Home Blog Page 3806

‘கொரோனா’ – இலங்கையில் மேலும் ஒருவர் பலி!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் இருவர் இன்று (27) உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு வாழைத்தோட்டம், கொம்பனிதெரு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

19 வயதுடைய இளைஞன் ஒருவரும், 87 வயதுடைய பெண்ணொருவருமே பலியாகியுள்ளனர்.

இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. இன்று மாத்திரம் இதுவரையில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவின் பிடிக்குள் இருந்து மேலும் 110 மீண்டனர்! 4,354 பேருக்கு சிகிச்சை!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 110 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,043 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 4 ஆயிரத்து 354 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதல் இற்றைவரை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 413 ஆக அதிகரித்துள்ளது.

‘கொரோனா’ – இலங்கையில் மேலும் ஒருவர் பலி!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த ஜா- எல பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.

மஸ்கெலியாவிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு 30ஆம் திகதிவரை பூட்டு!

மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதியிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் இன்று மாலை 4 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை மூடப்பட்டிருக்கும் என்று பிரதேச சபையின் தவிசாளர் செண்பகவள்ளி தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

” மஸ்கெலியா கங்கேவத்த பகுதியில் பேலியகொடை மீன்சந்தையோடு தொடர்புடைய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவரது மனைவிக்கும் இன்று (27) வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

எனவே சமூகப்பரவல் தடுக்கும் நோக்கத்தில் மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட மஸ்கெலியா நகரம் மற்றும் சாமிமலை உள்ளிட்ட நகரங்கள் 27/10/2020 இன்று மாலை 4 மணிமுதல் 30ம் திகதிவரை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்துள்ளார்.

இக்காலப்பகுதியில் நகரம் தொற்றுநீக்கம் செய்யப்படவுள்ளது.

நீலமேகம் பிரசாந்த்

‘வெட்கக்கேடு’ – முற்போக்கு கூட்டணி எம்.பிக்களுக்கு திலகர் ‘சாட்டையடி’ அறிக்கை!

இலங்கையில் சிறையில் வாடும் நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி ஜனாதிபதியிடம் ஒரு மனுவை சமர்ப்பிக்க முன்னிலையில் நின்று செயற்பட்டிருக்கவேண்டிய இந்த தரப்பு, ஆளுந்தரப்பினருடன் சேர்ந்து அவர்களது சகா ஒருவரை விடுதலை செய்ய நிறைவேற்று அதிகாரத்தைப்பயன்படுத்தக் கோருவது வெட்கக் கேடானது என்று நுவரெலியா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளருமான எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

கொலைக்குற்றத்துக்காக மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் கொழும்பு மாவட்ட பாராளுமன்றஉறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்கக்கோரிய ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களோடு இருபதை எதிர்த்து வாக்களித்த தமிழ்க் கூட்டமைப்பு எம்பிக்கள் ஐவரும்கையொப்பமிட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ் முற்போக்கு கூட்டணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது.

” மரண தண்டனைக் கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவது இதற்கு முன்பும் நடந்திருக்கிறது. ஆனால் துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கக் கோரி ஜனாதிபதிக்கு அனுப்பப்படும் கோரிக்கைமனுவில் தமிழ் முற்போக்கு கூட்டணி கையொப்பமிட்டுள்ள தருணம் ஆச்சரியத்தையும் சந்தேகத்தைஏற்படுத்துவதாக உள்ளது.

காரணம், ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களே இந்த கோரிக்கை மனுவை தயார்செய்து கையொப்பமிட்டுள்ளனர். ஆளுந்தரப்பில் ஏற்கனவே 157 பேர் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்த்தரப்பு எம்பிக்களான தமிழ் முற்போக்கு கூட்டணி யின் எஞ்சிய 5 உறுப்பினர்களும் கைச்சாத்திட்டதன் காரணமாகவே அந்த எண்ணிக்கை 160 எண்ணிக்கையைக் கடந்துள்ளது. 160 பேர் ஒப்பமிட்டதால்தான் நாங்களும் கையொப்பம் இட்டோம் என்பது சிறுபிள்ளைத்தனமானது. எந்த ‘எண்ணிக்கை’ அடிப்படையில் இந்ததீர்மானத்தை எடுத்திருக்கலாம் என்பதும் இப்போது கசிந்துள்ளது.

20 இன் உள்ளடக்கம் வேறு இந்த கோரிக்கை வேறு என இப்போது சப்பைக் கட்டு கட்டலாம். இந்தக்கோரிக்கையை எந்த ஜனாதிபதியிடம் முன்வைக்கிறீர்கள்? 20 ஐ நிறைவேற்றுவதன் மூலம் சர்வாதிகாரியாகமாற்றப்படுவார் என நீங்கள் கூக்குரலிட்ட ஜனாதிபதியிடம்தானே.அவருக்கு எதிராக வாக்களித்துவிட்டுஇப்போது அவரிடமே போய் ஒரு கொலைக் குற்றவாளி, அதுவும் ஐந்து நீதிபதிகள் கொண்ட நீதியரசர்கள்ஆயத்தினால் தீர்ப்பளிக்கப்பட்ட விடயத்தில் அத்தகைய நீதிமன்றத்தின் தீர்ப்பை கேள்விக்கு உட்படுத்தும்ஜனாதிபதியின் அதிகாரங்களை பயன்படுத்தக் கொருவதற்கு வெட்கப்பட வேண்டாமா?

