குவரத்து மற்றும் எரிசக்தி பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்கா...

மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கு விசேட இராப்போசன விருந்துபசாரம்!

0
மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கு இலங்கை ஜனாதிபதியால் விசேட இராப்போசன விருந்துபசாரம் - முகமது முய்சுவின் விஜயத்துடன் இலங்கை - மாலைதீவு இடையிலான நெருங்கிய நட்புறவு மேலும் பலமடையும் - இலங்கை ஜனாதிபதி ஒவ்வொரு காலகட்டத்திலும்...