Home Blog Page 3791

ஹட்டனில் மேலும் ஒருவருக்கு கொரோனா – 18 பேர் சுயதனிமையில்!

ஹட்டன், தும்புருகிரிய பகுதியை சேர்ந்த பெண் நபரொருவருக்கு நேற்று (04.11.2020) இரவு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று ஹட்டன் – டிக்கோயா நகரசபையின் பொது சுகாதார பரிசோதகர் ஆர்.எஸ்.எஸ். மெதவல தெரிவித்தார்.

இதனையடுத்து குறித்த நபருடன் தொடர்பைபேணிய 6 குடும்பங்களைச்சேர்ந்த 18 பேர் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நபர் கடந்த 2 ஆம் திகதி அட்டன், கார்கில்ஸ் புட்சிட்டிக்கு சென்றுள்ளார். இதனால் அந்நிறுவனத்தின் வளாகம் தொற்றுநீக்கம் செய்யப்பட்டது.

இவருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

‘தமிழ் அரசியல் கைதிகளுக்காக இரத்தத்தில் கையொப்பமிடுவேன்’

” தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலை வழங்குமாறுகோரி எவராவது மனுகொண்டுவந்தால் அதில் இரத்தத்தில் கையொப்பமிடுவதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (4) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” கொலையாளியை விடுதலை செய்யுமாறுகோரும் மனுவில் நான் கையொப்பமிடவில்லை. மலையக மக்களுக்கு துரோகம் இழைக்கும் வகையில் எந்தவொரு முடிவையும் நான் ஒருபோதும் எடுக்கமாட்டேன். எனினும், தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறுகோரி அரசாங்கமோ அல்லது வேறு எவரோ மனு கொண்டுவந்தால் அதில் மலையக மக்களின் சார்பில் இரத்தத்தில் கையொப்பிடுவதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன்.

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது. மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் உரிய சுகாதார வசதிகள் இல்லை, நிவாரணத் திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை. ஜனாதிபதியின் ஒருவருடகால பயணம் என்பது தோல்வியில் முடிந்துள்ளது என்பது மட்டும் உறுதி.” – என்றும் வடிவேல் சுரேஷ் குறிப்பிட்டார்.

‘9 ஆம் திகதிக்கு பிறகும் மேல் மாகாணம் முடக்கப்படாது’

மேல் மாகாணம் எதிர்வரும் 9 ஆம் திகதி காலை 5 மணிக்கு திறக்கப்படலாம். தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை நீடிப்பதற்கான சாத்தியம் இல்லை – என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

” 9 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு பின்னர் மேல் மாகாணத்தை திறப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். நாட்டை தொடர்ந்தும் முடக்கிவைக்கமுடியாது, மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும்.

எனவே, சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றி வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்கான ஒத்துழைப்பை மக்கள் வழங்கவேண்டும். ” – என்றும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.

மேல் மாகாணத்தில் 11,900 குடும்பங்கள் சுய தனிமையில்!

கொவிட் 02 ஆவது அலையை தொடர்ந்து மேல் மாகாணத்தில் 11 ஆயிரத்து 900க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் நோயாளிகளின் முதல் தொடர்புகளாக அடையாளம் காணப்பட்ட 5 ஆயிரத்து 715 குடும்பங்கள் வீட்டிலேயே சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அத்தோடு, நோயாளிகளின் இரண்டாவது மற்றும் மூன்றாவது தொடர்புகளாக கண்டறியப்பட்ட பின்னர் கிட்டத்தட்ட 6 ஆயிரத்து 199 குடும்பங்களும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக 14 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.

உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் 14 பேரின் தலைமையில் இந்த குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் நேற்று முதல் இந்தக் குழுக்கள் மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றனர் என்றும் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தின் கீழ் தனிமைப்படுத்தல் உத்தரவை மீறுவதாகக் கண்டறியப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பதுளையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடல்

பதுளை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

கலந்துரையாடலில் ஊவா மாகாண ஆளுனர் முஸாம்மில், பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலர் செந்தில் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர் மேஜர் ஜெனரல் தெனிபிட்டிய, பதுளை மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பதுளை மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுப்பது மற்றும் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான நிவாரணப் பணிகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

பதுளை தனிமைப்படுத்தப்பட்டுள்ள மூன்று பெருந்தோட்டங்களுக்கு வழங்கப்படும் 10ஆயிரம் ரூபா அரச நிவாரண பொதியில் கிராமங்கள் போல் அல்லாது பெருந்தோட்டங்களில் உள்ள தமிழ் மக்கள் பயன்படுத்தும் உணவு பொருட்கள் உள்ளடக்கப்பட வேண்டுமென இதன்போது செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்ததுடன், இந்த கோரிக்கையின் பிரகாரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மூன்று பெருந்தோட்டங்களுக்கு விசேட உணவு பொதிகள் விநியோகிக்கப்படவுள்ளன.

