Home Blog Page 3786

‘கொரோனா’ – மேலும் நால்வர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் நால்வர் உயிரிழந்துள்ளனர். மூன்று பெண்களும், ஒரு ஆணுமே இவ்வாறு பலியாகியுள்ளனர். இவர்களில் மூவர் 60 வயதடைக்கடந்தவர்கள்.

இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.

1. கொழும்பு 10 மாளிகாவத்தையைச் சேர்ந்த 42 வயதுடைய பெண்ணொருவர் தனது வீட்டில் வைத்தே உயிரிழந்துள்ளார். நீண்டகாலமாக இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு கொரோனா வைரசும் தொற்றியதாலேயே உயிரிழந்துள்ளார்.

2.கொழும்பு 10 மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்ட 69 வயதுடைய பெண்ணொருவர், நோய்த்தாக்கம் காரணமாக கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். கொரோனா வைரஸ் தொற்றுடன், நிமோனியா தாக்கமும் அதிகரித்ததால் அவர் உயிரிழந்துள்ளார்.

3. வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய ஆணொருவர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றையடுத்து ஏற்பட்ட நிமோனியாவால் அவர் உயிரிழந்துள்ளார்.

4.கனேமுல்ல பகுதியைச் சேர்ந்த 88 வயதுடைய பெண்ணொருவர் கொரோனா தொற்றால் ஏற்பட்ட கடும் காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியது!

நாட்டில் மேலும் 257 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி இலங்கையில் கொரோனா 2 ஆவது அலைமூலம் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 753 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 227 ஆக அதிகரித்துள்ளது.

கலஹா பேரவத்தை பகுதியில் மேலும் ஒருவருக்கு கொரோனா!

கண்டி, கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேரவத்தை பகுதியில் மேலுமொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று (07.11.2020) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.14 வயதுடைய மாணவரொருவருக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. இதனையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களிடமும் பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

கலஹா – பேரவத்தை பகுதியில் இருந்து கடந்த மாதம் 15 ஆம் திகதி16 வயதுடைய சிறுவனும், அவரின் பெற்றோரும் மீன் வாங்குவதற்காக பேலியகொடை மீன் சந்தைக்குச்சென்று மறுநாள் ஊர் திரும்பினர்.

பேலியகொடை கொரோனா கொத்தணி பரவலையடுத்து இவர்களிடம் கடந்த மாதம் 24 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. பரிசோதனை முடிவுகள் 26 ஆம் திகதி வெளியாகின. இதில் 16 வயதுடைய சிறுவனுக்கு வைரஸ் தொற்று உறுதியானது.

இதனையடுத்து இவர்களுடன் தொடர்பில் இருந்த ஐந்து குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்நிலையில் 14 வயதுடைய சிறுவன் ஒருவருக்கு நோய் அறிகுறிகள் தென்பட்டதால் அவரிடம் நேற்று முன்தினம் 5 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. இன்று (7) பிசிஆர் பரிசோதனை முடிவு வெளியானது. இதில் அவருக்கு வைரஸ் தொற்று உறுதியானது.

எனவே, ஏனைய உறுப்பினர்களிடமும் இன்று பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. கொரோனா தொற்றுக்குள்ளான சிறுவர் கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அழைத்துச்செல்லப்படவுள்ளார்.

சஹ்ரானின் மனைவிக்கும் கொரோனா தொற்று!

21/4 தற்கொலை குண்டு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவியான அப்துல் காதர் பாத்திமா ஹதியா என்பவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இதனையடுத்து அவர் பொலன்னறுவை, வெலிகந்தையிலுள்ள கொரோனா விசேட சிகிச்சை நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையிலேயே சஹ்ரானின் மனைவிக்கு கொரோனா தொற்றியுள்ளது. அத்துடன், அவருடன் வெலிகடை சிறைச்சாலையிலிருந்த மேலும்  28 தொற்றாளர்களும் வெலிக்கந்தயிலுள்ள கொரோனா சிகிச்சை மத்திய நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

7,723 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்! 5,217 பேருக்கு சிகிச்சை!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 537 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 723 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 5 ஆயிரத்து 217பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 970 ஆக அதிகரித்துள்ளது.

