Home Blog Page 3808

கொரோனாவின் பிடிக்குள் மேலும் 130 மீண்டனர்! 3,923 பேருக்கு சிகிச்சை!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 130 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3,933  ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 3 ஆயிரத்து 923  பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதல் இற்றைவரை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 872 ஆக அதிகரித்துள்ளது.

‘கொட்டகலை கொரோனா தொற்றாளர்கள் மூவரும் கந்தகாடு முகாமுக்கு அனுப்பிவைப்பு’

கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய மூவரும் கந்தகாடு சிகிச்சை முகாமுக்கு, சிகிச்சைக்காக சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இன்று (26) அழைத்துச்செல்லப்பட்டனர்.

கொட்டகலை சின்ன டிரேட்டன், வூட்டன் ஹில்ஸ், தலவாக்கலை தெவிசிறிபுர ஆகிய பகுதியைச் சேர்ந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

இவர்கள் இன்று மதியம் ஒரு மணியளவில் கந்தகாடு சிகிச்சை முகாம்க்கு சிகிச்சைக்காக சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மூவரும் பேலியகொடை மீன் சந்தையில் தொழில் புரிந்த நிலையில் வீடு திரும்பியுள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையின் பிரகாரமே வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்படி மூவரும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். தொற்று உறுதியான நிலையில் அவர்கள் மூவரும் வைத்தியசாலைக்கு அழைத்துசெல்லப்படவுள்ளனர்.

இச்சம்பவத்தையடுத்து கொட்டகலை நகரிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன என்று கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்த் தெரிவித்தார்.

எனவே, எவரும் நகரப்பகுதிகளுக்கு வரவேண்டாம் எனவும், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வீடுகளிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். உயர்தரப்பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

க.கிசாந்தன்

நுவரெலியாவில் 3 கடைகளுக்கு பூட்டு – 31 பேர் சுயதனிமையில்!

நுவரெலியா – கண்டி வீதியிலும் பிரதான வீதியிலும் மொத்தமாக மூன்று வியாபார நிலையங்கள் இன்று முதல் (26.10.2020) எதிர்வரும் 10.11.2020 வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக நுவரெலியா மாநகர சபை சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு கோட்டையில் இருந்து நேற்று முன்தினம் (24.10.2020) நுவரெலியாவிற்கு வியாபார நிலையங்களுக்கு பொருட்களை கொண்டுவந்த லொறி ஒன்றின் உதவியாளர் கடுமையான காய்ச்சலில் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று (26.10.2020) காலை அவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்தே சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று வியாபார நிலையங்களையும் தனிமைப்படுத்துவதற்கு சுகாதார பிரிவினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

நேற்று முன்தினம் (24.10.2020) கொழும்பில் இருந்து பொருட்களை ஏற்றிக் கொண்டு நுவரெலியாவிற்கு புறப்பட்ட குறித்த லொறியானது நேற்று முன்தினம் இரவே நுவரெலியாவை வந்தடைந்துள்ளது.இந்த லொறியில் கொண்டு வரப்பட்ட பொருட்களை நுவரெலியா கண்டி வீதியில் அமைந்துள்ள ஒரு வியாபார நிலையத்திற்கும் நுவரெலியா பிரதான வீதியில் அமைந்துள்ள வியாபார நிலையம் ஒன்றிற்கும் கையளித்துள்ளனர்.

பின்பு குறித்த லொறி உதவியாளர் அன்று இரவு கண்டி வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் தன்னுடைய உணவை உட்கொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து இவர் நேற்று கடுமையான காய்ச்சலுக்கு உல்லான நிலையில் இவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவரை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவருடைய பி.சி.ஆர் பரிசோதனை முடிவு கிடைக்கப்பெற்ற பின்பு மேலதிக நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் தெரியவருகின்றது. மொத்தமாக மூன்று வியாபார நிலையங்களிலும் 31 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு

சப்ரகமுவ மாகாணத்தில் 5 மேலதிக கொரோனா சிகிச்சை மையங்கள் தயார்!

சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளமையால் இம்மாகாணத்தில் கடுமையான கட்டுப்பாடுகளுக்கான துரித ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் அத்தியட்சகர் கபில கன்னங்கர தெரிவித்தார்.

சப்ரகமுவ மாகாணத்தின் கொவிட் 19 ஏற்பாடுகள் குறித்து ஊடகங்களுக்கு தகவல் தருகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தகவல் தருகையில் சப்ரகமுவ மாகாணத்தில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. இது இப்பிரதேசத்தில் கொரோனா தாக்கத்தின் துரிதத்தை அடையாளப்படுத்துகிறது.

நாடளாவிய ரீதியில் பாதிக்கப்பட்ட 80 கொரோனா நோயாளர்களுக்கு றம்புக்கன அரச வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு மேலதிகமாக இம்மாகாணத்தில் மேலும் 5 சிகிச்சை மையங்களை இறக்குவானை, கிலீமலை, உந்துகொட, பெலிகல, கிதுல்கலை ஆகிய பிரதேச வைத்தியசாலைகளிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி அனைத்துக் கொரோனா சிகிச்சை மையங்களும் தனியான கட்டிடங்களில் மிகவும் பாதுகாப்பான சூழலில் உள்ளதாகவும் அவர் தெரிவித் தார்.

ரொனால்டினோவுக்கும் கொரோனா தொற்று!

பிரேசில் அணியின் முன்னாள் கால்பந்தாட்ட வீரர் ரொனால்டினோவும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளார்.40 வயதான ரொனால்டினோ தனது வீட்டிலேயே தன்னை சுயதனிமைக்கு உட்படுத்திக்கொண்டுள்ளார்.

பிரேஸில் அணி 2002 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வெல்ல முக்கிய வீரராக இருந்தவர் ரொனால்டினோ. பிரேஸிலின் சிறந்த கால்பந்தாட்ட வீரரான ரொனால்டினோ 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளின் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான ஃபிஃபா விருதினையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கலஹாவில் 16 வயது மாணவருக்கு கொரோனா தொற்று!

கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேரவத்தை பகுதியில் 16 வயதுடைய மாணவரொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 15 ஆம் திகதி குறித்த மாணவரும் அவரின் பெற்றோரும் மீன் வாங்குவதற்காக பேலியகொடை மீன் சந்தைக்குச்சென்று 16 ஆம் திகதி ஊர் திரும்பியுள்ளனர்.

இவர்களிடம் கடந்த 24 ஆம் திகதி பீசீஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. பீசீஆர் பரிசோதனை முடிவு நேற்று (26) மதியம் வெளியானது. இதில் 16 வயது மகனுக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

தந்தை, தாய் ஆகியோருக்கு வைரஸ் தொற்று உறுதியாகாதபோதிலும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடம் இரண்டாம்கட்ட பீசிஆர் பரிசோதனை நடத்தப்படவுள்ளது. அத்துடன் இவர்களுடன் பழகிய ஐந்து குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

தொற்றுக்குள்ளான 16 வயது இளைஞன் தெல்தெனிய வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

புபுரஸ்ஸ நிருபர்

‘ மக்களின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது’

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவும் நிலையில் நாட்டு மக்களின் பூரண ஒத்துழைப்பு மூலம் மட்டுமே நிலைமையை கட்டுப்படுத்த முடியும் என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

மக்கள் சமூக இடைவெளியை அலட்சியப்படுத்தி நடமாட்டத்தை கட்டுப்படுத்தாவிட்டால் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாத ஒன்றாக மாறலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

நாளுக்கு நாள் வைரஸ் தொற்று பரவும் வேகம் அதிகரித்து வரும் நிலையில் இந்த நிலை தொடர்ந்தால் மேலும் பல உயிரிழப்புகள் ஏற்படலாம் என குறிப்பிட்டுள்ள அவர், தெரிவு செய்யப்பட்ட பகுதிகளிலேயே ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பொதுமக்களின் நடமாட்டத்திற்கு அரசாங்கம் கட்டுப்பாட்டு விதிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர் திருமணங்கள், சமய நிகழ்வுகள் மற்றும் மரணச் சடங்குகள் மூலமே இம்முறை கொரோனா வைரஸ் பெருமளவு பரவியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில் நாட்டில் வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொது மக்களின் பூரண ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை நேற்றைய தினம் மேலும் 263 பேர் புதிதாக வைரஸ் தொற்று நோயாளிகளாக இனங்காணப்பட்டுள்ள நிலையில் நாட்டில் இதுவரை மொத்தம் 7784 வைரஸ் தொற்று நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.

