Home Blog Page 3804

வட்டகொடை நகரம் முடக்கம் – 10 குடும்பங்கள் தனிமையில்!

கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட வட்டகொடை யோக்ஸ்போட் தோட்ட பகுதியில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் பத்து குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அவருடன் தொடர்பை பேணியவர்கள் விபரமும் திரட்டப்பட்டு வருகின்றன.

இவர் பேலியகொடை மீன் சந்தையில் தொழில் புரிந்த நிலையில் வீடு திரும்பியுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையின் பிரகாரமே வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த தினத்தில் வந்த இவர் வட்டகொடை நகரத்தில் சில இடங்களுக்கு சென்று வந்தும் உள்ளார்.

இச்சம்பவத்தையடுத்து வட்டகொடை நகரிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன என்று கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்த் தெரிவித்தார்.

தொற்று உறுதியான நிலையில் அவர் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்படவுள்ளார்.

எனவே, எவரும் நகரப்பகுதிகளுக்கு வரவேண்டாம் எனவும், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வீடுகளிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

க.கிசாந்தன்

நாளை நள்ளிரவு முதல் மேல் மாகாணம் முழுவதும் ஊரடங்கு அமுல்

நாளை நள்ளிரவு 12 மணி முதல் மேல் மாகாணம் முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

இந்த ஊரடங்கு திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மஸ்கெலியா, சாமிமலை நகரங்களுக்கு பூட்டு!

மஸ்கெலிய மற்றும் சாமிமலை நகரங்களில் மக்கள் நடமாட்டத்தை குறைத்து கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்துவதற்கு கடைகளை மூடூவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பிரதேச சபைத் தவிசாளர் கோவிந்தன் செண்பகவள்ளி தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்காமல் மக்கள் நடமாட்டத்தை குறைக்கும் வகையில் இரண்டு நகரங்களின் வர்த்தக நிலையங்களை மூடி வைத்து கொவிட் பெரும்பரவலை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வர்த்தக சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கு அமைவாக எதிர்வரும் 31 ஆம் திகதி வரை வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சாமிமலை மற்றும் மஸ்கெலிய நகரங்களின் வர்த்தகர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க சுகாதார வைத்திய அதிகாரிகளின் இணக்கப்பாட்டுடன் பிரதேச சபை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

எனினும், ஒரு சில வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டிருந்ததை காணமுடிந்தது. அவற்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தினர்.

வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ள இக்காலப்பகுதியில் நகரங்களின் பிரதான இடங்கள் தொற்றுநீக்கம் செய்யப்படவுள்ளது.

அதேவேளை, பொது மக்கள் சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றவேண்டும் எனவும், வெளியில் இருந்து வருபவர்கள் சுகாதார மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு தகவல்களை வழங்கவேண்டும் எனவும் பிரதேச சபை தலைவி தெரிவித்தார்.

மஸ்கெலியா, பிரவுன்லோ தோட்டத்தில் கங்கேவத்த பிரிவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நபர் நேற்றிரவு சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் சிகிச்சைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். இவர் பேலியகொடை மீன்சந்தை கொத்தணி பரவலுடன் தொடர்புபட்டவர்.

க.கிசாந்தன்

‘பதுளையிலிருந்து வெளிமாவட்டங்களுக்கான இ.போ.ச. பஸ் சேவைகள் இடைநிறுத்தம்’

பதுளை பிரதான பஸ் நிலையத்திலிருந்து தூர இடங்களுக்குச் செல்லும் இ.போ.ச. பஸ்களுக்கு மறு அறிவித்தல் வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா,தொற்று அச்சமே, இத்தடைக்குபிரதானகாரணமென்று, இ.போ.ச. பதுளை டிப்போ பணிப்பாளர் தெரிவித்தார்.

பதுளைபிரதான பஸ் நிலையத்திலிருந்து கொழும்பு, யாழ்ப்பாணம்,காலி,பானந்துறை, கண்டி, அலுத்கம, இரத்தினபுரி, மட்டக்களப்பு ஆகிய இடங்களுக்குச் செல்லும் இ.போ.ச. பஸ்களுக்கே,மேற்படிதடைவிதிக்கப்பட்டுள்ளது.

பொதுசுகாதார சேவையினர் மீண்டும் அறிவிக்கும் வரை, இத் தடைகள் நடைமுறையிலிருக்குமென்றும்,பதுளைடிப்போபணிப்பாளர் மேலும்,தெரிவித்தார்.

