Home Blog Page 3803

பிளே-ஆப் சுற்றுக்கு தெரிவாக 6 அணிகளுக்கிடையில் கடும் போட்டி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்னும் 8 லீக் ஆட்டங்களே உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் அணியாக வாய்ப்பை இழந்து வெளியேறி விட்டது. நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் முதல் அணியாக அடுத்த சுற்றை (பிளே-ஆப்) உறுதி செய்திருக்கிறது.

மீதமுள்ள 3 பிளே-ஆப் சுற்று இடத்துக்கு 6 அணிகள் வரிந்துகட்டுகின்றன. இதனால் கடைசிகட்ட ஆட்டங்களின் முடிவுகள் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ்: 12 ஆட்டங்களில் 8-ல் வெற்றிகளை குவித்துள்ள மும்பை அணி ரன்ரேட்டில் (+1.186) திடமாக இருப்பதால் அந்த அணியின் பிளே-ஆப் இடத்துக்கு ஆபத்து இல்லை. எஞ்சிய 2 ஆட்டங்களில் (டெல்லி, ஐதராபாத்துக்கு எதிராக) ஒன்றில் வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் டாப்-2 இடத்துக்குள் வந்து விடலாம்.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்: 14 புள்ளிகளுடன் உள்ள பெங்களூரு அணிக்கு இன்னும் 2 ஆட்டங்கள் (ஐதராபாத், டெல்லிக்கு எதிராக) உள்ளன. இவற்றில் கட்டாயம் ஒன்றில் வெற்றிக்கனியை பறித்தாக வேண்டும். இரண்டிலும் வாகை சூடினால் எந்த சிக்கலும் இருக்காது.

டெல்லி கேப்பிட்டல்ஸ்: கம்பீரமாக பயணித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முக்கியமான கட்டத்தில் தவிங்கி நிற்கிறது. கடைசி 3 ஆட்டங்களில் வரிசையாக தோல்வி அடைந்ததால் இப்போது பெரும் நெருக்கடிக்குள்ளாகி உள்ளது. 12 ஆட்டங்களில் 7 வெற்றி, 5 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்றுள்ள டெல்லி அணி கடைசி 2 ஆட்டங்களில் (மும்பை, பெங்களூருக்கு எதிராக) வென்றாக வேண்டும். குறைந்தது ஒன்றில் வெற்றி பெற்றால் தான் வாய்ப்பில் நீடிக்க முடியும்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: 12 ஆட்டங்களில் 6-ல் வெற்றி பெற்றுள்ள கொல்கத்தா அணி ரன்ரேட்டில் (-0.479) பின்தங்கியுள்ளது. அதனால் கடைசி 2 ஆட்டங்களிலும் (சென்னை, ராஜஸ்தானுக்கு எதிராக) ‘மெகா’ வெற்றி பெற வேண்டியது அவசியமாகும். ஒன்றில் தோற்றால் வாய்ப்பு மங்கி விடும்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்: 12 புள்ளிகளுடன் 4-வது இடம் வகிக்கும் பஞ்சாப் அணி ரன்ரேட்டை சரிய விடாமல் கடைசி 2 ஆட்டங்களிலும் (ராஜஸ்தான், சென்னைக்கு எதிராக) வெற்றி பெற்றால் போதுமானது. இதில் ஒன்றில் கோட்டைவிட்டால் மற்ற அணிகளின் சாதகமான முடிவுக்காக காத்திருக்க வேண்டியது இருக்கும்.

ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி: 12 ஆட்டங்களில் 5-ல் வெற்றி, 7-ல் தோற்றுள்ள ஐதராபாத் அணி கடைசி 2 ஆட்டங்களிலும் (பெங்களூரு, மும்பைக்கு எதிராக) முதலில் வெற்றி பெற வேண்டும். அதே சமயம் கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் கடைசி கட்ட ஆட்டங்களில் தோற்க வேண்டும். அப்போது தான் ஐதராபாத் அணிக்கு ‘பிளே-ஆப்’ கதவு திறக்கும். டெல்லி அணி தங்களது எஞ்சிய இரு லீக்கிலும் தோற்றால் அது ஐதராபாத்துக்கு இன்னும் சவுகரியமாக அமையும்.

