Home Blog Page 3796

2ஆவது அலைமூலம் இதுவரை 7,857 பேருக்கு கொரோனா!

நாட்டில் நேற்று 11 ஆயிரத்து 889 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன், இதுவரையில் 5 லட்சத்து 36 ஆயிரத்து 337 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 35 தனிமைப்படுத்தல் மையங்களில் ஆயிரத்து 82 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரையில் 62 ஆயிரத்து 917 பேர் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்துகொண்டு வெளியேறியுள்ளனர்.

அதேவேளை, இரண்டாவது அலைமூலம் இதுவரை 7 ஆயிரத்து 857பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 11,335 ஆக உயர்வு..
குணமடைந்தவர்களின் எண்ணிக்கை – 5,249
6,065 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சை
21 பேர் உயிரிழப்பு

‘வட்டவளையில் பாடசாலையை பாதுகாக்கவும்’!

நுவரெலியா மாவட்டம்,  ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட வட்டவளை தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி அமைச்சின் “அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” செயற்திட்டத்தின் கீழ் புதிய வகுப்பறை கட்டடம் ஒன்று கட்டடப்பட்டு அதன் பணிகள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன.

ஹட்டன் – கொழும்பு பிரதான பாதைக்கு அருகில் அமைந்துள்ள இப்பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவந்த கட்டடம், பிரதான பாதையின் ஒரு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதையடுத்தே இடைநிறுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.

வீதி அபிவிருத்தி அதிகார சபை இதனை மீண்டும் மண்சரிவு ஏற்பாடத வகையில் திருத்தி அமைக்குமானால், பாடசாலையின்  கட்டட நிர்மாண பணிகளை முன்னெடுக்க முடியும். மலையக மாணவர்களின் கல்விக்கு கரம் கொடுக்கவும் முடியும். இதனை உணர்ந்து செயற்பட வேண்டியது அதிகாரிகளின் கடமையாகும் என கல்வி சமூகத்தினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

மக்கள் செய்தியாளர் – பா.திருஞானம்

உலகளவில் கொரோனாவின் பிடிக்குள் 4 கோடியே 73 லட்சம் பேர் மீண்டனர்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 லட்சத்தை தாண்டியுள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

தற்போதைய நிலவரப்படி, 4 கோடியே 73 லட்சத்து 17 ஆயிரத்து 420 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் ஒரு கோடியே 20 லட்சத்து 73 ஆயிரத்து 664 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 86 ஆயிரத்து 532 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவில் இருந்து 3 கோடியே 40  லட்சத்து 32 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.

25 மாவட்டங்களுக்கும் கொரோனா பரவியது – கிளிநொச்சியிலும் தொற்றாளர் இனங்காணப்பட்டார்!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு 13 அமைந்துள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றிய இவர் கடந்த 28 ஆம் திகதி கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் உள்ள தர்மர்ரம்கிராமத்திற்கு வருகை தந்துள்ளார். குறித்த நபர் வருகைதந்தவுடன் அவர்
உடனடியாக சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கண்டாவளை பிரதேச வைத்திய அதிகாரியும் பொதுச் சுகாதார பரிசோதகரும் விழிப்பாக செயற்பட்டமையால் உடனடியாக குறித்த நபர் சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்ட நிலையில் அவர் பணியாற்றிய உணவகஉரிமையாளர் மற்றும் அங்குள்ள கடமையாற்றிய சில பணியாளர்களுக்கு கொரோனா
தொற்று உறுதி செய்யப்பட்டமையினையடுத்து இவருக்கும் பிசிஆர் பரிசோதனைமேற்கொள்ளப்பட்டது.
இதன் போதே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்றாளங்கள் இனம் காணப்பட்ட
நிலையில் கிளிநொச்சி மாவட்டம் மாத்திரமே கொரோனா தொற்றாளர்கள் இன்றியமாவட்டமாக இருந்த நிலையில் இன்று முதலாவது கொரோனா தொற்றாளர் அடையாளம்
காணப்பட்டுள்ளார்.

நாட்டில் மேலும் 111 பேருக்கு கொரோனா தொற்று!

இலங்கையில் மேலும் 111 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

பேலியகொடை மீன் சந்தை தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் பரவியுள்ளது.

இதன்படி கொரோனா 2ஆவது அலைமூலம் பதிவான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 857 ஆக அதிகரித்துள்ளது. இன்று இதுவரையில் 275 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பாராளுமன்றம் வருகிறார் பஸில்! பதவி துறக்கிறார் ஜயந்த கெட்டகொட!!

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் நடைமுறைக்குவந்த வந்துள்ள நிலையில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ச நாடாளுமன்றம் வரவுள்ளார் எனவும், அவருக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுப் பதவியொன்று வழங்கப்படவுள்ளது எனவும் தெரியவருகின்றது.