12,187 பேருக்கு கொரோனா – 5,858 பேர் குணமடைவு – 24 பேர் பலி!

நாட்டில் நேற்று 10 ஆயிரத்து 655 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன், இதுவரையில் 5 லட்சத்து 46 ஆயிரத்து 803 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 33 தனிமைப்படுத்தல் மையங்களில் 2 ஆயிரத்து 601 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரையில் 63 ஆயிரத்து 439 பேர் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்துகொண்டு வெளியேறியுள்ளனர்.

அதேவேளை, இரண்டாவது அலைமூலம் இதுவரை 8 ஆயிரத்து 713 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

நேற்று மாத்திரம் 443 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கொரோனா தொற்றார்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 187 ஆக அதிகரித்துள்ளது. 5 ஆயிரத்து 858 பேர் குணமடைந்துள்ளனர். 24 பேர் பலியாகியுள்ளனர். 6ஆயிரத்து 305 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது.

இறுதிப்போட்டிக்கு தெரிவாகி சாதனை படைக்குமா டில்லி?

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் மும்பை, டெல்லி அணிகள் இன்று களம் காண்டுகின்றன.

13ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது.

8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த மும்பை இந்தியன்ஸ் (18 புள்ளி), டெல்லி கேப்பிட்டல்ஸ் (16 புள்ளி), ஐதராபாத் சன்ரைசர்ஸ் (14 புள்ளி), பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (14 புள்ளி) ஆகிய அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறின.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் நடையை கட்டின.

இந்த நிலையில் துபாயில் இன்று (வியாழக்கிழமை) நடக்கும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் புள்ளி பட்டியலில் டாப்-2 இடங்களை பிடித்த நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

9 வெற்றி, 5 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் கம்பீரமாக முதலிடத்தை பிடித்த மும்பை அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக திகழ்கிறது.

தொடக்கத்தில் வீறுநடை போட்ட டெல்லி அணி முதல் 9 ஆட்டங்களில் 7-ல் வெற்றி பெற்று பிரமாதப்படுத்தியது. ஆனால் அதன் பிறகு வரிசையாக 4 ஆட்டங்களில் தோற்றதால் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறுமா? என்பதே கேள்விக்குறியானது. எப்படியோ கடைசி லீக்கில் பெங்களூருவை தோற்கடித்து 8 வெற்றிகளுடன் பிளே-ஆப் சுற்றில் கால்பதித்தது.

தற்போது விளையாடும் 8 அணிகளில் ஐ.பி.எல்.-ல் இறுதிசுற்றை எட்டாத ஒரே அணி டெல்லி தான். அந்த நீண்ட கால சோகத்துக்கு முடிவு கட்டி வரலாறு படைக்க அருமையான வாய்ப்பு கனிந்துள்ளது.

வெற்றியை நோக்கி பயணிக்கும் ஜோ பைடன்!

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் வெற்றி பெற்றதன் மூலம் ஜோ பைடன் 264 இடங்களில் முன்னிலை வகிக்கிறார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நிறைவு பெற்று தற்பொது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதிபரை தேர்வு செய்ய அமெரிக்காவில் மொத்தம் உள்ள 50 மாநிலங்களில் 538 தேர்வாளர்கள் (பிரதிநிதிகள்) உள்ளனர். இவர்களில் 270 பேரின் வாக்குகளை பெறும் வேட்பாளரே அமெரிக்க அதிபராக தேர்வாக முடியும்.

இதுவரை நடந்து முடிந்துள்ள வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் ஜோ பைடன் முன்னிலை வகித்து வருகிறார். அதிபர் தேர்தலில் வெற்றியை முடிவு செய்யும் மாநிலங்களாக கருதப்படும் மிச்சிகன், விஸ்கான்சின் ஆகியவற்றில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். அதே நேரம் வடக்கு கரோலினா, பென்னிசில்வேனியா, ஜியார்ஜியா ஆகிய இடங்களில் டிரம்ப் முன்னிலை வகிக்கிறார்.

