Home Blog Page 3790

‘கொரோனா’ – மேலும் ஐவர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 29 ஆக உயர்வு!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர். மூன்று பெண்களும், இரு ஆண்களுமே இவ்வாறு பலியாகியுள்ளனர். இவர்களில் நால்வர் 60 வயதடைக்கடந்தவர்கள்.

இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.

1. கொழும்பு 02 ஐச் சேர்ந்த 46 வயதுடைய ஆணொருவர் உயிரிழந்துள்ளார். அவர் பிம்புர வைத்தியசாலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவர் நீண்டகாலமாக சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்.

2. கொழும்பு, வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவர் நெஞ்சு வலி காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார். இவருக்கும் கொரோனா தொற்றியுள்ளது.

3. கொழும்பு 12 ஐ சேர்ந்த 58 வயதுடைய பெண் ஒருவர் தனது வீட்டில் உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மாரடைப்பே அவரின் மரணத்துக்கு காரணம்.

4. கொழும்பு 14 ஐ சேர்ந்த 73 வயதுடைய பெண் ஒருவர் தனது வீட்டில் உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனையில் கொரோனா தொற்றினால் அவரது ஈரல் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

5. கொழும்பு 15 ஐ சேர்ந்த 74 வயதுடைய ஆண் ஒருவர் தனது வீட்டில் உயிரிழந்துள்ளார். அவருக்கு கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார்.

 

அபாயத்தை எதிர்கொண்டுள்ளவர்களுக்கு மாற்று நடவடிக்கை செந்தில் தலைமையில் அவசரக் கூட்டம்

பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ள மக்களுக்கான மாற்றுத் திட்டத்தை முன்னெடுப்பதற்கான அவசரக் கூட்டம் ஒன்று இன்று பதுளை கச்சேரியில் நடைபெற்றது.

பதுளை மாவட்டத்தில் 2362 குடும்பங்கள் மண்சரிபு அபாய வலயங்களில் குடிகொண்டுள்ளனர். தற்போது தொடர் மழை வீழ்ச்சிப் பதிவாகியுள்ளதால் அனர்த்த வலயங்களில் மண்சரிவு அபாயங்கள் ஏற்படுக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில் அங்குள்ள மக்கள் வழமைபோல், பாடசாலைகளிலோ, கலாசார மண்டபங்களிலோ தங்கவைக்க முடியாத நிலை காணப்படுகிறது. கொவிட் அச்சுறுத்தல் நாடு முழுவதும் இருப்பதால் இவர்களுக்கான மாற்றுத் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலை உள்ளது..

எனவே, இந்தத் திட்டங்கள் குறித்து ஆராய்ந்து, அவற்றை நடைமுறைப்படுத்துவது எவ்வாறு என்பது குறித்து இன்று நடைபெற்ற கூட்டத்தில் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டது.

பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளரும், பதுளை மாவட்ட இணைப்பாளருமான செந்தில் தொண்டமான் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்ட உதவி செயலாளர், மாவட்ட பிரதிச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

‘களத்தில் இறங்கி கட்டளை பிறப்பித்த ஜீவன்’

நுவரெலியா  – வலப்பனை, தியநெல்ல பகுதியில் தனிவீட்டுத் திட்டத்தில் வாழும் மக்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வெகுவிரைவில் ஏற்படுத்திக்கொடுக்குமாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.

பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் அதிகாரிகளுக்கு இராஜாங்க அமைச்சர் இவ்வாறு பணிப்புரை விடுத்ததையடுத்து, அதற்கான ஆரம்பக்கட்ட பொறிமுறை தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றது.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வலப்பனை, தியநெல்ல  பகுதியில் கடந்த அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட இந்திய வீடமைப்புத் திட்டத்தினூடாக  166 வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன.

எனினும், சுமார் இரண்டு வருடகாலமாக மேலாக குறித்த வீடுகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை. இதனால் குடியிருப்பாளர்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ள நேரிட்டது.

இது தொடர்பில்  தோட்ட வீடமைப்பு சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் கௌரவ ஜீவன் தொண்டமான் கவனத்துக்கு அண்மையில் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் குறித்த பகுதிக்கு நேற்று (4) கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்ட ஜீவன் தொண்டமான், வீட்டுத் திட்டத்தினை பார்வையிட்டதுடன்,  குறைகளையும் கேட்டறிந்தார்.

இதன்போது குறைப்பாடுகளை உடனடியாக நிவர்த்திசெய்து, உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி மக்களுக்கு முழுமையானதொரு வீட்டுத்திட்டத்தை கையளிக்குமாறு  மனித வள அபிவிருத்தி நிதியத்தின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், நுவரெலியா பிரதேச சபை தலைவர் யோகராஜ்,  இலங்கை தொழிலாளர் காங்கிரசின்  தேசிய அமைப்பாளர் ராஜதுரை  மற்றும் மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் அதிகாரிகள் ஆகியோர் அமைச்சரோடு சென்றிருந்தனர்.

க.கிசாந்தன்

கொரோனா அச்சம் – மஸ்கெலியாவில் தனியார் வைத்தியசாலைக்கு பூட்டு!

