Home Blog Page 3788

‘கொரோனா’ – இலங்கையில் இரு வாரங்களில் 16 மரணங்கள்!

இலங்கையில் கடந்த 23 ஆம் திகதி முதல் நேற்றுவரையான 14 நாட்களுக்குள் 6 ஆயிரத்து 283 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. அத்துடன், 16 பேர் பலியாகியுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப்பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் ஒரே நாளில் அதிகளவான தொற்றாளர்கள் (866) கடந்த 23 ஆம் திகதி அடையாளம் காணப்பட்டனர். ஒரே நாளில் அதிகளவானவர்கள் (765) நேற்று (5) குணமடைந்தனர்.

அதேவேளை, இலங்கையில் 2ஆவது அலைமூலம் நேற்றுவரை 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி மினுவாங்கொட கொத்தணிமூலம் ஆயிரத்து 41 பேருக்கும், பேலியகொடை கொத்தணிமூலம் ஆயிரத்து 7 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது. ஏனைய 7 ஆயிரத்து 48 பேரும் இவர்களுடன் தொடர்பை பேணியவர்களாவர். மினுவாங்கொட கொத்தணிமூலம் வைரஸ் தொற்றியவர்களில் இதுவரை 2ஆயிரத்து 788 பேர் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் நேற்று மாத்திரம் 11 ஆயிரத்து 316 பிசிஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை 5 லட்சத்து 68 ஆயிரத்து 774 பிசிஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

 

நாட்டில் மேலும் 213 பேருக்கு கொரோனா

 நாட்டில் மேலும் 213  பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி இலங்கையில் கொரோனா 2ஆவது அலைமூலம் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 500 ஐ தாண்டியுள்ளது.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 783 ஆக அதிகரித்துள்ளது.

 

தலவாக்கலையில் பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று

தலவாக்கலை, மிடில்டன் பகுதியில் பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர். 32 வயதுடைய பெண்ணொருவருக்கெ இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

கொழும்பு, வத்தளை பகுதியிலுள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த குறித்த பெண் கடந்த 16 ஆம் திகதி ஊருக்கு வந்துள்ளார். கொழும்பில் இருந்து டயகம நோக்கி பயணித்த இ.போ.ச. பஸ்ஸிலேயே இவர் வந்துள்ளார்.

இவருடன் வந்து மறுபடியும் கொழும்பு சென்ற உறவினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து இவர் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டார். கடந்த 4 ஆம் திகதி இவர் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அதன் முடிவு
வெளியான நிலையில் வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கு முன்னர் குறித்த பெண் தலவாக்கலையிலுள்ள வங்கியொன்றுக்கும், வர்த்தக நிலையங்கள் சிலவற்றுக்கும் சென்றுவந்துள்ளார்.

க.கிசாந்தன்

‘ஹட்டனில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு நிவாரணம்’

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கில் அட்டன் பகுதியில் சுயதனிமைக்கு  உட்படுத்தப்பட்டுள்ள 100 குடும்பங்களுக்கு தேவையான உலர், உணவுப்பொருட்கள் அடங்கிய பொதிகள் இன்று (06.11.2020) விநியோகிக்கப்பட்டன.

10 ஆயிரம் ரூபா பெறுமதியான குறித்த நிவாரணப் பொதிகள்,  ஹட்டன் வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு கிராம சேவகர்கள் பிரிவுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.

முழுமையான சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் வீடுகளுக்கே சென்று குறித்த உணவுப்பொதி கையளிக்கப்பட்டது.

நுவரெலியா மாவட்ட செயலாளர் அலுவலகத்தின் ஆலோசனையின் பிரகாரம், அம்பகமுவ பிரதேச செயலாளர் அலுவலகத்தால் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

நுவரெலியா மாவட்ட உதவிச்செயலாளர், அட்டன் பொலிஸ் பிரிவுக்கான பொறுப்பதிகாரி, அட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட மேலும் சிலர் நிவாரணத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

க.கிசாந்தன்

‘கொரோனா’ – 7,186 பேர் மீண்டனர்! 5,355 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சை!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 563 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 186 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 5 ஆயிரத்து 355 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 570 ஆக அதிகரித்துள்ளது.