மூவருக்கு கொரோனா – கொட்டகலை நகருக்கு பூட்டு!

கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொட்டகலை சின்ன டிரேட்டன், வூட்டன் ஹில்ஸ், தலவாக்கலை தெவிசிறிபுர ஆகிய பகுதியைச் சேர்ந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

இவர்கள் மூவரும் பேலியகொடை மீன் சந்தையில் தொழில் புரிந்த நிலையில் வீடு திரும்பியுள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையின் பிரகாரமே வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்படி மூவரும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். தொற்று உறுதியான நிலையில் அவர்கள் மூவரும் வைத்தியசாலைக்கு அழைத்துசெல்லப்படவுள்ளனர்.

இச்சம்பவத்தையடுத்து கொட்டகலை நகரிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன என்று கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்த் தெரிவித்தார்.

எனவே, எவரும் நகரப்பகுதிகளுக்கு வரவேண்டாம் எனவும், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வீடுகளிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். உயர்தரப்பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

க.கிசாந்தன்

‘துமிந்தவுக்கு பொதுமன்னிப்பு’ -மனுவில் மனோ, திகா, ராதா கையொப்பம்!

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறுகோரி ஆளுங்கட்சி எம்.பிக்களால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ள மனுவில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் எம்.பிக்களும் கையொப்பமிட்டுள்ளனர் என்று சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர்களான பழனி திகாம்பரம், இராதாகிருஷ்ணன், அரவிந்தகுமார் மற்றும் மேலுமொரு எம்.பி. இவ்வாறு கையொப்பமிட்டுள்ளனர் எனவும் கூறப்படுகின்றது.

கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்திலேயே தமிழ் முற்போக்கு கூட்டணி போட்டியிட்டது.

‘கொரோனா’ தாக்கம் – பாராளுமன்றத்துக்கும் 2 நாட்கள் பூட்டு!

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதி மூடப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் மூடப்பட்டிருக்கும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

வைரஸ் ஒழிப்புக்கான தொற்றுநீக்கி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தல் நடவடிக்கையை முன்னெடுப்பதற்காகவே இவ்வாறு இரு நாட்கள் மூடப்படுகின்றன.

வழமைபோல் 28 ஆம் திகதி முதல் நாடாளுமன்ற நடவடிக்கைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

மாலைதீவு ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு

0
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், அரச பயணம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சுவை (Dr. Mohamed Muizzu) வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு, ஜனாதிபதி...

ஆளப்போறான் தமிழன்: விசில் அடித்து கொண்டாட்டம்!!

0
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தற்போதைய நிலைவரப்படி தமிழக வெற்றிக் கழகம் 110 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது. தஞ்சை உட்பட 3 தொகுதிகளில் தமிழக வெற்றிக்கழகம் வெற்றிபெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் தனித்து ஆட்சியமைப்பதற்குரிய சூழல்...

“மலையகப் பெண்கள் எவரிடமும் கையேந்தாத நிலையை உருவாக்க வேண்டும்”

0
மலைவாஞ்ஞன் மலையகப் பெண்கள் எந்தவொரு சூழலிலும் பிறரிடம் கையேந்தாத ஒரு தன்னம்பிக்கையான நிலையை உருவாக்க வேண்டும் என ஸ்ரீ சிகரம் (Sri Sigaram) நிறுவனத்தின் ஸ்தாபக தலைவி அகிலா கைலைநாதன் தெரிவித்தார். நுவரெலியா மாவட்டத்தின் பொகவந்தலாவ,...