மஸ்கெலியா நகரிலுள்ள தனியார் மருத்து சிகிச்சை நிலையமொன்றும், மருந்தகமொன்றும் (பாமசி) இன்று (05.11.2020)  மூடப்பட்டன. அத்துடன், வைத்தியர் ஒருவர் உட்பட ஊழியர்கள் சிலர் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்டத்தில் உள்ள 41 வயதுடைய நபரொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று (4) உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்தே மஸ்கெலியா நகரில் அவர் மருந்து எடுக்க சென்ற தனியார் வைத்திய நிலையமும், மருந்துகளை வாங்க சென்ற பாமசியும் இவ்வாறு இன்று மூடப்பட்டன. வைத்தியர் ஒருவரும், பாமசியில் தொழில் புரிந்தவர்களும் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 31 ஆம் திகதியே குறித்த நபர் சிகிச்சைக்காக மஸ்கெலியா நகருக்கு வந்துள்ளார் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களிடம் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகளை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் கூறினர்.

க.கிசாந்தன், பெ.பெருமாள்

வெலிக்கடை சிறைச்சாலையில் எழுவருக்கு கொரோனா

வெலிக்கடை சிறைச்சாலையில் அதிகாரிகள் உள்ளிட்ட 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் பெறுபேறுகளின் அடிப்படையில் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதற்கமைய ஆண் கைதிகள் இருவர், அதிகாரி ஒருவர் மற்றும் பெண் சந்தேக நபர்கள் நால்வருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, வெலிக்கடை சிறைச்சாலையின் மகளிர் பிரிவின் அனைத்து சந்தேக நபர்களுக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொரோனாவின் பிடிக்குள் இருந்து ஒரே நாளில் 765 பேர் மீண்டனர்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 765 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 623 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 5 ஆயிரத்து 540 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 187 ஆக அதிகரித்துள்ளது.

‘கொரோனா அச்சம்’ – பதுளையில் நீதிமன்ற நடவடிக்கைகள் யாவும் இடைநிறுத்தம்!

பதுளை மேல் நீதிமன்றத்தில் வழக்கொன்றிற்கு ஆஜராகிய சி.ஐ.டி. பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனாத்தொற்று உறுதிப்படுத்தப்பட்டதினால், பதுளை நீதிமன்ற வழக்குகள் அனைத்தும் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட சி.ஐ.டி. பொலிஸ் உத்தியோகத்தர், கொழும்பிலிருந்து பதுளைவந்து, பதுளை மேல் நீதிமன்றவழக்கொன்றிற்கு நேற்று ஆஜராகியிருந்தார்.

இதையடுத்து இவருக்கு கொரோனாதொற்று அறிகுறிகள் தென்பட்டத்தினால், அவர் உடன் பி.சி.ஆர். பரிசோதனைக்குற்படுத்தப்பட்டார். அப் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில்,பதுளை மேல் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், மஜிஸ்ரேட் நீதிமன்றம், பசறை சுற்றுலா நீதிமன்றம், பதுளை தொழில் மன்றம் ஆகியவற்றின் கடமைகள் அனைத்தும் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைய பதுளை மேல் நீதிமன்றவழக்குகள் அடுத்த மாதம் 18ந் திகதியும் (18-12-2020)அதைத் தொடர்ந்ததிகதிகளிலும் ஏனைய மஜிஸ்ரேட் நீதிமன்ற வழக்குகள் அடுத்தமாதம் 15ந் திகதியும் (15-12-2020),அதற்குப் பின்வரும் திகதிகளிலும் எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

இத்தகவல்களைபதுளைசட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதித் தலைவர் சட்டத்தரணி கந்தசாமி இரமேஸ்குமார் தெரிவித்தார்.

மேற்கண்ட நீதிமன்றங்களின் வழக்குகள் அனைத்திற்கும் பதுளை சட்டத்தரணிகள் குழுவினரே ஆஜராவதினால்,தொற்று அச்சுறுத்தலின் பாதுகாப்பு கருதி பதுளை நீதிமன்றகடமைகள் அனைத்தும் இடைநிறுத்தம் செய்யப்பட்டிருப்பமைகுறிப்பிடத்தக்கது.

குறிப்பிட்ட இரகசிய பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவி பசறை பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றிவருவதும் தற்போது தெரியவந்துள்ளது.

எம். செல்வராஜா, பதுளை

‘கடலில் மூழ்க வேண்டாம் முடிந்தால் பதவி துறக்கவும்’

” கடலில் மூழ்கி உயிர் துறப்பதைக்காட்டிலும் சுகாதார அமைச்சர் பதவி துறப்பது மேலானது. எனவே, கடலில் குதிக்க துணிந்த அவர், நாட்டுக்காக பதவி துறக்கவேண்டும்.” – என்று  என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் சவால் விடுத்துள்ளார்.