‘கொழும்பில் இருந்து தீபாவளிக்கு மலையக பகுதிகளுக்கு வராதீர்கள்’!

” கொழும்பு மற்றும் கம்பஹா உட்பட கொரோனா அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து, தீபாவளி பண்டிகைக்காக மலையகத்துக்கு வருவதை இம்முறை தவிர்த்துக்கொள்ளுங்கள். அவ்வாறு வரும்பட்சத்தில் முழு குடும்பத்தையும் சுயதனிமைக்கு உட்படுத்தவேண்டிய நிலைஏற்படும்.” – என்று மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி துரைசாமிபிள்ளை சந்திரராஜன் தெரிவித்தார்.

மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகார பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்றுவரை (07.11.2020) மொத்தமாக 11 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி துரைசாமிபிள்ளை சந்திரராஜன் கூறியதாவது,

” மஸ்கெலியா ‘எம்.ஓ.எச்.’ பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இதுவரையில் 15 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் ஏழு பேருக்கு நேற்று வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இவர்கள் பேலியகொடை மீன்சந்தை கொத்தணி பரவலுடன் தொடர்புபட்டவர்களாவர்.

அதேவேளை, எமது மலையக மக்களில் சிலர் கொழும்பு உட்பட வெளிமாவட்டங்களில் முதலாளிகளாக இருக்கின்றர், தொழில் புரிபவர்களும் இருக்கின்றனர். அவர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மலையகத்துக்கு குறிப்பாக நகரப்பகுதிகளிலும், பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள தமது வீடுகளுக்கு வருவதற்கு முயற்சிக்ககூடும்.

ஆனால் கொழும்பு, கம்பஹா உட்பட கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்மிக்க மாவட்டங்களில் இருந்து மலையகத்துக்கு வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். அவர்கள் வருகைதருவதன்மூலம் உறவினர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. அதுமட்டுமல்ல அவர்கள் அவ்வாறு வந்தாலும் இங்கு சுயதனிமைக்கு உட்படுத்தப்படுவார்கள், சிறிய வீடுகள் என்பதால் ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களையும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தவேண்டிய நிலை ஏற்படும்.

எனவே, தாங்கள் இருக்கும் இடங்களில் இருந்தே இம்முறை சுகாதார பாதுகாப்புடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.

க.கிசாந்தன்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை!

டயலொக் ஆசி ஆட்டாபி எல்சி (டயலொக்) உடன் சுகாதார அமைச்சு இணைந்து, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) விரைவான பி.சி. ஆர்பரிசோதனைகளை மேற்கொள்ள வழிவகுத்துள்ளது.

Robotic Arm இணக்கமான 4000 பரிசோதனைக் கருவிகளுக்கான டயலொக்கின் பங்களிப்பானது,கோவிட் -19 தொற்று நோய்களின்போது தேசிய சுகாதாரப் பாதுகாப்பு முயற்சிகளை மேம்படுத்துவதற்கான நிறுவனத்தின் தற்போதைய உறுதிப்பாட்டின் ஒருபகுதியாகும்.

ஏப்ரல் 2020 இல், கோவிட் -19 தொற்று நோயுடன் தொடர்புடைய சிக்கலான சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக டயலொக் ரூ.2000 இலட்சம் தொகையை வழங்குவதற்கான உறுதிமொழியை அளித்தது.

இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரின் உறுதிமொழிக்கு அமைய சில வாரங்களுக்கு முன்பு நீர்கொழும்பு மருத்துவமனையில் 10 படுக்கைகளை கொண்டICUஐ மேம்படுத்த உதவியுள்ளதுடன் மேலும்பல ICU விரிவாக்கங்கள் விரைவில் மேற்கொள்ளப்படும்.

Robotic Arm பி.சி.ஆர் சோதனை வசதி பி.சி.ஆர்பரிசோதனையை நடத்துவதற்கும் முடிவுகளை அறிக்கையிடுவதற்குமான நேரத்தை 8 மணித்தியாலத்திலிருந்து 2.5 மணிநேரமாக வெகுவாக குறைக்கின்றது.

