Home Blog Page 3787

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 கோடியை நெருங்குகிறது

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்து 48 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

தற்போதைய நிலவரப்படி, 4 கோடியே 96 லட்சத்து 68 ஆயிரத்து 976 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் ஒரு கோடியே 31 லட்சத்து 64 ஆயிரத்து 242 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 90 ஆயிரத்து 889 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவில் இருந்து 3 கோடியே 52 லட்சத்து 54 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.

அதேவேளை அமெரிக்காவில் மட்டும் ஒரு கோடியே 58 ஆயிரத்து 586 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது. இதில் 2 லட்சத்து 42 ஆயிரத்து 230 பேர் உயிரிழந்துள்ளனர்.

பசறை பிரதேச சபையின் பட்ஜட் நிறைவேற்றம்! இ.தொ.கா. உறுப்பினர்கள் இருவர் நழுவல்!!

பசறை பிரதேச சபையின் அடுத்தாண்டிற்கான (2021) வரவு–செலவுத்திட்ட நிதி அறிக்கை இரு மேலதிகவாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

பசறை பிரதேசசபைத் தலைவர் ஆர்.எம். ஞானதிலக்க தலைமையில், சபை மண்டபத்தில் 06-11-2020ல் சபையின் அடுத்தாண்டிற்கானவரவு–செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிக்கும் அமர்வு இடம்பெற்றது. சபை அமர்வு ஆரம்பமானதும், சபையின் தலைவர்,சபையின் அடுத்தாண்டிற்கானவரவு–செலவுத்திட்ட அறிக்கையை சமர்ப்பித்தார்.

அதையடுத்து சபையில் வாத, விவாதங்கள் இடம்பெற்று, இறுதியில், சமர்ப்பிக்கப்பட்டவரவு–செலவுத்திட்ட நிதி அறிக்கை வாக்கெடுப்பிற்குவிடப்பட்டது. பசறை பிரதேசசபையில் மொத்தம் 23 உறுப்பினர்கள் இருந்தபோதிலும், இவ் அமர்வில் 17 உறுப்பினர்கள் மட்டுமே,சமூகமளித்திருந்தனர்.

சபையின் இ.தொ.கா. சார்பான இரு உறுப்பினர்களும், ஸ்ரீலங்காசுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் நால்வருமாக ஆறு உறுப்பினர்கள் இச் சபை அமர்வில் சமூகமளிக்கவில்லை. அத்துடன் சமூகமளித்திருந்த ஸ்ரீலங்காபொதுஜன முன்னனி உறுப்பினர்கள் அறுவரும், ஜே.வி.பி. உறுப்பினரொருவருமாக ஏழு உறுப்பினர்கள்,சமர்ப்பிக்கப்பட்டவரவு–செலவுத்திட்ட நிதி அறிக்கைக்கு எதிராகவாக்களித்தார்.

சபையின் ஐக்கிய தேசியக்கட்சிசார் எட்டு உறுப்பினர்ளும்,சபையின் சுயேச்சைக்குழு உறுப்பினரொருவருமாக ஒன்பது உறுப்பினர்கள் சமர்ப்பிக்கப்பட்டவரவு–செலவுத்திட்டநிதி அறிக்கைக்கு ஆதரவாகவாக்களித்தனர். இதற்கமைய இரு மேலதிக வாக்குகளினால், அடுத்தாண்டிற்கான வரவு–செலவுத்திட்ட நிதி அறிக்கை நிறைவேற்றப்பட்டது.

எம். செல்வராஜா, பதுளை

தனராஜ்,

ஹட்டனில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று!

ஹட்டன், தும்புருகிரிய பகுதியில் மேலும் இருவருக்கு நேற்று (06.11.2020) கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இவ்விருவரும் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

தும்புருகிரிய பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு கடந்த 4 ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதனையடுத்து அவருடன் தொடர்பைபேணியவர்கள் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டனர். குடும்ப உறுப்பினர்களிடம் 4 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன.

