Home Blog Page 3801

நுவரெலியா மாவட்டத்தில் நேற்றுவரை 33 பேருக்கு கொரோனா – 1,041 பேர் சுய தனிமையில்!

நுவரெலியா மாவட்டத்தின் 13 பொது பரிசோதகர் பிரிவுகளில் இதுவரை 33 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர் என்று மாவட்ட சுகாதார பணிப்பாளர் வைத்தியர் இமேஷ் பிரதாப சிங்க தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த தகவலை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

”  இன்றுவரை (நேற்று) பேலியகொட தொத்தணியுடன் தொடர்புடைய 25 கொவிட் – 19 தொற்றாளர்கள் நுவரெலியா மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கு முன்னர் பிரண்டிக்ஸ் கொத்தணியுடன் தொடர்புடைய 8 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர். (மொத்தம் -33)

இவர்களுடன் தொடர்பில் இருந்த 1041 பேர் இதுவரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 520 பேர் இருவார தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளனர். இவர்களுக்குள் ரிகில்லகஸ்கட வைத்தியாசாலையினரும் அடங்குகின்றனர்.

இவர்கள் தொடர்பான பீ.சீ.ஆர் பரிசோதனை நாளைய தினம் கிடைக்கவுள்ளது. எவ்வாறாயினும் பேலியகொட மற்றும் மினுவாங்கொட தொத்தணியுடன் தொடர்புடைய முதல் தொற்றாளர்கள் என கருதப்படும் 769 பேருக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் மாவட்டத்தில் கொவிட் 19 பரவல் நிலைமை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் இருந்து நுவரெலியாவுக்கு வருவோர் தமது பயணங்களை தொடந்ந்தும் மட்டுப்படுத்த வேண்டும் அப்படியானால் எம்மால் நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். தீபாவளி பண்டிகைக்காக அதிகளவானவர்கள் நுவரெலியாவுக்கு வந்தால் சுகாதார பிரிவினர் அசௌகரியத்திற்கு உள்ளாவர். அவ்வாறு பெருந்தோட்ட பகுதிக்கு எவரும் தொற்றுடன் வந்தால் நிலைமை மோசமடையும். தற்போது வலப்பனை, மஸ்கெலியா மற்றும் மல்தெனிய ஆகிய வைத்தியசாலைகளை கொவிட் 19 தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்க தயார்ப்படுத்தி வருகின்றோம்.

தற்போது மாவட்டத்தில் உள்ள தொழிற்பயற்சி நிலையம் ஒன்றை சிகிச்சையளிக்க பயன்படுத்தி வருகின்றோம். அதேபோல் ஸ்ரீபாத கல்வியர் கல்லூரியும் சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. அதில் 250 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது பேலியகொட கொத்தணியில் இருந்து வந்தவர்கள் குறிப்பிடதக்களவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். எனினும் அவர்களுடன் நெருங்கி பழகியவர்களின் மூலம் மீண்டும் தொற்று ஏற்பட கூடும். நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் நாளொன்றுக்கு 60 – 100 வரையான பீ.சீ.ஆர் பரிசோதனைகள் இடம்பெறுகின்றன.

ஒரு இயந்திரம் மாத்திரமே உள்ளது. இது போதாது எனவே அதற்கான வசதிகள் கிடைத்தால் இன்னும் அதிகமான பரிசோதனைகளை நடத்த முடியும். மஸ்கெலியா, அட்டன் பகுதி மக்களை அவர்களின் மொழியிலேயே தெளிவுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். மக்கள் ஒன்று கூடுவதை தவிர்ப்பது நல்லது அத்துடன் முழுமையான சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவது முக்கியம்” என்றார்.

கொட்டகலையில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று!

கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாத் தெரிவித்தார்.

கொட்டகலை டிரேட்டன் தோட்டத்தில் சின்ன டிரேட்டன் பிரிவு, கே.ஒ பிரிவு, ஆகிய பகுதியைச்  சேர்ந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

இவர்கள் இருவர் பேலியகொடை மீன் சந்தையில் தொழில் புரிந்த நிலையில் வீடு திரும்பியுள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையின் பிரகாரமே வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்படி இருவரும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். தொற்று உறுதியான நிலையில் அவர்கள் இருவரும் அம்பாறை பகுதியில் அமைந்துள்ள வைத்தியசாலைக்கு அழைத்துசெல்லப்படவுள்ளனர்.

