Home Blog Page 3798

‘கொரோனா’ – இலங்கையில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.

பானதுறை வைத்தியசாலையில் கடந்த 31 ஆம் திகதி அனுமதிக்கும்போதே 27 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அதன்பின்னரே வைத்தியசாலைக்கு கொண்டவரப்பட்டுள்ளார்.

மரணத்தின் பின்பு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

இதன் அடிப்படையிலேயே கொரோனா தொற்றுக்கு இலக்காகி இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.

கடும் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நாளை கூடுகிறது பாராளுமன்றம்!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றம் நாளை (03) இரண்டு மணி நேர கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மருத்துவ கட்டளைச் சட்டத்தின் கீழ் இரண்டு புதிய விதிமுறைகளை முன்வைப்பார். வேறு நடவடிக்கைகள் இடம்பெறாது. சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியிலேயே நடவடிக்கைகள் இடம்பெறும்.

முற்பகல் 10 மணி முதல் நண்பகல் 12 மணிவரையே சபை அமர்வு இடம்பெறும்.

இதேவேளை பாராளுமன்ற வரலாற்றில் அமர்வுகளின் போது முதல்முறையாக நாளைய தினம் செய்தி சேகரிப்புக்காக ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரியவந்துள்ளது.

இலங்கையில் இதுவரை 523, 882 பிசிஆர் பரிசோதனைகள்!

நாட்டில் நேற்று 11 ஆயிரத்து 87  பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன், இதுவரையில் 5 லட்சத்து 23 ஆயிரத்து 882 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 45 தனிமைப்படுத்தல் மையங்களில் 4 ஆயிரத்து 39 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரையில் 61 ஆயிரத்து 995 பேர் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்துகொண்டு வெளியேறியுள்ளனர்.

அதேவேளை, இரண்டாவது அலைமூலம் இதுவரை 7 ஆயிரத்து 582 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 60 ஆக உயர்வு.
இவர்களில் 4 ஆயிரத்து 905 பேர் குணமடைவு.
6 ஆயிரத்து 134 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சை
21 பேர் உயிரிழப்பு…

சப்ரகமுவ மாகாணத்தில் 8 வைத்தியர்கள் உட்பட 115 பேருக்கு கொரோனா!

சப்ரகமுவ மாகாணத்தில் துரிதமாக கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் இப்பிரதேசத்தில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டங்களை நடைமுறைபடுத்த இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களின் கொரோனா கட்டுப்பாட்டு செயலணிகள் தீர்மானங்களை மேற்கொண்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண தொற்று நோய் வைத்தியப் பிரிவின் அதிகாரி லக்மால் கோனாரா தெரிவித்தார்.

கடந்த சில தினங்களாக கேகாலை மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளதுடன் இவர்களில் 8 பேர் வைத்தியர்கள் ஆக இருப்பது அவதானத்துக்குறிய விடயம் எனவு ம் அவர் தெரிவித்தார்.

இதேவேளை இரத்தினபுரி மாவட்ட த்தின் அவதானத்துக்குரிய இடங்கள் கடுமையான சட்டங்களுடன் பயணக்கட்டுப்பாடு மற்றும் தனிமைப்படுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் 49 பேர் கொரோனா நோயாளர்களாக சிகிச்சை பெற்று வருகின்றனர். சப்ரகமுவ மாகாணத்தின் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளனர்.

‘உலக சுகாதார அமைப்பின் தலைவர் சுயதனிமையில்’

கொரோனா தொற்றுள்ள நபருடன் தொடர்பு ஏற்பட்ட நிலையில் உலக சுகாதார அமைப்பு பொது இயக்குனர் தனிமைப்படுத்தி கொண்டார்.

உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குனராக இருப்பவர் அதானம் கெப்ரியேசஸ். இவருடன் கொரோனா பாதித்த நபர் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார். இதுபற்றி அறிந்த கெப்ரியேசஸ் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.

இதனை தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட நபர் என்னை தொடர்பு கொண்டது தெரிய வந்துள்ளது. நான் நலமுடனேயே உள்ளேன். அறிகுறிகள் எதுவும் இல்லை.

எனினும், வருகிற நாட்களில் உலக சுகாதார அமைப்புவரைமுறைகளின்படி, என்னை தனிமைப்படுத்தி கொள்வேன். வீட்டில் இருந்தபடியே பணி செய்வேன். நாம் அனைவரும் சுகாதார வழிகாட்டுதலின்படி செயல்பட வேண்டும் என்பது மிக முக்கியம்.

இதன் வழியே கொரோனா பரவலின் சங்கிலியை நாம் உடைக்க முடியும். வைரசை ஒழிக்க முடியும். சுகாதார விசயங்களை பாதுகாக்க முடியும். கொரோனா பாதிப்புகளில் இருந்து மக்களை காக்கவும் மற்றும் கடுமையான பாதிப்பில் இருந்து அவர்களை பாதுகாப்பதற்கும் வேண்டிய பணிகளை நானும் என்னுடன் பணிபுரிவர்களும் தொடர்ந்து மேற்கொள்வோம் என்று கூறியுள்ளார்.