எம். செல்வராஜா, பதுளை

எயார்டெல் லங்கா நாடு முழுவதிலும் சிறந்த 4G தொழில்நுட்பத்துடன் பலமடைய தயார்

இலங்கையிலுள்ள இளம் சமுதாயத்தினர் மத்தியில் பிரபலமடைந்துள்ள தொலைத்தொடர்பு சேவை வழங்குநரான எயார்டெல் லங்கா நிறுவனம் இலங்கை தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் (TRCSL) 4G வலையமைப்பு வசதிகள் கொண்ட ஒலி அலைக்கற்றை எல்லையை வெற்றிகரமாக தன்வசப்படுத்தியுள்ளதுடன் அதன்படி எயார்டெல் நிறுவனம் எதிர்காலத்தில் நாடு முழுவதிலும் 4G தொழில்நுட்பத்தைக் கொண்ட கவரேஜ் உடன் சேவையை வழங்கும்.

சிறந்த அலைவரிசையுடன் கூடிய 850ஆர்ண ஒலி அலைக்கற்றை எல்லைக்குள் எயார்டெல் 4G சேவை செயற்படவுள்ளது. விரிவான வலைப்பின்னலை உள்ளடக்கிய மிகவும் சிறந்த நாடு முழுவதும் உள்ளடக்கிய சிறந்த 4G வலைப்பின்னல் அனுபவமாக இந்த பரிமாற்றம் அமையும்.

அதன்படி, எயார்டெல் உலகளாவிய முதலீட்டு குழுமத்தினால் தமது பாவனையாளர்களுக்கு எயார்டெல் 4G வலைப்பின்னல் ஊடாக பொழுதுபோக்கு மற்றும் சுகாதார பாதுகாப்பை நோக்காகக் கொண்ட விரிவான எல்லையை புத்தாக்க செயலி (App) வரிசை மூலம் சிறந்த டிஜிட்டல் அனுபவத்தைப் பெற்றுக் கொடுக்கின்றது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த எயார்டெல் லங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் முகாமைத்துவப் பணிப்பாளருமான அஷீஷ் சந்திரா, “எமக்கு 4G வலைப்பின்னல் கவரேஜை முழுமைப்படுத்துவதற்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்கிய இலங்கை அரசிற்கும் மற்றும் TRCSLக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதனூடாக நாடு முழுவதிலுமுள்ள பாவனையாளர்களுக்கு சர்வதேச மட்டத்தில் பாரிய மற்றும் சிறந்த 4G சேவையை பெற்றுக் கொடுக்க எதிர்பார்த்துள்ளோம். வீட்டிலிருந்து அலுவலக வேலைகளை மேற்கொள்வதற்கும் மற்றும் கற்றல் செயற்பாடுகள் வீட்டிலிருந்து மேற்கொள்ளப்படும் நிலைமையின் முக்கியத்துவம் ஏற்பட்டுள்ள இந்த காலக்கட்டத்தில் அதனை கருத்திற் கொண்டு 850ஆர்ண ஒலி அலைக்கற்றை எல்லைக்குள் எமது பாவனையாளர்களுக்கு சிறந்த உள்ளக கவரேஜ் உடன் முழுமையான மாற்றத்துடன் அதிவேக வலைப்பின்னல் அனுபவத்தை பெற்றுக் கொடுக்க முடியும் என்பதே என்னுடைய நம்பிக்கையாகும்,” என அவர் தெரிவித்தார்.

Bharti Airtel Lanka வை பற்றி
2009 ஜனவரி 12ஆம் திகதி இலங்கையில் தமது நடவடிக்கைகளை ஆரம்பித்த பாரதி எயார்டெல் (எயார்டெல் லங்கா) நிறுவனம் தற்போது ஒருமில்லியன் வாடிக்கையாளர் மட்டத்தை நெருங்கிய இலங்கையின் வேகமான தகவல் தொலைத்தொடர்பு வலயமாகும். தமது வணிக செயற்பாடுகளை ஆரம்பித்த 2009ஆம் ஆண்டிலிருந்து 3 வருட குறுகிய காலப்பகுதிக்குள் எயார்டெல் நாட்டில் எல்லா பகுதிகளிலும் பரந்து விரிந்த சேவையை வழங்கியதோடு இன்று நாடு முழுவதிலும் தமது சேவையை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கை முதலீட்டுச் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள எயார்டெல் லங்கா தொலைத்தொடர்பு வலயமைப்பு சேவைகள் மற்றும் நிறுவன ரீதியான தீர்வுகள் உட்பட டிஜிட்டல் தொலைத்தொடர்பு சேவைகள் பலவற்றையும் வழங்குகின்றது. மேலதிக தகவல்களுக்கு www.airtel.lk என்ற இணையத்தளத்தை பார்வையிடவும்.