ராஜஸ்தான் ராயல்ஸ்: 10 புள்ளிகளுடன் உள்ள ராஜஸ்தான் அணி கடைசி 2 லீக்கில் (பஞ்சாப், கொல்கத்தாவுக்கு எதிராக) வெற்றி காண வேண்டும். ஆனால் ராஜஸ்தானின் ரன்ரேட் (-0.505) மோசமாக இருப்பதால் கொல்கத்தா, பஞ்சாப், ஐதராபாத் அணிகள் தங்களது இறுதிகட்ட போட்டிகளில் ‘உதை’ வாங்கினால் தான் ராஜஸ்தான் அணி ‘பிளே-ஆப்’ அதிர்ஷ்டத்தை பற்றி நினைத்து பார்க்க முடியும்.

‘துமிந்தவுக்கு ஆதரவான மனுவிலிருந்து விலகிக் கொள்கிறேன்’ – மனோ அறிவிப்பு

மரண தண்டனை கைதியான துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறுகோரி கைச்சாத்திட்ட மனுவில் இருந்து விலகிக்கொள்வதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

துமிந்த சில்வாவுக்கு ஆதரவான மேற்படி மனுவில் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஐந்து எம்.பிக்கள் கைச்சாத்திட்டதற்கு தமிழ் மக்கள் மத்தியில் இருந்து கடும் எதிர்ப்புகள் வலுத்தன.

இந்நிலையிலேயே மனோ கணேசன் அதிரடியாக இவ்வாறானதொரு முடிவை எடுத்துள்ளார்.

இதன்போது மனோ மேலும் கூறியவை வருமாறு,

” புதிய அரசாங்கத்துக்கு மக்கள் பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொடுத்துள்ளார்கள். இதை பயன்படுத்தி, மிருசுவில் கிராமத்தில், கொலை குற்றம் புரிந்த இராணுவ சிப்பாய்க்கு பொது மன்னிப்பை, இன்றைய அரசு கொடுத்துள்ளது. அதற்கு தேவையான மக்கள் ஆணையை, தேர்தல் விஞ்ஞாபனத்தில் தாம் பெற்றுக்கொண்டதாக அரசாங்கம் கூறுகிறது.

அதேபோல், கடந்த ஆட்சியின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரோயல் பார்க் குடியிருப்பில், கொலைகுற்றம் புரிந்து, சிறையில் இருந்த நபருக்கு, பொது மன்னிப்பு அளித்து விடுதலை வழங்கினார்.

இந்த பின்னணியில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை விடுதலை செய்யும்படி கோரி பாராளுமன்ற உறுப்பினர்கள் 150 பேருக்கு குறையாதோரின் கையெழுத்தில், மனு ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆவணத்தில் நான் கையெழுத்திட்டது, இதன் மூலம் ஏற்படும் பிரச்சாரத்தை பயன்படுத்தி, தசாப்தகாலமாக சிறைவாசம் அனுபவிக்கும் 100 பேருக்கு குறைவில்லா தமிழ் அரசியல் கைதிகளின் நிர்க்கதி நிலைமையை நாட்டின் கவனத்துக்கு கொண்டு வரவே ஆகும்.

தமிழ் அரசியல் கைதிகளுக்கு கிடைக்க வேண்டிய நீதி, இதுவரைக்கும் நாட்டின் கவனத்துக்கே வரவில்லை. எனது முயற்சி, நாட்டின் தேசிய மட்டத்தின் கவனத்துக்கு இதை கொண்டு வந்து, அவர்களின் விடுதலைக்கு வழி தேடுவதாகும்.

துமிந்த சில்வா மனுவில் நான் கையெழுத்திட்ட பின்னர், இலங்கையின் முன்னணி தமிழ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் இருவரிடம், எமது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டி மனு ஒன்றை தயாரித்து, ஜனாதிபதியிடம் முன்வைக்கும் யோசனையை முன் வைத்தேன். ஆனால், எனது இந்த கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை.

நான் பாராளுமன்ற உறுப்பினர்கள் எம். ஏ. சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரையே தொடர்பு கொண்டேன். சுமந்திரன், தமிழ் கைதிகள் பற்றிய ஒரு மனுவுக்கு உரிய தருமணம் இதுவல்ல என்று கூறினார். அடைக்கலநாதன், இது தொடர்பில் பரிசீலித்து பதில் கூறுவதாக கூறினார். எனது இந்த இரண்டு பாராளுமன்ற தோழர்களின் கருத்துரிமையை நான் மதிக்கின்றேன்.

