Home Blog Page 3807

நவம்பர் 10 ஐ.பி.எல். இறுதிப்போட்டி! வெற்றிவாகை சூடப்போகும் அணி எது?

கொரோனா அச்சத்தால் இம்முறை ஐ.பி.எல். தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. அபுதாபி, துபாய்,ஷார்ஜா ஆகிய 3 நகரங்களில் நடந்து வருகிறது. ஐபிஎல் தொடரில் ஏறக்குறைய லீக் ஆட்டங்கள் முடியும் நிலையில் இருக்கின்றன.

ஐபிஎல் தொடர் தொடங்கியபோது, லீக் சுற்றுகளின் திகதிகள், இடங்களை மட்டுமே அறிவித்திருந்த ஐபிஎல் நிர்வாகம், பிளே ஆப் சுற்றுக்கான திகதி , இடங்களை அறிவிக்கவில்லை. இந்நிலையில் பிசிசிஐ நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் நடக்கும் இடங்கள்,திகதிகளை அறிவித்துள்ளது.

பிளே ஆஃப் சுற்றில் முதல் தகுதிச் சுற்று ஆட்டம் நவம்பர் 5ஆம் திகதி துபாயில் நடைபெறுகிறது. இதில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் இரு இடங்களைப் பெற்ற அணிகள் மோதும். எலிமினேட்டர் ஆட்டம் நவம்பர் 6-ம் திகதி அபுதாபியில் நடக்கிறது. இதில் 3-வதுமற்றும் 4-வது இடம் பெற்ற அணிகள் மோதுகின்றன.

நவம்பர் 8-ம் திகதி அபுதாபியில் நடக்கும் 2-வது தகுதிச்சுற்றுஆட்டத்தில் முதல் தகுதிச்சுற்று ஆட்டத்தில் தோற்ற அணியும், எலிமினேட்டர் சுற்றில் வென்ற அணியும் மோதுகின்றன.

நவம்பர் 10 ஆம் தேதி துபாயில் இறுதிப்போட்டி நடக்கிறது. இதில் முதல் தகுதிச்சுற்றில் வென்ற அணியும், 2-வது தகுதிச்சுற்றில் வென்ற அணியும் மோதுகின்றன. போட்டிகள் அனைத்தும் இலங்க நேரப்படி இரவு 7.30 மணிக்குத் தொடங்குகின்றன.

‘பாதையை புனரமைத்து தாருங்கள்’ – ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

கண்டி மாவட்டம் உடபளாத்த பிரதேசத்திற்கு உட்பட்ட நீவ்பீகொக் தோட்டம் மற்றும் தொரகொல கிரமாத்திற்கான பிரதான பாதை பல வருடங்களாக திருத்தப்படாமல் காணப்படுகின்றது.

இந்த பாதையின் அவலம் காரணமாக மேற்படி பிரதேசங்களில் வாழும் பொதுமக்கள் அன்றாடம் பல இன்னல்களை அனுபவித்துவருகின்றனர்.

இந்தபாதையை திருத்தி தருமாறு சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டபோதும் இதுவரைக்கும் எவ்விதமான தீர்வும் கிடைக்கதாத நிலையில் இப்பிரதேசத்தில் காணப்படும் தொரகல பீகொக் ஹில் போதிருக்காம விகாரையின் விகாராதிபதி ஜனாதிபக்கு பகிரங்கமாக கோரிக்கை ஒன்றை முன் வைக்கின்றார்.

இந்தகோரிக்கையில் கம்பளையில் இருந்து இரட்டை பாதை நகரத்தின் ஊடாக நீவ்பிகொக் தோட்டம் தொரகல கிராமத்திற்கு வரும் 37 கிலோமீற்ற ரபாதையில் 4.5 கிலோமீற்றர் பாதை பலவருடங்களாக திருத்தபடாமல் பழுதடைந்துகாணப்படுகின்றது. இதனால் பாடசாலை மாணவர்கள் நோயாளர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துவருகின்றனர்.