தேசிய ஒளடத ஆணைக்குழுவின் மருந்து விநியோகத்துடன் கைகோர்க்கும் Healthguard

இலங்கையின் முன்னணி மருந்தக வலைப்பின்னலைக் கொண்டுள்ள Healthguard  நிறுவனம், தேசிய மருந்தகங்களுக்கு இடையில் பாதுகாப்பான மருந்துகளை விநியோகிக்கும் நடவடிக்கைகளை பலப்படுத்துவதற்காக தேசிய ஒளடத ஆணைக்குழுவின் தொடர்ச்சியான முயற்சிகளுக்காக ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றது.

அதன்படி, தற்போதைய நிலைமையை மேலும் உயர்ந்த தரத்தில் முன்னெடுத்துச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கும் முகமாக சுகாதார பாதுகாப்பு முறையில் மருந்துகளை விநியோகிப்பதை மேலும் மேம்படுத்துவதற்கு வேண்டிய ஆரம்பகட்ட நடவடிக்கைகள் பலவற்றை ஆரம்பிப்பதற்கு Healthguard தயாராகி வருவதுடன், அந்த நடவடிக்கைகள் தேசிய ஒளடத ஆணைக்குழுவினால் உருவாக்கப்பட்ட ‘Guidelines on Good Pharmacy Practice (GPP) ஆவணத்தின் பரிந்துரைகளுக்கு அமைவாக முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, Healthguard மூலம் ‘Healthguard Cares’ அறிமுகப்படுத்தியதுடன், அதனூடாக உள்நாட்டு மருந்தக சமூதாயத்திற்குள் தமது வாடிக்கையாளர்களின் தேவைகளை சரியான விதத்தில் புரிந்து கொண்டு அவர்களுக்கான மருந்துகள் தொடர்பில் சிறந்த அறிவினைப் பெற்றுக் கொடுத்தல் மற்றும் சுகாதார பாதுகாப்பான மருந்துகளை விநியோகித்தல், பொறுப்புள்ள மருந்தங்கள் மற்றும் மருந்தாளர்களை உருவாக்குவது தொடர்பான நீண்டகால நோக்கத்தை மேலும் விஸ்தரிப்பதற்கு எதிர்பார்த்துள்ளது.

அதன்படி, எப்போதும் மருந்து சீட்டை மருந்தாளருக்கு வழங்கும் முக்கியத்துவம், மருந்துகளை வழங்குவதற்கு உரிய பரிந்துரைகளைப் போன்றே மருந்துகளை பாதுகாப்பாக பெற்றுக் கொடுப்பதற்கான முக்கியத்துவம் குறித்து தமது வாடிக்கையாளர்களுக்கு அறிவினைப் பெற்றுக் கொடுக்க ஹெல்த்கார்ட் எதிர்பார்த்துள்ளது.

ஒக்டோபர் மாதம் முழுவதும் ஹெல்த்கார்டினால் ளுழஉயைட ஆநனயை Pடயவகழசஅள ஊடாகவும் மற்றும் கொழும்பு மாவாட்டம் முழுவதிலும் அமைக்கப்பட்டுள்ள அவர்களது மருந்தகங்களின் ஊடாக மேலே குறிப்பிடப்பட்ட தொனிப்பொருள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், தேசிய ஒளடத ஆணைக்குழுவின் ஒத்துழைப்புடன் Healthguard Cares நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், தமது மருந்தாளர்களின் அறிவு மற்றும் பயிற்சிகளை மேம்படுத்துவதற்காக, முறையாகவும் மற்றும் சுகாதார பாதுகாப்பான மருந்துகளை தயாரிக்கும் நடவடிக்கைகளின் தரத்தை மேம்படுத்துவதற்காகவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. Healthguardஇன் நோக்கமானது மருந்தாளர் ஒருவரின் கடமையும் அதன் பொறுப்பையும் மேம்படுத்துவதே ஆகும்.