க.கிசாந்தன்

‘மலையக தந்தை’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 121 ஆவது சிரார்த்த தினம் இன்று!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிறுவுனர் மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயாவின் 121 ஆவது சிரார்த்ததினம் இன்று (2020.10.30) அனுஷ்டிக்கப்படுகிறது.

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா 1930களில் தமது அரசியல் பயணத்தை ஆரம்பித்திருந்தார். 1930களின் ஆரம்ப காலப்பகுதியில் அட்டன் நகரில் காந்தி சேவா சங்கம் இயங்கி வந்தது. அச்சங்கக் கூட்டம் ஒன்றுக்கு சௌமியமூர்த்தி தொண்டமானை ஐயாவை அழைத்தனர்.

இவ்வாறு ஆரம்பமாகிய அன்னாரின் அரசியல் பயணம் ஜூலை 24, 1939 இல் ஜவஹர்லால் நேருவின் கருத்துக்கேற்ப ஆரம்பிக்கப்பட்ட இலங்கை இந்திய காங்கிரசின் கம்பளைக் கிளையின் தலைவராக, ஆகஸ்ட் 13 1939 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இலங்கையில் 1930களின் கடைசி பகுதியில் ஏற்பட்ட இந்திய எதிர்ப்பு அலைகள் காரணமாக அதிகளவான தோட்டத் தொழிலாளர்கள் இலங்கை இந்திய காங்கிரசில் இணைந்தனர். இதனால் அவர்களது பிரச்சினைகளை பேச வேண்டிய தேவை இலங்கை இந்திய காங்கிரசுக்கு ஏற்பட்டது.

ஆனால் இலங்கை இந்திய காங்கிரஸ் இந்திய தொழிலாளரது பிரச்சினைகளை தோட்ட நிர்வாகத்திடம் கொண்டு சென்ற போது அவர்கள் அரசியல் கட்சியுடன் பேச மறுத்தனர். மாறாக தொழிற்சங்கத்துடன் மட்டுமே பேச முடியுமென வாதிட்டனர்.

இதனால் 1940 மே மாதம் இலங்கை இந்திய காங்கிரசின் தொழிற்சங்க கிளை ஆம்பிக்கப்பட்டது. இதன் ஆரம்ப தலைவராக சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயாவும் அப்துல் அசீசும் தெரிவுசெய்யப்பட்டனர். 1940 செப்டம்பர் 7 – 8 இல் இலங்கை இந்திய காங்கிரசின் தொடக்க விழாவை தலைமை தாங்கி நடத்திய சௌமியமூர்த்தி தொண்டமான், இந்நிகழ்வே இவரது வாழ்வின் முதலாவது பிரதான அரசியல் நிகழ்வாகும். 1945ஆம் ஆண்டு நுவரெலியா பொதுக்குழுவில் இலங்கை இந்திய காங்கிரசினதும் அதன் தொழிற்சங்கத்தினதும் தலைவராக தெரிந்தெடுக்கப்பட்டார்.

1947 இல் 95 பாராளுமன்ற அங்கத்தவர்களை தெரிவுசெய்வதற்காக பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. இலங்கை இந்திய காங்கிரஸ் எட்டு ஆசனங்களுக்கு போட்டியிட்டு ஏழு இடங்களை கைப்பற்றியது. சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா நுவரெலியா தொகுதியில் போடியிட்டு, வெற்றி பெற்றார். சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா தொண்டமான் இலங்கையில் முக்கிய அரசியல் சக்தியாக வளரத் தொடங்கிய போது 1948 பெப்ரவரி 4 இல் இலங்கை சுதந்திரம் பெற்றது.

இலங்கையின் முதலாவது பாராளுமன்றத்தின் பிரதமரான டி.எஸ். சேனநாயக்கா இலங்கையில் பிரித்தானிய ஆட்சியின் போது இலங்கை வந்து குடியேறிய இந்திய பாகிஸ்தானிய மக்களது குடியுரிமையை பறிக்கும் சட்டம் ஒன்றை முன்வைத்து நிறைவேற்றினார்.

சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா இதற்கு எதிராக பாராளுமன்றில் வாதப்பிரதிவாதங்களை செய்தும் பலனற்றுப் போனது. குடியுரிமையைப் பறித்த பின்னர் டி. எஸ். சேனநாயக்கா இந்திய பாகிஸ்தானிய குடியுரிமைச் சட்டம்-1949 என்ற புதிய சட்டத்தை கொண்டு வந்தார். இதன்படி இலங்கை குடியுரிமையை பெற பல தகைமைகள் முன்மொழியப்பட்டிருந்தது.

இது சரியான சட்டமாக தெரிந்தாலும் பல நடைமுறைச் சிக்கல்களை கொண்டிந்தது. இதனால் அச்சிக்கல்களைச் சுட்டிக்காட்டி சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா இதனைப் பாராளுமன்றில் எதிர்த்தார்.

இலங்கை இந்திய காங்கிரசின் மத்தியக் குழு யாரும் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க கூடாது என தீர்மானித்தது. இதன்படி பெரும்பான்மையான இந்தியர்கள் விண்ணப்பிக்கவில்லை. டி. எஸ். சேனநாயக்காவின் மரணத்துக்கு பின்னர் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. இதன்போது இந்தியர்கள் குடியுரிமை அற்றவர்களாக இருந்தபடியால் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயாவும் ஏனைய ஆறு பிரதிநிகளும் மீண்டும் பாராளுமன்றம் செல்ல முடியவில்லை.

ஏப்ரல் 28, 1952 இல் இலங்கைவாழ் இந்திய மக்களுக்கு குடியுரிமை வழங்குமாறு பேரணியொன்றையும் சத்தியாக்கிரகம் ஒன்றையும் நடத்த ஆரம்பித்தார். ஏப்ரல் 29, 1952 இல் அசீசுடன் கூடச் சென்று பிரதமரின் அலுவலக அறைக்கு முன்னதாக சத்தியாகிரகத்தில் ஈடுபட்டார். பல சிக்கல்களுக்கு மத்தியில் இதனை தொடர்ந்து செய்தார்.

பல சந்தர்ப்பங்களில் பொலிசார் அவரை பலவந்தமாக சத்தியாக்கிரக இடத்தில் இருந்து அகற்றினாலும் மீண்டும் அவ்விடத்துக்கு திரும்பினார். பாராளுமன்றம் முன்பாகவும் தமது அகிம்சை போராட்டத்தை தொடர்ந்தார். இப்போராட்டங்கள் காரணமாக அரசு இந்தியர்களை மீண்டும் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க கோரியது. இதன் போது 850,000 பேர் குடியுரிமைக்காக விண்ணப்பித்தனர்.

பல போராட்டங்களின் பின்னர் மலையக மக்களுக்கு குடியுரிமையை பெற்றுத்தந்த அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா மீண்டும் 1977ஆம் ஆண்டு பாராளுமன்ற தெரிவானதுடன், 1999ஆம் ஆண்டு ஆண்டு இறக்கும்வரை அவர் ஆளும் அரசாங்கங்களில் முக்கிய அமைச்சுப் பதவிகளையும் வகித்திருந்தார்.

ஜே.ஆர்.பிரேமதாச, டி.பி.விஜேதுங்க, சந்திரிகா என நான்கு ஜனாதிபதிகளின் கீழ் அமைச்சுப் பதவிகளை வகித்த சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா, மலையக மக்களை இந்த நாட்டின் தேசிய நீரோட்டத்திற்கு கொண்டுவந்த மாபெரும் தலைவராவார்.

மலையக மக்களுக்கு எதிராக இனவன்முறைகள் கட்டவிழ்த்துவிட்ட சந்தர்ப்பங்களில் மக்களோடு மக்களாக நின்று அவற்றை தடுத்து நிறுத்தினார்.

1999ஆம் ஆண்டு செயமியமூர்த்தி தொண்டமான் ஐயா மறைந்திருந்தாலும் அவர் காட்டிய வழியில் தொடர்ந்து இ.தொ.கா. பயணித்து வருவதாக இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

நுவரெலியா மாநகர சபை உறுப்பினராக விந்தியா அன்சனி பதவியேற்பு!

