Home Blog Page 3802

‘ஈஸ்வரனுக்காக 20 கிலோ உடல் எடையைக் குறைத்த சிம்பு’

க்சிம்பு தனது சமூக வலைதள பக்கத்தில் தான் உடல் எடையை குறைத்த பின் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

சிம்புவின் 46-வது படத்தை சுசீந்திரன் இயக்கி வருகிறார். படத்துக்கு ஈஸ்வரன் என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படத்துக்காக சிம்பு தனது உடல் எடையை 20 கிலோ குறைத்து இருக்கிறார். சிம்பு மெலிந்த தோற்றத்துடன் இருக்கும் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஈஸ்வரன் படத்தில் நிதி அகர்வால் கதாநாயகியாக வருகிறார். பாரதிராஜா, நந்திதா, மனோஜ், பால சரவணன், முனிஸ்காந்த் ஆகியோரும் நடிக்கின்றனர். படம் பொங்கல் பண்டிகையில் திரைக்கு வருகிறது.

இந்நிலையில், சிம்பு தனது சமூக வலைதள பக்கத்தில் தான் உடல் எடையை குறைத்த பின் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

தேவாலயத்துக்குள் கத்திகுத்து தாக்குதல் -மூவர் பலி! பிரான்சில் பயங்கரம்!!

பிரான்சில் தேவாலயத்தில் நுழைந்த பயங்கரவாதி நடத்திய கத்தி குத்து தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஒரு பெண் தலைதுண்டித்து கொல்லப்பட்டார்.

பிரான்ஸ் நாட்டின் பிரபல பத்திரிக்கையான சார்லி ஹேப்டோவில் வெளிவந்த நபிகள் நாயகத்தின் கேளிச்சித்திரத்தை பள்ளி வகுப்பில் மாணவர்களிடம் காட்டிய பாரிஸ் நகரை சேர்ந்த வரலாற்று ஆசிரியர் சாமுவேல் பெடி கடந்த 16 ஆம் திகதி தலைதுண்டித்து கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதன்பின் கேலிச்சித்திரங்களை காட்டியதால் தலைதுண்டித்து கொல்லப்பட்ட சாமுவேலின் அஞ்சலி நிகழ்ச்சியில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரான் பங்கேற்றார்.

அப்போது பேசிய அதிபர் இம்மானுவேல்,’கேலிச்சித்திரங்கள் வெளியிடுவதை கைவிடப்போவதில்லை’ என தெரிவித்தார். ஆனால், இம்மானுவேலின் கருத்துக்கு துருக்கி, பாகிஸ்தான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன.

இதையடுத்து, பிரான்சுக்கும் இஸ்லாமிய நாடுகளுக்கும் இடையே கருத்து மோதல் அதிகரித்தது. குறிப்பாக துருக்கி இந்த விவகாரத்தில் பிரான்சை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.

துருக்கி அதிபர் எர்டோகனை விமர்சித்து சார்லி ஹேப்டோ சமீபத்தில் கேலிக்கை சித்திரம் ஒன்றை வெளியிட்டது. இதற்கு பதிலடியாக ஈரானை சேர்ந்த பத்திரிக்கை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேலை அரக்கனாக சித்தரித்து கேலிச்சித்திரம் ஒன்றை வெளியிட்டது.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் நோட்ரி டேமி என்ற கிருஸ்தவ தேவாலயம் ஒன்று அமைந்துள்ளது. இந்த தேவாலயத்திற்குள் இன்று மதியம் கத்தியுடன் நுழைந்த மர்மநபர் அங்கு இருந்தவர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தினான். தன் கண்ணில் பட்டவர்களை எல்லாம் அந்த நபர் கத்தியால் கொடூரமாக தாக்கினான்.

இதனால், அதிர்ச்சியடைந்த மக்கள் தேவாலயத்தில் இருந்து தப்பிச்செல்ல முற்பட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பிரான்ஸ் போலீசார் தாக்குதல் நடத்திய நபரை கைது செய்தனர். மேலும், இந்த தாக்குதலை பயங்கரவாத தாக்குதல் என அறிவித்தனர்.

பயங்கரவாதி நடத்திய இந்த கொடூர கத்திக்குத்து 3 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதி ஒரு பெண்ணை தலைத்துண்டித்து கொலை செய்துள்ளான். மேலும், இந்த தாக்குதலில் பலர் படுகாயமடைந்தனர்.

நபிகள் நாயகத்தின் கேளிச்சித்திரத்தை பள்ளி வகுப்பில் மாணவர்களிடம் காட்டிய வரலாற்று ஆசிரியர் சாமுவேல் பெடியின் செயலுக்கு தண்டனை கொடுக்கும் விதமாகவே இந்த தாக்குதலை நடத்தியதாக பயங்கரவாதி தெரிவித்துள்ளான் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக 2016 ஆம் ஆண்டு இதே நைஸ் நகரில் பொதுமக்கள் மீது கண்டெய்னர் லாரியை மோதச்செய்து தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த தாக்குதலில் 86 பேர் உயிரிழந்தனர். மேலும் 458 பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் மேலும் 414 பேருக்கு கொரோனா தொற்று!