‘Healthguard Cares’ தொடர்பில் கருத்து தெரிவித்த தேசிய ஒளடத ஆணைக்குழுவின் பிரதான உணவு மற்றும் மருந்து பரிசோதகர் அமித் பெரேரா, Healthguard போன்ற முன்னணி வரிசையிலுள்ள மருந்து விநியோக நிறுவனம், சரியாகவும் மற்றும் பாதுகாப்பாகவும் மருந்துகளை பெற்றுக் கொள்ளும் முக்கியத்துவம் குறித்து நோயாளர்களுக்கு அறிவுறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயமென தெரிவித்துள்ளார்.

‘ஹெல்த்கார்ட் போன்ற முன்னணியிலுள்ள நிறுவனம் ஒன்று மருந்துகளை பெற்றுக் கொள்வதற்கு வைத்தியரின் பரிந்துரைகளுக்காக மருந்துச் சீட்டுகளை வழங்கும் முக்கியத்தும் மற்றும் மருந்துகளைப் பெற்றுக் கொள்கையில் கவனிக்க வேண்டிய விடயங்கள் குறித்து நோயாளர்களுக்கு அறிவுறுத்துதல் மிகவும் முக்கியமானதாகும். அத்துடன், மருந்தாளர்களுக்கு சரியான மருந்துகள், உரிய ஆலோசனைகளுடன் நோயாளர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கான தீர்மானம் மிக்க சேவையை வழங்குவதனால், அவர்களது அறிவு மற்றும் தகைமையை மேம்படுத்துவதற்கு பாராட்டத்தக்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. அதன்படி, நாட்டிலுள்ள பொதுமக்கள் மற்றும் நோயாளர்களுக்கு பாதுகாப்பான, சிறந்த தரத்திலான, மருந்துகளை வழங்குவதற்காக தேசிய ஒளடத ஆணைக்குழுவின் நோக்கத்திற்கு சமாந்திரமாக நடவடிக்கைகளை முன்னெடுக்கும் செயற்பாடுகள் மிகவும் பாராட்டத்தக்கதாகும்.’

ஹெல்த்கார்ட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி இன்ஃபியாஸ் அலி கருத்து தெரிவிக்கையில், ‘மருந்தாளர்கள் அவர்களது விரிவான அறிவினை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் அவர்களது மருந்துகளில் உச்ச அளவில் நன்மைகளை பெற்றுக் கொள்வதை உறுதிப்படுத்துகிறது. ஹெல்த்கார்ட்டிலுள்ள, எமது மருந்தாளர்கள் அனைவரும் வாடிக்கையாளர்களுக்காக மருந்துகளை பாதுகாப்பாக விநியோகிப்பதை உறுதிப்படுத்துதல், பாதுகாப்பான வழிநடத்தல்களை பின்பற்றுதல் மேம்படுத்தல் மற்றும் மேலும் பல விடயங்கள் குறித்து பூரண பயிற்சியும் பெறுகின்றனர். என்றுமில்லாத வகையில், மருந்தாளர் ஒருவருக்கு நோயாளர் ஒருவர் மருந்தொன்றை பயன்படுத்தும் போது அதனால் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாத வகையில் கையாழ வேண்டும். ஹெல்த்கார்ட் கெயார்ஸ் ஊடாக, தேசிய ஒளடத ஆணைக்குழுவின் பாதுகாப்பு மருந்து விநியோக மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி, மருந்துச் சீட்டு நிர்வகிப்பின் முக்கியத்துவம் குறித்து அறிவுறுத்துதல் மற்றும் அதைச் சுற்றி தீவிர உரையாடலை உருவாக்குவதற்காகவும் நாம் எதிர்பார்த்துள்ளோம்.’ என தெரிவித்தார்.

 

 

லங்கா பிரிமியர் லீக்கில் களமிறங்கும் யாழ் ஸ்டேலியன் கழகத்தைச் சேர்ந்த மூன்று வீரர்

பாடசாலை மற்றும் இளம் விளையாட்டு வீரர்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களுடன் விளையாடும் சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுக்கும் வகையில் லங்கா பிரிமியர் லீக் போட்டிகளில் பங்குபற்றும் Jaffna ஸ்டேலின் அணியின் ஊடாக யாழ்பாணத்திலுள்ள இளம் வீரர்கள் மூவர் நடைபெறவுள்ள லங்க பிரிமியர் லீக் போட்டியில் விளையாட சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த கிரிக்கெட் வீரர்களான டினோஷான் (18 வயது), விஜயகாந்தன் (19 வயது), மற்றும் கனகரத்னம் கபில்ராஜ் (21 வயது) ஆகியோர் கலந்து கொண்டனர்.

