Home Blog Page 3794

நாட்டில் மேலும் 137 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 137 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பேலியகொடை தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்த 132 பேருக்கும், தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த ஐவருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி இலங்கையில் கொரோனா 2ஆவது அலைமூலம் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 266 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா உக்கிர தாண்டவம்! 12 நாட்களில் 10 பேர் பலி!!

இலங்கையில் 23 ஆவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கொழும்பு 15 பிரதேசத்தை சேர்ந்த 61 வயதுடைய பெண் ஒருவர் நேற்று (02) அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில் பிரேத பரிசோதனையின் போது அவருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பெண் காய்ச்சல், இருமல், தொண்டை வலி ஆகிய நோய்களினால் பீடிக்கப்பட்டிருந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

சுவாசப்பை கோளாறு காரணமாவே உயிரிழந்துள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது. இந்த மரணம் இலங்கையில் பதிவான 23 ஆவது கொரோனா மரணமாக பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா 2ஆவது அலைமூலம் கடந்த 12 நாட்களில் 10 உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அத்துடன், 2ஆவது அலைமூலம் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

மேலும் ஒரு பாராளுமன்ற ஊடகவியலாளரும் கொரோனா தொற்று!

பாராளுமன்ற ஊடக அறிக்கையிடல் கடமையில் ஈடுபடும் மேலும் ஒரு ஊடகவியலாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் இதனை அறிவித்துள்ளது.
ஏற்கனவே ஒக்டோபர் 29 ஆம் திகதி, ஆங்கில வார இதழொன்றில் கடமையாற்றும் ஊடகவியலாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அதன்பின்னர் சிங்கள தேசிய நாளிதழொன்றின் ஊடகவியலாளர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே மூன்றாவது ஊடகவியலாளர் ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
கடந்த ஒக்டோபர் 21, 22ஆம் திகதி, இடம்பெற்ற 20ஆவது திருத்தம் தொடர்பான விவாதத்தில் ஊடக அறிக்கையிடல் கடமையில் ஈடுபட்டிருந்தவர்களை சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு, சுகாதாரப் பிரிவு ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பஸிலுக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சு பதவி – டிலான் கருத்து

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவுனர் பஸில் ராஜபக்ச, நாடாளுமன்றம்சென்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சு பதவியை ஏற்கவேண்டும் என்பதே பெரும்பாலானவர்களின் எதிர்ப்பார்ப்பாகும் – என்று நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அலுவலகத்தில் இன்று (3) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவிவகித்த காலப்பகுதியில் பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்வதற்கு பஸில் ராஜபக்ச தீவிரமாக செயற்பட்டார். அதில் வெற்றியும் கண்டார். எனவே, அவ்வாறானதொரு தலைவர் நாடாளுமன்றம் வரவேண்டும், பொருளாதாரதுறை சார் பதவியொன்றை ஏற்கவேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர். எனது கருத்தும் அதுவே.

தற்போதுகூட ஜனாதிபதி செயலணியில் இருந்துகொண்டு கொரோனா நெருக்கடியை எதிர்கொள்வதற்கு தேவையான திட்டங்களை முன்னெடுத்துவருகின்றார்.” – என்றும் டிலான் பெரேரா குறிப்பிட்டார்.

‘கொரோனா’வை ஒழிக்க கடலில்கூட மூழ்குவேன்’ – சுகாதார அமைச்சர் சூளுரை!

“கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் சாகதமான முறையில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.1ஆவது அலையை வெற்றிகரமாக எதிர்கொண்டதுபோல 2ஆவது அலையையும் கட்டுப்படுத்துவோம்.” – என்று சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (3) உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலின் முதலாவது அலையை சிறப்பாக கட்டுப்படுத்தி மக்களை பாதுகாத்தோம். 2 ஆவது அலையை கட்டுப்படுத்துவதற்கான பணிகளும் சாதகமாக இடம்பெற்றுவருகின்றன. இலங்கையில் பலமானதொரு சுகாதார கட்டமைப்பு இருப்பதாலேயே சவால்களை எதிர்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. அதனை மேலும் பலப்படுத்தவேண்டும். அதற்கான ஒழுங்குவிதிகளே இன்று முன்வைக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்கான அனைத்து வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.  நான் காலை 8.30 மணிக்கு அமைச்சுக்கு சென்றால், இரவுவரை அங்கிருந்து நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றேன். விஞ்ஞானபூர்வமாகவே முடிவுகள் எடுக்கப்படுகின்றன. மருத்துவ துறையில் உள்ள துறைசார் நிபுணர்களின் பரிந்துரைகளின்படி முடிவுகளை எடுக்குமாறு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் பணிப்புரை விடுத்துள்ளனர். எனவே, அரசியல் ரீதியாக எந்தவொரு முடிவும் எடுக்கப்படுவதில்லை.

அதேவேளை, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்து செயற்பட்டாலும் ஆன்மீகம்மீதும் நம்பிக்கை உள்ளது. வைரஸ் பரவலில் இருந்து நாட்டையும், மக்களையும் பாதுகாக்க சர்வ மத தலைவர்களும் ஆன்மீக நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.  நேரம் இருக்கும்போது அதற்கும் ஒத்துழைப்பு வழங்கிவருகின்றேன்.

இந்நிலையில் புனிதநீர் அடங்கிய மண் குடத்தை நான் ஆற்றில் போட்டது தொடர்பில் சமூகவலைத்தளங்களில் விமர்சிக்கப்படுகின்றது. பவித்ரா கடலில் மூழ்கிவிட்டார் என்றெல்லாம் கூறப்படுகின்றது. பரவாயில்ல, நான் கடலில் மூழ்கினால் கொரோனா ஒழியுமெனில் அதனையும் செய்வதற்கு தயார். (சிரிக்கிறார்) ” – என்றார்.