இந்நிலையில் பிசிஆர் பரிசோதனை முடிவுகள் நேற்றிரவு வெளியான நிலையில் குறித்த பெண்ணின் கணவனுக்கும், மகனுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான குறித்த பெண்ணின், கணவர் ஹட்டன் நகரில் மரணவீடொன்றுக்கு அஞ்சலி செலுத்த சென்றுள்ளார் என தெரியவந்துள்ளது. இதனால் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தம்மை சுயதனிமைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உரிய தகவல்களை வழங்கவேண்டும் எனவும் பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.

சில பகுதிகளில் மக்கள் தகவல்களை மறைக்கும் விதத்திலும், மாறுபட்ட தகவல்களை வழங்கும் நிலைமையும் காணப்படுகின்றது. அவ்வாறு அல்ல பொறுப்புடனும், பொதுநலன் கருதியும் செயற்படவேண்டிய தருணம் இது, எனவே, கொரோனா வைரஸை ஒழிப்பதற்கு முழு ஒத்துழைப்பையும் மக்கள் வழங்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

க.கிசாந்தன்

3ஆவது அலை பயங்கரமாக இருக்கும்! சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வாழ்வோம்!!

” கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான மருந்துகளை கண்டுபிடிக்காவிட்டால் அடுத்த வருடம் முற்பகுதியில் 3ஆவது அலை ஏற்படும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றி வாழ்வதற்கு அனைவரும் பழகிக்கொள்வோம்.” – என்று சுகாதார அமைச்சின் பேச்சாளரும், விசேட வைத்தியருமான ஜயருவன் பண்டார தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இன்னும் 2 வருடங்களுக்கு மேலாவது கொரோனா வைரசுடன்தான் வாழவேண்டிய நிலை ஏற்படும் என்பதால் அனைவரும் சுகாதார பழக்கவழக்கங்களை முழுமையாக பின்பற்றி நாளாந்த வாழ்க்கையை முன்னெடுத்துசெல்லவேண்டும்.

அத்துடன், கொரோனா 2ஆவது அலை ஏற்பட்டுள்ள இக்காலப்பகுதியில் குறித்த வைரசுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாவிடின், அடுத்த வருடம் முற்பகுதியில் மூன்றாவது அலை ஏற்படும் என உலக சுகாதார அமைப்பும், கொரோனா வைரஸ் தொடர்பான ஆய்வுகளை நடத்தும் விஞ்ஞானிகளும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போதுள்ள வைரஸைக்காட்டிலும் அது பயங்கரமாக இருக்கக்கூடும். எந்தெந்த வயது தரப்பினரை அது தாக்கும், எப்படியான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை தற்போது எம்மால் ஊகிக்கமுடியாது.

கொரோனா வைரஸ் என்பது எமது வாழ்வுக்கு எப்படியும் சவாலாக அமையும். அது எம்மை தொற்றாதவகையில் நாம் செயற்படவேண்டும். அதற்கு விசேட மந்திரம் எதுவும் இல்லை. முகக்கவசம் அணிதல், அடிக்கடி கைககளை கழுவுதல், சமூகஇடைவெளியை பேணுதல் போன்ற சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைதான் முழுமையாக பின்பற்றவேண்டும். ” – என்றார்.

ஐ.பி.எல். தொடர் இருந்து பெங்களூர் அணி ‘அவுட்’ – ஐதராபாத் வெற்றிநடை!

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடந்த வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் ஐதராபாத் அணி, பெங்களூருவை வீழ்த்தி வெளியேற்றியது.

13ஆ வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் அபுதாபியில் நேற்று இரவு நடந்த வெளியேற்றுதல் சுற்றில் புள்ளி பட்டியலில் முறையே 3-வது மற்றும் 4-வது இடம் பிடித்த அணிகளான முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன் ரைசர்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஐதராபாத் அணியின் தலைவர் டேவிட் வார்னர் களத்தடுப்பை தேர்வு செய்தார். இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரராக தலைவர் விராட்கோஹ்லி, தேவ்தத் படிக்கலுடன் இணைந்து களம் இறங்கினார்.