துமிந்த சில்வாவின் மனுவில், நான் கையெழுத்திட்டதின் பின்னுள்ள காரணத்தை புரிந்துக்கொள்ளாமல் ஒரு சிறு பிரிவினர் செயற்படுகின்றனர்.

எனது இருபத்தைந்து வருட அரசியல் வரலாற்றில், ஒருபோதும் கட்சி தாவாமல், அரசியல் அணி மாறாமல், பணத்துக்கு விலை போகாமல், கொள்கைவழி விலகாமல், எனக்கு விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல்களை கண்டு ஓடி ஒளியாமல், மனித உரிமைகளுக்காக அர்ப்பணிப்புடன் நான் பணியாற்றியுள்ளதாக மனப்பூர்வமாக நம்புகிறேன். ஆனால், எனது இந்த நேர்மையான வரலாற்றை நினைவுக்கூர்ந்து பார்க்க இவர்களுக்கு முடியாமல் போயுள்ளது.

அதேபோல், பல தசாப்தங்களாக சிறைவாசம் அனுபவிக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நான் எடுக்கும் முயற்சியை, அந்த தமிழ் கைதிகளை, கொலைக்காரர்களுக்கு இணையாக பார்க்கிறேன் என இன்னொரு தமிழ் தரப்பு என் மீது குற்றம் சாட்டுகின்றது.

இவர்களுக்கு நான் ஒன்றை கூற விரும்புகிறேன். இக்கைதிகளை, தமிழ் அரசியல் கைதிகள் என நாம் அடையாளப்படுத்தினாலும், இந்நாட்டின் தெற்கில் வாழும் பெரும்பான்மை மக்கள், அவர்களை இன்னமும் பயங்கரவாதிகளாகவே கணிக்கின்றனர். ஒருவரின் போராளி, அடுத்தவரின் குற்றவாளியாக தெரியும் உலக நடப்பை மறந்து, செயற்பட முடியாமையை இவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

தமிழ், முஸ்லிம், மக்கள் எதிர்கொள்ளும் இதுபோன்ற துன்பங்களுக்கு தீர்வுகளை தேட நாம் தெற்கின் சிங்கள மக்களுக்கு அவை பற்றிய புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது எப்போதும் எனது உறுதியான வழி நிலைப்பாடாகும்.

துமிந்த சில்வாவின் விடுதலை மனுவில் நான் கையெழுத்திட்டதினால், மக்கள் மத்தியிலுள்ள ஒரு பிரிவினரின் மத்தியில் குழப்ப நிலைமை ஏற்படுவதை பயன்படுத்தி, எனது அரசியல் எதிரிகள், எனக்கு எதிராக பொய் பிரசாரங்களை முன்னெடுத்து, என் மீதும், என் நேர்மையின் மீதும் களங்கம் கற்பிக்க திட்டமிட்டு முயல்வது எனக்கு தெரிகின்றது. இதன்மூலம், எனது ஜனநாயக போராட்ட அரசியல் வரலாற்றை அழிக்க சிறுபிள்ளைத்தன முயற்சிகளில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேற்கண்ட காரணங்களை மனதில் கொண்டு, துமிந்த சில்வாவின் விடுதலை மனுவில் நான் இட்ட கையெழுத்தை அகற்றிகொண்டு வாபஸ் பெறுகின்றேன்.

அதேபோல், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டி அரசாங்கத்தினதும், தெற்கின் சிங்கள மக்களின் கவனத்துக்கு கொண்டு செல்ல நான் மேற்கொள்ளும் முயற்சி, தவறாக புரிந்துக்கொள்ளப்படுவது தொடர்பில், நான் மிகவும் மனம் நொந்து போயுள்ளேன் என்பதையும் தெரிவிக்கின்றேன்.

எனினும், நீண்டகாலமாக தமது மனைவி, பிள்ளைகள், பெற்றோரை பிரிந்து, பெரும் துன்புற்று, சிறைசாலைகளில் வாழும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க நான் மேற்கொள்ளும் முயற்சிகளை தொடர்ந்தும் நான் முன்னெடுப்பேன்.

அதேபோல், ஒரே நாட்டுக்குள் இலங்கையர் என்ற முறையில், நாம் அனைவரும் வாழ்வதற்கு குந்தகமாக இருக்கும் தடைகளை அகற்றும் எனது பாதையிலிருந்து நான் ஒருபோதும் விலக மாட்டேன். ” -என்றார்.