பஸில் ராஜபக்ச நாடாளுமன்றம் வருவதற்காக மொட்டு கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் ஜயந்த கெட்டகொட எம்.பி. பதவியை துறக்கவுள்ளார் என சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாளை அல்லது எதிர்வரும் 12 ஆம் திகதி பஸில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் இரட்டை பிரஜாவுரிமைகொண்ட நபரொருவர் தேர்தலில் போட்டியிடமுடியாது.

இந்நிலையில் இரட்டை குடியுரிமை கொண்டவர்களுக்கான தடை ’20’ ஊடாக நீக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே பஸில் ராஜபக்ச நாடாளுமன்றம் வருகிறார் எனவும், அவருக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சு பதவி வழங்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

37 வருடகால சேவைக்கு விடைகொடுக்கிறார் மஹிந்த தேசப்பிரிய!

தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய அரச சேவையில் இருந்து ஓய்வுபெறும் முடிவை எடுத்துள்ள நிலையில், அவர் இன்று தனது அலுவலகத்தை சுத்தப்படுத்தினார்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதால் தேர்தல் ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் ஐவர் நியமிக்கப்படவுள்ளனர். ஜனாதிபதியின் பரிந்துரையின் பிரகாரம் பதவிகள் வழங்கப்படும்.

இந்நிலையில் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவர் ஏற்கனவே தமது அலுவலகங்களைவிட்டு வெளியேறியுள்ள நிலையில் இன்று தலைவர் மஹிந்த தேசப்பிரியவும் வெளியேறியுள்ளார்.

தேர்தல் செயற்பாடுகளில் 37 வருடகால அனுபம் மஹிந்த தேசப்பிரியவுக்கு இருக்கின்றது.

பதவியில் நீடிக்குமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டபோதிலும் அவர் அதனை ஏற்கவில்லை எனவும், விடைபெறுவதற்கு தீர்மானித்துள்ளார் எனவும் தெரியவருகின்றது.

2ஆம் அலை மூலம் இதுவரை 7,746 பேருக்கு கொரோனா தொற்று!

இலங்கையில் மேலும் 164 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

பேலியகொடை மீன் சந்தை தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்த 121 பேருக்கும், தனிமைப்படுத்த நிலையத்திலிருந்த 43 பேருக்குமே பிசிஆர் பரிசோதனைமூலம் வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா 2ஆவது அலைமூலம் பதிவான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 746 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை, இலங்கையில் கடந்த மார்ச் முதல் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 224 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 5 ஆயிரத்து 249 பேர் குணமடைந்துள்ளனர். 21 பேர் பலியாகியுள்ளனர். 5 ஆயிரத்து 954 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது.

பாடசாலைகளுக்கு மேலும் இரு வாரங்கள் விடுமுறை!

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக அரச பாடசாலைகள் நவம்பர் மாதம் 09 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் மேலும் இரண்டு வாரத்திற்கு குறித்த கால எல்லையை நீடிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

‘மேல் மாகாணத்தில் உள்ள குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு’

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள கொழும்பு, களுத்துறை, கம்பஹா மாவட்டங்களில் தகுதிவாய்ந்த குடும்பங்களுக்கு இம்முறையும் ரூபாய் 5000 வாழ்வாதார கொடுப்பனவு பெற்றுக் கொடுப்பதற்கு பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி தீர்மானித்துள்ளது.

தொற்றாளர்களையும் அவர்களுக்கு நெருக்கமானர்களையும் வீடுகளில் தனிமைப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், அந்த வீடுகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகளை வழங்கும் நடவடிக்கைகள் இதுவரை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்தியாவசிய உணவுப்பொதி கிடைக்கப்பெறாத மற்றும் ஊரடங்கு சட்டம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தகுதிவாய்ந்த குடும்பங்களுக்கு இந்த ரூபாய் 5000 கொடுப்பனவு பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ச தெரிவித்தார்.

அலரி மாளிகையில் இன்று (2020.11.02) இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் மற்றும் அத்தியவசிய உணவு பொருட்களை விநியோகித்து மக்களின் வாழ்க்கையை உரிய முறையில் முன்னெடுத்து செல்வது தொடர்பில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

தொற்றாளர்களையும் அவர்களுக்கு நெருக்கமானவர்களையும் வீடுகளில் தனிமைப்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்தை முறையாக செயற்படுத்தி கொவிட் வைரஸ் தொற்றிலிருந்து விடுபட்ட பாதுகாப்பான நாட்டை உருவாக்க வேண்டுமாயின் அவர்களுக்கு அவசியமான அனைத்து வசதிகளையும் வழங்க வேண்டியதுடன்,

அந்த வேலைத்திட்டத்தை செயற்படுத்தும் பொறுப்பு பிரதேச செயலாளர் அலுவலகத்தின் தலைமையில் பிரதேச சபை, பொலிஸ், பிரதேச சுகாதார சேவை அலுவலகம் மற்றும் கிராம குழுக்களுடன் இணைந்து செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பசில் ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.

