Home Blog Page 3792

கொரோனா – இலங்கையில் 24ஆவது மரணம் பதிவானது

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த கொழும்பு 13 ஐ சேர்ந்த 79 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.

 

‘சர்வக்கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்டவும்’ – ஜனாதிபதியிடம் சஜித் அணி கோரிக்கை

” சர்வக்கட்சி மாநாட்டை உடனடியாக கூட்டுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நடவடிக்கை எடுக்கவேண்டும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கொரோனா வைரஸ் தாக்கத்தால் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் எதிர்க்கட்சிக்குரிய பணிகளை ஐக்கிய மக்கள் சக்தி பொறுப்புடன் செய்துவருகின்றது. நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் தேச நலன் மற்றும் மக்களின் நலனை முன்னிறுத்தி நாம் செயற்பட்டுவருகின்றோம்.

எனினும், கொரோனா முதலாம் அலை ஏற்பட்டபோதும் அரசியல் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதே அரசாங்கத்தின் இலக்காக இருந்தது. அன்று மூன்றிலிரண்டு பெரும்பான்மை என்ற கருத்து விதைக்கப்பட்டது, 2ஆம் அலை ஏற்பட்டபோது 20ஆவது திருத்தச்சட்டத்தை தூக்கிபிடித்தனர். மாறாக வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்கு காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

அதேவேளை, கொரோனா 2 ஆம் அலை சவால்களை எதிர்கொள்ளவேண்டும், பரவலை தடுக்கவேண்டும். இவற்றுக்கான ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு நாம் தயார். இவை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சர்வக்கட்கி குழு கூட்டத்தை கூட்டுமாறு பிரதான எதிர்க்கட்சியின் பொதுச்செயலாளர் என்ற வகையில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.” – என்றார்.

நாட்டில் மேலும் 274 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 274 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பேலியகொடை தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்த 267 பேருக்கும், தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த  எழுவருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி இலங்கையில் கொரோனா 2ஆவது அலைமூலம் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 500 ஐ தாண்டியுள்ளது.

மஸ்கெலியாவில் மேலும் இருவருக்கு கொரோனா!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்டத்திலுள்ள வீடொன்றில் நடைபெற்ற சமய நிகழ்வில் பங்கேற்ற இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று (04.11.2020) உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மஸ்கெலியா, பிரவுன்லோ தோட்டத்தில் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களிடம் கடந்த 2 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. இந்நிலையில் இன்று பிசிஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகின.

இதில் மஸ்கெலியா ஓல்டன் தோட்டத்தில், கிங்கோரா பிரிவைச் சேர்ந்த 58 வயதுடைய பெண்ணொருவருக்கும், பிரவுன்லோ தோட்டத்தைச் சேர்ந்த 41 வயதுடைய ஆணொருவருக்கும் கொரோனா தொற்றியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மஸ்கெலியா, பிரவுன்லோ தோட்டத்தில் உள்ள பேலியகொடை மீன் சந்தையில் பணிபுரிந்த நபரொருவரின் வீட்டில் கடந்த 19 ஆம் திகதி நடைபெற்ற சமய நிகழ்வில் இவர்கள் பங்கேற்றுள்ளனர். அதன்மூலமே இவர்களுக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி மஸ்கெலியா பகுதியில் இதுவரை 7 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தொற்றுக்குள்ளான இருவரும் கடும் சுகாதார பாதுகாப்புடன் கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

க.கிசாந்தன்

கெலிஓயாவில் மகாவலி கங்கையில் மூழ்கி குடும்பஸ்தர் பலி!

பேராதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெலிஓயா, கல்கமுவ பகுதியில் நீரில்மூழ்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். மொகமட் சுனஹர் என்ற 23 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு பலியாகியுள்ளார்.

குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து நேற்று (03.11.2020) மாலை 4 மணியளவில் கல்கமுவ பகுதியை ஊடறுத்துச்செல்லும் மகாவலி கங்கையில் நீராடுவதற்குச்சென்றுள்ளார்.

இதன்போதே நீரில்மூழ்கி காணாமல்போயுள்ளார், இதனையடுத்து பொலிஸாரும், சுழியோடிகளும், பிரதேச வாசிகளும் இணைந்து தேடுதல் நடத்தினர். இன்று (4) இரண்டாவது நாளாகவும் தேடுதல் தொடர்ந்தது. எனினும், சடலம் மீட்கப்படவில்லை.

பஸில் பாராளுமன்றம் வருவதற்கு முற்போக்கு கூட்டணி ஆதரவு!