இலங்கையில் மேலும் 414 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்புபட்ட 352பேருக்கும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த 62 பேருக்குமே இவ்வாறு வைரஸ் பரவியுள்ளது.

இதன்படி திவுலப்பிட்டிய மற்றும் பேலியகொடை கொத்தணமூலம் இதுவரையில் 6 ஆயிரத்து 145பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

இன்று முதல் ’20’ அமுல்! சான்றுரை வழங்கினார் சபாநாயகர்!!

20 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (29) கையொப்பமிட்டார்.

இன்று (29) முற்பகல் 11.30 மணிக்கு சபாநாயகர் தனது கையொப்பத்தையிட்டு இதனை சான்றுரைப் படுத்தியதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.

இச்சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகமும் பணியாட்தொகுதி பிரதமானியுமான நீல் இத்தவலவும் கலந்துகொண்டிருந்தார்.

இதன் அடிப்படையில் அரசியலமைப்புக்கான 20வது திருத்தம் இன்று முதல் முழுமையாக அமுல்படுத்தப்படும்.

அரசியலமைப்பின் 20வது திருத்தம் கடந்த ஒக்டோபர் 22ஆம் திகதி மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதற்கான இரண்டாவது வாசிப்புக்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்தான குழுநிலையின் மூன்றாவது வாசிப்பின் போது ஆளும் கட்சி எதிர்க்கட்சியின் திருத்தங்கள் விவாதிக்கப்பட்டதுடன், மூன்றாவது வாசிப்பின் போதான வாக்கெடுப்பில் திருத்தத்துக்கு ஆதரவாக 156 வாக்குகளும், எதிராக 65 வாக்குகளும் அளிக்கப்பட்டதுடன், ஒருவர் வாக்களிப்பின் போது சமூகமளித்திருக்கவில்லை.

‘3 ஆம் திகதி இரு மணிநேரம் மட்டுமே நாடாளுமன்றம் கூடும்’

நிதி அமைச்சினால் முன்வைக்கப்பட்ட ஓதுக்கீட்டுச் சட்டமூலத்தை எதிர்வரும் நவம்பர் 12 ஆம் திகதி இரண்டாம் மற்றும் மூன்றாம் வாசிப்புக்கு உட்படுத்தி நிறைவேற்றுவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இன்று (29) தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், கொவிட் 19 நெருக்கடி காரணமாக அடுத்தவாரம் நாடாளுமன்றத்தின் செயற்பாடுகளை ஒரு நாள் மாத்திரம் முன்னெடுப்பதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைய நவம்பர் 03 முற்பகல் 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மாத்திரம் பாராளுமன்ற அமர்வுகள் முன்னெடுக்கப்படவிருப்பதுடன், அன்றையதினம் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் முன்வைக்கப்பட்டுள்ள மருத்துவக் கட்டளைச் சட்டத்தின் கீழான இரண்டு ஒழுங்குவிதிகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

அத்துடன், அன்றையதினம் வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் ஒதுக்கப்படாது. அதேநேரம், நாடாளுமன்றம் கூடும் தினத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அழைக்கப்பட்ட அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தவிர வேறு எவரும் நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைவதற்கு இடமளிக்காதிருக்கவும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஊடகப் பிரதிநிதிகளும் நாடாளுமன்ற நடவடிக்கைகளை அறிக்கையிடுவதற்கு நாடாளுமன்ற வளாகத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

நுவரெலியாவுக்கு சுற்றுலா வருவதற்கு தடை!

நுவரெலியாவில் உல்லாசப் பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் எம்.பி.ஆர்.  புஷ்பகுமார தெரிவித்தார்.

அவர் இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்

” நுவரெலியாவில் கடுமையாக தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. நாட்டின் கொரோனா தொற்றின் நிலைமை குறித்து மேலதிக அறிவிப்பு வரும் வரை நுவரெலியா நகரை பார்வையிடுவதற்கு வெளியாருக்கு அனுமதியில்லை.

தனிமைப்படுத்தப்பட்ட சட்ட விதிகளை பின்பற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதுகாப்பு படையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியா பார்க் மற்றும் கிரகெரி பூங்கா, கிரகெரி வாவியில் இடம்பெறும் படகு சேவை மற்றும் சந்ததென்ன உலக முடிவு உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தளங்களும் மூடப்பட்டுள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து எம்மை பாதுகாத்து கொள்வதற்கு அரசாங்கத்தின் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என்றார்.