பிரதேச செயலக அலுவலக மட்டத்தில் இந்த வேலைத்திட்டம் செயற்படுத்தப்படுவதுடன் கிராம குழுக்களின் ஊடாக மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுத்தல் மற்றும் தனிமைப்படுத்தல் நிறைவுசெய்யப்படவுள்ளது.

நீர், மின்சாரம், எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவை மற்றும் அத்தியாவசிய வாழ்வாதார நடவடிக்கைகளை தடையின்றி முன்னெடுத்து செல்வதுடன் தமது தொழில் பாதுகாப்பிற்கு சுகாதார வழிகாட்டல்களுக்கு முன்னுரிமை வழங்கி செயற்படுமாறும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டார்.

ஒரு நபருக்கு நோய்க்கான அறிகுறிகள் இருந்தால் மருத்துவமனைக்கு செல்வதற்கு பதிலாக சுகாதாரத் துறையினரை தொலைபேசியில் அழைத்து மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதனை சுட்டிக்காட்டிய பசில் ராஜபக்ச, புதிய தனிமைப்படுத்தல் முறைமை குறித்து பிரதேச மட்டத்தில் தெளிவூட்டல்களை மேற்கொள்ளும் பணிகள் கிராம குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

மக்களுக்கு அத்தியாவசியமான உணவு பொருட்களை பெற்று கொடுக்கும் செயற்பாட்டிற்காக பொருளதார மத்திய நிலையங்களை சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய திறப்பதற்கான அவசியம் காணப்படுவதாகவும் இந்த கலந்துரையாடலின் போது வலியுறுத்தப்பட்டது. ஆபத்தற்ற, சுகாதார பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு ஆபத்தற்ற பொருளாதார மத்திய நிலையம் என உறுதிசெய்யப்பட்ட பொருளாதார மத்திய நிலையங்களை திறப்பதற்கான முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பசில் ராஜபக்ச,

இன்று உலகின் பலம் மிக்க நாடுகள் மற்றும் எமது நாட்டை அண்மித்த நாடுகளும் கொவிட்-19 பாதிப்பிற்கு முகங்கொடுத்து இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு முடியாதுள்ளது. கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் காரணமாக நாம் இச்செயற்பாட்டில் முன்னணியில் திகழ்கிறோம். இதில் தொடர்புபட்ட நபர்களுக்கு மேலதிகமாக மேலும் நபர்களை இந்த செயற்பாட்டில் இணைத்து கொள்வதற்கு நாம் எதிர்பார்க்கிறோம். மக்களுக்கு பிரச்சினை ஏற்படாத வகையில் இந்த செயற்பாட்டை முன்னெடுத்து செல்லவே நாம் முயற்சிக்கிறோம்.

ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கொவிட் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியில், தொற்றாளர்களை தங்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்த தீர்மானிக்கப்பட்டது. வீடுகளில் தனிமைப்படுத்தப்படும் நபர்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவு பொருட்களை பெற்றுக்கொடுப்பது அவசியமாகும். அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக வீடுகளிலிருந்து வெளியேற தேவையேற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்வது எமது கடமையாகும். அதற்காக திறைசேரியிலிருந்து நிதி பெற்றுக்கொடுக்கப்படும். கூட்டுறவு தலைவர்கள், உள்ளூராட்சி அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அனைவரதும் ஒத்துழைப்பு இதற்கு அவசியமாகும்.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள கொழும்பு, களுத்துறை, கம்பஹா மாவட்டங்களில் தகுதியான குடும்பங்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு பெற்றுக்கொடுக்கப்படும். கிராம குழுக்களின் உதவியுடன் நெருக்கடி ஏற்படாத வகையில் இந்த கொடுப்பனவுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுங்கள். தேவையான அளவு ஒதுக்கீடுகள் திறைசேரியிலிருந்து பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. அதற்கு மேலும் ஒதுக்கீடுகள் தேவைப்படுமாயின் அந்த ஒதுக்கீடுகளை பெற்றுக் கொடுக்கவும் தயார்.

சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களின் கீழ் அத்தியவசியமான வாழ்வாதார நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்தல் அவசியம். தொற்று நிலைமை ஏற்படுவதற்கு முன்னர் நாம் அரசாங்கத்தை பொறுப்பேற்ற சந்தர்ப்பத்திலும் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தே காணப்பட்டது. கொவிட் தொற்று காரணமாக வெளிநாட்டு வேலைவாய்ப்புகளின் மூலம் எமது நாட்டிற்கு கிடைக்கும் வருவாய் இல்லாது போயிற்று.

எமக்கு இம்முறை கடன் தவணையை செலுத்திக் கொள்ள முடியாது போகும் என எதிர்த்தரப்பினர் எண்ணினர். எனினும், 4.2 பில்லியன் டொலர் கடன் தவணையை நாம் செலுத்தியுள்ளோம். 2020 ஒக்டோபர் மாதத்தில் நாம் ஏற்றுமதியின் மூலம் 900 மில்லியன் டொலர் வருவாய் ஈட்டியுள்ளோம்.

சுகாதார அதிகாரிகளின் சட்ட திட்டங்களுக்கு அமைய தொழிற்சாலைகளை நடத்தி செல்ல வேண்டியுள்ளது. நீர், எரிபொருள், மின்சாரம், எரிவாயு போன்ற அத்தியாவசிய பொருட்களை தொடர்ச்சியாக பெற்று கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். குறித்த நிறுவனங்களின் அனைத்து செயற்பாடுகளையும் தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு தனிமைப்படுத்தல் சட்டத்திற்கமைய உங்களது ஒத்துழைப்பை பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொருள் விநியோகத்தின்போது தேவையான பொருட்களை வீடுகளுக்கே கொண்டு சென்று விநியோகிக்குமாறு கூட்டுறவு சங்கங்களிடம் கேட்டு கொள்கிறோம். கடைகளை திறப்பதற்கான எதிர்பார்ப்பில்லை. கடந்த முறை போன்று இச்செயற்பாட்டை வெற்றிபெறச் செய்யுமாறு வேண்டுகிறோம். இம்முறை வரையறுக்கப்பட்ட அனுமதிகளை வழங்குவதற்கு நாம் தீர்மானித்துள்ளோம்.

மாவட்டங்களுக்கிடையே பயணங்களை மேற்கொள்வதை நாம் முழுமையாக நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளோம். அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனை மற்றும் அனுமதியை பெற்று பயணங்களை மேற்கொள்ளுங்கள். தங்கள் விருப்பத்திற்கேற்ப மாவட்டங்களுக்கிடையே பயணிக்க வேண்டாம்.

கடந்த முறை போன்று முழுமையாக கொவிட்-19 தொற்றிலிருந்து விடுபடுவதே எமது நோக்கம். மீண்டும் அவ்வாறானதொரு நிலைக்கு நாட்டை கொண்டு செல்ல முயற்சிப்போம்.

அண்மையில் அடையாளம் காணப்பட்ட கொவிட் கொத்தணிகள் அனைத்தும் மேல் மாகாணத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்டிருப்பதால், அது மேல் மாகாணத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு பரவுவதை தடுப்பதற்கு எம்மாலேயே முடியும். பொருளாதாரம் வீழ்ச்சியடையாது பாதுகாத்து கொள்வதுடன், மக்களின் வாழ்வாதாரம் வீழ்ச்சியடையாது முன்னோக்கி சென்று கொவிட் தொற்றிலிருந்து விடுபட்ட நாட்டை உருவாக்குதற்கு அனைவரும் இணைந்து செயற்படுவோம்.

குறித்த சந்தர்ப்பத்தில் மேல் மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், மாகாண ஆளுநர்கள், அமைச்சின் செயலாளர்கள், பிரதேச சபை, நகர சபை மற்றும் மாநகர சபை தலைவர்கள் , மாகாண மற்றும் பிரதம செயலாளர்கள், பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் தகவல் திணைக்கள அதிகாரிகள், பலநோக்கு கூட்டுறவு சேவைகள் மற்றும் சதொச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

போர் நிறுத்தத்தை அப்பட்டமாகமீறும் ஈரான்!

0
போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறுவதாகக் ஈரான் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் Mohammad Ghalibaf, குற்றம் சாட்டியுள்ளார். ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்காவின் நடவடிக்கைகள் கப்பல் போக்குவரத்து மற்றும் எரிசக்தி பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்கா...

மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கு விசேட இராப்போசன விருந்துபசாரம்!

0
மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கு இலங்கை ஜனாதிபதியால் விசேட இராப்போசன விருந்துபசாரம் - முகமது முய்சுவின் விஜயத்துடன் இலங்கை - மாலைதீவு இடையிலான நெருங்கிய நட்புறவு மேலும் பலமடையும் - இலங்கை ஜனாதிபதி ஒவ்வொரு காலகட்டத்திலும்...