Home Blog Page 3789

200 அடி பள்ளத்தில் வீழ்ந்து லொறி விபத்து – சாரதி படுகாயம்!

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பத்திரிகைகளை ஏற்றி வந்த சிறிய ரகத்திலான லொறியொன்று (இன்று) 06-11-2020ல் அதிகாலை 4 மணியளவில் பெரகலைப் பகுதியில் பாதையை விட்டு விலகி, பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ் விபத்தில், குறிப்பிட்ட சிறிய ரகத்திலான லொறி சாரதி, கடுங்காயங்களுக்குள்ளாகி, தியத்தலாவை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹல்துமுள்ளைப் பொலிசார், மேற்படி விபத்து குறித்து தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

குறிப்பிட்ட சிறிய ரகத்திலான லொறி, பதுளையை நோக்கி வந்துக்கொண்டிருந்த போது, பெரகலைப் பகுதியில் மலைப்பகுதியிலிருந்து கல்லொன்று லொரி மீது விழுந்ததில், அவ் லொரி தள்ளப்பட்டு, பாதையை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்ளது.

பெரகலைக்கும், ஹல்துமுள்ளைக்குமிடையில் சுமார் 200 அடி பள்ளத்தில் பாய்ந்தே இவ் விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எம். செல்வராஜா

‘கொழும்பிலிருந்து கதிர்காமம்சென்ற 120 பேர் சிக்கினர்’ – தனிமைப்படுத்த நடவடிக்கை!

கொழும்பில் இருந்து கதிர்காமத்திற்கு சுற்றுலா வந்திருந்த 120 பேரை , கதிர்காமம் பொது சுகாதாரப் பரிசோதகர்கள், 06-11-2020 இன்று தொடக்கம் தொடர்ந்து வரும் 14 தினங்களுக்கு சுய தனிமைக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கதிர்காமத்திற்கு சுற்றுலா வந்திருந்த மேற்படி 120 பேரும், அவர்கள் தங்கியிருந்த விடுதிகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கதிர்காமம் பொது சுகாதாரப் பரிசோதகர்சமன் திசாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கும் இவ்வேளையில் கொழும்பிலிருந்து கதிர்காமத்திற்கு எவ்வகையில் இந்த 120 பேரும் சுற்றுலா வந்தார்களென்றும் தீவிர புலன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொழும்பிலிருந்து கதிர்காமம் வந்த சுற்றுலா வாசிகள் குறித்து கதிர்காமம் பொது சுகாதாரப் பிரிவினருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவல்களையடுத்தே பொதுசுகாதாரப்
பிரிவினர் விரைந்து, அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டுரூபவ் அவர்களை அவரவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளிலேயே தனிமைப்படுத்தினர்.

எம். செல்வராஜா, பதுளை

கேகாலை மாவட்டத்தில் இதுவரை 151 பேருக்கு கொரோனா

கேகாலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தீவிரமாக அதிகரித்து வருகின்றது. மாவட்டத்தின் பிரதான நகரங்களை மையப்படுத்திய பிரதேச செயலகங்களில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில், தெரணியகலையில் நேற்று 3பேர் தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையின் முடிவுகள் நேற்று கிடைக்கப்பட்டதன் விளைவாக அதில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவற்றில் தெரணியகலை வித்தியாலய மாவத்தை, உடபொல, மாலிபொட தலாவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் தொற்றாளர்களாக  உறுதிசெய்யப்பட்டுள்ளனர். இந்த தொற்று பேலியகொடை மீன்சந்தை கொத்தனி பரவலோடு சம்பந்தபட்டதாக அறிய முடிகிறது.

தெரணியகலையில் கடந்த 2ஆம் திகதி முதலாவது தொற்றாளர் மாலிபொட தலாவ பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டார். இவருக்கு பேலியகொடை மீன்சந்தையுடன் சம்பந்தப்பட்ட அவிசாவளையில் தொற்றுக்குள்ளான மீனவருடன் தொடர்பை பேனியதால் தொற்றுறுதியாகியதாக தெரணியகலை பிரதேச சுகாதார பரிசோதகர் தெரிவித்தார். அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில் 12வயது சிறுவனும் உள்ளடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கேகாலை மாவட்டத்தில் நேற்று மாலை வரை மொத்தமாக 151  தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
அவிசாவளை நிருபர்

12,570 பேருக்கு கொரோனா – 6,623 பேர் குணமடைவு – 29 பேர் பலி!