தலவாக்கலை பி.கேதீஸ்

‘பண்டாரவளையில் கொரோனா சிகிச்சை நிலையம்’

கொரோனா நோய்த் தொற்றுள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்கும் பொருட்டு, பண்டாரவளையில் கொரோனா சிகிச்சை நிலையமொன்றினை அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக அரச வைத்திய சங்கத்தின் பதுளைக் கிளைத் தலைவர் பாலித்த ராஜபக்ச தெரிவித்தார்.

“ பண்டாரவளை அரசினர் மருத்துவமனை வளாகத்தில்,மேற்படி கொரோனா நிலையப் பிரிவு இடம்பெறும். இப் பிரிவில் நூறு நோயாளர்கள் சிகிச்சை பெற்றுவரும் வகையில் நூறு கட்டில்கள் போடப்பட்டுள்ளன. 100 நோயாளர்கள் ஒரு தடவையில் சிகிச்சைப் பெறும் வகையில் அனைத்துவசதிகளும், இங்குமேற்கொள்ளப்பட்டுள்ளன” என்றும் கூறினார்.

எம். செல்வராஜா ,பதுளை

‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து 4,142 பேர் மீண்டனர்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 67  பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,142 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 5 ஆயிரத்து 44 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதல் இற்றைவரை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 205 ஆக அதிகரித்துள்ளது.

வெலிமடையில் மீன் வியாபாரிக்கு கொரோனா!

வெலிமடை –சாப்புக்கடை மீன் விற்பனையாளருக்கு கொரோனா தொற்று ஊர்ஜிதமாகியதினால்  குறிப்பிட்ட மீன் விற்பனை நிலையத்தில் கடந்த மூன்று தினங்களாக மீன் கொள்வனவு செய்தவர்களின் விபரங்கள் கோரப்படுகின்றன.

இதன்படி 27-10-2020, 28-10-2020, 29-10-2020 ஆகிய மூன்று தினங்களில் மேற்படிமீன் விற்பனைநிலையத்தில் மீன் கொள்வனவுகளை மேற்கொண்டவர்கள் உடனடியாக        பதுளை பொதுசுகாதாரப் பிரிவினர் மற்றும் வெலிமடைப் பொலிஸ் நிலையத்தினர் ஆகியோருடன் தொடர்புகொள்ளுமாறுகேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தவறின் பகுதி சுகாதார சேவை பணியகத்தின் 057-2245178 ஆகியதொலைபேசி இலக்கத்துடன் உடனடியாக தொடர்புகொண்டு விபரங்களை தெரிவிக்கவும்.
அத்துடன் குறிப்பிட்ட மீன் விற்பனையாளருக்கு கொரோனாதொற்று அறிகுறிகள் தென்பட்டதினால் அவருக்குபி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதற்கமைய அவருக்கு  இன்று 29-10-2020ல் கொரோனாதொற்றுஉறுதிப்படுத்தப்பட்டது.
குறிப்பிட்ட நபருக்கு எவ்வகையில் கொரோனா தொற்று ஏற்பட்டதென்பது குறித்து தீவிரபுலன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
கொரோனா தொற்றளரான மீன் வர்த்தகர் கொழும்பு ஐ.டி.எய்ச். மருத்துவமனைக்கு இன்று கொண்டுசெல்லப்பட்டார்.

எம். செல்வராஜா பதுளை

பண்டாரவளையில் மூவருக்கு கொரோனா தொற்று!

பண்டாரவளை மாநகரின் பொது விற்பனை நிலையத்தில் மூவருக்கு கொரோனாதொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பண்டாரவளை மாநகரம்  முடக்கப்படலாமென்றும் தெரியவந்துள்ளது. தற்போது அது தொடர்பான கூட்டமொன்று நடைபெற்றுவருகின்றது.

தற்பேதைக்கு பண்டாரவளை மாநகர மரக்கறிசந்தைத் தொகுதிகாலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது .பண்டாரவளை மாநகரமேயர் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.

மேற்குறிப்பிட்ட மூவருக்கு கொரோனாதொற்று அறிகுறிகள் தென்பட்டதினால், அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் போதே, கொரோனா தொற்று ஊர்ஜிதப்பட்டது. இவர்கள் சிகிச்சைகளுக்குஅனுப்பவும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.

எம். செல்வராஜா, பதுளை

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

திமுக சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்படும்!

0
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் என முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து...

இலங்கை, மாலைதீவுக்கிடையில் 7 ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

0
மாலைதீவு மற்றும் இலங்கைக்கு இடையே பல்வேறு துறைகள் தொடர்பான 07 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளும் நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு (Dr....

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க கப்பல்மீது ஈரான் தாக்குதல்!

0
ஹோர்முஸ் நீரிணை வழியாக நுழைய முயன்ற அமெரிக்கப் போர்க்கப்பல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது. ஹார்முஸ் நீரிணைக்கு அருகில் அமெரிக்கப் போர்க்கப்பல் ராடார் கருவிகளை அணைத்துவிட்டு அத்துமீற முயன்றதாக ஈரான்...