மிச்சிகனில் ஜோ பிடனுக்கு 49.9 சதவீதமும், டிரம்புக்கு 48.6 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன. ஏற்கனவே, அமெரிக்காவின் நியூ மெக்சிகோ, நியூ ஹார்ம்ஷயர், நியூயார்க், வெர்மான்ட், மேரிலேண்ட், மசாசூட்ஸ், நியூஜெர்சி, கனக்டிகட், டெலவர், வாஷிங்டன், கொலராடோ, கலிபோர்னியா, இல்லினாய்ஸ், விஸ்கான்சின் உள்ளிட்ட மாநிலங்களில் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில் மிச்சிகன் மாநிலத்தில் 16 இடங்களை கைப்பற்றியதன் மூலம் 264 இடங்களில் ஜோ பிடன் முன்னிலை பெற்றுள்ளார். டிரம்ப் 214 இடங்களுடன் பின்தங்கியுள்ளார். இன்னும் வாக்குகள் முழுமையாக எண்ணி முடிக்கப்படவில்லை. இருப்பினும் ஜோ பைடன் வெற்றியை நெருங்கி வருவதாக அவரது பிரச்சாரக்குழு தெரிவிக்கிறது. மறுபக்கம் வாக்கு எண்ணிக்கையில் மோசடிகள் நடந்துள்ளதாக டிரம்ப் பிரச்சாரக்குழுவினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியது

நாட்டில் மேலும் 159 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பேலியகொடை தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்த  151 பேருக்கும், தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த  ஒன்பது பேருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி இலங்கையில் கொரோனா 2ஆவது அலைமூலம் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 500 ஐ தாண்டியுள்ளது. இன்று இதுவரையில் 443 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 187 ஆக அதிகரித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி யாருக்கு? இழுபறி நிலை நீடிப்பு!

அமெரிக்கத் தேர்தலில் தெளிவான முடிவு தெரியாமல் இழுபறி நீடிக்கும் நிலையில், அடுத்த அதிபர் யார் எனும் கேள்விக்கு பதில் தெரிய பல நாள்கள் காத்திருக்கும் சூழல் ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.

இதனிடையே, முக்கிய மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கையில் தீவிர போட்டிக்கு மத்தியில் அதிபர் டிரம்ப் மற்றும் எதிர்கட்சி வேட்பாளர் ஜோ பைடன் இருவருமே வெற்றி நம்பிக்கையை தெரிவித்துள்ளனர்.

வல்லரசான அமெரிக்க அதிபர் தேர்தல் எப்போதுமே உலக அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். 2020-ம் ஆண்டுக்கான அதிபர் தேர்தலும் இதற்கு விதிவிலக்கு இல்லாமல் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. தற்போதைய அதிபரான குடியரசு கட்சியின் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பைடன் ஆகியோர் தேர்தலில் முக்கிய வேட்பாளராக களத்தில் உள்ளனர்.

கொரோனா பாதிப்புக்கு மத்தியில் விறுவிறுப்பாக தேர்தல் பிரச்சாரம் நடைபெற்ற நிலையில், நேற்று (நவ.3- ஆம் திகதி ) வாக்குப்பதிவு நடைபெற்றது. வரலாறு காணாத வகையில் பெருந்திரளான அமெரிக்கர்கள் வாக்களித்தனர். முன்னதாக, லட்சக்கணக்கில் தபால் வாக்குகளும் பதிவாயின.

வாக்குப்பதிவு முடிந்து வாக்கு எண்ணிக்கை துவங்கிய நிலையில், நள்ளிரவு வாக்கிலேயே தேர்தல் முடிவுகளின் போக்கு தெரியவரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக தொடரும் நிலையிலும், அடுத்த அதிபர் யார் எனும் கேள்விக்கு தெளிவான பதில் தெரியாமல் இழுபறி நிலவுகிறது.

எதிர்பார்த்ததை விட, ட்ரம்ப் – பைடன் இடையே கடும் போட்டி நிலவுவது இதற்கு முக்கிய காரணம். அமெரிக்க தேர்தல் வழக்கப்படி மாகாணங்கள் வாரியாக வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், இரு வேட்பாளர்களுமே ஏறக்குறைய சமமான வாக்குகள் பெற்றுள்ளனர்.
வேட்பாளர்களுக்கு ஆதரவான மாகாணங்கள் அவர்கள் வசமான நிலையில், வெற்றியை தீர்மானிக்கக் கூடிய முக்கிய மாகாணங்களில் இழுபறி நிலவுகிறது.