‘யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்த இவர்கள் பாடசாலை கிரிக்கெட் வீரர்களாக தங்கள் திறமைகளை வெளிக்காட்டியதனால் Jaffna ஸ்டேலியன் அணிக்கு தெரிவு செய்யப்பட்டமை பெரும் பாக்கியமாக கருதுகிறார்கள். அத்துடன் யாழ்ப்பாணத்திலுள்ள இளம் வீரர்களுக்குள் பெரும் உற்சாகமும் மற்றும் கிரிக்கெட் விளையாட்டில் முன்னோக்கிச் செல்லக் கூடிய வாய்ப்புக்கள் குறித்து பெரியோர்களுக்கும் புரிந்துணர்வை பெற்றுக் கொடுப்பதற்கும் இதுவொரு முதல் படியாக அமையுமென நான் நினைக்கிறேன். திசர பெரேராவின் தலைமைதுவதிலும் மற்றும் திலின கண்டம்பியின் பயிற்சியிலும் இந்த போட்டித் தொடரில் புரட்சியை ஏற்படுத்த எம்மால் முடியுமென நான் நம்புகிறேன். உரிய கிரிக்கெட் விளையாட்டு மைதானம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இல்லாத போதிலும் முழு திறைமைகளையும் வெளிக் காட்டி இந்த நிலைமைக்கு வந்துள்ள இந்த மூன்று யாழ்ப்பாண வீரர்கள் குறித்தும் நாம் மகிழ்ச்சியடைய வேண்டும். அத்துடன் இவ்வாறான சந்தர்ப்பத்தை வழங்குவதன் ஊடாக சர்வதேச மட்டத்திலான வீரர்களை உருவாக்குவதற்கு சந்தர்ப்பம் உள்ளது எனவும் துயககயெ ஸ்டேலியன் அணியின் மூலோபாய அதிகாரி ஆனந்தன் ஆனோர்ல்ட் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் துணைத் தலைவரும் லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடரின் பணிப்பாளருமான ரவீன் விக்ரமரத்ன, ‘இலங்கை முழுவதிலும் பரந்து கிடக்கும் திறமையான இளம் கிரிக்கெட் வீரர்கள் முன் வந்து தமது திறமைகளை காட்டுவதற்கு இந்த போட்டித் தொடர் பாரிய ஒரு தளமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. Jaffna ஸ்டேலியன் அணி காட்டியுள்ள இந்த சிறந்த ஒத்துழைப்பு ஏனைய அணிகளுக்கும் முன்னுதாரணமாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.’ என தெரிவித்தார்.

லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடரை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ள IPG நிறுவனத்தின் பிரதம நிறைபேற்று அதிகாரி அனில் மொஹான் கருத்து தெரிவிக்கையில், ‘லங்கா பிரிமியர் லீக்குடன் நாட்டிலுள்ள கிரிக்கெட் விளையாட்டு தொடர்பான சரித்திர ஏடுகளில் புதிய ஒரு அத்தியாயமாக இது இருக்குமென நான் தனிப்பட்ட விதத்தில் நம்புகிறேன். Jaffna ஸ்டேலியன்னினால் மேற்கொள்ளப்பட்ட இந்த பெரிய வேலையின் மூலம் புதியவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதுடன் இலங்கை முழுவதிலும் இந்த போட்டித் தொடர் குறித்து ஒரு மதிப்பை ஏற்படுத்துவதற்கு வழியமைக்கப்பட்டுள்ளது.’ என தெரிவித்தார்.

கம்பளையில் ஆணொருவரின் சடலம் மீட்பு! பலகோணங்களில் விசாரணை!!

கம்பளை நகரில் பழைய பாலத்துக்கு மேலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று (28.10.2020) காலை மீட்கப்பட்டது. பொலிஸ் அவசர பிரிவுக்கு (119) வழங்கப்பட்ட தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், விசாரணைகளை ஆரம்பித்தனர்.