ஊரடங்கு உத்தரவைமீறிய 1,872 பேர் கைது!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்ட நாளில் இருந்து இன்று காலை 6 மணிவரை, ஊரடங்கு சட்டத்தைமீறிய 1,872 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

நேற்று மாத்திரம் 179 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 29 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதேவேளை, கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக சுகாதார மற்றும் பாதுகாப்பு தரப்பினரால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களையும், ஆலோசனைகளையும் பின்பற்றுமாறு மக்களிடம் அவர் கோரிக்கையும் விடுத்தார்.

‘பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தாமதமடையும்’

பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தாமதமடையும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சீ. பெரேரா தெரிவித்துள்ளார்.

இரண்டாம் தவணை பாடசாலை விடுமுறை முடிந்து மீண்டும் எதிர்வரும் 9ஆம் திகதி பாடசாலைகளை மீள ஆரம்பிக்க திட்டமிட்டிருப்பினும் தற்போது பரவிவரும் கொரோனா தொற்று காரணமாக உரிய திகதியில் பாடசாலைகளை மீள திறக்க முடியாது போகும் என அவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக சுகாதார அதிகாரிகளிடம் பரிந்துரைகளை கேட்டுள்ளதாகவும் சுகாதார பரிந்துரைகளின் அடிப்படையில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தாமதமடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 122 பிரதேசங்களுக்கு பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதோடு மாணவர்களும் இத்தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

மாணவர்களின் செயற்பாடுகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாதிருக்க மீண்டும் தொலைக்கல்வி நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்திய வகையில் அரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.வசதிகள் குறைந்த கிராமிய பிரதேச மாணவர்களுக்கும் இந்த வாய்ப்பை வழங்கும் வகையில் விசேட வேலைத் திட்டத்தை தயாரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒக்டோபர் 9 ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட இருந்த போதிலும் கொரோனா தொற்று காரணமாக பாடசாலைகளின் இரண்டாம் தவணை விடுமுறையை ஒக்டோபர் 5ஆம் திகதி வழங்கப்பட்டது.

உயர் தரப்பரீட்சை முடிவடைந்ததும் மூன்றாம் தவணை நவம்பர் 9 ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 23 வரை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நாளை! அரியணையேறப்போவது யார்?

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றாக விளங்கும் அமெரிக்காவில் நாளை (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் நடைபெறும் இந்த தேர்தல் சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிட, அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் களம் காண்கிறார்.

கொரோனா வைரஸ், இனப்பாகுபாடு ஆகிய விவகாரங்கள் இந்த தேர்தலில் முக்கிய பிரச்சினைகளாக முன்வைக்கப்பட்டுள்ளன.

கொரோனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தேர்தல் நடந்தாலும் கடந்த காலங்களை ஒப்பிடுகையில் அமெரிக்க மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களிப்பதற்கு மிகுந்த ஆர்வம் காட்டிவருகின்றனர்.

அந்தவகையில் 8 கோடியே 50 லட்சம் பேர் முன்கூட்டியே தங்கள் வாக்கை செலுத்தினர். அதைப்போல் தேர்தல் நாளன்று இதுவரை இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் வாக்குகள் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் தேர்தலுக்கு இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில் ஜனாதிபதி வேட்பாளர்களான டிரம்ப் மற்றும் ஜோ பைடன் ஆகிய இருவரும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் தேர்தலில் வெற்றியை தீர்மானிப்பதில் முக்கிய மாகாணமாக விளங்கும் பென்சில்வேனியாவில் 4 பிரசார பேரணிகளில் ஜனாதிபதி டிரம்ப் கலந்து கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதேபோல் மற்றொரு முக்கிய மாகாணமான மிச்சிகனில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 2 பிரசார பேரணிகளில் பங்கேற்றார். இந்தப் பேரணிகளில் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவும் கலந்து கொண்டு ஜோ பைடனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.

ஜோ பைடனின் பிரசார பேரணிகள் மிக சிறிய அளவிலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கப்பட்டும் நடந்தன.
ஆனால் ஜனாதிபதி டிரம்பின் பிரசார பேரணிகள் மிக பிரமாண்டமாகவும், சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் இன்றியும் நடைபெற்றன.

இதனிடையே பென்சில்வேனியாவில் ஒரு பேரணியில் பேசிய டிரம்ப், நடக்க இருக்கும் இந்த தேர்தலில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிக அளவிலான வாக்குகளை கைப்பற்றி குடியரசு கட்சி வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இதுபற்றி அவர் கூறுகையில், “இது மிகவும் சுவாரஸ்யமான செவ்வாய்க்கிழமையாக இருக்கப்போகிறது. நம்மிடம் ஒரு பெரிய சிவப்பு அலை உருவாகியுள்ளது. இது போன்ற எதையும் யாரும் பார்த்ததில்லை” என கூறினார்.