தலவாக்கலையில் காலாவதியான உணவுப்பொருட்கள் பதுக்கி வைப்பு! கட்டடத்துக்கு சீல் வைப்பு!!

தலவாக்கலை – லிந்துலை நகரசபையின் கட்டுப்பாட்டில் உள்ள,  பருப்பு உட்பட காலாவதியான உணவுப்பொருட்கள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும்  கட்டடமொன்று  இன்று (06.11.2020)  ‘சீல்’ வைக்கப்பட்டது.

மத்திய மாகாணத்தின் உதவி உள்ளாட்சிமன்ற ஆணையாளர்அலுவலகத்தின் விசாரணை அதிகாரிகளாலேயே இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

உதவி ஆணையாளர் அலுவலகத்துக்கு, நுகர்வோர் ஒருவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து ஆணையாளர் அலுவலகததின் விசாரணை அதிகாரிகளும்,  தலவாக்கலை – லிந்துலை நகரசபையின் செயலாளரும் இன்று மேற்படி கட்டடம் அமைந்துள்ள பகுதிக்கு கண்காணிப்பு பயணம் மேற்கொண்டனர்.

எனினும்,  குறித்த கட்டடம் கூட்டுறவால் மூடப்பட்டு சாவியும் எடுத்துச்செல்லப்பட்டிருந்தநிலையிலேயே ‘சீல்’ வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட தலவாக்கலை – லிந்துலை நகரசபையின் செயலாளர் பண்டார,

” காலாவதியான பொருட்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய அவை களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ள இடத்தை பரிசோதிக்க வந்தோம். எனினும் கட்டடம் மூடப்பட்டிருந்ததால் அதனை சீல் வைத்தோம். கொரோனா காலத்தில்
மக்களுக்கு இங்கிருந்தே பொருட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. உரிய விசாரணைகள் இடம்பெறும்.” – என்றார்.

‘மதுபானை சாலைகளை மூடவும்’ – அரவிந்தகுமார் அவசர கடிதம்

இந்து மக்கள் ஆன்மீக அடிப்படையில் கொண்டாடும் பண்டிகைகளில் தீபாவளிப் பண்டிகையும் முக்கியமானதாகும். ஆகவே அப்பண்டிகை சிறப்புற அமைவதற்கு மதுபான வகைகள் தடைகளாக அமைந்துவிடக் கூடாது. ஆகையினால் அதனை முன்னிலைப்படுத்தி பதுளை மாவட்டத்தின் அனைத்து மதுபான வகைகள் விற்பனைசெய்யும் நிலையங்களை எதிர்வரும் 14ந் திகதி மூடிவிடும்படி பதுளை மாவட்டபாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் கேட்டுள்ளார்.

கொழும்பு – இராஜகிரியவில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா கலால் திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்பியுள்ள அவசரக் கடிதமொன்றிலேயே அரவிந்குமார் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

“கடந்த வருடங்களிலும் எனது கோரிக்கையினை ஏற்று தீபாவளி தினங்களில் பதுளை மாவட்டத்தில் மதுபான வகைகள் விற்பனைசெய்யும் நிலையங்களை மூடியமைக்கு எனது இதயபூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

எதிர்வரும் 14ஆம் திகதி சனிக்கிழமை தீபாவளிப் பண்டிகை இருந்துவருவதினால் அன்றைய தினம் பதுளை மாவட்டத்தின் மகியங்கனை, ரிதிமாலியத்தை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளைத்தவிர்த்து ஏனைய பிரதேச செயலகப் பிரிவுகளின் மதுபான வகைகள் விற்பனைசெய்யும் நிலையங்களைமூடிவிடும்படிகேட்டுக்கொள்கின்றேன்.

மேற்குறிப்பிட்ட மகியங்கனை, ரிதிமாலியத்தை பிரதேசசெயலகப் பிரிவுகளில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவதற்கு அப்பிரிவுகளில் இந்து மக்கள் இல்லாதுள்ளனர். அவ்விருபிரதேசசெயலகப் பிரிவுகளைத் தவிர்த்து ஏனைய பிரதேசசெயலகப் பிரிவுகளில் இந்துமக்கள் கூடுதலாகவாழ்ந்துவருவதினால் அவர்கள் தீபாவளிப் பண்டிகையைவெகுவிசேடமாகக் கொண்டுவர்.