‘ஊவாவில் சுகாதார நடைமுறை இறுக்கமாக பின்பற்றப்படவேண்டும்’ – ஆளுநர் பணிப்பு!

கொவிட் -19 வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடலொன்று ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில்  தலைமையில் ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன் போது கொவிட்-19 வைரஸ் மீண்டும் தலைதூக்கியுள்ள இந்த சந்தர்ப்பத்தில் சுகாதார அமைச்சினால் வெளியிட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்கள் அடங்கிய சுற்றறிக்கையைக் கடுமையாகப் பின்பற்றுமாறு ஆளுநரால் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

அத்துடன் கெப்படிபொல மற்றும் பண்டாரவளை பொருளாதார மையத்தில் முன்னெடுக்கப்படும் வியாபார நடவடிக்கைகள் சுகாதார முறைமைகளைப் பேணி, பாதுகாப்பான பிரதேசமாகத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்காக, குறித்த மையத்திற்கு சமூகமளிக்கும் அனைத்து வியாபாரிகளின் வாகனங்களும் தொற்று நீக்கம் செய்யப்பட்டு,

அவர்களுக்குரிய பிரதேசத்திற்குப் பொறுப்பான சுகாதார அதிகாரிகளினால் பரிந்துரைக்கப்படுவது கட்டாயமாகும் என உத்தரவிடப்பட்டது. மேலும் குறித்த சட்டதிட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் பதுளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுதர்ஷன டெனிபிடிய, பண்டாரவளை மேயர், ஊவா மாகாண பிரதான செயலாளர், ஆளுநரின் செயலாளர், பதுளை மற்றும் மொனராகளை மாவட்டச் செயலாளர்கள், பிரதி பொலிஸ் மா அதிபர், சுகாதார சேவை அதிகாரிகள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

க.கிசாந்தன்

உலகளவில் ஒரே வாரத்தில் 20 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று

கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் உலக அளவில் 20 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்து 79 ஆயிரத்த தாண்டி உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் 4 கோடி 47 லட்சத்து 74 ஆயிரத்து 763 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3 கோடியே 27 லட்சத்து 27 ஆயிரத்து 598 பேர் குணமடைந்துள்ளனர்.

இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த ஒரே வாரத்தில் உலக அளவில் 20 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதில் 13 லட்சத்திற்கும் அதிகமானோர் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் எனவும், 35 சதவிகிதம் அளவிற்கு அங்கு உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அதிகப்படியான பாதிப்புகளை உறுதி செய்வதில் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் முன்னணியில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீர் வெள்ளம் – 6 சிறார்கள் ஆற்றில் மூழ்கிப் பலி! ஆந்திராவில் சோகம்!!

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி ஆற்றின் வெள்ளத்தில் மூழ்கி ஆறு சிறுவர்கள் உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில், பூதேவிபேட்டாகிராமத்தை சேர்ந்தவர்கள் வேலருபாடு மண்டலத்தில் வசந்தவாடா கிராமத்திற்குச் சென்று ‘வனபோஜனம்’ (காட்டில் விருந்து) கொண்டாட, தாசரா பண்டிகைக்குப் சென்று உள்ளனர்.

அப்போது கிழக்கு கோதாவரி ஆற்றில் 6 சிறுவர்கள் குளிக்கச் சென்றபோது வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தனர்.

நீரில் மூழ்கத் துவங்கிய மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அவர்களை மீட்பதற்குள், அனைவரும் நீரில் மூழ்கி விட்டனர். 6 மாணவர்களின் உடல்களை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

இந்த சம்பவத்தில் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது. மீட்புப் படையினர் நீண்ட நேரம் போராடி ஆறு பேரின் இறந்த உடல்களையும் மீட்டனர். ஆந்திர மாநில ஆளுநர் பிஸ்வபூஷண் ஹரிச்சந்திரன் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

15 முதல் 16 வயதிற்குட்பட்ட ஆறு சிறுவர்களின் விவரம் தெரியவந்து உள்ளது. கங்காதர வெங்கட ராவ் (16), சிரமுலா சிவாஜி (16), கூனவரபு ராதாகிருஷ்ணா (15), கோட்டுபர்த்தி மனோஜ் (16), கர்நதி ரஞ்சித் (15), கெல்லா சாய் (16) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பேலியகொடையில் இருந்து சாமிமலைக்கு வந்தவர்கள் சுயதனிமையில்!

