Home Blog Page 3799

தெல்தோட்டையில் ஒருவருக்கு கொரோனா தொற்று!

கண்டி, கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்தொட்டை ரெலிமங்கொட பகுதியில் நபரொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பேலியகொடை மீன்சந்தைக்கு சென்றுள்ள இவர் கடந்த 21 ஆம் திகதி வீடு திரும்பியுள்ளார்.இவரிடம் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் கடந்த 28 ஆம் திகதி பெறப்பட்டது. இந்நிலையில் பிசிஆர் முடிவுகள் இன்று வெளிவந்தன.

இதில் 52 வயதான குறித்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் தெல்தெனிய வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடமும் பிசிஆர் பரிசோதனை நடத்தப்படவுள்ளது.

புபுரஸ்ஸ நிருபர் –

அமெரிக்காவில் கொரோனா தாண்டவம்! 93 லட்சத்தை கடந்தது தொற்றாளர்களின் எண்ணிக்கை!!

அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் ஒரு நாளில் புதிய உச்சம் தொட்டுள்ளதுடன், மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 93 லட்சத்தை தாண்டியுள்ளது.

சீனாவின் உகான் நகரில் கொரோனா வைரசானது கண்டறியப்பட்டாலும், பின்னர் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. எனினும், வல்லரசான அமெரிக்கா கொரோனா பாதிப்புகளில் சிக்கி மீள முடியாமல் தத்தளித்து வருகிறது.

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் பணிகள் மும்முரமுடன் நடைபெற்ற போதிலும், கொரோனா பாதிப்புகளும் அதன் கைவரிசையை காட்டி வருகிறது. இதுபற்றி ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கைலக்கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், நாள் ஒன்றுக்கு கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை புதிய உச்சம் தொட்டுள்ளது. இதன்படி, 94 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

இது அதற்கு முந்தைய நாளில் 91 ஆயிரம் என்ற அளவை மிஞ்சியுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 லட்சத்து 16 ஆயிரத்து 297 ஆக உயர்வடைந்து உள்ளது. இதனால் மற்றொரு அலை ஏற்பட கூடிய வாய்ப்பு காணப்படுகிறது.

தொடர்ந்து பல பகுதிகளில் இந்த வாரத்தில் ஊரடங்கை பிறப்பிக்க அதிகாரிகள் முடிவு செய்ய கூடும் என கூறப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் – வெற்றியைக் கணித்த கரடி

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றியாளர் என ரஷ்ய விலங்கியல் பூங்காவில் உள்ள கரடி கணித்துள்ளது.

அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜோ பைடன் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

ஜனாதிபதி தேர்தலில் ரஷ்ய நாட்டின் தலையீடு உள்ளது என்ற நீண்டகால சர்ச்சை எழுந்திருந்த நிலையில் அது புறந்தள்ளப்பட்டது. இந்நிலையில், ரஷ்யாவின் விலங்கியல் பூங்காவில் உள்ள சைபீரிய கரடி ஒன்று அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளரை கணித்துள்ளது.

இதுபற்றிய வீடியோ ஒன்றில், கூண்டில் இருந்து திறந்து விடப்பட்ட கரடியானது, ஒய்யார நடைநடந்து வெளியே வருகிறது. அதற்கு முன் தயாராக இரண்டு தர்பூசணி பழங்கள் வைக்கப்பட்டு இருந்தன. அவற்றில் ஒரு பழத்தில் தற்போதைய அதிபர் டிரம்பின் உருவமும், மற்றொன்றில் ஜோபைடன் உருவமும் வரையப்பட்டிருந்தது.

இதில், கரடி நேராக வந்து தன் முன்னேயிருந்த ஜோபைடன் உருவம் கொண்ட தர்பூசணியை தூக்கி சென்று மறைவாக அமர்ந்து சுவைத்தது. இதனால் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெறுவார் என நம்பப்படுகிறது.

‘மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறியோர் தனிமைப்படுத்தலில்’

மேல் மாகாணத்திலிருந்து ஒக்டோபர் 29, 30 ஆம் திகதிகளில் வெளி இடங்களுக்கு சென்றவர்கள், அவர்கள் இருக்கும் இடங்களிலேயே 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

குளியாப்பிடியவில் 5 பொலிஸ் பிரிவுகள் மற்றும் மேல்மாகாணதத்தில் இருந்து வெளியேறியவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்படவுள்ளனர்.