பஸில் ராஜபக்ச பாராளுமன்றம் வருவதை நான் ஆட்சேபிக்கவில்லை. சிறப்பாக சேவையாற்றக்கூடிய அவர் சபைக்கு வந்தால் அனைவருக்கும் சேவைகளை வழங்குவார் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் இன்று (4) நுவரெலியாவில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் பாராளுமன்றம் வருவதற்கான தடை 20 ஆவது திருத்தச்சட்டம் ஊடாக நீக்கப்பட்டுள்ளது. பஸிலுக்காகவே இந்த சரத்து உள்வாங்கப்பட்டது. பஸில் தேர்தலில் போட்டியிடவில்லை. தேசியப்பட்டியலிலும் இடம்பெறவில்லை. எனவே, அவர் பாராளுமன்றம் வருவதற்கு சட்டரீதியாக பிரச்சினை உள்ளது என அறியமுடிகின்றது. அதனை நிவர்த்தி செய்துகொண்டு அவர் வரலாம். அவ்வாறு வந்தால் அதற்கு நாம் ஆட்சேபனை வெளியிடப்போவதில்லை.

இஸ்லாம் மதத்தின் அடிப்படையில் முஸ்லிம் மக்கள் உயிரிழந்தால் அவர்களின் சடலம் அடக்கம் செய்யப்படவேண்டும். ஆனால் அந்த உரிமை இங்கு தடுக்கப்பட்டுள்ளது.  கொரோனாவை காரணம்காட்டி முன்னெடுக்கப்படும் இந்நடவடிக்கையை ஏற்றுக்கொள்ளமுடியாது.  இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றியிருந்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் அழுத்தம் தொடரும்.

மேற்படி முடிவை மீள்பரிசீலனை செய்ய குழு அமைக்கப்படும் என்று நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். எது எப்படியிருந்தாலும் மத உரிமை பாதுகாக்கப்படவேண்டும்.

மலையகத்தில் பல்கலைக்கழக வளாகமொன்று அமைக்கப்படவேண்டும் என்பதில் நாம் தீவிரமாக இருந்தோம். இதற்காக தலவாக்கலை, ஹொலிரூட் தோட்டத்தில் 10 ஏக்கர் காணி வழங்கப்பட்டது. இது தொடர்பில் சந்தேகம் இருந்தால் ரொசான் ராஜதுரையிடம் கேட்டு உறுதிப்படுத்திக்கொள்ளலாம். ஜப்பான் அரசின் உதவியும் பெறப்படவிருந்தது. எனினும், 52 நாட்கள் அரசியல் குழப்பத்தால் திட்டம் இடைநிறுத்தப்பட்டது. இன்று பல்கலைக்கழகத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு முழு ஒத்துழைப்பையும் நாம் வழங்குவோம்.

20 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமாரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. 14 நாட்கள் அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. அக்காலக்கெடு முடிவடைவதற்கு நாட்கள் உள்ளன. எனவே, அவர் வழங்கும் பதிலின் அடிப்படையிலேயே அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அதுவரை அவர் கட்சி செயற்பாடுகளில் பங்கேற்கமுடியாது.

கொட்டகலையில் இராணுவ முகாம் அமைக்கப்படுகின்றது என தேர்தல் காலத்தில் அறிவித்திருந்தோம். அன்று மறுப்பு தெரிவிக்கப்படுகின்றது. இன்று இராணுவ முகாமாக காட்சியளிக்கின்றது. எனவே, தற்போது அரசியல் இருப்பவர்கள் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.” – என்றார்.

க.கிசாந்தன்

11,744 பேருக்கு கொரோனா – 5,858 பேர் குணமடைவு! 23 பேர் பலி!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 277 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 858 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 5 ஆயிரத்து 823 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதல் இற்றைவரை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 774 ஆக அதிகரித்துள்ளது.

‘தேர்தல் மோசடி முயற்சிக்கு எதிராக நீதிமன்றம் செல்வோம்’ – ட்ரம்ப்

” தேர்தல் மோசடி முயற்சிக்கு எதிராக உச்ச நீதிமன்றம் செல்வோம்.” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் இன்று உரையாற்றிய அவர் கூறியதாவது,

“அனைவருக்கும் நன்றி. கடுமையான சூழ்நிலையில் எங்களுடன் துணை நின்ற அனைவருக்கும் நன்றி. வெளியே சென்று இந்த வெற்றியை கொண்டாட நாங்கள் தயாராகி வருகிறோம். இந்த அளவுக்கு இதுபோன்ற எண்ணிக்கையில் வாக்காளர்கள் வந்து வாக்குரிமை செலுத்தியதில்லை.

