Home Blog Page 3800

சிக்ஸர்களால் வாணவேடிக்கை காட்டிய கெயில் – ஒரு ஓட்டத்தால் சதத்தை நழுவவிட்டார்!

ராஜஸ்தானுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணி 185 ஓட்டங்களைக் குவித்தது.

துபாயில் நடைபெற்று வரும் 13வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய 50வது ஆட்டத்தில் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டம் அபுதாபியில் உள்ள ஷேக் சாயீத் மைதானத்தில் நடைபெறுகிறது.

இதில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணியின் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து முதலில் துடுப்பெடுத்தாடிய  பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் மந்தீப் சிங் இருவரும் களமிறங்கினர்.

ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரிலேயே மந்தீப் சிங் கேட்ச் ஆகி விக்கெட்டை இழந்தார். இதனை தொடர்ந்து கே.எல்.ராகுலுடன் கிறிஸ் கெய்ல் ஜோடி சேர்ந்தார். ஒரு புறம் கே.எல்.ராகுல் நிதானமாக ஆடி ரன் சேகரிப்பில் ஈடுபட்டார். மறுமுனையில் அதிரடி காட்டிய கிறிஸ் கெய்ல் ராஜஸ்தான் பவுலர்கள் வீசிய பந்துகளை நாலாபுறமும் பறக்கவிட்டார்.

பென் ஸ்டோக்ஸ் வீசிய 15ஆவது ஓவரில் கே.எல்.ராகுல்(46 ரன்கள் 41 பந்துகள்) கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன்(22 ரன்கள், 10 பந்துகள்) 3 சிக்ஸர்களை விளாசி அசத்தினார். பென் ஸ்டோக்ஸ் வீசிய 19வது ஓவரில் நிக்கோலஸ் பூரன் கேட்ச் ஆகி வெளியேறினார்.

இன்றைய ஆட்டத்தில் 6 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களை பறக்கவிட்டு அதிரடி காட்டிய கிறிஸ் கெய்ல் 1 ஓட்டத்தில ; தனது சதத்தை தவறவிட்டார். ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய கடைசி ஓவரின் 4வது பந்தில் கிறிஸ் கெய்ல்(99 ரன்கள், 63 பந்துகள்) பவுல்ட் ஆனார்.

இன்று இதுவரையில் 633 பேருக்கு கொரோனா தொற்று!

இலங்கையில் மேலும் 319  பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

திவுலப்பிட்டிய மற்றும் பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்புபட்ட மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் பரவியுள்ளது.

இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 424 ஆக அதிகரித்துள்ளது.

இன்று இதுவரையில் 633 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மக்களே அவதானம்! பிசிஆர் பரிசோதனையின்போது மாத்திரை எதுவும் வழங்கப்படாது!!

கொவிட் வைரஸ் தொற்று தொடர்பாக மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனையின் போது  , மாத்திரைகளையோ அல்லது வேறு எதுவும் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்று வைத்தியர்களும், சுகாதார பரிசோதகர்களும் தெரிவித்திருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான  அஜித் ரோஹண தெரிவித்தார்.

பி.சி.ஆர் பரிசோதனை என்ற போர்வையில் நேற்று இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாகவே அவர் இதனை தெரிவித்தார். பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்வதாக கூறி மஹவ கெத்தபஹூவ என்ற இடத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாகவே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

நேற்று மாலை 3.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தின் போது வீட்டிலிருந்த மூன்றரை பவுண் தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நாடு எதிர்நோக்கியுள்ள நிலைமையில் இவ்வாறான மோசடிகளில் சிலர் ஈடுப்படுகின்றனர். இந்த மோசடிக்காரர்கள் தொடர்பில் பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஏதேனும் சந்தர்ப்பத்தில் சுகாதார பரிசோதகர்கள் வந்தால் எந்த சந்தர்ப்பத்திலும் பி.சி.ஆர் பரிசோதனைக்காக மாத்திரைகளையோ  அல்லது வேறு எந்த மருந்துகளையோ தரமாட்டார்கள். இதனை வைத்தியர்கள் மற்றும் சுகாதார பரிசோதகர்கள் உறுதி செய்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.