நுவரெலியா மாநகர சபை உறுப்பினராக கே. விந்தியா அன்சனி, நகரபிதா சந்தனலால் கருணாரட்ன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

ஐக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாநகரசபை உறுப்பினராக இருந்த அஜித் குமார, நடந்து முடிந்த பொதுதேர்தலின் போது சுயேட்சை வேட்பாளராக நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டார்.

இதனால் அவருக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி தலைமைபீடம் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொண்டு அவரை நுவரெலியா மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து விலக்கியது.

இதனை தொடர்ந்து இக்கட்சியின்சார்பில் போட்டியிட்ட கே. விந்தியா அன்சனி நுவரெலியா மாநகர சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு

பதுளை மாவட்டத்தில் இதுவரை 11 பேருக்கு கொரோனா – 800 பேர் சுயதனிமையில்!

பதுளை மாவட்டத்தில் இதுவரையிலான (30-10-2020) காலப்பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் 11 பேர் மொத்தமாக கண்டுப்பிடிக்கப்பட்டு, கொழும்பு மற்றும் காத்தான்குடி ஆகிய இடங்களில் அமைந்துள்ள கொரோனா மருத்துவ நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்கள் அனைவருமே பி.சி.ஆர். பரிசோதனைகளில் கொரோனா தொற்றாளர்களென்று ஊர்ஜிதப்படுத்தப்பட்டவர்களாவர்.

மேலும், 800 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுமுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பி.சி.ஆர். பரிசோதனைக்குற்பட்டுள்ளனர். இத்தகையவர்களில் பலர் கொரோனா தொற்றாளர்களாக இருக்கக்கூடுமென்றும் கூறப்படுகின்றது.

இத்தகைய கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் பொருட்டு, பண்டாரவளை அரசினர் மருத்துவமனை வளாகத்தில் தனிப் பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கென நூறுகட்டில்கள் போடப்பட்டுள்ளன. ஒரே தடவையில் நூறு தொற்றாளர்கள் சிகிச்சை பெறுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பதுளை மாவட்டத்தில் பதுளை, பண்டாரவளை, தியத்தலாவை, வெலிமடை, ஊவா – பரணகமை, பசறை, ஹாலி-எலை, லுணுகலை ஆகிய இடங்களிலிருந்தே, மேற்படி 11 கொரோனா தொற்றாளர்கள் கண்டுப்பிடிக்கப்பட்டிருக்கின்றனர்.

மற்றும், இம்மாவட்டத்தின் ரொசட் பெருந்தோட்டப்பிரிவு, மேமலை பெருந்தோட்டப் பிரிவு ஆகிய இரு தோட்டங்களில் வெளியார் எவரும் பிரவேசிக்காமலும்,வெளியார் எவரும் அத்தோட்டங்களுக்குள் நுழையாதவகையிலும் சுகாதாரப் பிரிவினராலும்,அவ்வப் பகுதிபொலிசாரினாலும் தடைகளும் விதிக்கப்பட்டிருந்தன.

பசறைநகரில் இரு வர்த்தகநிலையங்களும், ஹாலி-எலைநகரின் மதுபானம் விற்பனைநிலையமொன்றும்,வெலிமடை–சாப்புக்கடை,தியத்தலாவைஆகிய இடங்களின் மீன் விற்பனைநிலையங்களும் கொரோனாதொற்றளர்கள் சென்ற இடங்களாகக் கண்டுப்பிடிக்கப்பட்டு,அவைகள் மூடப்பட்டுள்ளன. இவ் வர்த்தகநிலையங்கள் வாயில்களிலும்,தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளிலும் தடைசெய்யப்பட்ட இடங்களாக அறிவித்தல்களும் ஒட்டப்பட்டுள்ளன.

மினுவாங்கொடை,பேலியகொடைமீன் சந்தைமற்றும் அவ் வளாகத்தில் பல்வேறுதொழில் துறைகளில் ஈடுபட்டிருந்து,பி.சி.ஆர் பரிசோதனைகளில் கொரோனாதொற்றாளர்களாகவே,மேற்படி 11 பேரும் ஊர்ஜிதப்படுத்தப்பட்டவர்களாவர்.