நாட்டில் மேலும் 272 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 272 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பேலியகொடை தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்த 269 பேருக்கும், தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த மூவருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி இலங்கையில் கொரோனா 2ஆவது அலைமூலம் பதிவான மொத்த கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 8ஆயிரத்து 129 ஆக அதிகரித்துள்ளது.

சட்டவிரோதமாக மாடறுப்பு – பண்டாரவளையில் மூவர் கைது!

பண்டாரவளையை அண்மித்த பகுதியில், சட்டவிரோதமாக மாடுகள் அறுக்கப்பட்டு, இறைச்சி விற்பனை செய்யுமிடமொன்றினை பண்டாரவளைப் பொலிஸார் இன்று (03-11-2020) சுற்றிவளைத்தனர்.

இதன்போது விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த 41 கிலோ எடையுள்ள மாட்டிறைச்சியைக் கைப்பற்றியதுடன், மூன்றுபேரையும் கைதுசெய்துள்ளனர்.

பண்டாரவளையை அண்மித்த கித்தலெல்ல என்ற இடத்திலேயே, மேற்படி சுற்றிவளைப்பு இடம்பெற்றது. பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்தே,  இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து,மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ,நீண்டகாலமாகவிருந்தே, இவ்விடத்தில் சட்டவிரோதமாக மாடுகள் வெட்டப்பட்டு, இறைச்சி விற்பனைசெய்யும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டமை தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்கள் விசாரணையின் பின்னர்,பண்டாரவளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவரென்று,பண்டாரவளைகுற்றத்தடுப்புபொலிஸ் பிரிவுபொறுப்பாளர் அபேகுணவர்தன தெரிவித்தார்.

எம். செல்வராஜா பதுளை

கிரிக்கெட் வாழ்வுக்கு ‘குட்பாய்’ கூறினார் ஷேன் வொட்சன்

அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஷேன் வொட்சன் அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவராக வலம் வந்தவர் ஷேன் வொட்சன். 39 வயதான இவர், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் உள்ளிட்ட டி 20 தொடர்களில் பங்கேற்று விளையாடிவந்தார்.

இந்த நிலையில், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஷேன் வாட்சன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தனது டுவிட்டரில் இந்த தகவலை ஷேன் வாட்சன் பகிர்ந்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்காக 59 டெஸ்டுகள், 199 ஒருநாள், 56 டி20 போட்டிகளில் விளையாடிய ஷேன் வாட்சன் கடந்த 2016 மார்ச் மாதம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

நாவலப்பிட்டிய உச்சிமலை தோட்டத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

நாவலப்பிட்டிய உச்சிமலை தோட்டத்தில் ‘பார்க்கேபல்’ கீழ்பிரிவில் இளைஞர் ஒருவர் இன்று (03) மதியம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நோர்வூட் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய குறித்த இளைஞன், தனது சித்தி வீட்டுக்கு வருகைதந்திருந்தவேளையிலேயே , கடிதம் எழுதிவைத்துவிட்டு இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

காதல் விவகாரம் காரணமாகவே அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் எனவும், தனது மரணத்துக்கு யார் காரணம் என்பதை குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் எனவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன.

பதுளை நகரின் வாராந்த சந்தை மூடப்பட்டது!

பதுளை மாநகரின் வாரச் சந்தை மற்றும் அங்காடி வியாபாரிகளின் விற்பனைகள் ஆகியன மறு அறிவித்தல் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக பதுளை மாநகர மேயர் பிரியந்த அமரசிரி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது

,“பதுளை மாவட்டத்தில் கொரோனாதொற்றாளர்கள் பலர் கண்டுப்பிடிக்கப்பட்டதினால், அவர்களுடன் தொடர்புடைய பலர், பதுளை மாநகரத்தின் வாரச்சந்தை, அங்காடி வியாபாரிகளின் விற்பனை ஆகியவற்றிலும் ஈடுபடக்கூடும்.

அத்துடன் பதுளைமா வட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் கண்டுப்பிடிக்கப்பட்ட பகுதிகளில் வாரச் சந்தைகள் மூடப்பட்டிருப்பதால், அவ் வியாபாரிகள் பதுளை மாநகருக்கும் வருவர். இச் செயற்பாடுகள் எமது மாநகருக்கும் அச்சுறுத்தலாக அமையுமென்பதினால், மேற்படி தடையை ஏற்படுத்தியுள்ளேன்.

அத்துடன் வாரச்சந்தை, அங்காடி வியாபாரம் ஆகியவற்றினால் பாதிக்கப்படும் வியாபாரிகள் நன்மைகருதி, சுகாதார வழிமுறைகளுக்கமையமாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்”என்றும் தெரிவித்தார்.

எம். செல்வராஜா, பதுளை

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

போர் நிறுத்தத்தை அப்பட்டமாகமீறும் ஈரான்!

0
போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறுவதாகக் ஈரான் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் Mohammad Ghalibaf, குற்றம் சாட்டியுள்ளார். ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்காவின் நடவடிக்கைகள் கப்பல் போக்குவரத்து மற்றும் எரிசக்தி பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்கா...

மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கு விசேட இராப்போசன விருந்துபசாரம்!

0
மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கு இலங்கை ஜனாதிபதியால் விசேட இராப்போசன விருந்துபசாரம் - முகமது முய்சுவின் விஜயத்துடன் இலங்கை - மாலைதீவு இடையிலான நெருங்கிய நட்புறவு மேலும் பலமடையும் - இலங்கை ஜனாதிபதி ஒவ்வொரு காலகட்டத்திலும்...