தொரகல கிராமத்தில் பெருபாலனோர் விவசாய செயற்பாடுகளில் மரக்கரி உற்பத்திமற்றும் சிறுதேயிலை உற்பத்திகளை15.0000 ஏக்கரில் ஈடுப்படுகின்றனர். இவர்களின் உற்பத்திகளை சந்தைப்படுத்த முடியாத நிலையும் தோன்றியுள்ளது. இந்த பிரதேசத்தில் தமிழ் சிங்களமக்கள் அடங்களாக 10.000 திற்குமேல் வாழ்ந்துவருகின்றனர். இந்த பாதையை திருத்திதருமாறு பல அரசியல் வாதிகளுக்கு பலமுறைசொன்னாலும் அவை நிறைவேறவில்லை.இன்நிலையில் இந்தபாதையை ஜனாதிபதியாவது திருத்திதறுமாறு கோரிக்கைவிடுகின்றேன்.” – என்றார்.

மக்கள் செய்தியாளர் – பா. திருஞானம்

தியத்தலாவையில் அரச மருந்தக ஊழியருக்கு கொரோனா!

தியத்தலாவையின் அரச மருந்தகமொன்றின் ஊழியரொருவருக்கு கொரோனாதொற்று ஏற்பட்டிருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டதினால், அம் மருந்தகம் காலவரையறையின்றி இன்று 26-10-2020ல் மூடப்பட்டுள்ளது.

அத்துடன்,அம் மருந்தகத்தில் கடமையாற்றிய அனைவரையும் பி.சி.ஆர். பரிசீலனைக்குற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக, அப்பகுதிசுகாதாரப் பரிசோதகர் எஸ். சுதர்சன் தெரிவித்தார்.

தியத்தலாவை நகரில் அமைந்திருக்கும் அரச மருந்தகத்தின் ஊழியரொருவர் நோய்வாய்ப்பட்டதினால், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசீலனையில் அவருக்கு இன்று கொரோனா தொற்றுஏற்பட்டிருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.

இதனையடுத்து இம்மருந்தகத்திற்கு குறிப்பிடப்படும் தினங்களில் மருந்துவகைகளை பெற்றுக்கொள்ளவந்தவர்களையும் இனம் காணும் செயற்பாடுகளும் தற்போதுமேற்கொள்ளப்பட்டுவருவதாக,சுகாதாரப் பரிசோதகர் எஸ். சுதர்சன் மேலும் கூறினார்.

எம்.செல்வராஜா, பதுளை

துமிந்தவுக்கு பொதுமன்னிப்பு : ஜீவன், வேலுகுமார் கையெழுத்திட மறுப்பு?

துமிந்தவுக்கு பொதுமன்னிப்பு : ஜீவன், வேலுகுமார் கையெழுத்திட மறுப்பு?
ராமேஸ் எம்.பி, முஸ்லிம் எம்.பி. ஒருவரும் கையெழுத்து

மரண தண்டனைக் கைதியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு வழங்கக் கோரிய மனுவில் ஆளும் கட்சியின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரும் கையெழுத்திட்டுள்ளனர்.

இதில், ஆளும் கட்சியைச் சேர்ந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ஆகியோர் இந்த மனுவில் கையெழுத்திட மறுத்துள்ளதாக தெரியவருகிறது.

எனினும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி இராமேஸ்வரன் கையெழுத்திட்டுள்ளார். அத்துடன், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்

அத்துடன், மட்டக்களப்பு மாவட்ட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபீஸ் நசீர் அஹமட் கையெழுத்திட்டுள்ளதாக தெரியவருகிறது.

 

புலிகளின் முகாம் இருந்த இடத்தில் வெடிபொருட்கள் மீட்பு!

கிளிநொச்சி திருவையாறு 2ஆம் பகுதியில் தனியார் காணி ஒன்நில் அடையாளம் காணப்பட்ட வெடிபொருட்கள் இன்று நீதிமன்றின் அனுமதியுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளன.