நாட்டில் நேற்று மாத்திரம் 11 ஆயிரத்து 316 பிசிஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை 5 லட்சத்து 68 ஆயிரத்து 774 பிசிஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 30 தனிமைப்படுத்தல் மையங்களில் 2 ஆயிரத்து 420 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரையில் 63 ஆயிரத்து 644 பேர் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்துகொண்டு வெளியேறியுள்ளனர்.

அதேவேளை, இரண்டாவது அலைமூலம் இதுவரை 9 ஆயிரத்து 96 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றார்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 570 ஆக அதிகரித்துள்ளது. 6 ஆயிரத்து 623 பேர் குணமடைந்துள்ளனர். 29 பேர் பலியாகியுள்ளனர். 5 ஆயிரத்து 918 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது.

பதுளை மாவட்டத்தில் 25 பேருக்கும் கண்டியில் 45 பேருக்கும் கொரோனா!

கொரோனா வைரஸ் பரவலின் 2ஆவது அலைமூலம் பதுளை மாவட்டத்தில் இதுவரை 25 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன் இவர்களுடன் தொடர்பில் இருந்த சுமார் 2 ஆயிரத்து 393 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஆயிரத்து 137 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதேவேளை, கண்டி மாவட்டத்தில் 45 தொற்றாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது மும்பை அணி!

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் முதலாவது தகுதி சுற்றில் டெல்லி கேப்பிட்டல்சை புரட்டியெடுத்த மும்பை அணி இறுதிப்போட்டியை எட்டியது.

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு துபாயில் அரங்கேறிய இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சுடன் மோதியது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் மும்பையை துடுபெடுத்துமாறு பணித்தார். இதன்படி கேப்டன் ரோகித் சர்மாவும், குயின்டான் டி காக்கும் மும்பை அணியின் இன்னிங்சை முதல் ஓவரிலேயே 3 பவுண்டரியுடன் அட்டகாசமாக தொடங்கினர்.

2-வது ஓவரில் அஸ்வின் சுழலில் ரோகித் சர்மா (0) துல்லியமான எல்.பி.டபிள்யூ. முறையில் வீழ்ந்தார். 2-வது விக்கெட்டுக்கு டி காக்குடன், சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடி காட்டி ரன்ரேட்டை எகிற வைத்தனர். அக்‌ஷர் பட்டேல், அஸ்வின் ஓவர்களில் சிக்சர் பறந்தன.

பவர்-பிளேயான முதல் 6 ஓவர்களில் மும்பை அணி ஒரு விக்கெட்டுக்கு 63 ரன்கள் திரட்டியது. இந்த சீசனில் பவர்-பிளேயில் மும்பையின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஸ்கோர் 78 ரன்களாக உயர்ந்த போது குயின்டான் டி காக் 40 ரன்களில் (25 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) அஸ்வின் பந்து வீச்சில் தூக்கியடித்து கேட்ச் ஆனார்.

சிறிது நேரத்தில் நடப்பு தொடரில் 4-வது அரைசதத்தை கடந்த சூர்யகுமார் யாதவ் 51 ரன்களில் (38 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) வெளியேறினார். அடுத்து வந்த பொல்லார்ட் (0) அஸ்வின் சுழலில் சிக்கினார். அப்போது மும்பை அணி 4 விக்கெட்டுக்கு 101 ரன்களுடன் (12.2 ஓவர்) லேசான தடுமாற்றம் கண்டது. இந்த சூழலில் இஷான் கிஷனும், குருணல் பாண்ட்யாவும் சேர்ந்து அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்டனர். இருப்பினும் ஓரிரு ஓவர்களில் ரன்வேட்டை தளர்ந்தது. குருணல் பாண்ட்யா 13 ரன்னில் நடையை கட்டினார்.