இது குறித்து டயலொக் ஆசி ஆட்டாபி எல் சி நிறுவனத்தின் குழும தலைமை நிர்வாக அதிகாரி சுபுன் வீரசிங்ஹ கருத்து தெரிவிக்கையில்,

“CE மற்றும் ஐரோப்பிய IVD சான்றளிக்கப்பட்ட உலகத்தரம் வாய்ந்த ரோபோ தீர்வுகள், 32 மாதிரிகளை இணையாகசெயலாக்குவதுடன், கணிசமாக பாதுகாப்பான மற்றும் விரைவான சோதனை மற்றும் அறிக்கையிடலைவெறும் 2.5 மணிநேரத்தில் செயல்படுத்துகிறது.

இந்த பொறிமுறையானது வாரத்திற்கு மனித நேரங்களை பயனுள்ளதாக குறைப்பதன் மூலம் சுகாதாரத் துறைக்கும் அரசாங்கசுகாதார அதிகாரிகளுக்கும் சிறப்பாக உதவுகிறது.

இந்த ரோபோ தீர்வுகள் மூலம் விரைவான சோதனை மற்றும் அறிக்கையிடலுடன் பயணிகளின் மற்றும் நமது தேசத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யும் இந்த முயற்சியில் பங்கேற்க எங்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கிய சுகாதார அமைச்சகத்திற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” என தெரிவித்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் கருத்து தெரிவித்த சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சர் பவித்ராவன்னியராச்சி,

“பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அதிவேக ரோபோ பி.சி.ஆர் பரிசோதனைக்கு வசதிசெய்வதுட யலொக்கின் மற்றொரு சிறந்த முயற்சியாகும். ஏனெனில் அவர்கள் இலங்கையில் கோவிட் -19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கான எங்கள் முயற்சிகளில் சுகாதார அமைச்சகத்திற்கு தொடர்ந்து ஆதரவளித்துவருகின்றனர்.

டயலொக்கின் இந்த சமீபத்திய பங்களிப்பானது நாட்டின் முக்கியமான சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் பல பாராட்டத்தக்க முயற்சிகளை அபிவிருத்தி செய்வதாக சுகாதார அமைச்சகத்திற்கு வழங்கியரூ.2000 இலட்சம் உறுதிமொழிக்கு அமையவே இடம்பெறுகின்றது. டயலொக் ஆசி ஆட்டாவின் தொடர்ச்சியான முயற்சிகள் மற்றும் இந்த தேசிய முயற்சிக்கு அவர்கள் அர்ப்பணித்த சேவைக்கு எங்கள் மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறோம் என கூறினார்.

மஸ்கெலியா பகுதியில் 4 மாத குழந்தை உட்பட 7 பேருக்கு கொரோனா!

மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் அதிகாரத்துக்குட்பட்ட பகுதிகளில் நான்கு மாத குழந்தை உட்பட ஏழு பேருக்கு நேற்று (06.11.2020) கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

கொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டிருந்தவர்களிடம் கடந்த 05 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. இந்நிலையில் முடிவுகள் இன்று வெளிவந்தன. இதில் எழுவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சாமிமலை, ஸ்டொக்கொம் தோட்டம், காட்மோர், பிரொக்மோர், பிரவுன்லொ ஆகிய பகுதிகளில் இருந்தே இவ்வாறு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் ஸ்டொக்கொம் பகுதியில்தான் நான்கு மாத குழந்தைக்கும் அவரின் பெற்றோருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்டொக்கம் தோட்டத்தில் இனங்காணப்பட்ட தொற்றாளர்கள், பிரவுன்லோ பகுதியில் நடைபெற்ற சமய நிகழ்வில் பங்குபற்றியவர்கள் எனவும், காட்மோர் தோட்டத்தில் இனங்காணப்பட்டவர்கள் கொழும்பில் இருந்து வருகை தந்தவர்கள் எனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன், ஸ்ரஸ்பி தோட்டத்தில் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டவர் கொழும்பில் பேக்கரியொன்றில் பணியாற்றியவர் எனவும் குறிப்பிட்டனர்.