இப்பண்டிகையானது ஆன்மீக ரீதியிலும் குடும்பத்தினரதும் உறவினர்களதும் ஒற்றுமை மற்றும் ஐக்கியத்தையும் வலியுறுத்துவதிலும் முதன்மை இடத்தைப் பெறுகின்றது.

இந்நிலையில் அப்பண்டிகையில் மதுபான வகைகள் பாவிக்கப்படும் போது ஆன்மீகம், ஒற்றுமை, ஐக்கியம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுவிடும். அமைதியானசூழலுக்கும் இடையூறாகஅமைந்துவிடும்.

ஆகையினால் குறிப்பிட்ட தீபாவளிதினத்தன்று பதுளை மாவட்டத்தின் மதுபான வகைகள் விற்பனை செய்வதை தடைசெய்யும் பொருட்டு அவ் விற்பனைநிலையங்களை மூடிவிடநடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கடிதத்தின் பிரதிகள் பதுளை மாவட்ட அரச அதிபர் மற்றும் ஊவாமாகாணகலால் திணைக்களபிரதிஆணையாளர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

எம். செல்வராஜா, பதுளை

PET பிளாஸ்டிக்; பெரும் சொத்தாகும்

நாம் வாழும் இந்த பூமிக்கு எம்மைப்போல் வேகமாக ஓட முடியாது. ஒரு வருடத்தில் நாம் உட்கொள்ளும் நுகர்வுப் பொருட்களை உற்பத்தி செய்ய பூமிக்கு ஒருவருடமும் எட்டு மாதங்களும் ஆகுமென குளோபல் ஃபுட் பிரிண்ட் நெட்வொர்க்கின் தகவல் தெரிவிக்கிறது. உண்மையிலேயே ‘எடுத்தல் – தயாரித்தல் – வீசுதல்’ எனும் மாதிரிகளைத் தாண்டி நாங்கள் பார்க்க வேண்டும், மேலும் உலகில் மிகவும் சர்ச்சைக்குரிய விடயமான பிளாஸ்டிக்கை இன்னும் நெருக்கமாகப் பார்ப்பதும் இதில் அடங்கும்.

அனைத்து பிளாஸ்டிக் வகைகளையும் மீள்சுழற்சி செய்ய முடியாது. எனினும், மீள் சுழற்சி அடையாளத்தில் முதலாம் இடத்தைப் பிடித்துள்ளதனால் உங்களுக்கு இலகுவாக அடையாளம் கண்டுகொள்ளக் கூடிய பொலியெதிலின் டெரெஃப்தலேட் (Polyethylene Terephthalate) – (PET) பிளாஸ்டிக் உலகில் மிகவும் மீள் சுழற்சி செய்யும் பிளாஸ்டிக் என்பதுடன் அது உலகில் மீள்சுழற்சி செய்யும் சந்தையில் 57%ற்கும் அதிகமான அளவில் மேற்கொள்ளப்படுகின்றது. 2025 நிறைவடைகையில் மீள்சுழற்சி செய்யப்படும் PET பிளாஸ்டிக்கின் பெறுமதி 66.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என எதிர்பார்க்கப்படுவதோடு (பொதுநலவாய நாடுகளின் விஞ்ஞான மற்றும் தொழிற்சாலை ஆய்வு அமைப்பு, 2017) PET பிளாஸ்டிக் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு அதிகமாவது மிகவும் முக்கியமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக, PET மிகவும் எதிர்க்கும், இலகுரக மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள், ஆடைகள், வீட்டு உபகரணங்கள், கட்டுமானப் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் நாடாக்கள் போன்றவற்றைத் தயாரிக்க மீண்டும் மீண்டும் மறுசுழற்சி செய்யலாம். இலங்கைக்குள் மறுசுழற்சி செய்யப்பட்ட PETஇன் பெரும் பகுதி தற்போது Polymer துகள், மற்றும் Pelletகள் ஆக ஏற்றுமதி செய்யப்படுகின்றது, அவை பிற தயாரிப்புக்களின் உற்பத்தியில் பயன்படுத்தப்படுகின்றன – அதாவது மீள் சுழற்சி செய்யப்பட்ட PET (rPET) தயாரிப்புக்கள் ஆகும். நாட்டிற்குள் மீள் சுழற்சி செய்யப்பட்ட PET துகள்கள் ஆடைகள், ஆடை அணிகலன்கள், விளையாட்டு உடைகள், விளக்குமாறு மற்றும் தூரிகைகள் என்பவற்றுக்கு பயன்படுத்தப்படுவதோடு, மேலும் அவை உயர்தர நவநாகரீக அலங்கார தயாரிப்புப் பொருட்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