இதைத் தொடர்ந்து இஷான் கிஷனும், ஹர்திக் பாண்ட்யாவும் கைகோர்த்து இறுதி கட்டத்தில் ‘சரவெடி’யாய் வெடித்தனர். ரபடா, நோர்டியாவின் ஓவர்களில் ஹர்திக் பாண்ட்யா தலா 2 சிக்சர்களை தெறிக்க விட்டு பிரமாதப்படுத்தினார். இதன் பின்னர் கடைசி பந்தில் இஷான் கிஷன் சிக்சரோடு 200 ரன்களை தொட வைத்ததுடன் தனது அரைசதத்தையும் பூர்த்தி செய்தார்.

20 ஓவர் முடிவில் மும்பை அணி 5 விக்கெட்டுக்கு 200 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன் 55 ரன்களுடனும் (30 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), ஹர்திக் பாண்ட்யா 37 ரன்களுடனும் (14 பந்து, 5 சிக்சர்) களத்தில் இருந்தனர். இவர்கள் கடைசி 3 ஓவர்களில் மட்டும் 55 ரன்கள் சேகரித்தனர். டெல்லி தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். விக்கெட் ஏதும் எடுக்காத காஜிசோ ரபடா 4 ஓவர்களில் 44 ரன்களை வாரி வழங்கினார்.

பின்னர் 201 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணிக்கு முதல் ஓவரிலேயே வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் ‘செக் ’ வைத்தார். அவரது ஓவரில் பிரித்வி ஷா (0), அடுத்து வந்த ரஹானே (0) வீழ்ந்தனர். இதன் பின்னர் ஷிகர் தவான் (0), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (12ரன்) ஆகியோரை மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காலி செய்ய டெல்லி அணியின் பேட்டிங் முதுகெலும்பு சிதைந்தது.

20 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து ஊசலாடிய டெல்லி அணியால் அதன் பிறகு நிமிர முடியவில்லை. ஆறுதல் அளிக்கும் வகையில் ஆடிய மார்கஸ் ஸ்டோனிஸ் (65 ரன், 6 பவுண்டரி, 3 சிக்சர்), அக்‌ஷர் பட்டேல் (42 ரன்) அணி 100 ரன்களை கடக்க உதவினர்.

20 ஓவர்களில் டெல்லி அணியால் 8 விக்கெட்டுக்கு 143 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் மும்பை அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. மும்பை தரப்பில் பும்ரா 4 விக்கெட்டும், டிரென்ட் பவுல்ட் 2 விக்கெட்டும் சாய்த்தனர்.

இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 6-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. தோல்வி அடைந்தாலும் டெல்லி அணிக்கு இறுதிசுற்றை எட்ட இன்னொரு வாய்ப்பு இருக்கிறது. வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி காணும் அணியுடன் டெல்லி அணி இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் நாளை மறுதினம் மோதும்.

‘கொரோனா’ தொற்றாளர்களின் எண்ணிக்கை 12,570 ஆக உயர்வு!

நாட்டில் மேலும் 170  பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பேலியகொடை கொரோனா கொத்தணிமூலமே இவர்களுக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி இலங்கையில் கொரோனா 2ஆவது அலைமூலம் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை9 ஆயிரத்து 92  ஆக அதிகரித்துள்ளது. இன்று இதுவரையில் 383 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றார்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 570 ஆக அதிகரித்துள்ளது. 6 ஆயிரத்து 623 பேர் குணமடைந்துள்ளனர். 29 பேர் பலியாகியுள்ளனர். 5 ஆயிரத்து 918 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது.

 

‘ஊரடங்கு நீக்கப்பட்டாலும் கண்காணிப்பு தொடரும்’

ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர் கொவிட் ஒழிப்புக்காக நடைமுறைப்படுத்தப்படும் சுய தனிமைப்படுத்தல் நடைமுறைகளை கடுமையாக கண்காணிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

கொவிட் தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என கண்டறியப்பட்ட அனைத்து குடும்பங்களும் தத்தமது வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படும்.