மஸ்கெலியா, சாமிமலை டீசைட் தோட்டத்துக்கு பேலியாகொடையில் இருந்து வருகை தந்த ஏழு நபர்களும் அவர்களின் குடும்பத்தினரும் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் கடந்த சில மாதங்களாக பேலியாகொடையில் தொழில் புரிந்து வந்த நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக தொடர்ந்து அவ்விடத்தில் தொழிலை மேற்க்கொள்ள முடியாத நிலையில் தமது சொந்த ஊரான டீசைட் தோட்டத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இது குறித்து மஸ்கெலிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து மஸ்கெலிய பொது சுகாதார பரிசோதகரால் நேற்று ( 28 ) மாலை அவ்விடத்திற்கு வருகைதந்து அவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்தனர். பீசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

சாமிமலை ஞானராஜ்

‘கொரோனா’ ஆரம்பப்புள்ளியின் மர்மம் நீடிப்பு! விசாரணை தொடர்கிறது!!

ஆவது அலையின் ஆரம்பப்புள்ளி இதுதான் என இன்னும் உறுதியாக கண்டறியப்படவில்லை. புலனாய்வு விசாரணைகள் தொடர்கின்றன. விரைவில் அது தொடர்பான தகவல்கள் வெளியிடப்படும் என்று கொரோனா ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா   தெரிவித்தார்.

துருக்கியில் இருந்து இலங்கைக்குவந்த உக்ரைன் விமான ஊழியர்களாலேயே கொரோனா வைரஸ் மீண்டும் பரவியது எனவும், இதுவே 2ஆம் அலையின் ஆரம்பப்புள்ளி எனவும் சிங்கள தேசிய நாளிதழொன்று அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது.

இது தொடர்பான புலனாய்வு அறிக்கை அரச உளவுப்பிரிவால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கும் பாதுகாப்பு சபையிடமும் கையளிக்கப்பட்டுள்ளன எனவும் அச்செய்தியில் கூறப்பட்டிருந்தது. இதன் உண்மை தன்மை எவ்வாறு என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இராணுவத் தளபதி மேற்படி தகவலை வெளியிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” 2 ஆவது அலையின் ஆரம்பப்புள்ளி தொடர்பான புலனாய்வு விசாரணைகள் இன்னும் நிறைவுபெறவில்லை. அது தொடர்பில் பலகோணங்களில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன. அவ்வாறு முன்னெடுக்கப்பட்ட விசாரணையின்போதுதான் துருக்கியில் இருந்து வந்தவர்கள் தங்கிய ஹோட்டல் தொடர்பான தகவல் கிடைத்தது. இதன் ஊடாகவே வைரஸ் பரவியிருக்கும் என 80 வீதம் நம்புகின்றோம். மினுவாங்கொடவுக்கும், இதற்கும் தொடர்பு இருக்கின்றது. ஆனால் அதுவே இறுதி முடிவு அல்ல.

வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் ஊடாகவே தொற்று பரவியிருக்கும் என நாம் ஏற்கனவே கூறியிருந்தோம். வான்வழி மற்றும் கடல்வழி என இரண்டிலும் வெளிநாட்டு தொடர்பு இருக்கின்றது. ஆகவே, நாலா புறங்களிலும் புலன் விசாரணைகள் தொடர்கின்றன. விரைவில் ஆரம்பப்புள்ளி தொடர்பான தகவல்கள் உரிய வகையில் வெளியிடப்படும். ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரிடம் ஆரம்பப்புள்ளி தொடர்பான அறிக்கை இன்னும் கையளிக்கப்படவில்லை. விசாரணைகள் நிறைவடைந்திருக்கலாம் என்ற ஊகத்தின் அடிப்படையில் அந்த செய்தி வெளியிடப்பட்டிருக்கலாம்.” – என்றார்.

நாட்டில் இதுவரை 4 லட்சத்து 77 ஆயிரம் PCR பரிசோதனைகள்!

நாட்டில் நேற்று 7 ஆயிரத்து 870 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன், இதுவரையில் 4 லட்சத்து 77 ஆயிரத்து 156 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 70 தனிமைப்படுத்தல் மையங்களில் 7 ஆயிரத்து 39 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரையில் 58 ஆயிரத்து 697 பேர் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்துகொண்டு வெளியேறியுள்ளனர்.

அதேவேளை, மினுவங்கொட கொரோனா கொத்தணி மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5ஆயிரத்து 731 ஆக அதிகரித்துள்ளது

கம்பளை நகரில் பஸ் தரிப்பிடம் காணாமல்போகும் அபாயம்!