தலைபகுதியில் காயம் ஏற்பட்டிருந்ததுடன், இரத்தக்கசியும் ஏற்பட்டிருந்தது. எனவே, இவர் கொலை செய்யப்பட்டுள்ளாரா என்ற கோணத்திலும் தற்போது விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.

வெலிமடை பகுதியைச் சேர்ந்த 37 வயதான லஹிரு பண்டார என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் எவ்வாறு கம்பளைக்கு வந்தார், என்ன நடந்தது என்பதை கண்டறிவதற்காக விசாரணைகள் இடம்பெறுகின்றன. பிரேத பரிசோதனைக்காக சடலம் கண்டி வைத்தியசாலைக்கு நீதவானின், ஸ்தல பரிசோதனையின் பின்னர் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

கம்பளை நிருபர்

வட்டகொடையிலும் ஒருவருக்கு கொரோனா! நகரத்தை முடக்க ஏற்பாடு!!

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டக்கொடை யொக்ஸ்போர்ட் தோட்டத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த தொற்றாளர் பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்புப்பட்டரெனவும் குறித்த தொற்றாளியை 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று 27/10/2020 செவ்வாய்க்கிழமை பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொண்டு 28/10/2020 பீ.சீ.ஆர் முடிவில் குறித்த நபருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கொட்டக்கலை -தலவாக்கலை சுகாதார பரிசோதகர் எஸ்.சௌந்தர்ராகவன் தெரிவித்தார்.

யொக்ஸ்போர்ட் தோட்டம் முழுவதும் தொற்று நீக்கிகளைத் தெளிப்பதற்கும் தொற்றாளியை கந்தக்காடுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக கொட்டக்கலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாந்த் தெரிவித்தார். மேலும் வட்டக்கொடை நகரத்தை தற்காலிகமாக மூடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நமது நிருபர் – நீலமேகம் பிரசாந்த்

ஹப்புத்தளையில் 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

ஹப்புத்தளையில் கொரோனாதொற்றாளரொருவர் கண்டுப்பிடிக்கப்பட்டதினால், அவருடன் தொடர்புகளை மேற்கொண்டிருந்த மூன்று குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பேலியகொடை மீன் சந்தையில் தொழில் செய்த கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர், ஹப்புத்தளைக்குவந்து சென்றதையடுத்தே, அவருடன் தொடர்புகளைக் கொண்டிருந்த மூன்று குடும்பங்களைச் சார்ந்த 16 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

பேலியகொடைமீன் சந்தையில் தொழில் செய்தவர் பீ.சி. ஆர் பரிசீலனைக்குற்படுத்தியவேளையில்,அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது ஊர்ஜிதப்படுத்தப்பட்டது. இந்நிலையிலேயே,அவர் ஹப்புத்தளைக்குவந்து, சென்றுள்ளார். அவர் தற்போது, கொழும்பு ஐ.டி. எய்ச் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றார்.

ஹப்புத்தளையில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் 16 பேரையும்,பீ.சி.ஆர். பரிசீலனைக்குற்படுத்தவும், குறிப்பிடப்படும் பகுதியில் நோய்த்தொற்றுநீக்கி திரவங்களைத் தெளிக்கவும்,பொதுசுகாதாரப் பிரிவினர் நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக, பொதுசுகாதாரப் பரிசோதகர் டி. சுதர்சன் தெரிவித்தார்.

எம்.செல்வராஜா, பதுளை

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

நமுனுகுல – தன்னகும்பர பிரதான பாதையைப் புனரமைக்கக் கோரி மக்கள் பாரிய ஆர்ப்பாட்டம்!

0
நமுனுகுல – தன்னகும்பர பிரதான பாதையின் மிக மோசமான நிலையைக் கண்டித்தும், அதனை உடனடியாகப் புனரமைக்கக் கோரியும் அப்பகுதி மக்கள் இன்று நமுனுகுல நகரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். பல ஆண்டுகளாகப் பராமரிப்பு...

சொந்த தொகுதியில் ஸ்டாலின் தோல்வி!

0
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்துள்ளார். கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட அவர், தமிழக வெற்றிக் கழக வேட்பாளரிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார். கொளத்தூர் தொகுதியில் 22 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. இறுதி...

மாலைதீவு ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு

0
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், அரச பயணம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சுவை (Dr. Mohamed Muizzu) வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு, ஜனாதிபதி...