DCIM100GOPROGOPR1016.JPG

குப்பை என்பது ஒரு சொத்தாகும்; PET பிளாஸ்டிக் சேகரிப்பவரின் கதை

ஷாந்தி நிலைத்தன்மை மேம்பாடானது (Shanthi Sustainable Development) நாம் வாழும் இலங்கை முழுவதிலும் உள்ள வர்த்தகங்கள் மற்றும் உள்நாட்டு சமூகத்தினருக்கு மூலப்பொருட்கள் நிர்வாகம் குறித்த பூரண தீர்வுகளை பெற்றுக் கொடுக்கும் வியாபாரமாகும். நாம் உட்பட ஐந்து உறுப்பினர்களுடன் கூடிய எமது குழுவிற்கு எமது சுற்றாடல் ஆலோசகர் மற்றும் மேலும் பிளாஸ்டிக் சேகரிப்போர் இருவர் அடங்குவதுடன் பொதுவாக நாம் அனைவரும் 60,000 PET போத்தல்களை சேகரிப்போம். 2019 நவம்பர் மாதம் எமது நடவடிக்கைகளை ஆரம்பித்து ஒரு வருடகாலத்திற்குள்ளேயே எமக்கு குப்பை என்பது ஒரு செல்வமாகவே உள்ளது. எமது வர்த்தக நடவடிக்கைகளின் ஊடாக சுற்றாடல் மீது எமக்குள்ள பொறுப்பினை புரிந்து கொள்ள முடிந்துள்ளது. மிகச் சிறந்த மூலப் பொருள் நிர்வாகத்திற்கு சிறந்த பொறிமுறையொன்றை உருவாக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக உள்நாட்டு அரசசார்பற்ற நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், அரச நிறுவனங்கள், நகரசபை, வர்த்தகங்கள் மற்றும் சமூகத்தினர் போன்ற நாட்டின் பல்வேறு பிரிவிற்கு எமது வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும் உங்களுடைய வீடுகளில் இருந்து வீசப்படும் அனைத்து கழிவுப் பொருட்களையும் சேகரிக்க, உங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள போத்தல் பத்திரிகை சேகரிப்பாளருடனும் இணைந்து செயற்படுகின்றோம். பயன்படுத்தப்படும் PET பிளாஸ்டிக் உள்ளுராட்சி மன்றங்களின் மூலம் மேற்கொள்ளப்படும் கரையோர தூய்மைப் படுத்தல், குப்பைக் கூலங்கள், பிரதேச சுற்றாடல் சந்தை, நகர சபையினால் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் பிரதேசத்திலுள்ள வர்த்தக நிறுவனங்கள் போன்ற பல்வேறு இடங்களிலிருந்து சேகரிக்கப்பட்டதன் பின்னர் சேர்க்கப்படும் எகோ ஸ்பின்டில்ஸ் தனியார் நிறுவனம் போன்ற மூலப்பொருள் மீள் சுழற்சி செய்வோரிடம் கொண்டு செல்வதற்கு முன்னர் இதிலுள்ள துருபிடிக்காத பொருட்களை நன்றாக சுத்தம் செய்வதற்கு எமது களஞ்சியங்களுக்கு அனுப்பப்படும்.

