Home Blog Page 3793

‘சிறுபான்மையின மக்களுக்கு எதிரான அடக்குமுறை தொடர்கிறது’

” அரசியல் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக மட்டும் முஸ்லிம் அரசியல்வாதிகளை ளைத்துப்போடும் கோட்டாபய அரசாங்கம் , இன்னும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை கைவிடவில்லை.” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் இன்று (04) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளவை வருமாறு,

” சிறுபான்மையின மக்களை அடக்கி ஒடுக்கி, அவர்கள் தொடர்பில் பெரும்பான்மையின மக்கள் மத்தியில் இனவாதத்தை விதைத்து தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம், தொடர்ந்தும் சிறுபான்மையின மக்களுக்கு எதிரான போக்கை கடைப்பிடித்துவருகின்றது.

கொரோனா வைரஸ் தாக்கம் என்ற நெருக்கடியான சூழ்நிலையிலும்கூட இனவாதத்தையும், குறுகிய அரசியல் நோக்கங்களையும் ஆட்சியாளர்கள் கைவிடுவதாக இல்லை.உலகில் ஏனைய நாடுகளில் அனைவரும் ஓர் சமூகமாக இணைந்து இந்த சவாலை எதிர்கொள்கின்றனர். ஆனால் இங்கு சமூகங்கள் பிரிக்கப்படுகின்றன, பழிவாங்கப்படுகின்றன.

முதலாம் அலையின்போது முஸ்லிம் மக்களே வைரஸை பரப்புகின்றனர் என்ற விம்பம் உருவாக்கப்பட்டது, அதுமட்டுமல்ல கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்குகூட அனுமதி மறுக்கப்பட்டது. பலவந்தமாக சடலங்கள் எரிக்கப்பட்டன. திடீரென உயிரிழந்தவர்களின் சடலங்கள்கூட கொரோனா சந்தேகத்தில் எரிக்கப்பட்டன. இது முஸ்லிம் மக்களின் மத விவகாரங்களுக்கு முரணானச் செயலாகும்.

கொரோனா தொற்றாளர் ஒருவர் உயிரிழந்தால் அவரின் சடலத்தை அடக்கம் செய்யலாம் இல்லாவிட்டால் எரிக்கலாம் என இரண்டு நடைமுறைகளையும் உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது. விஞ்ஞானப்பூர்வமான ஆய்வுகளின் பின்னரே இந்த யோசனை முன்வைக்கப்பட்டது. ஆனால் உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையைக்கூட கருத்திற்கொள்ளாமல் முஸ்லிம் மக்களை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்தும் சடலங்களை இந்த அரசாங்கம் எரித்துவருகின்றது.

தேர்தல் காலத்தில் ராஜபக்சக்களாலும் அவர்களின் சகாக்களாலும் கொடூரமானவர்கள் என சித்தரிக்கப்பட்ட முஸ்லிம் அரசியல்வாதிகளிடம், 20 ஐ நிறைவேற்றுவதற்கு உதவிபெற்றுள்ளனர். அதாவது அரசியலுக்காக தாங்கள் எதையும் செய்வோம் என்ற செய்தி இதன்மூலம் வழங்கப்பட்டுள்ளது.

மறுபுறத்தில் சமூகத்தை வதைக்கும் இந்த அரசாங்கத்துக்கு முஸ்லிமபாராளுமன்ற உறுப்பினர்கள் நேசக்கரம் நீட்டியமை வேதனையளிக்கின்றது. குறைந்தபட்சம் கொரோனாவால் ஒருவர் மரணித்தால்கூட அவரின் சடலத்தை அடக்கம் செய்வதற்கான அனுமதியை பெற்றுக்கொடுத்திருக்கலாம். அதனை செய்யாமல் ஆதரவு வழங்கிவிட்டு தொடர்ந்தும் கையேந்தும் நிலைமை காணப்படுகின்றது.

அதேவேளை, முஸ்லிம் மக்களின் மத நம்பிக்கை, பண்பாடுகளுக்கு மதிப்பளித்து, உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகைளையும் கருத்திற்கொண்டு சடலங்களை அடக்கம் செய்வதற்கான அனுமதியும் வழங்கப்படவேண்டும்.” – என்றார்.

டயலொக் – தெரண பங்களிப்புடன் நிவாரணப்பணிகள் முன்னெடுப்பு!