எம். செல்வராஜா, பதுளை

’21 அடிவரை இறக்கைகள் கொண்ட மிகப்பெரிய பறவைகள்’

21 அடி வரை இறக்கைகள் மற்றும் ஹாக்ஸா போன்ற பற்கள் கொண்ட வரலாற்றில் மிகப்பெரிய பறக்கும் பறவைகள் எது என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

6 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் டைனோசர்கள் அழிந்துபோன உடனேயே, 21 அடி வரை இறக்கைகள் மற்றும் ஹாக்ஸா போன்ற பற்கள் கொண்ட பிரம்மாண்டமான பறவைகள் பூமியின் தெற்கு பெருங்கடல்களில் சுற்றித் திரிந்தன என்று கலிபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்த வார தொடக்கத்தில் சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், பல்லுயிரியலாளர்கள் குழு வரலாற்றில் மிகப் பெரிய பறவை இனங்கள் எதுவாக இருந்திருக்கலாம் என்பதைக் கண்டுபிடித்ததாகக் கூறப்பட்டு உள்ளது. 1980 களில் அண்டார்டிகாவின் சீமோர் தீவில் மீட்கப்பட்ட புதைபடிவங்கள் பெலகோர்னிதிட்கள் என அழைக்கபடும் பறவையின் புதைபடிவங்கள் அவை என அடையாளம் காணப்பட்டன.

இரண்டு பறவைகளுக்கு சொந்தமான கால் எலும்பு மற்றும் பகுதி தாடை எலும்பு அடங்கிய புதைபடிவங்கள் காணப்பட்டன. பெலகோர்னிதிட்கள் “எலும்பு-பல்” கொண்ட பறவைகள் என்றும் அழைக்கப்பட்டன.

“இந்த அண்டார்டிக் புதைபடிவங்கள் இவை உலகின் மிகப்பெரிய பறக்கும் பறவைகளை மட்டுமல்ல, இதுவரை வாழ்ந்த மிகப் பெரிய பறவைகளையும் குறிக்கும்” என்று அந்த ஆய்வு கூறியுள்ளது.

பாலியோண்டாலஜிஸ்ட் பீட்டர் க்ளோஸ் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள், கால் எலும்பு குறைந்தது 50 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று கண்டறிந்தனர், அதே நேரத்தில் தாடை எலும்பு சுமார் 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையது.

“எங்கள் புதைபடிவ கண்டுபிடிப்பு, 5 முதல் 6 மீட்டர் இறக்கைகள் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது – கிட்டத்தட்ட 20 அடி – பறவைகள் டைனோசர்கள் அழிந்த பின்னர் ஒப்பீட்டளவில் விரைவாக உண்மையான பிரம்மாண்டமான அளவுக்கு பரிணாமம் அடைந்து மில்லியன் கணக்கான ஆண்டுகளாக கடல்களை ஆட்சி செய்தன என்பதைக் காட்டுகிறது என்று கூறினார்.

எலும்பு-பல் பறவைகளின் புதைபடிவங்கள் உலகெங்கிலும் காணப்பட்டாலும், அண்டார்டிக் புதைபடிவங்கள் பழமையானவை என்றும் அவை ஆறு மில்லியன் ஆண்டுகளுக்குள் பறந்த பறவைகள் வெவ்வேறு வடிவங்களில் பன்முகப்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதைக் குறிக்கிறது என்றும் சி.என்.என் தெரிவித்துள்ளது.

ஆய்வின்படி, அண்டார்டிகா மிகவும் வித்தியாசமானது. அப்போது இப்பகுதி மிகவும் வெப்பமாக இருந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள், மேலும் நில பாலூட்டிகளின் தாயகமாக இதை கருதுகிறார்கள்.

ஊரடங்கு உத்தரவைமீறிய 1,260 பேர் கைது!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்ட நாளில் இருந்து இன்று காலை 6 மணிவரை, ஊரடங்கு சட்டத்தைமீறிய ஆயிரத்து 260 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரான பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அத்துடன், இக்காலப்பகுதியில் 180 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார்.