இன்று (நவ.4) மாலை வெளியான தகவல்படி, பைடன் 224 இடங்களையும், அதிபர் டிரம்ப் 213 இடங்களையும் பெற்றுள்ளனர். அதிபராக தேர்வு செய்யப்பட 270 இடங்கள் தேவை. இதனிடையே தபால் ஓட்டுகள் எண்ணிக்கைதான் வெற்றியை தீர்மானிக்கலாம் என கருதப்படுகிறது.

தபால் வாக்குகள் எண்ணிக்கை முடிய தாமதமாகலாம் என்பதால், அதிபர் தேர்தல் தொடர்பான முடிவு தெரியவும் தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, தபால் வாக்குகள் எண்ணிக்கை தொடர்பாக புகார்களோடு ட்ரம்ப் தரப்பு வரிந்து கட்டிக்கொண்டிருப்பதால், இது தொடர்பான சர்ச்சை வாக்கு எண்ணிக்கையை மேலும் தாமதமாக்கலாம் என்கின்றனர்.

வாக்கு எண்ணிக்கையில் முடிவு தெரிந்தாலும், முடிவு சாதகமாக அமையாவிட்டால் ட்ரம்ப் தேர்தலை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடலாம் என்று அவரே கூறியிருப்பதால், வழக்கு என வந்தால் இழுபறி மேலும் பல நாள்கள் நீடிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் அமெரிக்க தேர்தல் களத்தில் பரபரப்பு நீடிக்கிறது.

இதற்கு முன்னர், 2000-ம் ஆண்டு அதிபர் தேர்தலிலும் முடிவு தெரியாமல் இழுபறி நீடித்தது குறிப்பிடத்தக்கது. அப்போது முக்கிய மாகாணமான புளோரிடாவின் சொற்ப வாக்குகள், ஜார்ஜ் புஷ் வெற்றியை தீர்மானித்தன.

அமெரிக்க அதிபர் தேர்தல் மிகவும் சிக்கலான முறையை கொண்டது. அதிபர் வேட்பாளரை முக்கியமாக கொண்டு தேர்தல் நடைபெற்றாலும், மொத்த வாக்குகள் வெற்றியை தீர்மானிப்பதில்லை. மாறாக, மாகாணங்களில் பதிவாகும் வாக்குகள் அடிப்படையில் அந்த அந்த மாகாணங்களுக்கு உரிய இடங்களே அதிபரை தேர்வு செய்ய அடிப்படையாக அமைகின்றன.

இந்த நடைமுறை தேர்தல் வாக்களர் குழு (electoral college) என அழைக்கப்படுகிறது. இதன்படி மொத்தம் 538 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான தேர்வாளர்கள் அல்லது பிரதிநிதிகள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையிலேயே அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

அந்த அடிப்படையில் அதிபராக வெற்றி பெற 270 வாக்குகள் தேவை.
அதிபர் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் இருவருமே 200-க்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றுள்ள நிலையில், முக்கிய மாகாணங்களின் வாக்குகள் இறுதி வெற்றியை தீர்மானிக்கும்.

இந்நிலையில், சர்ச்சைகள், புகார்கள், பதிலடிகள் ஆகியவற்றுக்கு நடுவே அமெரிக்கர்கள் அடுத்த அதிபர் யார் என அறிய படபடப்புடன் காத்திருக்கின்றனர்.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

போர் நிறுத்தத்தை அப்பட்டமாகமீறும் ஈரான்!

0
போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறுவதாகக் ஈரான் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் Mohammad Ghalibaf, குற்றம் சாட்டியுள்ளார். ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்காவின் நடவடிக்கைகள் கப்பல் போக்குவரத்து மற்றும் எரிசக்தி பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்கா...

மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கு விசேட இராப்போசன விருந்துபசாரம்!

0
மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கு இலங்கை ஜனாதிபதியால் விசேட இராப்போசன விருந்துபசாரம் - முகமது முய்சுவின் விஜயத்துடன் இலங்கை - மாலைதீவு இடையிலான நெருங்கிய நட்புறவு மேலும் பலமடையும் - இலங்கை ஜனாதிபதி ஒவ்வொரு காலகட்டத்திலும்...