PET பிளாஸ்டிக் தயாரிப்பில் வாழ்க்கை சுழற்சி தொடர்ச்சியாக மாற்றமடைந்து வருகின்றதுடன், இது உற்பத்தியாளரிடமிருந்து ஒரு நுகர்வாளர், சேகரிப்பாளர் மற்றும் மீள் சுழற்சி செய்பவர்களினால் பின்னர் மீண்டும் ஒரு புதிய தயாரிப்பாக சந்தைக்கு வருகிறது. PET விரிவான மதிப்புச் சங்கிலியை உருவாக்குவது மட்டுமல்லாமல், பல தனி நபர்களுக்கும் வர்த்தகங்களுக்கும் வாழ்வாதார வாய்ப்புக்களை வழங்குகிறது. இதை அறிந்தால் உள்ளுர் சமூகங்களுக்குள் சிறந்த சேகரிப்பு மற்றும் மீள் சுழற்சி செய்வது எமது பொறுப்பாகும். இறுதியில் PET முகாமைத்துவம் மற்றும் மீள் சுழற்சி பிராந்திய மையமாக இலங்கையும் பங்குவகிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரச்சினை PETஇல் அல்ல, பொறுப்பற்ற மீள் சுழற்சியே

நாடு முழுவதையும் உள்ளடக்கிய விதமாக மேற்கொள்ளப்படும் ஊடகங்களின் கவனம், விழிப்புணர்வு பிரசாரங்கள் மற்றும் நகர சபைகளின் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் மக்களுக்கு PET பிளாஸ்டிக்கின் மீள் சுழற்சி தன்மை குறித்த அறிவைப் பொருத்தவரை விசேடமாக PET பிளாஸ்டிக் தயாரிப்பு சரியான விதத்தில் மீள் சுழற்சி செய்தால் எந்தளவுக்கு வெற்றியளிக்கும் என்பது குறித்து தெளிவான அறிவொன்று இல்லை. ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் ஆய்வுகள் மற்றும் தொழில்நுட்ப சஞ்சிகையின் (2020) குறிப்பு படி, மேல் மாகாணத்தில் மாத்திரம் ஒவ்வொரு நாளும் சுமார் 3,500 மெற்றிக் தொன் (MT) கெட்டியான கழிவுகள் சேர்வதுடன், அவற்றில் 2,400 மெற்றிக் தொன் சேகரிக்கப்படுகிறது. இதில் சுமார் 15% வரையான தொகை உரமாக மாற்றப்படுவதுடன் 10% மீள் சுழற்சி செய்யப்பட்டு 75%மானவை குப்பைக் கொட்டும் பொது இடங்களுக்கு போடப்படுகின்றன. தற்போது மீள் சுழற்சிக்காக சேர்க்கப்படுவதில் இலங்கையில் PET பிளாஸ்டிக்கில் 20-25% ஆகும். மீதியாகவுள்ளவை எரிக்கப்பட்டு, நிலப்பரப்புக்களிலும், இறுதியாக நமது நீர்வடிகாண்களில் முடிவடைகின்றன. இந்த முறைமை மாற வேண்டும்.

நாம் நடவடிக்கைகளை ஆரம்பித்து ஒரு வருடகாலத்தை நெருங்கும் இந்த காலப்பகுதியில் பல்வேறு வகையான வாடிக்கையாளர்களை கண்டு உரையாடியதன் பின்னர் தெளிவாக புரிந்து கொண்ட ஒரு விடயம் என்னவென்றால், தொகுதிகளாக பிரித்தல் மற்றும் பொறுப்புள்ள மீள் சுழற்சி குறித்து மேலதிக அறிவு மற்றும் புரிந்துணர்வு நாட்டிற்கு முக்கியமாகவுள்ளது என்பதாகும். இந்த சிக்கலானது PETஇன் நுகர்வுக்கு அப்பாற்பட்டது. கழிவு சேகரிப்பு, பிரித்தல் மற்றும் மீள் சுழற்சி ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள பல நபர்களை உற்சாகப்படுத்த ஒரு வலையமைப்பை உருவாக்குவதை நாம் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். எம்மைப்போன்ற வர்த்தகங்கள் இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள குப்பை தொடர்பான சிக்கலைத் தீர்க்கும் முயற்சியில் பங்களிப்பு செய்வது மட்டுமல்லாமல் அவை பலருக்கு வேலை வாய்ப்புக்களையும் வழங்குகின்றன, மேலும் சமூக வளர்ச்சிக்கு பங்களிக்கும் ஒரு முழு சுற்றுச் சூழல் அமைப்பையும் உருவாக்குகின்றன. விடயங்களை மேற்கொள்வதற்கான எங்களது வழிகளின் வரம்புகளை எட்டுகிறது. இதுகுறித்து தீர்க்கமாக சிந்திக்க வேண்டிய நேரம் இதுவாகும்.