கடந்த 29 ஆம் திகதி வியாழக்கிழமை நள்ளிரவு முதல் மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட இருந்த நிலையில், மேல் மாகாணத்திலிருந்து எவரும்
வெளியேறி வேறு பிரதேசங்களுக்கு செல்ல வேண்டாமென ஊரடங்கு அமுல் படுத்தப்படுவதற்கு முன் பொலிஸார் மக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

ஆனால், தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைக்கு வருவதற்கு முன்னதாக மேல் மாகாணத்தில் இருந்த பெருந்தொகையாளோர் பொலிஸாரின் வேண்டுகோளுக்கு செவிசாய்க்காது மேல் மாகாணத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.

இவ்வாறு வெளியேறியவர்களை கண்டுபிடிப்பதற்கான விஷேட நடவடிக்கை ஒன்றை பொலிஸார் நேற்று முதல் முன்னெடுத்து வருகின்றனர்.

இதன் அடுத்த கட்டமாகவே, இவ்வாறு மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறிய அனைவரையும் அவர்கள் தற்போதுள்ள இடங்களிலேயே 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.

ஊரடங்கு உத்தரவைமீறிய 1,450 பேர் இதுவரை கைது!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்ட நாளில் இருந்து இன்று காலை 6 மணிவரை, ஊரடங்கு சட்டத்தைமீறிய ஆயிரத்து 450 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரான பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

நேற்று மாத்திரம் 221 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 44 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதேவேளை, கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக சுகாதார மற்றும் பாதுகாப்பு தரப்பினரால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களையும், ஆலோசனைகளையும் பின்பற்றுமாறு மக்களிடம் அவர் கோரிக்கையும் விடுத்தார்.

‘கொரோனா’ – இலங்கையில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு 12 ஐ சேர்ந்த 54 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மக்களிடம் இருந்து முழு ஒத்துழைப்பை கோரும் சுகாதார அமைச்சு

” கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தே செல்கின்றது. எனவே, அடுத்துவரும் நாட்கள் அவதானம்மிக்க காலப்பகுதியாகும். கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக நாட்டு மக்கள் முழு ஒத்துழைப்பையும் வழங்கவேண்டும்.” – என்று சுகாதார அமைச்சின் பேச்சாளர் வைத்திய நிபுணர் ஜயருவன் பண்டார  தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” எமக்கு முன்னால் பாரிய அச்சுறுத்தல் காணப்படுகின்றது, அது இன்னும் குறையவே இல்லை. நாளாந்தம் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தே செல்கின்றது. இதனால் எதிர்காலம் என்பது அவதானம்மிக்க காலப்பகுதியாகும்.

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக சுகாதார தரப்பினரும், பாதுகாப்பு துறையினரும் முழுவீச்சுடன் செயற்பட்டுவரும் நிலையில் அதற்கு மக்களும் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். தமக்கு கொரோனா தொற்றாத வகையில் சுகாதார பாதுகாப்புடன் இருக்கவேண்டும் என்பதுடன், மற்றையவருக்கு எம்மூலம் தொற்றாமல் இருப்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்.

தற்போது நாளாந்தம் 7 ஆயிரம்வரையில் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. செயலிழந்துள்ள இந்திரமும் சரிசெய்யப்படும். சீனாவில் இருந்து துறைசார் நிபுணர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, தனிமைப்படுத்தல் நடவடிக்கை என்பது சிறைப்பிடிப்பு – சிறைவைப்பு அல்ல என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். உங்களினதும், உங்கள் உறவினரது நலன்கருதியுமே தனிமைப்படுத்தல் நடவடிக்கை இடம்பெறுகின்றது. மக்கள் பாதுகாப்புக்காகவே வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. தனிமைப்படுத்தல் முகாமில் அனைத்து வசதிகளும் உள்ளன. எனவே ,தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு செல்வதற்கு எவரும் அச்சம் கொள்ளவேண்டியதில்லை.” – என்றார்.

4 கோடியே 58 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா! இலங்கையிலும் எகிறும் எண்ணிக்கை!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 லட்சத்து 93 ஆயிரத்தை கடந்தது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

தற்போதைய நிலவரப்படி, 4 கோடியே 58 லட்சத்து 99 ஆயிரத்து 858 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் ஒரு கோடியே 14 லட்சத்து 56 ஆயிரத்து 620 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 83 ஆயிரத்து 400 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவில் இருந்து 3 கோடியே 32 லட்சத்து 49 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 424 ஆக அதிகரித்துள்ளது.

பஞ்சாப்பை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான்

பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டத்தால் பஞ்சாப்பை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் அணி.