அந்த அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. 2-வது ஓவரிலேயே விராட்கோஹ்லி (6 ரன், 7 பந்து) ஜாசன் ஹோல்டர் பந்து வீச்சில் கையுறையில் பந்து பட்டு விக்கெட் கீப்பர் ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமியிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். 4-வது ஓவரில் தேவ்தத் படிக்கல் (1 ரன்) விக்கெட்டையும் ஜாசன் ஹோல்டர் கைப்பற்றினார். அப்போது அணியின் ஸ்கோர் 15 ரன்னாக (3.3 ஓவரில்) இருந்தது.

இதனை அடுத்து டிவில்லியர்ஸ், ஆரோன் பிஞ்சுடன் ஜோடி சேர்ந்தார். பவர்பிளேயில் (முதல் 6 ஓவர்களில்) அந்த அணி 2 விக்கெட்டுக்கு 32 ரன்கள் எடுத்து இருந்தது. ஐதராபாத் வீரர்களின் சிறப்பான பந்து வீச்சில் மட்டையை வேகமாக சுழற்ற முடியாததால் அந்த அணியின் ரன் விகிதம் மெதுவாகவே உயர்ந்தது.

சற்று தாக்குப்பிடித்து ஆடிய ஆரோன் பிஞ்ச் 30 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 32 ரன் எடுத்த நிலையில் ஷபாஸ் நதீம் பந்து வீச்சில் அப்துல் சமாத்திடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். அடுத்து வந்த மொயீன் அலி (0) அதே ஓவரில் ‘பிரிஹிட்’ பந்தில் ரஷித்கானால் ரன்-அவுட் செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து களம் கண்ட ஷிவம் துபே 8 ரன்னில் ஜாசன் ஹோல்டர் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று போராடிய டிவில்லியர்ஸ் அரைசதத்தை கடந்தார். இந்த சீசனில் அவர் அடித்த 5-வது அரைசதம் இதுவாகும்.

15.5 ஓவர்களில் அந்த அணி 100 ரன்னை கடந்தது. தமிழகத்தை சேர்ந்த டி.நடராஜன் வீசிய ஒரே ஓவரில் வாஷிங்டன் சுந்தர் (5 ரன்), டிவில்லியர்ஸ் (56 ரன்கள், 43 பந்து, 5 பவுண்டரி) ஆகியோரின் விக்கெட்டை கபளீகரம் செய்தார். டிவில்லியர்சை கிளீன் போல்டு செய்த பந்தில் மிடில் ஸ்டம்ப் பறந்தது.

20 ஓவர்களில் பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது. நவ்தீப் சைனி 9 ரன்னுடனும், முகமது சிராஜ் 10 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். ஐதராபாத் அணி தரப்பில் ஜாசன் ஹோல்டர் 3 விக்கெட்டும், டி.நடராஜன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 132 ரன் இலக்கை நோக்கி ஆடிய ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி ரன் எதுவும் எடுக்காமலும், கேப்டன் டேவிட் வார்னர் 17 ரன்னிலும், மனிஷ் பாண்டே 24 ரன்னிலும், பிரியம் கார்க் 7 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் அந்த அணி 67 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

5-வது விக்கெட்டுக்கு ஜாசன் ஹோல்டர், கேன் வில்லியம்சனுடன் இணைந்தார். இந்த ஜோடி அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன் தேவைப்பட்டது. அந்த ஓவரை நவ்தீப் சைனி வீசினார். ஜாசன் ஹோல்டர் தொடர்ச்சியாக 2 பவுண்டரி விளாசி அணி வெற்றி இலக்கை எட்ட உதவினார். 19.4 ஓவர்களில் ஐதராபாத் அணி 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கேன் வில்லியம்சன் 44 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 50 ரன்னும், ஜாசன் ஹோல்டர் 20 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 24 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். பெங்களூரு அணி தரப்பில் முகமது சிராஜ் 2 விக்கெட்டும், ஆடம் ஜம்பா, சஹால் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். இந்த ஆட்டத்தில் தோல்வி கண்ட பெங்களூரு அணி போட்டியில் இருந்து வெளியேறியது. வெற்றி பெற்ற ஐதராபாத் அணி இறுதிப்போட்டிக்கான வாய்ப்பில் நீடிக்கிறது.