கண்டி மாவட்டத்தில் உடபளாத்த பிரதேச செலயகத்துக்கு உட்பட்ட கம்பளை நகரில் , கண்டி – நுவரெலியா பிரதான பாதையில் பாலத்தின் அருகில் காணப்படும் பஸ்தரிப்பிடத்தை சிலர் சூட்சுமமான முறையில் ஆக்கிரமித்துவருகின்றனர். இதனால் பயணிகளுக்கு பஸ்களுக்காக அப்பகுதியில் சுதந்திரமாக காத்திருக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த பஸ் தரிப்பிடத்தில் கொழும்பு, கண்டி, குருணாகலை, யாழ்ப்பானம் போன்ற இடங்களில் இருந்து வரும் பஸ்களும், கம்பளை, நாவலபிட்டிய ஹட்டன் ,நுவரெலியா ,பூண்டுலோயா , தலவாக்கலை, ண்டாரவளை, வெலிமடை, பதுளை, கதிர்காமம் போன்ற இடங்களுக்கு செல்லும் பஸ்களும் நிறுத்தப்படுகின்றன.

அத்துடன், கம்பளையில் இருந்து நுவரெலியா, பூண்டுலோயா புஸ்ஸல்லாவை, புப்புரஸ்ஸ , தொலுவ ஊடாக கண்டி , துனுக்கேஉல்ல , தொரகல, கலத்த போன்ற இடங்களுக்கும், கிராம புறங்களுக்கும் செல்லும் சுமார் 300 இற்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரச பஸ்கள் இங்கு நிறுத்தப்படுகின்றன.

இந்த பஸ்கள் வரும் வரைக்கும் காத்திருக்கும் பயணிகளுக்கு இந்த இடத்தில் எவ்வித வசதியும் இல்லை. இவர்கள் காத்திருப்பதற்கு ஆரம்ப காலங்களில் இருந்த இடமும் தற்போது கம்பளை நகர சபையின் கடை அமைப்பினால் இல்லாமல் போய் உள்ளது.

இதனால் மழைக்காலங்களிலும் ஏனைய காலங்களிலும் இந்த பஸ் தரிப்பிடத்தை பாவித்து வரும் பொது பிரயாணிகளும் பாடசாலை மாணவர்களும் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர். அதனால் முன்னர் இருந்தது போல் இந்த பஸ் தரிப்படத்தை சீர் செய்து தருமாறு பிரயாணிகள் வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

மக்கள் செய்தியாளர் – பா.திருஞானம்

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்தது

இலங்கையில் மேலும் 211 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள 9 பேருக்கும் மற்றும் முன்னைய தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய 202 பேருக்கும் இவ்வாறு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

இதன்படி மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணியில் பதிவாகியுள்ள மொத்த கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 607 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை, இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் முதல் இற்றைவரையில் 9 ஆயிரத்து 81 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது. இதில் 4 ஆயிரத்து 75 பேர் குணமடைந்துள்ளனர் . 19 பேர் உயிரிழந்துள்ளனர். 4 ஆயிரத்து 987 பேர் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க கப்பல்மீது ஈரான் தாக்குதல்!

0
ஹோர்முஸ் நீரிணை வழியாக நுழைய முயன்ற அமெரிக்கப் போர்க்கப்பல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது. ஹார்முஸ் நீரிணைக்கு அருகில் அமெரிக்கப் போர்க்கப்பல் ராடார் கருவிகளை அணைத்துவிட்டு அத்துமீற முயன்றதாக ஈரான்...

நமுனுகுல – தன்னகும்பர பிரதான பாதையைப் புனரமைக்கக் கோரி மக்கள் பாரிய ஆர்ப்பாட்டம்!

0
நமுனுகுல – தன்னகும்பர பிரதான பாதையின் மிக மோசமான நிலையைக் கண்டித்தும், அதனை உடனடியாகப் புனரமைக்கக் கோரியும் அப்பகுதி மக்கள் இன்று நமுனுகுல நகரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். பல ஆண்டுகளாகப் பராமரிப்பு...

சொந்த தொகுதியில் ஸ்டாலின் தோல்வி!

0
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்துள்ளார். கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட அவர், தமிழக வெற்றிக் கழக வேட்பாளரிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார். கொளத்தூர் தொகுதியில் 22 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. இறுதி...