குறிப்பிட்ட கொள்ளை சம்பவத்தின் போது பி.சி.ஆர் பரிசோதனை என்ற போர்வையில் மூவர் அந்த வீட்டிற்குள் பிரவேசித்துள்ளனர். இவர்களில் ஒருவர் பெண் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பரிசோதனைக்காக மாத்திரைகளை வழங்கியுள்ளனர். அதனை உட்கொண்ட பின்னர் அவர்கள் நித்திரையாகி உள்ளனர். காலையில் பார்த்த போதே தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதை கணடறிந்துள்ளனர். பொலிஸ் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளனர். மஹவ பொலிஸார் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

‘மலையக மக்கள் சுய பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்’ – திகா

நாட்டில் கடந்த சில வாரங்களாக “கொரோனா” பரவல் வெகுவாக அதிகரித்து வருவதோடு மலையகத்துக்கும் வியாபித்துள்ளது. கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொது மக்கள் இந்த சுகாதார நடவடிக்கையை அலட்சியம் செய்து விடாமல் தமது சுய பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

” மலையக மக்கள் அனைவருக்கும் தனி வீட்டு வசதிகள் கிடையாது. சுகாதார வசதிகளும் போதுமான நிலையில் இல்லை. மக்கள் நெருக்கமான குடியிருப்புகளில் தான் வாழ வேண்டிய நிலையில் உள்ளார்கள். இவற்றுக்கு மத்தியில் “கொரோனா” பரவல் அதிகரித்து பெரும் சவாலை ஏற்படுத்தி வருகின்றது. வசதிகள் இல்லாவிட்டாலும் கூட நாம் “கொரோனா” விலிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டும்.

ஒவ்வொருவரினதும் பாதுகாப்பை முன்னிட்டு அரசாங்கம் வலியுறுத்தி வரும் சுகாதார நடைமுறைகளை தவறாமல் பின்பற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும். அடிக்கடி கைகளைக் கழுவுதல் சமூக இடைவெளியைப் பேணுதல், ஊரடங்கு அமுலில் உள்ள பிரதேசங்களுக்கு செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுதல் முதலானவற்றை கடைப்பிடிக்க வேண்டும்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆந் திகதி தீபாவளிப் பண்டிகை வருவதால் கொழும்பு போன்ற தூர இடங்களில் பணிபுரியும் மலையக இளைஞர்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்புவதில் ஆர்வமாக இருப்பார்கள். எனினும், நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், பல பிரதேசங்கள் முடக்கப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே, பண்டிகையை விட தனி மனித பாதுகாப்பும், தேசிய பாதுகாப்பும் முக்கியமானது என்பதை உணர்ந்து கொண்டு அதற்கேற்ற வகையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியமாகும். பொது மக்களின் நலன் கருதி அரசாங்கம் மேற்கொள்ளும் சகல நடவடிக்கைகளும் வெற்றி பெறும் போது, நிலைமை சுமுகமாக மாறி, உறவுகள் சங்கமிக்க நிச்சயம் வழிபிறக்கும் என்ற நம்பிக்கையோடு “கொரோனாவை” வெற்றி கொள்வதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.” – என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கி கணவனும், மனைவியும் பலி – அம்பாறையில் சோகம்!

அம்பாறை,  திருக்கோவில் பிரதேச வினாயகபுரத்தைச் சேர்ந்த கணவனும் மனைவியும் மின்னல் தாக்கி பலியாகியுள்ளனர். இத்துயர் சம்பவம் இன்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வினாயகபுரம் தபாலக வீதியைச்சேர்ந்த 46 வயதுடைய லோகநாயகம் யோகேஸ்வரன் மற்றும் அவரது மனைவி காசிப்பிள்ளை ஜெயசுதா(வயது46) ஆகிய தம்பதிகளே இவ்வாறு மின்னல் தாக்கி பலியாகியுள்ளனர்.

இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். சடலங்கள் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன.

குறித்த தம்பதியினர் சாகாமம் கப்பித்தலாவ பகுதியிலுள்ள தமது காணியில் நிலக்கடலை (கச்சான்) செய்கையிலீடுபட்டுக் கொண்டிருந்தபோது  இடி மின்னல் ஏற்பட்டது. அதற்குப்பயந்து ஓடிவருகையில் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது!

இலங்கையில் மேலும் 314 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

திவுலப்பிட்டிய மற்றும் பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்புபட்ட மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் பரவியுள்ளது.

இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

 

‘துமிந்தவையும் தமிழ் அரசியல் கைதிகளையும் ஒப்பிடுவது தவறு’

நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது தவறை மூடி மறைப்பதற்காக, அரசியல் கைதிகளின் விடுதலையை, துமிந்த சில்வாவின் விடுதலையுடன் ஒப்பிட்டுள்ளார். அதன்படி, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான மனுவையும் கையளிப்போமா என்று கேட்டது தவறான செயல் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வதிவிடத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
“ஓரிரு தினங்களுக்கு முன்னர், துமிந்த சில்வாவின் விடுதலை தொடர்பில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்ட மனுவில் தானும் கைச்சாத்திட்டதாகவும், அது மூன்று வாரங்களுக்கு முன்னர் இந்த சம்பவம் நடைபெற்றது.ஆனால், அது தற்போது நான் எதிர்பாராத விதமாக வெளிவந்துவிட்டது என்றும் மனோகணேசன் தொலைபேசியில் தெரிவித்தார்.

அந்த விடயம் வெளிவந்ததனால், சில நெருக்கடிகளும், சிக்கல்களும் ஏற்பட்டுள்ளதாக என்னிடம் தெரிவித்தார். அதை சமாளிப்பதற்கு, தமிழ் அரசியல் கட்சிகளின் விடுதலை தொடர்பான ஒரு மனுவை நாங்கள் சேர்ந்து கொடுத்தால் என்ன என என்னிடம் மனோ கணேசன் கேட்டார்.

துமிந்த சில்வாவின் விடுதலை மனுவில் கைச்சாத்திட்டத்திற்கான உண்மையான காரணத்தையும் அவர் என்னிடம் தெரிவித்திருந்தார்.தனிப்பட்ட உரையாடலின் போது, அவர் அந்த காரணத்தை என்னிடம் சொன்னதனால், அதை பகிரங்கமாக சொல்ல விரும்பவில்லை. அரசியல் நாகரீகத்தை அவர் பேணாவிட்டாலும், அதனை நான் பேண விரும்புகின்றேன்.

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் அவர் கூறியது. துமிந்த சில்வாவின் மனுவில் கையொப்பமிட்டதில் இருந்து தப்புவதற்கு, தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான மனுவை முன்வைத்தால் என்ன என்று கேட்டார். அதற்கு நான் மறுத்துவிட்டேன். மறுப்புத் தெரிவித்தமைக்கான காரணத்தையும் நான் கூறியிருந்தேன். அவர் சொல்வதைப் போன்று, இந்த நேரத்தில் அது தேவையில்லை என நான் கூறவில்லை. ஆனால் அது தவறான முன்மாதிரியாகிவிடும்.

தமிழ் அரசியல்வாதிகள் விடுதலை செய்யப்படுவதில் எந்த தவறும் இல்லை. ஆனால், துமிந்தசில்வாவை விடுதலை செய்வது தவறான விடயம்.எ னவே, நிறைவேற்ற முடியாத விடயத்தையும், கட்டாயம் செய்யப்பட வேண்டிய விடயத்தையும், ஒன்றாக காட்டுவது, மிக மிகத் தவறான செயற்பாடாகும்.

சுனில் ரத்னாயக்காவிற்கு மன்னிப்பு கொடுக்கப்பட்ட போது கூட, அப்படியானால், தமிழ் அரசியல்கைதிகளையும் விடுதலை செய்யலாம் தானே என்றதற்கு நான் எதிர்ப்புத் தெரிவித்திருந்தேன்.இந்த இரண்டு விடயங்களையும் ஒன்று சேர்க்க கூடாது. சுனில் ரத்னாயக்க விடுவிக்கப்பட்டது தவறான செயல். தவறான செயலை வைத்து, சரியான செயலை செய்வது, தவறான செயலையும், சரியானதென சொல்வதாக ஆகிவிடும்.

எனவே, சுனில் ரத்னாயக்காவின் விடுதலை தொடர்பாக, நாங்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருக்கின்றோம்.தமிழ் அரசியல்கைதிகளின் விடயத்தை, இந்த தவறான செயலுடன் சேர்க்க கூடாது. அவர்கள் கட்டாயமாக விடுவிக்கப்பட வேண்டியவர்கள்” என்று எம்.ஏ.சுமந்திரன் தனது உரையின் போது தெரிவித்தார்.