‘கொரோனா’ – டென்மார்க்கில் 17 மில்லியன் மிங்க் விலங்குகளை அழிக்க முடிவு!

மனிதர்களுக்கு பரவக்கூடிய கொரோனா வைரஸின் பாதிப்பு மிங்க் விலங்கு பண்ணைகளில் கண்டறியப்பட்ட பின்னர் டென்மார்க்கில் 17 மில்லியன் மிங்க் விலங்குகளை அழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவல் எதிர்கால கொவிட் தடுப்பூசியின் “செயல்திறனுக்கு ஆபத்தை” ஏற்படுத்துகிறது என அந்நாட்டு பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் தெரிவித்துள்ளார்.

விலையுயர்ந்த ரோமங்களுக்காக மிங்க் விலங்கு ஐரோப்பியா மற்றும் தெற்கு அமெரிக்கா ஆகிய நாடுகளில் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன.அதில் டென்மார்க் மிகப் பெரிய உற்பத்தியாளாராக உள்ளது.

இந்நிலையில், டென்மார்க்கில் மிங்க் விலங்குகளை அழிக்கும் செயற்பாடு விரைவில் நடைபெறும் என பொலிஸார் தெரிவித்தனர்.

டென்மார்க்கின் வடக்கு ஜட்லாண்ட் பிராந்தியத்திலும், ஐரோப்பாவின் பிற பகுதிகளிலும் உள்ள மிங்க் பண்ணைகளில் பல மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளன.

ஆனால் டென்மார்க்கில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகின்றன. மேலும் 5 புதிய வைரஸ் தொற்று மிங்க் பண்ணைகளில் இனங்காணப்பட்டுள்ளது.

இதனால் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரதமர் பிரடெரிக்சன் நிலைமை “மிகவும், மிகவும் தீவிரமானது” என விவரித்துள்ளார்.

இவ்வாறு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பண்ணைகளில் உள்ள மின்க்ஸ் விலங்குகள் கொல்லப்படவுள்ளன.

‘ஜோ பைடன் ஆட்சியில் இலங்கைமீதான அமெரிக்க அழுத்தம் அதிகரிக்கும்’

அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவாகும் பட்சத்தில் இலங்கைக்கு இராஜதந்திர மட்டத்தில் மீண்டும் நெருக்கடிகள், அழுத்தங்கள் ஏற்படக்கூடும். இலங்கை விவகாரத்தை பாதுகாப்பு சபைக்கு கொண்டுசெல்வதற்குகூட முயற்சிகள் எடுக்கப்படலாம். – என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும், சட்டவல்லுநருமான பிரதீப மஹாநாம ஹோவா சுட்டிக்காட்டினார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,


” சி.ஐ.ஏ. , எப்.பி.ஐ. உட்பட  அமெரிக்காவில் அரச இயந்திரமே பலம்பொருந்திய கட்டமைப்பாகும். அதிகாரிகளுக்கு முழு சுதந்திரம் இருக்கின்றது, ஜனாதிபதி என்பவர் கொள்கை அடிப்படையிலான தீர்மானங்களையே எடுப்பார். உப ஜனாதிபதி பதவியை வகிப்பவரே அரச இயந்திரத்தை இயக்குவார்.

எனவே, அமெரிக்காவில் ஜனாதிபதிகள் மாறினாலும் ஆசியா, ஆபிரிக்கா உள்ளிட்ட நாடுகள் தொடர்பான அவர்களின் ஆதிக்க கொள்கைகள் மாறாது. உலக வர்த்தக நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களில் தொடர்ந்தும் செல்வாக்கு செலுத்துவதற்கு முயற்சிப்பார்கள்.