டயலொக் ஆசி ஆட்டா மற்றும் ‘மனுசத்தெரண’ பங்குடமையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

தக்க சமயங்களில் தேசத்திற்கு சேவை செய்வதில் டயலொக் நிறுவனம் தொடர்ச்சியாக முன்னெடுத்துவருகின்ற முயற்சிகளின் மற்றுமொரு அங்கமாக இலங்கையின் முன்னணி தொலை தொடர்பு சேவை வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா, தெரணதொலைக்காட்சி அலைவரிசையுடன் இணைந்து ‘டயலொக் உடன் மனுசத்தெரண” முயற்சியின் 2 வதுகட்டத்தை ஆரம்பித்து, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க முன்வந்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதற்கான அபாயத்தைக் குறைக்க அரசாங்க சுகாதார அதிகாரிகளின் ஆணைப்படி சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களின் பிரகாரம் உலர் உணவுப் பொருட்களின் கொள்வனவு, பொதியிடல் மற்றும் விநியோக நடவடிக்கைகளின் முழுசெயல் முறைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த உதவி வழங்கல் முயற்சியானது, நாட்டில் கொரோனா வைரஸ் முதன் முதலாக பரவிய காலகட்டத்தில் இலங்கை மக்களின் நலனுக்கு இடமளிக்கும் நோக்குடன் டயலொக் ஏற்பாடு செய்த இதேபோன்ற முயற்சிகளின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது.

டயலொக் உடன் மனுசத்தெரண’ ‘டயலொக் உடன் சிரசலெகதுகம”டயலொக் உடன் இதன் மனுசத்வயேசத் காரய’ மற்றும் ‘வசந்தம் டிவி/எஃப். எம்மனித நேயப்பணி உடன்டயலொக்’ போன்ற உதவி முயற்சிகளின்கீழ் நாட்டில் 22 மாவட்டங்கள் மத்தியில் 400 இற்கும் மேற்பட்டகிராமங்களில்128,000இற்கும் மேற்பட்ட மக்களுக்கு சுமார் 6 வாரங்களுக்கான தினசரி உலர் உணவுப் பொதிகள் விநியோகம் செய்யப்பட்டிருந்தன.

தான் செயல்படும் சமூகங்கள்மீது அக்கறைகொண்ட ஒரு வர்த்தக நிறுவனம் என்ற வகையில், சமூகங்களுக்கு மிகவும் உதவி தேவைப்படும் இக்கட்டான கால கட்டங்களில் ஒரே தேசமாக ஒன்றுபட்டு கொவிட்-19 தொற்று நோய் நிலைமையைச் சமாளிக்கும் கூட்டு முயற்சியை வலுப்படுத்துவதற்கும் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் டயலொக் ஆசி ஆட்டாமேற் கொண்டுவருகிறது.

இரத்தினபுரி மாவட்டத்தில் 58 பேருக்கு கொரோனா! 3,620 பேர் சுய தனிமையில்!!

இரத்தினபுரி மாவட்டத்தில் நேற்று வரை (3) 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மாலணி லொக்குபோத்தாகம தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்த்தில் கொரோனா தொற்று குறித்து நேற்றைய தினம்(3) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவu; தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

இரத்தினபுரி மாவட்டத்தில் இது வரை 1425 குடும்பங்களை சேர்ந்த 3620 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மாலணி லொக்குபோத்தாகம மேலும் தெரிவித்தார்.

4ஆவது நாடாளுமன்ற ஊடகவியலாளருக்கும் கொரோனா!

பாராளுமன்ற ஊடக அறிக்கையிடல் கடமையில் ஈடுபடும் மேலும் ஒரு ஊடகவியலாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஒக்டோபர் 29 ஆம் திகதி, ஆங்கில வார இதழொன்றில் கடமையாற்றும் ஊடகவியலாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அதன்பின்னர் சிங்கள தேசிய நாளிதழொன்றின் ஊடகவியலாளர் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே நான்காவது ஊடகவியலாளர் ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
கடந்த ஒக்டோபர் 21, 22ஆம் திகதி, இடம்பெற்ற 20ஆவது திருத்தம் தொடர்பான விவாதத்தில் ஊடக அறிக்கையிடல் கடமையில் ஈடுபட்டிருந்தவர்களை சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு, சுகாதாரப் பிரிவு ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொகவந்தலாவ, கொட்டியாகலையில் மேலும் மூவருக்கு கொரோனா!

பொகவந்தலாவ, கொட்டியாகலை பகுதியில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் 2ஆம் திகதி இரண்டாவது தடவையும் நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனைமூலமே இவர்களுக்கு வைரஸ் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டது. முதல்சுற்று பரிசோதனையில் வைரஸ் தொற்றவில்லை என்ற முடிவு வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேலியகொடை மீன் சந்தை கொத்தணியுடன் தொடர்புபட்ட நபரொருவர் அண்மையில் கொட்டியாகலை பகுதியிலுள்ள வீட்டுக்கு வந்துள்ளார். அவருக்கு வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து சிகிச்சை நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டிருந்த உறவினர்கள் மூவருக்கே வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இவர்களை சிகிச்சை நிலையங்களுக்கு சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கொண்டுசெல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது.