கூட்டணியின் பதுளை மாவட்ட எம்பி 20 க்கு ஆதரவாக வாக்களித்தமையை அவர் என்ன நியாயத்தைச்சொன்னாலும் ஏற்கமுடியாது. அதேநேரம் வாக்களித்த அவருக்கு எதிராக உடனடியாக நீக்கல் உத்தரவைபிறப்பித்தவர்கள் அவர்களது கட்டளைத் தீர்மானத்தின் ஈரம் காய முன்னர் அந்த 20 இன் அதிகாரங்களைப்பயன்படுத்தக் கோரும் மனுவில் கையொப்பம் இட்டதை எப்படி நியாயம்படுத்த முடியும். ? அந்த குற்றவாளியானமுன்னாள் எம்பி துமிந்த திருந்துவதற்கு வாய்ப்பு வழங்கப்படவேண்டுமாம். அப்படியாயின், கொலைக்குற்றம் அளவுக்கு இல்லாது தமது கூட்டணி தீர்மானத்துக்கு மாறாக ஒரு வாக்கினை அரசாங்கத்துக்கு ஆதரவுவழங்கிய அரவிந்தகுமார் எம்பியும் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படலாமே!

ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்ளும், சர்வாதிகாரத்தை விரும்பாத யாரும் இலங்கை அரசியல் அமைப்பின்இருபதாவது திருத்தத்தை ஏற்கமாட்டார்கள். அந்தவகையில் அரவிந்தகுமார் எம்.பி செய்தது வரலாற்றுத்தவறுஎன்பதை மறுப்பதற்கில்லை. அதே நேரம், அவரது வாக்களிப்பு விவகாரத்தைச் சுட்டிக்காட்டி தமது அணியில்இருந்து உடனடியாக அவரை நீக்க உத்தரவிட்டவர்கள் 2/3 பெரும்பான்மையை வென்ற அதே அரசாங்கத்தின்ஜனாதிபதியிடம் துமிந்த சில்வாவை விடுதலை செய்யுமாறு கோரும் மனுவில் கையோப்பமிட்டதன் மூலம் 20 வது திருத்தத்துக்குள் தாமும் ஒளிந்திருந்தவர்கள்தான் என்பது அம்பலமாகியுள்ளது

ஆக, அரவிந்த குமாரின் திரையை அவசரமாக விலக்கப்போய் தமது முகத்திரைகளை முழுமையாக கிழித்துக்கொண்ட சந்தர்ப்பமாக இந்த மனுமீதான கூட்டணியின் கையொப்பம் அமைந்துவிட்டது.

இலங்கையில் சிறையில் வாடும் நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரிஜனாதிபதியிடம் ஒரு மனுவை சமர்ப்பிக்க முன்னிலையில் நின்று செயற்பட்டிருக்கவேண்டிய இந்த தரப்புஆளுந்தரப்பினருடன் சேர்ந்து அவர்களது சகா ஒருவரை விடுதலை செய்ய நிறைவேற்று அதிகாரத்தைப்பயன்படுத்தக் கோருவது வெட்கக் கேடானது. ஒரு குற்றவாளி துமிந்த நினைவு வந்தவர்களுக்கு நூற்றுக் கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் நினைவில் வரவில்லையா என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

மதம் மாற்றப்பட்டவர்களை சொந்த மதங்களுக்கு மீட்க புதிய திட்டம்

மதம் மாற்றப்பட்டவர்களை சொந்த மதங்களுக்கு மீட்க புதிய திட்டம் ஞானசார தேரரைச் சந்தித்து செந்தில் பேச்சு

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை, பிரதமரின் பெருந்தோட்ட இணைப்பாளரும், பதுளை மாவட்ட இணைப்பாளருமான செந்தில் தொண்டமான் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

அண்மையில் பொருளாதார வசதிக்காக பிற மதங்களுக்கு மாற்றப்பட்ட மக்களை சொந்த மதத்திற்க்கு மீட்டெடுப்பதற்கான புதிய திட்டங்களை உருவாக்குதல் தொடர்பாகவும் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன், இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையிலான கலாசார மேம்பாடு குறித்து இதன்போது பேசப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் ஊவா மாகாணத்தில் பொருளாதார பிர்ச்சனைகளை இலக்காக வைத்து சொந்த மதங்களில் இருந்து வேறு மதங்களுக்கு மாறும் செயற்பாடுகளை தடுக்கும் வகையில் வேலைத்திட்டங்களை செந்தில் தொண்டைமான் மேற்கொண்டுவந்த நிலையில், இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

முற்றாக முடக்கப்பட்டது ஹட்டன்!

ஹட்டன் நகரம் உடன் அமுலுக்குவரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று  இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

ஹட்டன் பகுதியில் இதுவரையில் 10 இற்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அக்கரப்பத்தனை, ஆக்ரோ பகுதியிலும் ஒருவருக்கு கொரோனா!