குறித்த காணியில் நேற்று முன்தினம் வெடிபொருட்கள் அடையாளம் காணபப்பட்டதை அடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. குறித்த காணியில் வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்டமை தொடர்பில் கிளிநொச்சி பொலிஸாருக்கு பொது மக்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து குறித்த பகுதிக்கு சென்ற பொலிசார் அவற்றை அகற்றவதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டனர்.

இந்த நிலையில் இன்று முற்பகல் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றின்அனுமதியுடன் அப்பகுதியில் காணப்பட்ட வெடி பொருட்கள் விசேட
அதிரடிப்படையினரால் பாதுகாப்பாக அகற்றப்பட்டன. குறித்த வெடி பொருட்கள் பயன்படுத்த முடியாதவை என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றை பாதுகாப்பாக
செயலிழக்க செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்ட்டுள்ளதாக பொலிசார்
தெரிவித்துள்ளனர்.

குறித்த தனியார் காணியில் விடுதலைப்புலிகள் முகாம் அமைத்து இருந்துள்ளதுடன், தொடர்ந்து இராணுவத்தினர் அப்பகுதியில் முகாமிட்டிருந்த
நிலையில் கடந்த வருடமளவில் குறித்த காணி விடுவிக்கப்பட்டது. குறித்த வெடிபொருட்கள் எத்தரப்புக்கு சொந்தமானவை என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.

வாழ ஒரு வாய்ப்பளிக்க வேண்டும். துமிந்த விடுதலைக்கு மனோ விளக்கம்

முன்னாள் எம்.பி. துமிந்த சில்வா மதுபோதையில் தவறு செய்துவிட்டதாகவும், இளம் வயதில் இருக்கும் அவருக்கு சமூகத்துடன் வாழ ஒரு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மரண தண்டனைக் கைதி துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு வழங்கக் கோரி, ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட மனுவொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதில் ஆளும் கட்சி உறுப்பினரகளைத் தவிர எதிர்க்கட்சியில் உள்ள தமிழ் முற்போக்கக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவரும் கையெழுத்திட்டுள்ளனர்.

குறித்த மனுவில் கையெழுத்திட்டமைக்கான காரணத்தை விளக்கி, கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து மனோ கணேசன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கை :

”கொலைக் குற்றத்திற்காக சிறையில் உள்ள .முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, மதுபோதையில் இருக்கும்போதே பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்தரவின் கொலைச் சம்பவம் நடந்துள்ளது. அத்துடன், துமிந்த சில்வா தற்போது ஐந்து வருடங்கள் சிறைவாசம் அனுபவித்துள்ளார்.

நான் ஒரு அரசியல்வாதியாக இருப்பதற்கு அப்பால் மனித உரிமை செயற்பாட்டாளராகவும் இருக்கிறேன். வெள்ளை வேன் கடத்தல், நீதிக்குப் புறம்பபான கொலைகள், உயிர் அச்சுறுத்தல் என்பவற்றுக்கு எதிராகவும், எனது உயிரைப் பணயம் வைத்து போராடியுள்ளேன்.

எனவே, மனித உரிமைகள் என்ற விடயத்தில் எனக்கு யாரும் பாடம் எடுக்கத் தேவையில்லை. இளம் வயதினர் நீண்ட காலம் சிறைவாசம் அனுபவிக்கக்கூடாது. அத்துடன் அவர்கள் தமது தவறுகளை சரிசெய்துகொள்வதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும். இது எனது பொதுவான கருத்து. துமிந்த சில்வா ஐந்து வருடங்கள் சிறையில் உள்ளார். அவர் புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளார். அவர் சமூகத்தில் வாழ்வதற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

இதேபோல், அரசியல் சார் குற்றங்களுக்காக கைதுசெய்யப்பட்ட தமிழ் கைதிகள், தமது இளமைதின் பெரும்பகுதியை சிறையில் கழித்துள்ளனர். அவர்களில் இன்னும் விசாரணைகள் முன்னெடுக்கப்படாத, குற்றச்சாட்டுக்கள் எழுதப்படாதவர்களும் இருக்கின்றனர். அவர்களும் விடுவிக்கப்பட வேண்டும். அவர்களும் தமது குடும்பத்துடனும், சமூகத்துடனும் வாழ்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.” என்று மனோ கணேசன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 280 பேருக்கு கொரோனா 8,000 கடந்தது தொற்றாளர்களின் எண்ணிக்கை!