அதேவேளை, கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக சுகாதார மற்றும் பாதுகாப்பு தரப்பினரால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களையும், ஆலோசனைகளையும் பின்பற்றுமாறு மக்களிடம் அவர் கோரிக்கையும் விடுத்தார்.

பயணத்தடை மீள் பரிசிலனை குறித்து சாதகமான தீர்வு – சவேந்திர சில்வா நம்பிக்கை

அமெரிக்க இராஜாங்கச்செயலாளர் இலங்கையில் வைத்து விடுத்த அறிவிப்பு நடைமுறைக்குவரும் என நம்புகின்றேன் – என்று இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா  தெரிவித்தார்.

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்கச்செயலாளர் நேற்று (28) ஊடகவியலாளர் சந்திப்பிலும் பங்கேற்றார். இதன்போது  இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்க அரசாங்கம் விதித்துள்ள பயணத் தடை தொடர்பில் மீள்பரிசீலனை செய்யப்படும் என்ற அறிவிப்பை அவர் விடுத்திருந்தார்.

இது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே இராணுவத் தளபதி மேற்கண்டவாறு நம்பிக்கை வெளியிட்டார்.

” அமெரிக்க என்பது பலம்பொருந்திய நாடு, இராஜாங்கச் செயலாளர் பதவியை வகிப்பவரும் பலம் பொருந்திய நபராகவே கருதப்படுவார். எனவே, அப்படியான ஒருவர் வழங்கிய அறிவிப்பு தொடர்பில் சாதகமான பெறுபேறு கிடைக்கும் என நேர்கோணத்தில் சிந்திப்போம். அது எவ்வாறு நடைமுறைக்கு வரும் என்பது தொடர்பிலும் நல்லதாகவே யோசிப்போம்.” – என்றும் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

தொண்டமானின் 121 ஆவது சிரார்த்ததினம் இன்று – வீடுகளில் இருந்து நினைவுகூருமாறு கோரிக்கை!

அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் 121 ஆவது சிரார்த்ததின நிகழ்வுகள் இடம்பெறமாட்டாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

எனவே, மக்கள் தத்தமது வீடுகளில் இருந்தவாறு மாபெரும் தலைவரை நினைவுகூருமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்திய வம்சாவளி மக்களின் இதயங்களில் குடிகொண்டிருக்கும் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 121 வது சிரார்த்த தினம் இன்று (30) நினைவு கூறப்படுகின்றது. எனினும் இது தொடர்பான உத்தியோகபூர்வ நிகழ்வுகள் திட்டமிடப்பட்டிருந்தாலும் தற்போது நாட்டில் நிலவும் கொரோனா தொற்று காரணமாக அனைத்து நிகழ்வுகளும் இடம்பெற மாட்டாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

அதேபோல் மக்கள் தத்தமது வீடுகளில் இருந்தவாறே பிரார்த்தனையின் மூலமாக சிராத்த தினத்தை அனுஸ்டிக்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிர்வாக குழு அறிவித்துள்ளது.

நாட்டில் மேலும் 168 பேருக்கு கொரொனா -தொற்றாளர்களின் எண்ணிக்கை 9,791 ஆக உயர்வு!

இலங்கையில் மேலும் 168 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்புபட்ட 115 பேருக்கும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த 53  பேருக்குமே இவ்வாறு வைரஸ் பரவியுள்ளது.

இதன்படி இன்று இதுவரையில் 582 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

திமுக சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்படும்!

0
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் என முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து...

இலங்கை, மாலைதீவுக்கிடையில் 7 ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

0
மாலைதீவு மற்றும் இலங்கைக்கு இடையே பல்வேறு துறைகள் தொடர்பான 07 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளும் நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு (Dr....

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க கப்பல்மீது ஈரான் தாக்குதல்!

0
ஹோர்முஸ் நீரிணை வழியாக நுழைய முயன்ற அமெரிக்கப் போர்க்கப்பல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது. ஹார்முஸ் நீரிணைக்கு அருகில் அமெரிக்கப் போர்க்கப்பல் ராடார் கருவிகளை அணைத்துவிட்டு அத்துமீற முயன்றதாக ஈரான்...