க.கிசாந்தன்

கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட செயலாளர்களுக்கு தீர்மானம் மேற்கொள்ளும் அதிகாரம்

கொவிட் – 19  தொற்று நாடு முழுவதும் பரவுவதை கட்டுப்படுத்தி, தத்தமது மாவட்டங்களை பாதுகாக்கும் பொருட்டு மேற்கொள்ளக்கூடிய உச்ச நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் பொருளாதார நிலை மற்றும் மக்களின் வாழ்க்கையை தொடர்ந்து சிறந்த நிலையில் பேணுவதற்கும் தேவையான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்ளுக்கு அதிகாரம் வழங்கப்படும்.

கொவிட்-19 தொற்று நிலைமையை கட்டுப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை முடிந்தளவு உயர் மட்டத்தில் பேணுவதற்கும், மக்களின் வாழ்க்கையை நிலையான மட்டத்தில் பேணுவதற்கும் அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாகவும் அலரி மாளிகையில் கடந்த இரு நாட்கள் இடம்பெற்ற கலந்துரையாடல்களில் கலந்து கொண்டு பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ச வலியுறுத்தினார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பஸில் ராஜபக்ச,

உலகின் பிரதானமான நாடுகள் கொவிட்-19 தொற்று காரணமாக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள சந்தர்ப்பத்திலும்கூட முழு நாட்டிற்கும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படாது, மக்களின் தேவைகளை பூர்த்திசெய்து, பொருளாதார இலக்குகளை நிறைவேற்றிக்கொண்டு தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தேவையான தீர்மானங்களை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

அந்தந்த மாவட்டங்களின் தற்போதைய நிலைக்கு மத்தியில் ஏற்படும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதுடன் விசேடமாக விவசாயிகள் மற்றும் நுகர்வோர் பாதுகாக்கப்படும் வகையில் விவசாயத்துறையை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பது தொடர்பிலும் இதன்போது கவனத்திற் கொள்ளப்பட்டது.

விவசாயத்துறைக்கு மேலதிகமாக மாவட்ட மட்டத்தில் சுகாதாரம், போக்குவரத்து, கடற்றொழில், தொழிற்சாலை நடவடிக்கைகளை மேற்கொள்ளல், நீர் மற்றும் மின்சார விநியோகம், கழிவு முகாமைத்துவம், எரிபொருள் வழங்கல் ஆகிய அத்தியவசிய செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

கொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியில் அரசாங்கம் முன்வைத்த அபிவிருத்தி திட்டங்கள் தடையின்றி செயற்படுத்தப்பட வேண்டும் என திரு.பசில் ராஜபக்ஷ அவர்கள் குறித்த கலந்துரையாடலின் போது சுட்டிக்காட்டியதுடன், விவசாயம் மற்றும் பெருந்தோட்ட துறைகளின் உற்பத்தி செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்வதற்கு விவசாயிகளுக்கு சிறந்த தரத்திலான உரத்தை பெற்றுக் கொடுக்கும் செயற்பாட்டை தாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் வலியுறுத்தப்பட்டது.

மேல் மாகாணத்தின் அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் நாளை முதல் சுகாதார பாதுகாப்புடன் திறக்கப்படும் எனவும் வெலிசர பொருளாதார மத்திய நிலையம் கிருமி நீக்கம் செய்யப்பட்டு அங்கு சேவையாற்றுவோருக்கு பி.சீ.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, எதிர்வரும் திங்கட்கிழமை அளவில்  மொத்த விற்பனைக்காக திறக்கப்படுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாகவும் குறித்த கலந்துரையாடலின் போது தெரிவிக்கப்பட்டது.

தொழிற்பேட்டைகளில் உள்ள அத்தியவசிய தொழிற்சாலைகளின் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நடவடிக்கையை கைத்தொழில் அமைச்சின் செயலாளரின் அனுமதியுடன் மேற்கொள்ள முடியும் என்றும், அந்த அனுமதி மற்றும் முதலீட்டு சபையின் அனுமதிபெற்ற கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு சபையின் அனுமதிபெற்ற தொழிற்துறைகளுக்கு முதலீட்டு சபை மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு சபையின் திறப்பதற்காக வழங்கப்பட்ட அனுமதிக்கான கடிதத்தை ஊரடங்கு உத்தரவு அனுமதியாக கருதி செயற்படுமாறு திரு.பசில் ராஜபக்ஷ அவர்கள் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தினார்.