ஜோர்ஜாவில் நாங்கள் வென்றிருக்கிறோம். இது மிக முக்கியமானது. பென்சில்வேனியாவில் நாங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறோம். இதுவும் முக்கியமானது. டெக்சாஸில் முடிவுகள் இறுதியாகாவிட்டாலும் அங்கும் நாங்கள் வெற்றி பெறுவோம். மிஷிகனில் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். இந்த அளவுக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்ததற்காக அமெரிக்க மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

புளோரிடா, டெக்சாஸ், வடக்கு கரோலைனா என பல இடங்களில் நாங்கள் வெற்றி பெற்றோம். ஆனால், இந்த முடிவுகளை எல்லாம் அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் நீதிமன்றத்துக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்கள். அவர்கள் மோசடியை செய்கிறார்கள். இதைத்தான் ஆரம்பத்திலேயே நாங்கள் கூறி வந்தோம். வெற்றி முடிவுகள் சாதகமாக வந்து கொண்டிருந்த வேளையில் திடீரென அனைத்தையும் நிறுத்த முற்படுகிறார்கள்.

எனவே, நாங்கள் உச்ச நீதிமன்றத்துக்கு செல்லப்போகிறோம். என்னைப் பொருத்தவரை, நாங்கள் ஏற்கெனவே வென்று விட்டோம். எங்களுக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று டிரம்ப் பேசினார்.

வெற்றி நிச்சயம் – ஜோ பைடன் நம்பிக்கை! சதி நடக்கிறது – ட்ரம்ப் குற்றச்சாட்டு!!

அமெரிக்க  ஜனாதிபதி தேர்தலில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் ஜோ பைடன் தேர்தல் முடிவுகள் பற்றி பேசுகையில் தனது கட்சி வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், வெற்றி நிலவரம் குறித்த தகவல்கள் படிப்படியாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. வாக்குப்பதிவில் பல்வேறு நேரங்கள் பின்பற்றப்படுவதால் முடிவுகள் அறிவிக்கும் நேரமும் மாறுபடுகிறது.

இருவரும் கிட்டத்தட்ட சம அளவிலான மாநிலங்களில் வென்றுள்ளனர். இதனால் நொடிக்கு நொடி பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடும் போட்டி உள்ள மாநிலங்களின் முடிவைப் பொருத்து வெற்றி நிலவரம் அமையும்.

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து ஜோ பைடன் டெலாவரில் உரையாற்றினார். அப்போது, ஜனாதிபதி தேர்தலில் நாம் தான் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றும், முழு முடிவுகள் வரும் வரை கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஆனால் தேர்தல் முடிவுகளில் ஜோ பைடன் கட்சியினர் சதி செய்ய முயற்சிப்பதாக டிரம்ப் குற்றம்சாட்டி உள்ளார்.

‘நாம் மிகப்பெரிய வெற்றியை பெறப்போகிறம். வாக்குப்பதிவு முடிந்துவிட்டதால், இனி எதிர்க்கட்சிகள் இனி ஓட்டுபோட்டு வெற்றி பெற முடியாது. இன்று இரவு அறிக்கை வெளியிட உள்ளேன்’ என்றும் டிரம்ப் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருந்தார்.

ஆனால் டிரம்பின் இந்த கருத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது எனக் கூறி டுவிட்டரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

நானுஓயா ரயில் நிலைய அதிகாரி ஒருவருக்கும் கொரோனா!

நானுஓயா ரயில் நிலையத்தின் கட்டுப்பாட்டு பிரிவின் பொறியியல் பிரிவு அலுவலகம் இன்று முதல் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவில் உள்ள பொறியியல் பிரிவில் பணியாற்றிய அதிகாரி ஒருவரின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனையடுத்தே குறித்த அதிகாரி பணியாற்றிய இடத்தில் இருந்த ஏனைய அதிகாரிகள், ஊழியர்கள்  உட்பட அவர்களுடன் தொடர்பில் இருந்த சுமார் 43 பேர் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரிடமும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

க.கிசாந்தன்

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

போர் நிறுத்தத்தை அப்பட்டமாகமீறும் ஈரான்!

0
போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறுவதாகக் ஈரான் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் Mohammad Ghalibaf, குற்றம் சாட்டியுள்ளார். ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்காவின் நடவடிக்கைகள் கப்பல் போக்குவரத்து மற்றும் எரிசக்தி பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்கா...

மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கு விசேட இராப்போசன விருந்துபசாரம்!

0
மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கு இலங்கை ஜனாதிபதியால் விசேட இராப்போசன விருந்துபசாரம் - முகமது முய்சுவின் விஜயத்துடன் இலங்கை - மாலைதீவு இடையிலான நெருங்கிய நட்புறவு மேலும் பலமடையும் - இலங்கை ஜனாதிபதி ஒவ்வொரு காலகட்டத்திலும்...