அபுதாபியில் நாளை நடைபெறும் 2ஆவது தகுதி சுற்று ஆட்டத்தில் ஐதராபாத் அணி, டெல்லி கேப்பிட்டல்சை (முதலாவது தகுதி சுற்றில் தோல்வி கண்ட அணி) சந்திக்கும். இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தோல்வி அடையும் அணி இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்து வெளியேறும்.

15 நாட்களில் 17 மரணங்கள் – 2ஆவது அலைமூலம் 9,496 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் கடந்த 23ஆம் திகதி முதல் நேற்றுவரையான 15 நாட்களுக்குள் 6 ஆயிரத்து 683 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. அத்துடன், 17 பேர் பலியாகியுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப்பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் ஒரே நாளில் அதிகளவான தொற்றாளர்கள் (866) கடந்த 23 ஆம் திகதி அடையாளம் காணப்பட்டனர். ஒரே நாளில் அதிகளவானவர்கள் (765) நேற்று முன்தினம் (5) குணமடைந்தனர்.

இலங்கையில் 2ஆவது அலைமூலம் நேற்றுவரை 9, 496 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி மினுவாங்கொட கொத்தணிமூலம் ஆயிரத்து 41 பேருக்கும், பேலியகொடை கொத்தணிமூலம் ஆயிரத்து 7 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது. ஏனைய 7 ஆயிரத்து 448 பேரும் இவர்களுடன் தொடர்பை பேணியவர்களாவர். மினுவாங்கொட கொத்தணிமூலம் வைரஸ் தொற்றியவர்களில் இதுவரை 3ஆயிரத்து 350 பேர் குணமடைந்துள்ளனர்.

அதேவேளை, கொரோனாவால் இலங்கையில் நேற்று 30 ஆவது மரணம் பதிவானது.

கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த கொழும்பு 15, முகத்துவாரம் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

நீரிழிவு நோயுடன் கொவிட் 19 தொற்று ஏற்பட்டமை காரணமாக அவர் உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

O/L பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 2021 ஜனவரி 18 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதிவரை நடைபெறும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

விஜய்க்கு ஆதரவு தெரிவித்து ‘பொருளாளர்’ பதவியை துறந்த தாய்!

எஸ்.ஏ. சந்திரசேகர் தொடங்கிய கட்சியிலிருந்தும் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக விஜய்யின் தாயார் ஷோபா பேட்டி அளித்துள்ளார்.

விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக மாற்றி இருப்பதாக விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் கூறினார். மேலும்,
அரசியல் கட்சியை பதிவு செய்ததற்கும், விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எஸ்ஏ சந்திரசேகர் விளக்கம் அளித்தார்.

இதையறிந்த நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், என் தந்தை திரு.எஸ்.ஏ.சந்திரசேகா் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடா்பும் இல்லை என திட்டவட்டமாக எனது ரசிகா்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் தாய் ஷோபா அளித்த பேட்டியில், அசோசியேஷன் தொடங்குவதாகவே என்னிடம் கையெழுத்து பெற்றார். எஸ்.ஏ.சி. கட்சி தொடங்குவதற்காக 2 வது முறை கையெழுத்து கேட்டபோது நான் போடவில்லை. அரசியல் பற்றிப் பேச வேண்டாம் என எஸ்.ஏ.சி. இடம் விஜய் கூறியிருந்தார். ஆனால் அவர் கேட்கவில்லை. விஜய் தனது அப்பாவுடன் பேசி பல ஆண்டுகள் ஆகிறது. எனது கணவர் தொடங்கிய கட்சியில் இருந்தும் பொருளாளர் பதவியில் இருந்தும் நான் விலகிட்டேன்.” என்றார்.

வெற்றியின் விளிம்பில் ஜோ பைடன்!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றியை முடிவு செய்யும் ஜார்ஜியா உள்ளிட்ட 2 மாநிலங்களில் ஜோ பைடன் முன்னிலை பெற்றுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இன்று காலை நிலவரப்படி, பைடன் 264 தேர்தல் ஆசனங்களையும், டொனால்ட் டிரம்ப் 214 ஆசனங்களையும் பெற்றுள்ளனர். பைடனுக்கு 50.1 சதவீத வாக்குகள் கிடைத்துள்ள நிலையில், சமீபத்திய கணிப்புகளின்படி டிரம்பிற்கு 48.3 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன.