சில பிரதேசங்களில் நடமாடும் மீன் விற்பனை நிலையங்களை மூடுவது தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் ஊடாக  தரம் உறுதிசெய்யப்பட்ட மீன்களை மக்களுக்கு விநியோகித்தல் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன் சமுர்த்தி பயனாளர்களுக்கு இம்முறை சமுர்த்தி கொடுப்பனவில் ரூபாய் 500 மதிப்புள்ள ஏற்றுமதி தரத்திலான பொதி செய்யப்பட்ட மீன்களை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலையீட்டுடன் பெற்றுக்கொடுப்பதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது. அதற்கான நிதி அமைச்சின் அனுமதியும் குறித்த கலந்துரையாடலின்போது பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

‘கொரோனா’ – இலங்கையில் 24ஆவது மரணம் பதிவானது!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 78 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.

இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் இன்னும் உத்தியோகப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

ஊடரங்கு உத்தரவைமீறிய 2,200 பேரும்,முகக்கவசம் அணியாத 75 பேரும் கைது!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்ட ஒக்டோபர் 4 ஆம் திகதியில் இருந்து இன்று காலை 6 மணிவரை, ஊரடங்கு சட்டத்தைமீறிய 2 ஆயிரத்து 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

அத்துடன் 220 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளனர்.

அதேவேளை, முகக்கவசம் அணியாமல் பொதுவெளியில் நடமாடிய 75 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

3 STF முகாம்கள் முடக்கம்! 183 பொலிஸாருக்கு கொரோனா!!

விசேட அதிரடிப்படையினர் உட்பட  பொலிஸ் உத்தியோகத்தர்கள் 183 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

2ஆவது கொரோனா அலைமூலம் இதுவரை 183 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், களனி, இராஜகிரிய மற்றும் களுபோவில ஆகிய விசேட அதிரடி படை முகாம்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மூன்று பிரிவுகள் ஸ்தம்பித்தால் நிலைமை மிக மோசமடையும்

” பிரிந்து நின்று அரசியல் சூதாட்டத்தில் ஈடுபடும் தருணம் அல்ல இது. எனவே, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய பொறிமுறையை அரசாங்கம் உருவாக்கவேண்டும். அதற்கான முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும்.” – என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாம் நல்லவை குறித்து சிந்திக்கும் அதேவேளை எதிர்மறைவான விளைவுகள் ஏற்பட்டால் அவற்றை எதிர்கொள்வதற்கும் தயாராகவேண்டும். இராணுவத்தினர், பொதுசுகாதார அதிகாரிகள் மற்றும் சுகாதார தரப்பினர் ஆகியோர் தற்போது கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சிலவேளை மேற்படி கட்டமைப்பு ஏதேனுமொரு கட்டத்தில் ஸ்தம்பிதமடையும்பட்சத்தில் நிலைமை மோசமடையக்கூடும்.

நாம் ஒருவருக்கொருவர் குறைகூறலாம். குற்றச்சாட்டுகளை முன்வைக்கலாம். ஆனால் அவற்றின் ஊடாக வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தமுடியாது. எனவே, தற்போதைய சூழ்நிலையை தேசிய பேரிடராக கருதி அரச பொறிமுறை செயற்படவேண்டும். அதற்கான தேசிய பொறிமுறை உருவாக்கப்படும்பட்சத்தில் அதற்கு முழு ஆதரவும் வழங்கப்படும்.

எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டால் அது எமது நாட்டிலுள்ள முதியவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும். மறுபுறத்தில் ஆயுதங்கள்மூலம் இதனை வெற்றிகொள்ளமுடியாது. பிரிந்துநின்று – அரசியல் சூதாட்டத்தில் ஈடுபடும் தருணமும் அல்ல இது. ஒரு சமூகமாக செயற்படவேண்டும். அதற்கு நாம் தயார்.” – என்றார் அநுரகுமார திஸாநாயக்க.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

போர் நிறுத்தத்தை அப்பட்டமாகமீறும் ஈரான்!

0
போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறுவதாகக் ஈரான் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் Mohammad Ghalibaf, குற்றம் சாட்டியுள்ளார். ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்காவின் நடவடிக்கைகள் கப்பல் போக்குவரத்து மற்றும் எரிசக்தி பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்கா...

மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கு விசேட இராப்போசன விருந்துபசாரம்!

0
மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கு இலங்கை ஜனாதிபதியால் விசேட இராப்போசன விருந்துபசாரம் - முகமது முய்சுவின் விஜயத்துடன் இலங்கை - மாலைதீவு இடையிலான நெருங்கிய நட்புறவு மேலும் பலமடையும் - இலங்கை ஜனாதிபதி ஒவ்வொரு காலகட்டத்திலும்...