பிசிஆர் பரிசோதனை என்ற போர்வையில் கொள்ளை!

பிசிஆர் பரிசோதனை என்ற போர்வையில் அம்பான்பொல – மஹவ பகுதியிலுள்ள வீடொன்றிற்குள் சென்ற மூவர், அங்குள்ளவர்களுக்கு தூக்க மாத்திரையை வழங்கி, பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். இச்சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

பொது சுகாதார அதிகாரிகள் என தங்களை அடையாளப்படுத்திக்கொண்டே அவர்கள் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.

பின்னர் வீட்டில் இருந்தவர்களுக்கு ஏதோ மாத்திரையைக் கொடுத்து, அவர்கள் மயங்கிய நிலைக்குசென்ற பின்பு கொள்ளையிட்டுச்சென்றுள்ளனர். பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.

‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து மேலும் 140 பேர் மீண்டனர்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 140  பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,282 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 5 ஆயிரத்து 490 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதல் இற்றைவரை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 791 ஆக அதிகரித்துள்ளது.

பொதுமன்னிப்பு மனுவில் இ.தொ.கா. ஏன் கையொப்பமிடவில்லை? ஜீவன் விளக்கம்

” நாடு  மற்றும் மலையக மக்களின் நலனை முன்னிலைப்படுத்தியே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முடிவுகளை எடுக்கும். தனி நபர்களுக்காக ஒருபோதும் தீர்மானங்களை எடுத்தில்லை. இனி எடுக்கப்போவதும் இல்லை.” – என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

தலவாக்கலை நகரசபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பாரதிதாசன் நேற்று (29.10.2020) தமது கடமைகளைப் பொறுப்பேற்றார். இதற்கான நிகழ்வு ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் பின்னர் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் ஜீவன் தொண்டமான் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டார். இதன்போது மலையகத்துக்கான பல்கலைக்கழகம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு

” மலையக பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்துள்ளது. வரும் வரவு – செலவுத்திட்டத்தில் அதற்கான நிதி ஒதுக்கப்படும் என நம்புகின்றேன். இந்தியாவும் உதவிகளை செய்ய உள்ளது.” – என்று பதிலளித்தார் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்.

அத்துடன், துமிந்த சில்வா விவகாரம் தொடர்பில் எழுப்பட்ட வினாவுக்கு பதிலளித்த அவர்,

” பொதுமன்னிப்பு வழங்கக்கோரும் மனுவில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கையொப்பமிடவில்லை. ஏனெனில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் காலம் முதலே தனி நபர்கள் தொடர்பில் காங்கிரஸ் முடிவுகளை எடுப்பதில்லை. நாடு மற்றும் சமூகத்தின் நலன்களை முன்னிலைப்படுத்தியே முடிவுகளை எடுத்துள்ளது.

பாதிக்கப்பட்ட நபருக்கு மேன்முறையீடு செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. சட்டம் உள்ளது. எனவே, சட்டத்திற்கு புறம்பாக என்னால் எதையும் செய்ய முடியாது.” – என்று குறிப்பிட்டார்.

அதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பள உயர்வு தொடர்பில் கருத்து வெளியிட்ட இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான  ஜீவன் தொண்டமான்,

“கொரோனா வைரஸ் தாக்கத்தில் சந்திப்புகளை நடத்த முடியவில்லை. இருந்தாலும் தனிப்பட்ட ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். நேற்று கூட தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவுடன் கதைத்தேன். விரைவில் தீர்வு கிட்டும்.” – என்று கூறினார்.

க.கிசாந்தன்

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

திமுக சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்படும்!

0
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் என முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து...

இலங்கை, மாலைதீவுக்கிடையில் 7 ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

0
மாலைதீவு மற்றும் இலங்கைக்கு இடையே பல்வேறு துறைகள் தொடர்பான 07 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளும் நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு (Dr....

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க கப்பல்மீது ஈரான் தாக்குதல்!

0
ஹோர்முஸ் நீரிணை வழியாக நுழைய முயன்ற அமெரிக்கப் போர்க்கப்பல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது. ஹார்முஸ் நீரிணைக்கு அருகில் அமெரிக்கப் போர்க்கப்பல் ராடார் கருவிகளை அணைத்துவிட்டு அத்துமீற முயன்றதாக ஈரான்...