ஜோ பைடன் வெற்றிபெற்றால் சிற்சில மாற்றங்கள் ஏற்படக்கூடும். அவரின் வெற்றி குடியேற்றவாசிகளுக்கு சாதகமாக அமையலாம்.
குறிப்பாக டொனால்ட்  ட்ரம்ப் தனது பதவி காலத்தில் மனித உரிமை ஆணைக்குழுவை கணக்கில்கூட எடுக்கவில்ல, தமது நாட்டு பிரதிநிதிகளை மீள அழைத்தார். இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் தலையீட்டுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்தும் பெரிதாக கவனம் செலுத்தப்படவில்லை. ஆனால் ஜோ பைடனின் ஆட்சிகாலத்தல்  இலங்கையின் மனித உரிமை விவகாரம் தொடர்பான பிரச்சினைகள் மீள எழக்கூடும்.

ஜனநாயக்கட்சியின் ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது ஜோ பைடன் உப ஜனாதிபதியாக செயற்பட்டவர், மத்திய கிழக்கு நாடுகளுடன் நட்புறவு பேணப்பட்டது. ஆனால், டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியான பின்னர் மத்திய கிழக்கு நாடுகள் சீண்டும் வகையில் முடிவுகள் எடுக்கப்பட்டன. ஆனால் ஆசிய நாடுகளுடன் நல்லுறவு பேணப்பட்டது.

ட்ரம்பின் ஆட்சிகாலத்தில் ஏனைய நாடுகள்மீது கடும் அழுத்தங்கள் இருக்கவில்லை. ஆனால் ஜனநாயக்கட்சியானது, இதர நாடுகளின் அரசியல் வியூகத்துக்கு ஊடுருவி அதனை தமது தேவைக்கேற்ப நகர்த்துவதற்கு முயற்சிக்கும். ஆசிய வலயத்தில் இலங்கையானது பூகோள மட்டத்தில் முக்கியத்துவமிக்க பகுதியாகும். எனவே, கடந்த காலங்களைவிடவும் அழுத்தங்கள் அதிகரிக்கக்கூடும். வர்த்தகம் என்பதைக்காட்டிலும் மனித உரிமை விவகாரங்களை வைத்தே எம்மை இறுக்குவதற்கு முயற்சிக்கின்றார்கள். கமலா ஹரிசனும் இருக்கிறார். தமக்கு தேவையான பிரதிநிதிகளை அவர்கள் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு அனுப்பக்கூடும். இலங்கை தொடர்பான பிரேரணைகள் மீண்டும் விவாதிக்கப்படும். மனித உரிமை விவகாரத்தில் பொறுப்புக்கூறும் கடப்பாடு நிறைவேற்றப்படவில்லை எனக்கூறி அவ்விவகாரத்தை பாதுகாப்பு சபைக்குகூட கொண்டுசெல்லாம்.

எனவே, அமெரிக்காவில் உள்ள எமது நாட்டு தூதுவர் உறவை வலுப்படுத்திக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். ட்ரம்பின் ஆட்சிகாலத்தில்போல் அமைதியாக இருந்துவிடமுடியாது” – என்றார்.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

போர் நிறுத்தத்தை அப்பட்டமாகமீறும் ஈரான்!

0
போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறுவதாகக் ஈரான் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் Mohammad Ghalibaf, குற்றம் சாட்டியுள்ளார். ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்காவின் நடவடிக்கைகள் கப்பல் போக்குவரத்து மற்றும் எரிசக்தி பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்கா...

மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கு விசேட இராப்போசன விருந்துபசாரம்!

0
மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கு இலங்கை ஜனாதிபதியால் விசேட இராப்போசன விருந்துபசாரம் - முகமது முய்சுவின் விஜயத்துடன் இலங்கை - மாலைதீவு இடையிலான நெருங்கிய நட்புறவு மேலும் பலமடையும் - இலங்கை ஜனாதிபதி ஒவ்வொரு காலகட்டத்திலும்...