நாட்டில் மேலும் 263 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

திவுலப்பிட்டிய மற்றும் பேலியகொடை கொத்தணி பரவல்மூலம் 265 பேருக்கும், தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த 15 பேருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

2ஆவது அலை ஊடாக இலங்கையில் இதுவரையில் 4 ஆயிரத்து 678 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது.

அதேவேளை இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையில் 8 ஆயிரத்து 152 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

ஹாலி-எல, ஊவா கெட்டவல மற்றும் ராஜமாவத்தையை இணைக்கும் வீதியின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்

பதுளை, ஹாலி-எல, ஊவா கெட்டவல மற்றும் ராஜமாவத்தையை இணைக்கும் வீதியின் கார்ப்பட் செய்வதற்கான புனரமைப்புப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

ஒரு லட்சம் கிலோமீற்றர் வீதியை கார்ப்பட் செய்யும் வேலைத் திட்டத்தின் கீழ் குறித்த வீதியின் நிர்மாணப் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சுமார் 540 மில்லியன் ரூபா செலவில் இந்த அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தை அமைச்சர்களான நிமல் லாங்சா, நிமல்சிறிபால டி சில்வா, பிரதமரின் பெருந்தோட்ட இணைப்பாளரும், பதுளை மாவட்ட இணைப்பாளருமான செந்தில் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர சாமர, டிலான் பெரேரா, தெனிப்பிட்டிய ஆகியோர் கலந்துகொண்டனர்.

‘ ஹட்டனில் சுகாதார பரிசோதகர் சுயதனிமையில்’

ஹட்டன் -டிக்கோயா நகர சபையின் சுகாதார பரிசோதகர் ஒருவர் பாதுகாப்பு காரணம் கருதி அவருடைய உத்தியோகபூர்வ இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று ஹட்டன் டிக்கோயா நகரசபையின் தலைவர் பாலச்சந்திரன் இன்று (26.10.2020) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஹட்டன் நகரில் அமைந்துள்ள மீன் வியாபார நிலையத்தின் உரிமையாளர் கொரோனா தொற்று உறுதியான நிலையில் தற்போது அவர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த காரணத்தாலேயே ஹட்டன் டிக்கோயா நகர சபைiயின் சுகாதார பரிசோதகர் பாதுகாப்பு காரணம் கருதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுகாதார பரிசோதகரின் பி.சி.ஆர் பரிசோதனை முடிவு கிடைக்கப்பெற்றவுடன் மேலதிக நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.” எனவும் நகர சபை தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

குறித்த சுகாதார பரிசோதகர் மீன் வியாபாரியுடன் தொடர்பில் இருந்துள்ளமை தொடர்பில் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்தே அவரை அழைத்து விசாரித்தபோது அவர் அதனை ஒப்புக்கொண்டுள்ளார்.

நுவரெலியா  நிருபர் எஸ்.தியாகு

பதுளை ஸ்பிரிங்வெளி – மேமலை தோட்டம் முடக்கம்!

கொரோனா தொற்றாளரென்று ஊர்ஜிதமாகிய ஒருவர், பதுளைப் பகுதியின் ஸ்பிரிங்வெளி – மேமலை பெருந்தோட்டத்தின் மரண வீடொன்றிற்கு வந்து சென்றதையடுத்து, அம் மரண நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் தனிமைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மேமலை பெருந்தோட்டத்தில் கணேசன் முத்தம்மாள் என்ற 69 வயது நிரம்பிய பெண் 25-10-2020 அன்று மரணமாகியதையடுத்து, அவரது இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்ள ஹட்டனிலிருந்து எஸ். சிவராஜா என்ற நபர் வந்துள்ளார். இவர், பேலியகொடை மீன் சந்தையில் தொழில் செய்து வந்தவராவார்.