அக்கரப்பத்தனை, ஆக்ரோ பகுதியில் உள்ள ஒருவருக்கும் கொரோன வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இவர் பேலியகொடை மீன் சந்தையில் தொழில் புரிந்துள்ளார். அண்மையில் வீடு திரும்பி அவரிடம் பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோதே வைரஸ் தொற்று இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

க.கிசாந்தன்

இன்றிரவு வருகிறார் மைக் பொம்பியோ – MCC உடன்படிக்கை கைச்சாத்திடப்படமாட்டாது!

அமெரிக்க இராஜாங்கச்செயலாளர் மைக் பொம்பியோவின் இலங்கை பயணத்தின்போத எம்சீசீ உடன்படிக்கையில் கைச்சாத்திடப்படமாட்டாது என்று அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்திலிருந்து  ‘ஒன்லைன்’ மூலம் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” சீனாவின் உயர்மட்ட தலைவர் ஒருவர் அண்மையில் இலங்கைக்கு வந்திருந்தார். அவரின் வருகைக்கு முன்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையில் காணொளி மாநாடுமூலம் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. தற்போது அமெரிக்க இராஜாங்கச்செயலாளர் இங்கு வரவுள்ளார். நாடுகளுக்கிடையிலான உறவை வலுப்படுத்துவதற்காக இராஜதந்திர மட்டத்தில் இவ்வாறான வருகைகள், சந்திப்புகள் இடம்பெறுவது வழமையே. எனவே, ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதை மையப்படுத்தி அமெரிக்க இராஜாங்கச்செயலரின் இலங்கை விஜயம் அமையவில்லை.

இலங்கையானது நடுநிலையான வெளிநாட்டுக்கொள்கையையே கடைபிடித்துவருகின்றது.அனைத்து நாடுகளுடனும் நட்புறவை பேணுவோம், ஆனாலும் எந்தவொரு நாட்டுக்கும் இலங்கையை பயன்படுத்திக்கொள்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என எமது ஜனாதிபதி தெளிவாக அறிவித்துவிட்டார். அதேபோல் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கான வாய்ப்பையும் வழங்கமாட்டோம்.

அமெரிக்க இராஜாங்க செயலரின் இலங்கை பயணத்தின்போது எந்தவொரு உடன்படிக்கையிலும் கைச்சாத்திடுவதற்கு நாம் எதிர்ப்பார்க்கவில்லை. 12 மணிநேரம் குறுகிய பயணத்தை மேற்கொண்டே இங்கு வருகிறார். ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்துவார்.” – என்றார்.

அதேவேளை, அமெரிக்க இராஜாங்கச்செயலாளர் இன்றிரவு 7.30 மணிக்கு இலங்கை வருகிறார். 12 மணிநேரமே அவர் தங்கியிருப்பார். ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

ஹட்டனில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று!

ஹட்டனில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று (27) காலை வெளியான பீசீஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே இவர்களுக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து இவர்களை சிகிச்சை முகாம்களுக்கு சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கொண்டுசெல்லும் நடவடிக்கை தற்போது இடம்பெற்றுவருகின்றது.

பேலியகொடை மீன் சந்தைக்குசென்றுவந்த ஹட்டன் நகரத்தில் உள்ள மீன் வியாபாரியொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை நேற்று முன்தினம் (25.10.2020) உறுதிப்படுத்தப்பட்டது. அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டனர். நெருங்கிய தொடர்பை பேணியவர்களுக்கு பீசீஆர் பரிசோதனையும் நடத்தப்பட்டது.

அந்த முடிவுகள் இன்று காலை வெளியாகின. இதன்படி குறித்த மீன் வியாபாரியின் குடும்ப உறுப்பினர்கள் ஐவருக்கும், அவரின் சாரதிக்கும், சாரதியுடன் தொடர்பை பேணிய ஒருவருக்கும், மீன் கடைக்கு அருகில் உள்ள கோழிக் கடையில் பணியாற்றிய இருவருக்கும், அவர்களுடன் தொடர்பை பேணிய ஒருவருக்குமே இவ்வாறு வைரஸ் பரவியுள்ளது.

க.கிசாந்தன்

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

சொந்த தொகுதியில் ஸ்டாலின் தோல்வி!

0
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்துள்ளார். கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட அவர், தமிழக வெற்றிக் கழக வேட்பாளரிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார். கொளத்தூர் தொகுதியில் 22 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. இறுதி...

மாலைதீவு ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு

0
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், அரச பயணம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சுவை (Dr. Mohamed Muizzu) வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு, ஜனாதிபதி...

ஆளப்போறான் தமிழன்: விசில் அடித்து கொண்டாட்டம்!!

0
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தற்போதைய நிலைவரப்படி தமிழக வெற்றிக் கழகம் 110 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது. தஞ்சை உட்பட 3 தொகுதிகளில் தமிழக வெற்றிக்கழகம் வெற்றிபெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் தனித்து ஆட்சியமைப்பதற்குரிய சூழல்...