மேலும் அவர், தேர்தல் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய மாகாணங்களில் கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் தான் பெற்ற வாக்குகளை விட இம்முறை அதிக அளவு வாக்குகளை பெறுவேன் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

அதேபோல் மிச்சிகனில் நடந்த பிரசார பேரணியில் பேசிய ஜோ பைடன், ஜனாதிபதி டிரம்ப் கடந்த 4 ஆண்டுகளில் நாட்டை பிளவுபடுத்தியதாவும், எனவே அவரை வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்ற மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் எனவும் கூறினார்.

பிரசாரத்தில் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா பேசுகையில், ஜனாதிபதி டிரம்ப் கொரோனா வைரஸ் தொற்றின் குறிப்பிடத்தக்க சிக்கலை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும், அவர் தனது தற்பெருமைக்கு தீனி போடுவதை தவிர மற்ற விஷயங்களைப் பற்றி கவலைப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

‘அடுத்த வருடம் வலுவான அணியாக வருவோம் ‘- டோனி

” அடுத்த தலைமுறைக்கு கொஞ்சம் கொஞ்சமாக அணியை ஒப்படைக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.” என்று டோனி தெரிவித்தார்.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நடப்பு சீசனில் சென்னை அணி தனது கடைசி லீக் பஞ்சாப் அணியை எதிர்த்து இன்று விளையாடியது. இந்தப் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வென்று இரசிகர்களுக்கு ஆறுதலை கொடுத்தது.

இந்தப் போட்டி முடிந்தபிறகு பேசிய டோனி கூறியவை வருமாறு,

” இது எங்களுக்கு கடினமான தொடராக அமைந்தது, நாங்கள் முழு ஆற்றலையும் செலவிட்டு விளையாடினோம் என நான் நினைக்கவில்லை. 6-7 போட்டிகள் மிக கடினமாக அமைந்தன.அடுத்த ஆண்டு ஐபிஎல் ஏலம் குறித்து பிசிசிஐ என்ன முடிவெடுக்கிறது என பார்க்க வேண்டும். அடுத்த 10 ஆண்டுகளை கணக்கில் கொண்டு அணியில் சிறிது மாற்றம் செய்யவேண்டும்.

ஐபிஎல்லின் தொடக்கத்தில் நாங்கள் ஒரு அணியை உருவாக்கினோம். அது நன்றாக செயல்பட்டது. தற்போது அடுத்த தலைமுறைக்கு கொஞ்சம் கொஞ்சமாக அணியை ஒப்படைக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது

ருதுராஜ் கெய்க்வாட்டை பொருத்தவரை அவர் சிறப்பாக விளையாடினார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் குணமாகி 20 நாட்கள் கழித்தும் அவர் உடல்திறன் முழுமையாக சரியாகவில்லை. அவருக்கு போதிய பயிற்சி செய்யும் வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. அதனால் தான் வாட்சன் மற்றும் டு பிளஸிஸுடன் நாங்கள் விளையாட வேண்டியதாக இருந்தது. ஆனால் அது சரியாக அமையவில்லை. ரசிகர்களுக்கு சொல்லும் செய்தி என்னவெனில் நாங்கள் மீண்டும் வலுவாக திரும்பி வருவோம்.

அனைத்து அணிகளும் சிறப்பாக விளையாடும் தொடர்களில் இதுவும் ஒன்றாகும். நான் இந்த தொடரோடு ஓய்வு பெற்று விடுவேன் எனக்கருதி பல வீரர்கள் என்னிடம் ஜெர்சியை வாங்கியிருக்கலாம்” என்றார்.

‘கொரோனா’ – இலங்கையில் 21ஆவது மரணம் பதிவானது!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். மஹர பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஆணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த 23 ஆம் திகதி வெலிசர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. எனினும், உயிரிழந்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட 2ஆவது பிசிஆர் பரிசோதனையின்போதே வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

போர் நிறுத்தத்தை அப்பட்டமாகமீறும் ஈரான்!

0
போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறுவதாகக் ஈரான் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் Mohammad Ghalibaf, குற்றம் சாட்டியுள்ளார். ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்காவின் நடவடிக்கைகள் கப்பல் போக்குவரத்து மற்றும் எரிசக்தி பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்கா...

மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கு விசேட இராப்போசன விருந்துபசாரம்!

0
மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கு இலங்கை ஜனாதிபதியால் விசேட இராப்போசன விருந்துபசாரம் - முகமது முய்சுவின் விஜயத்துடன் இலங்கை - மாலைதீவு இடையிலான நெருங்கிய நட்புறவு மேலும் பலமடையும் - இலங்கை ஜனாதிபதி ஒவ்வொரு காலகட்டத்திலும்...