இதனையடுத்து இவர்கள் அனைவரும் சுகாதார பாதுகாப்புடன் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

க.கிசாந்தன், நீலமேகம் பிரசாந்த்

கேகாலை மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 22 பேருக்கு கொரோனா!

“கேகாலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அதிதீவிரமாக நாளுக்குநாள் அதிகரித்து செல்கின்றமை அபாய நிலையை தோற்றுவித்துள்ளது. நேற்று மாலைவரை தொற்றா ளர்களின் எண்ணிக்கை 180 ஆக அதிகரித்துள்ளது. நேற்று  மாத்திரம் 22 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மொத்தமாக 3 ஆயிரத்து 706 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தொற்றுக்குள்ளானவர்களில் 109 பேர் குணமடைந்துள்ளனர்.” – என்று கேகாலை மாவட்ட செயலாளர் மஹிந்த எஸ் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

கேகாலை மாவட்டத்தில் பரவலாக அனைத்து பிரதான நகரங்களை மையப்படுத்திய பிரதேச செயலகங்களில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 180 தொற்றாளர்களில் மாவனல்லையில் 34பேரும்,கேகாலையில் 20பேரும், வரக்காபொலையில் 20 பேரும், ருவன்வெல்லையில் 20பேரும், தெஹியோவிட்டயில் 20பேரும், அரனாயக்கவில் 14பேரும், புலத்கோஹ{பிட்டியவில் 14பேரும், எட்டியாந்தோட்டையில் 13 பேரும், கலிகமுவயில் 12பேரும், ரம்புக்கணையில் 09பேரும், தெரணியகலையில் 04பேரும் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

இவற்றில் அதிகமானதொற்றாளர்கள் மாவனல்லைபிரதேசத்தில் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வெளியில் வருவதைதவிர்த்துக்கொள்வதை பின்பற்றாது இருந்தால் எதிர்வரும் நாட்களில் நிலைமை மேலும் மோசமடையலாம். நிலைமையை கருத்தில் கொண்டுஎதிர்வரும் நாட்களில் கேகாலை மாவட்டத்தை முற்றாக முடக்குவது தொடர்பாக ஆலோசித்துவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

‘யாழில் நடைபெற்ற கூட்டத்தில் ஜீவனுக்கு 2ஆவது வரிசை ஆசனம்’

யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற கிராமிய பொருளாதார மேம்பாடு தொடர்பான கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு இரண்டாவது வரிசையிலேயே ஆசனம் வடங்கப்பட்டது.

மேற்படி கூட்டத்தில் முதல் வரிசையில் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், அரச அதிபர்கள், பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர் அமர்ந்திருந்த நிலையில் ஜீவன் தொண்டமானுக்கு மாத்திரம் அவர்களுக்கு பின் வரிசையில் இருக்கை வழங்கப்பட்டது.

இதன்போது கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்காது, கூட்டம் நிறைவடையும் வரை மௌனமாகவே இருந்தார்.

நன்றி – தினகரன்

( நேற்று நடைபெற்ற இக்கூட்டத்தில் சுகாதார நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.)

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

போர் நிறுத்தத்தை அப்பட்டமாகமீறும் ஈரான்!

0
போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறுவதாகக் ஈரான் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் Mohammad Ghalibaf, குற்றம் சாட்டியுள்ளார். ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்காவின் நடவடிக்கைகள் கப்பல் போக்குவரத்து மற்றும் எரிசக்தி பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்கா...

மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கு விசேட இராப்போசன விருந்துபசாரம்!

0
மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கு இலங்கை ஜனாதிபதியால் விசேட இராப்போசன விருந்துபசாரம் - முகமது முய்சுவின் விஜயத்துடன் இலங்கை - மாலைதீவு இடையிலான நெருங்கிய நட்புறவு மேலும் பலமடையும் - இலங்கை ஜனாதிபதி ஒவ்வொரு காலகட்டத்திலும்...