மேற்குறிப்பிட்ட இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்ட எஸ். சிவராஜா என்ற நபர், மீளவும் ஹட்டன் சென்றதும், இவர் மீது சந்தேகம் கொண்ட ஹட்டன் பொலிசாரும், சுகாதாரப் பிரிவினரும் அந்நபரை பி.சி.ஆர். பரிசோதனைக்குற்படுத்தினர். அப் பரிசோதனையில் அந் நபர் “கொரோனா தொற்றாளர்” என்பது ஊர்ஜிமாகியுள்ளது.

அதன் பின்னர், அந் நபருடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரையும் சுகாதாரப் பிரிவினருக்கு அறிவிக்கும்படி பொலிசார் கேட்டுள்ளனர். இத்தகவல் பதுளைப் பொலிசாருக்கு கிடைக்கவே, பொலிசாரும், பதுளை சுகாதாரப் பிரிவினரும் இன்று 26-102020ல் மேற்படித் தோட்டத்திற்கு விரைந்துள்ளனர்.

அத் தோட்டத்திற்கு விரைந்த பொலிசாரும், சுகாதாரப் பிரிவினரும் குறிப்பிட்ட மரண வீட்டில் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்ட அனைவரையும் தனிமைப்படுத்தி, பி.சி.ஆர். பரிசோதனைக்குற்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அத்துடன், இத்தோட்டத்திற்குள் வெளியார் எவரையும் பிரவேசிக்கவோ, இத்தோட்டத்திலுள்ளவர்கள் வெளி வெளியில் செல்லாதிருப்பதற்கும் பூரண தடை விதிக்கப்பட்டுள்ளன.

பதுளைப் பொலிசாரும், பதுளை சுகாதாரப் பிரிவினரும் இணைந்தே மேற்படி வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். இவ் வேலைத்திட்டத்தினை கண்காணிக்க பொலிசார் மற்றும் சுகாதாரப் பிரிவினர் ஆகியோர் மேற்படித் தோட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.

ஹட்டன் வாசியான பேலியகொடை மீன் சந்தையில் தொழில் செய்த எஸ். சிவராஜாவிற்கு கொரோனா நோய்த் தொற்று உறுதியானதையடுத்து அந்நபர், கொழும்பு ஐ.டி.எய்ச். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

பதுளை – மேமலை பெருந்தோட்டம் போன்றே, பதுளை – ரொசட் பெருந்தோட்டப் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

எம். செல்வராஜா, பதுளை

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

மாலைதீவு ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு

0
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், அரச பயணம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சுவை (Dr. Mohamed Muizzu) வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு, ஜனாதிபதி...

ஆளப்போறான் தமிழன்: விசில் அடித்து கொண்டாட்டம்!!

0
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தற்போதைய நிலைவரப்படி தமிழக வெற்றிக் கழகம் 110 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது. தஞ்சை உட்பட 3 தொகுதிகளில் தமிழக வெற்றிக்கழகம் வெற்றிபெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் தனித்து ஆட்சியமைப்பதற்குரிய சூழல்...

“மலையகப் பெண்கள் எவரிடமும் கையேந்தாத நிலையை உருவாக்க வேண்டும்”

0
மலைவாஞ்ஞன் மலையகப் பெண்கள் எந்தவொரு சூழலிலும் பிறரிடம் கையேந்தாத ஒரு தன்னம்பிக்கையான நிலையை உருவாக்க வேண்டும் என ஸ்ரீ சிகரம் (Sri Sigaram) நிறுவனத்தின் ஸ்தாபக தலைவி அகிலா கைலைநாதன் தெரிவித்தார். நுவரெலியா மாவட்டத்தின் பொகவந்தலாவ,...