தான் கடலில் மூழ்கி பலியானால் கொரோனா வைரஸ் ஒழியுமெனில் அதனை செய்வதற்கும் தயாரென சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி விடுத்துள்ள அறிவிப்பு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவருகின்றது. இந்நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு தோல்வி கண்டுள்ளது. நிலைமை இப்படி இருக்கையில் நகைச்சுவைத்தனமான அறிவிப்புகளை சுகாதார அமைச்சர் விடுக்கின்றார். அவர் கடலில் மூழ்கவேண்டிய தேவையில்லை, பதவி விலகி சிறப்பாக செயற்படக்கூடிய ஒருவருக்கு அந்த பதவியை வழங்கினாலே அது பெரும் உதவியாக இருக்கும்.

கடலில் மூழ்குவதாக சுகாதார அமைச்சர் கூறிய பின்னர் , இலங்கை கடற்பரப்பில் திமிங்கிலங்கள் கரையொதுங்குவதை காணமுடிகின்றது. எனவே, அவர் கடலில் மூழ்கவேண்டியதில்லை, நாடுமீது அக்கறை இருந்தால் பதவி துறக்கவேண்டும். அதனை அவர் செய்வாரா'” – என்றும் முஜிபூர் ரஹ்மான் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற பேரவையின் அடுத்த கூட்டம் 10 ஆம் திகதி!

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற பேரவையின் கன்னி கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கலந்துகொண்டார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் சபாநாயகரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முதலாவதாக கருத்து தெரிவித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன , நாடாளுமன்ற பேரவைக்கு நியமிக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களையும் கௌரவத்துடன் வரவேற்றதுடன், எதிர்காலத்தில் மிகுந்த ஒத்துழைப்புடன் செயலாற்றுவதற்கு அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.

அதனை தொடந்து சபாநாயகரின் அறிவுறுத்தலுக்கமைய பொதுச் செயலாளர் திரு.தம்மிக தசநாயக்க , அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்திற்கமைய நாடாளுமன்ற பேரவையின் சட்ட கட்டமைப்பு மற்றும் அதன் நடைமுறைகளை விளக்கினார்.

அதன்போது எதிர்காலத்தில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கருத்து வெளியிட்டார். சுமார் ஒரு மணிநேரம் வரை நீடித்த கலந்துரையாடலில் எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் நாடாளுமன்ற பேரவையின் உறுப்பினர்கள் இடையே உடன்பாடு எட்டப்பட்டது.

குறித்த சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, பிரதமரின் பிரதிநிதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்க்கட்சி தலைவரின் பிரதிநிதி கபீர் ஹாசிம், நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தசநாயக்க மற்றும் பிரதி பொதுச் செயலாளர் திரு.நீல் இத்தவெல உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்ற பேரவை எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது.

ஒபாமாவின் சாதனையையும் முறியடித்து ஜோ பைடன் முன்னிலை!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் அதிக வாக்குகளை பெற்றுள்ள ஜனாதிபதி வேட்பாளர் என்ற சாதனையை ஜனநாயக கட்சி ஜோ பைடன் பதிவு செய்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் ஜோ பைடன் 264 தேர்தல் சபை வாகுகளுடன் முன்னிலையில் உள்ளார். தற்போதுவரை ஜோ பைடன் பெற்றுள்ள வாக்குகள் 70,298,271 (50.3%) என பதிவாகியுள்ளது. இது 2008 ஆம் ஆண்டு ஜனாதிபதி பராக் ஒபாமா பெற்ற 69,498,516 என்ற முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இதுவரை 67,567,559 (48%) வாக்குகள் பெற்றுள்ளார். இது 2016 தேர்தலில் அவர் பெற்ற வாக்குகளைவிடவும், 2012 இல் ஜனாதிபதி பராக் ஒபாமா பெற்ற வாக்குகளைவிடவும் அதிகமாகும்.

வாக்குகளை பெறுவதில் ஜோ பைடன் சாதனை புரிந்தாலும், தேர்தல் சபை வாக்குகள் அடிப்படையில் ஜனாதிபதி தேர்வு நடைபெறுவதால், இரு வேட்பாளர்களின் ஆதரவாளர்களும் தங்கள் வேட்பாளரே இறுதியில் ஆட்சியை கைப்பற்றுவார் என கூறி வருகின்றனர்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெள்ளை மாளிகையை கைப்பற்ற, ஒரு அமெரிக்க வேட்பாளர் மொத்தம் உள்ள 538 தேர்தல் வாக்குகளில் 270 ஐ வெல்ல வேண்டும்.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

போர் நிறுத்தத்தை அப்பட்டமாகமீறும் ஈரான்!

0
போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறுவதாகக் ஈரான் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் Mohammad Ghalibaf, குற்றம் சாட்டியுள்ளார். ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்காவின் நடவடிக்கைகள் கப்பல் போக்குவரத்து மற்றும் எரிசக்தி பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்கா...

மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கு விசேட இராப்போசன விருந்துபசாரம்!

0
மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கு இலங்கை ஜனாதிபதியால் விசேட இராப்போசன விருந்துபசாரம் - முகமது முய்சுவின் விஜயத்துடன் இலங்கை - மாலைதீவு இடையிலான நெருங்கிய நட்புறவு மேலும் பலமடையும் - இலங்கை ஜனாதிபதி ஒவ்வொரு காலகட்டத்திலும்...