Home Blog Page 3795

11,335 பேருக்கு கொரோனா – 5,581 பேர் குணமடைவு! 22 பேர் பலி!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 332 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 5,581 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 5 ஆயிரத்து 733 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதல் இற்றைவரை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 335 ஆக அதிகரித்துள்ளது.

கொஸ்லாந்தையில் பச்சிளம் குழந்தைக்கு கொரோனா தொற்று!

ஹப்புத்தளை – கொஸ்லாந்தை பகுதியில் பிறந்து 13 நாட்களேயான குழந்தை உட்பட அவரின் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

குழந்தையின் தாய், தந்தை, மற்றும் பாட்டி ஆகியோருக்கு இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.இவர்கள் கம்பஹாவில் இருந்து அண்மையில் கொஸ்லாந்தை பகுதிக்கு சென்றுள்ளனர்.

குழந்தையின் தாத்தாவிற்கு கொழும்பில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர் பேலியகொட மீன்சந்தையுடன் தொடர்புடையவர் என பொதுசுகாதார பரிசோதகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசின் நிதியுதவியில் பெருந்தோட்டங்களில் 9 பாடசாலைகள் அபிவிருத்தி!

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவின் கீழ் பெருந்தோட்டங்களில் அபிவிருத்தி செய்யப்படவுள்ள 9 பாடசாலைகளுக்கு 300 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வேலைத்திட்டத்தை உடனடியாக அமுல்படுத்துவது தொடர்பில் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலர் செந்தில் தொண்டமான் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையில் விசேட கலந்துரையாடலொன்று அமைச்சில் நடைபெற்றது.

இதன்போது வேலைத்திட்டத்தை உடனடியாக அமுல்படுத்துவது தொடர்பிலான விளக்கத்தை செந்தில் தொண்டமான் அதிகாரிகளுக்கு வழங்கியதுடன், அதற்கான ஆவணங்களும் தயாரிக்கப்பட்டன.

அத்துடன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே, கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் தலைமையில் வேலைத்திட்டங்களுக்கான அடிக்கல் எதிர்வரும் ஓர், இரு மாதங்களில் நாட்டப்படும் எனவும் செந்தில் தொண்டமான் அமைச்சின் அதிகாரிகளிடம் விளக்கமளித்தார்.

பெருந்தோட்டப் பகுதிகளில் இந்திய அரசாங்கம் முன்னெடுத்துவரும் சேவைகளுக்கு இதன்போது செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்றம் ஒத்திவைப்பு! மீண்டும் 12ஆம் திகதி கூடும்!!

பாராளுமன்றம் எதிர்வரும் 12 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் மீண்டும் கூடவுள்ளது.
 
பாராளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு கூடியது. இதன்போது மருத்துவக் கட்டளைச் சட்டத்தின் கீழான இரண்டு ஒழுங்குவிதிகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
 
ஒரு மணிவரை விவாதம் நடைபெற்றது. அதன்பின்னர் பாராளுமன்றம் எதிர்வரும் 12 ஆம் திகதிவரை பிற்போடப்பட்டது. 

கர்ப்பிணி பெண்களுக்கான விசேட அறிவித்தல்!

கர்ப்பணி பெண்களுக்கு கீழ்வரும் நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக உரிய சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வைத்தியசாலைக்கு செல்லவும். கர்ப்பணி பதிவேட்டை ஊரடங்கு அனுமதி பத்திரமாக பயன்படுத்த முடியும்.
1.காய்ச்சல்,
2.இருமல் – சுவாசிப்பதில் சிரமம்
3.யோசி இரத்தப்போக்கு அல்லது வெளியேற்றம்
4.கருவின் அசைவு குறைதல்
5.மயக்கம் அல்லது சுயநினைவு இழப்பு
6.வலிப்பு
7.கடுமையான வயிற்று வலி
8.உடல் வீக்கம்
9.கடுமையான தலைவலி

‘ நான் மரணித்தால் என்னையும் எரிப்பார்கள்’ – சபையில் ரிஷாட் ஆவேசம்

” என்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அப்பட்டமான பொய்களாகும். எனவே, இந்த நாட்டில் நீதி, நியாயம் இருந்தால் நிச்சயம் விடுதலை செய்யப்படுவேன்.” – என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

” நான் எந்தவொரு குற்றச்சாட்டையும் செய்யவில்லை. மக்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு கொடுத்ததால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். எனவே, இறைவன் நீதியை பெற்றுக்கொடுப்பார்.

அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றால் முஸ்லிம்கள் உயிரிழக்கும்பட்சத்தில் அவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி தாருங்கள்.நான் இறந்தால்கூட என்னையும் எரிப்பார்கள். எனவே, அரசாங்கம் முடிவை மீள்பரிசிலனை செய்யவேண்டும்.” – என்றும் ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டார்.

‘கொரோனா’வை கட்டுப்படுத்த தேசிய பொறிமுறை அவசியம்!

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக தேசிய பொறிமுறையொன்றை அரசாங்கம் வகுக்க வேண்டும். அதற்கான ஆதரவு வழங்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் தற்போது உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை கூறினார்.

” கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும். வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்கான கட்டமைப்பு ஸ்தம்பிதமடைந்நால் பாரிய நெருக்கடி நிலைமை உருவாகும். எனவே, இதனை தேசிய பேரிடராக கருதி, தேசிய பொறிமுறையொன்று உருவாக்கப்படவேண்டும்.” – என்றும் அநுரகுமார சுட்டிக்காட்டினார்.

‘கொரோனா’வை கட்டுப்படுத்த தேசிய பொறிமுறை அவசியம்!

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக தேசிய பொறிமுறையொன்றை அரசாங்கம் வகுக்க வேண்டும். அதற்கான ஆதரவு வழங்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் தற்போது உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை கூறினார்.

” கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும். வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்கான கட்டமைப்பு ஸ்தம்பிதமடைந்நால் பாரிய நெருக்கடி நிலைமை உருவாகும். எனவே, இதனை தேசிய பேரிடராக கருதி, தேசிய பொறிமுறையொன்று உருவாக்கப்படவேண்டும்.” – என்றும் அநுரகுமார சுட்டிக்காட்டினார்.

‘தற்புகழுக்காக நான் நடிக்கவில்லை’ – நடிகர் சூர்யா

” நான் புகழுக்காகவோ நாமும் சினிமா துறையில் இருக்கிறோம் என்பதை காட்டிக் கொள்வதற்காகவோ படங்களில் நடிக்கவில்லை.” என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

” நடிக்கும் ஒவ்வொரு படமும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். யாரை சந்திக்கிறோம் யார் நம்மை என்ன செய்ய வைக்கிறார்கள் என்பதும் முக்கியம்.

நான் பிரமாதமான நடிகன் இல்லை. என்னால் கேமரா முன்பு உடனே நடிக்க தெரியாது. ஒரு படத்தில் நடிக்கும்போது அந்த கதாபாத்திரமாக வாழ வேண்டும் என்று சொல்வார்கள். என்னை பொறுத்தவரை ஒரு கதையில் எனது வாழ்க்கையில் நடந்த உணர்வுப்பூர்வமான சம்பவங்கள் இருக்குமானால் தைரியமாக நடிக்க தொடங்கி விடுவேன்.

நான் நினைத்து பார்க்காத இடம் சினிமாவில் எனக்கு கிடைத்துள்ளது. எனவே நல்ல வாய்ப்புகள் வரும்போது மெனக்கெட வேண்டும் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு புது முயற்சியும் பயத்தை கொடுக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் வளர்ச்சி அடைய முடியும். அடுத்த கட்டத்துக்கும் போக முடியும் என்பது எனது நம்பிக்கை.

சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்துள்ள சூரரை போற்று படம் புதிய முயற்சியாக இருக்கும். அடுத்து நவரசா என்ற ஆந்தாலஜி படத்தில் நடிக்கிறேன். பின்னர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் வாடிவாசல் என்ற இன்னொரு படத்திலும் நடிக்கிறேன். ” சூர்யா கூறியுள்ளார்.

வங்கி முகாமையாளருக்கு கொரோனா – ஹட்டன் கிளை மூடப்பட்டது!

ஹட்டன் நகரில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்று இன்று (03.11.2020) காலை தொற்று நீக்கி தெளிக்கப்பட்டு தொற்று நீக்கம் செய்யப்பட்டது.

குறித்த தனியார் வங்கியின் முகாமையாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதையடுத்தே, வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக தொற்று நீக்கம் செய்யப்பட்டது.

ஹட்டன் நகரம் தனிமைப்படுத்தப்பட்டதையடுத்து வங்கி முகாமையாளர் கொழும்பில் உள்ள வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவரிடம் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த வங்கியில் பணியாற்றிய ஹட்டன், நோர்வூட், கம்பளை பகுதியை சேர்நதவர்கள் அவர்களின் வீடுகளிலேயே சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்பொழுது மேற்படி வங்கி மூடப்பட்டுள்ளது.

அதன்பின்னர் ஹட்டன் நகரிலுள்ள சகல வீதிகளிலும், பஸ் தரிப்பிடம் உள்ளிட்ட பொது இடங்களிலும் தொற்று நீக்கி தெளிக்கப்பட்டு, தொற்று நீக்கம் செய்யப்பட்டது.

க.கிசாந்தன்

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

போர் நிறுத்தத்தை அப்பட்டமாகமீறும் ஈரான்!

0
போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறுவதாகக் ஈரான் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் Mohammad Ghalibaf, குற்றம் சாட்டியுள்ளார். ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்காவின் நடவடிக்கைகள் கப்பல் போக்குவரத்து மற்றும் எரிசக்தி பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்கா...

மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கு விசேட இராப்போசன விருந்துபசாரம்!

0
மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கு இலங்கை ஜனாதிபதியால் விசேட இராப்போசன விருந்துபசாரம் - முகமது முய்சுவின் விஜயத்துடன் இலங்கை - மாலைதீவு இடையிலான நெருங்கிய நட்புறவு மேலும் பலமடையும் - இலங்கை ஜனாதிபதி ஒவ்வொரு காலகட்டத்திலும்...