அமெரிக்க தேர்தலின் இறுதி முடிவு அலாஸ்கா (3), ஜார்ஜியா (16), நெவாடா (6), வட கரோலினா (15) மற்றும் பென்சில்வேனியா (20 தேர்தல் கல்லூரி வாக்குகள்) ஆகிய 5 மாநிலங்களின் முடிவுகளை பொறுத்தது.

ஜனாதிபதி பதவியை தீர்மானிக்கக்கூடிய ஒரு சில மாநிலங்களில், மூன்று மாநிலங்களிலும் வாக்குகள் இன்னும் கணக்கிடப்படுகின்றன. ஜோ பைடன் நெவாடா மற்றும் அரிசோனாவில் ஒரு சிறிய முன்னிலையில் உள்ளார். ஜார்ஜியாவில் டிரம்ப் ஒரு சிறிய முன்னிலையில் உள்ளார், மற்றும் மிச்சிகனில் பைடன் வெற்றி பெறுவார் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவை இந்த வார இறுதிக்குள் அறிவிக்க வாய்ப்புகள் இல்லை என வாஷிங்டனில் இருந்து வரும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்த தேர்தலில் சமீபத்திய நிலவரப்படி, வெற்றியை முடிவு செய்ய கூடிய ஜார்ஜியா மற்றும் பென்சில்வேனியா ஆகிய 2 மாநிலங்களில் பைடன் முன்னிலை பெற்றுள்ளார் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனால், ஜனாதிபதி தேர்தலில் வெற்றியை நோக்கி பைடன் நெருங்கியுள்ளார்.

மஹிந்த தேசப்பிரியவுக்கு வெளிநாட்டு தூதுவர் பதவி?

தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் எந்தவொரு பதவியையும் ஏற்கப்போவதில்லை என்று மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவராகச் செயற்படும் மஹிந்த தேசப்பிரிய எதிர்வரும் 12 ஆம் திகதியுடன் ஓய்வுபெறவுள்ளார். இதனையடுத்து அவருக்கு வெளிநாட்டு தூதுவர் பதவியொன்று வழங்கப்படவுள்ளது என தகவல்கள் வெளியாகியிருந்தன.

இது தொடர்பில் மஹிந்த தேசப்பிரியவிடம் வினவியபோது,

” அரச சேவையில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் தூதுவர் பதவி அல்ல, எந்தவொரு பதவியையும் ஏற்க நான் தயாரில்லை. ஓய்வு காலத்தை மிகவும் அமைதியான முறையில் வாழ விரும்புகின்றேன். எனது ஓய்வை ஏற்கனவே அறிவித்துவிட்டேன்.

நான் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளராக இருந்தகாலப்பகுதியில் எனக்கு எவரும் அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை. மாகாணசபைத் தேர்தலை உரிய நேரத்தில் நடத்தமுடியாமல்போனது கவலைதான்.” – என்று பதிலளித்தார் மஹிந்த தேசப்பிரிய.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

போர் நிறுத்தத்தை அப்பட்டமாகமீறும் ஈரான்!

0
போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறுவதாகக் ஈரான் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் Mohammad Ghalibaf, குற்றம் சாட்டியுள்ளார். ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்காவின் நடவடிக்கைகள் கப்பல் போக்குவரத்து மற்றும் எரிசக்தி பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்கா...

மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கு விசேட இராப்போசன விருந்துபசாரம்!

0
மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கு இலங்கை ஜனாதிபதியால் விசேட இராப்போசன விருந்துபசாரம் - முகமது முய்சுவின் விஜயத்துடன் இலங்கை - மாலைதீவு இடையிலான நெருங்கிய நட்புறவு மேலும் பலமடையும் - இலங்கை ஜனாதிபதி ஒவ்வொரு காலகட்டத்திலும்...