ஐ.பி.எல். தொடரின் 50ஆவது லீக் ஆட்டம் அபு தாபியில் நடைபெற்றது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்மித் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி பஞ்சாப் அணியின் மந்தீப் சிங், கேஎல் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

மந்தீப் சிங் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். அடுத்து கேஎல் ராகுல் உடன் கிறிஸ் கெய்ல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இந்த ஜோடி 14.4 ஓவரில் 121 ரன்கள் எடுத்த நிலையில் பிரிந்தது. கேஎல் ராகுல் 46 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன் 10 பந்தில் 22 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டகெயில் 46 பந்தில் 6 பவுண்டரி, 8 சிக்சருடன் 99 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

இறுதியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது.

186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணியின் ராபின் உத்தப்பா, பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

உத்தப்பா நிதானமாக ஆட, ஸ்டோக்ஸ் அதிரடியாக ஆடினார். முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்தனர். இதில் ஸ்டோக்ஸ் 3 சிக்சர், 6 பவுண்டரியுடன் அரைசதமடித்து ஆட்டமிழந்தார். அடுத்து சஞ்சு சாம்சன் இறங்கினார்.

நிதானமாக ஆடிய உத்தப்பா30 ரன்னில் அவுட்டானார். அரை சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், சாம்சன் 25 பந்தில் 3 சிக்சர், 4 பவுண்டரியுடன் 48 ரன்னில் வெளியேறினார்.

அடுத்து ஸ்மித்தும், ஜோஸ் பட்லரும் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இறுதியில், ராஜஸ்தான் அணி 17.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 186 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஸ்மித் 31 ரன்னும், பட்லர் 22 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். ஆட்ட நாயகன் விருது பென் ஸ்டோக்சுக்கு வழங்கப்பட்டது.

ராஜஸ்தான் பெற்ற 6வது வெற்றி இதுவாகும். இந்த வெற்றி மூலம் பிளே ஆப் செல்லும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டராஜஸ்தான் அணி புள்ளிப் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் தோற்றாலும் ரன்ரேட் அடிப்படையில் பஞ்சாப் அணி புள்ளிப் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.

68 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு உத்தரவு நீடிப்பு! 49 பிரிவுகளுக்கே திங்களன்று தளர்வு!!

நாட்டில் தற்போது 117 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது. திங்கட்கிழமை (02) காலை 5 மணிவரை ஊரடங்கு உத்தரவு தொடரும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

திங்கட்கிழமை காலை 5 மணிக்கு 49 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் ஏனைய 68 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரான பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர்   மேலும் கூறியதாவது,

” மேல் மாகாணம் உட்பட நாட்டில் 117 பொலிஸ் பிரிவுகளில் நேற்றிரவு முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. ஏற்கனவே 68 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்த நிலையில் புதிதாக 49 பிரிவுகள் இணைக்கப்பட்டன.

கம்பஹா மாவட்டத்தில் 37 பொலிஸ் பிரிவுகளிலும் கொழும்பு மாவட்டத்தில் 21 பொலிஸ் பிரிவுகளிலும், களுத்துறை மாவட்டத்தில் 5 பொலிஸ் பிரிவுகளிலும், குருணாகலை மாவட்டத்தில் 5 பொலிஸ் பிரிவுகளிலும் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தும் அமுலில் இருக்கும். திங்கட்கிழமை இப்பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்படாது.

புதிதாக இணைக்கப்பட்ட 49 பிரிவுகளில் நீக்கப்படும். அதுவும் பிசிஆர் பரிசோதனை முடிவுகளிலேயே இறுதி தீர்மானம் தங்கியுள்ளது. எது எப்படியிருந்தாலும் நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்கும் தீர்மானம் தற்போதைக்கு இல்லை.” – என்றார்.

அதேவேளை, தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்ட நாளில் இருந்து இன்று காலை 6 மணிவரை, ஊரடங்கு சட்டத்தைமீறிய ஆயிரத்து 260 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரான பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

திமுக சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்படும்!

0
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் என முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து...

இலங்கை, மாலைதீவுக்கிடையில் 7 ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

0
மாலைதீவு மற்றும் இலங்கைக்கு இடையே பல்வேறு துறைகள் தொடர்பான 07 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளும் நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு (Dr....

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க கப்பல்மீது ஈரான் தாக்குதல்!

0
ஹோர்முஸ் நீரிணை வழியாக நுழைய முயன்ற அமெரிக்கப் போர்க்கப்பல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது. ஹார்முஸ் நீரிணைக்கு அருகில் அமெரிக்கப் போர்க்கப்பல் ராடார் கருவிகளை அணைத்துவிட்டு அத்துமீற முயன்றதாக ஈரான்...