அவ்வாறு தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை நாடளாவிய ரீதியில் சுமார் 84 ஆயிரமாக காணப்படுகின்றது. மேல் மாகாணத்தில் மட்டும் 13 ஆயிரத்து 911 குடும் பங்களில் 40676 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதன் பின்னரும் முறையாக கண்காணிக்க வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் தினமும் சந்திக்கும் கொவிட் ஒழிப்பு விசேட செயலணி இன்று (05) முற்பகல் ஒன்றுகூடிய போதே ஜனாதிபதி அவர்கள் இந்த பணிப்புரையை விடுத்தார்.

நோய்த்தொற்றாளர்கள் சமூகத்தில் கண்டறியப்பட்டால் அவர்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் அவர்கள் வசிக்கும் பிரதேசம் பற்றி விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். தேவை ஏற்படின் அப்பிரதேசத்தை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

தோட்டங்கள் மற்றும் அடுக்குமாடி வீடுகள் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

பொருளாதார மத்திய நிலையங்களை மொத்த விற்பனைக்கு மட்டும் மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டது. சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றியும் பீசீஆர் பரிசோதனைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டும் மிகுந்த கவனத்துடன் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். மரக்கறி, பழங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை எடுத்துக்கொண்டு மாவட்டங்களுக்கிடையில் போக்குவரத்தில் ஈடுபடும் லொறிகளுக்கு ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரங்கள் அவசியமில்லை.

கட்டுநாயக்க முதலீட்டு வலயத்தின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக பேணுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. தனியார் வைத்தியசாலைகளின் பங்களிப்புடன் சுகாதார அமைச்சினதும் கடற் படையினதும் கண்காணிப்பின் கீழ் வர்த்தக வலயத்தை அண்டிய பிரதேசங்களில் பீசீஆர் பரிசோதனைகளை எழுமாறாகவும் தொடர்ச்சியாகவும் செய்வதற்கும் ஜனாதிபதி அவர்களினால் பணிப்புரை வழங்கப்பட்டது.

அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோரும் ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களும் கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

‘புதிய கட்சிக்கும் விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை’

அரசியல் கட்சியை பதிவு செய்ததற்கும், விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எஸ்ஏ சந்திரசேகர் விளக்கம் அளித்துள்ளார்.

விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக மாற இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. கட்சியின் பெயரை, தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து இருக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் அரசியல் கட்சியை பதிவு செய்ததற்கும், விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எஸ்ஏ சந்திரசேகர் விளக்கம் அளித்துள்ளார்.

அரசியல் கட்சியை பதிவு செய்வது எனது தனிப்பட்ட முயற்சி. விஜய் மக்கள் இயக்கம் இன்று நேற்று தொடங்கப்பட்டதல்ல, உறுப்பினர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவே அரசியல் கட்சி. எதிர்காலத்தில் இந்த இயக்கத்தில் விஜய் இணைவாரா என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும். விஜய்யின் ரசிகனாக நான் இந்த இயக்கத்தை தொடங்கியுள்ளதாக அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் கருத்து தெரிவித்துள்ளார்.

2ஆவது அலைமூலம் இதுவரை 8,926 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 213 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி இலங்கையில் கொரோனா 2ஆவது அலைமூலம் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 926 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றார்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 400 ஆக அதிகரித்துள்ளது. 6 ஆயிரத்து 623 பேர் குணமடைந்துள்ளனர். 29 பேர் பலியாகியுள்ளனர். 5 ஆயிரத்து 753 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

போர் நிறுத்தத்தை அப்பட்டமாகமீறும் ஈரான்!

0
போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறுவதாகக் ஈரான் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் Mohammad Ghalibaf, குற்றம் சாட்டியுள்ளார். ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்காவின் நடவடிக்கைகள் கப்பல் போக்குவரத்து மற்றும் எரிசக்தி பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்கா...

மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கு விசேட இராப்போசன விருந்துபசாரம்!

0
மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கு இலங்கை ஜனாதிபதியால் விசேட இராப்போசன விருந்துபசாரம் - முகமது முய்சுவின் விஜயத்துடன் இலங்கை - மாலைதீவு இடையிலான நெருங்கிய நட்புறவு மேலும் பலமடையும் - இலங்கை ஜனாதிபதி ஒவ்வொரு காலகட்டத்திலும்...