Home Blog Page 3809

‘கொட்டகலையில் 12 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு PCR பரிசோதனை!

கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 12 குடும்பங்களைச் சேர்ந்தவர்களிடம் PCR பரிசோதனைக்கான மாதிரிகள் நேற்று (24) பெறப்பட்டுள்ளன.

இந்நிலையில் PCR பரிசோதனை முடிவுகள் நாளை (26) வெளிவரவுள்ளன.இந்த தகவலை கொட்டகலை பிரதேச சபையின் தவிசாளர் ராஜமணி பிரசாந்த், கொட்டகலை பொதுசுகாதார பரிசோதகர் சௌந்தராகவன் ஆகியோர் உறுதிப்படுத்தினர்.

பேலியகொடை மீன் சந்தை கொரோனா கொத்தணியுடன் தொடர்புபட்ட, கொட்டகலை பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

‘அரவிந்தகுமாருக்கு எதிராக நடவடிக்கை’ – தமிழ்க் கூட்டமைப்பு வரவேற்பு!

அரவிந்தகுமார் எம்.பியை இடைநிறுத்துவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி எடுத்துள்ள முடிவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் கூறியதாவது,

” அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்த அரவிந்தகுமாரை தமிழ் முற்போக்கு கூட்டணியில் இருந்து இடைநிறுத்துவதற்கு மனோ கணேசன் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த முடிவை வரவேற்கின்றோம். அதேபோல் முஸ்லிம் காங்கிரசும், மக்கள் காங்கிரசும் உரிய முடிவை எடுக்கவேண்டும்.

அவ்வாறு இல்லாவிட்டால் ஹக்கீம், ரிஷாட்டும் இரட்டை வேடம் போடுகின்றனரா என்ற சந்தேகம் எழும். அதேபோல இணைந்து பயணிப்பதிலும் சிக்கல் உருவாகும்.” – என்றார்.

இலங்கையில் 7,784 பேருக்கு கொரோனா – 3,803 பேர் குணமடைவு!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 89 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3,803 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 3 ஆயிரத்து 966 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதல் இற்றைவரை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 784 ஆக அதிகரித்துள்ளது.

‘மாகாண தேர்தலில் கொழும்பில் களமிறங்கும் பிரபா கணேசன்’

எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் வன்னியிலும், கொழும்பு மாவட்டத்தியிலும் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் பிரபா கணேசன் தெரிவித்தார்.

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

நாட்டில் மேலும் 263 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 263 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பேலியகொடை மீன் சந்தை கொத்தணி பரவல்மூலம் 227 பேருக்கும், தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த 36 பேருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

அரவிந்தகுமார் இடைநிறுத்தம்! விளக்கமளிக்க 14 நாட்கள் கெடு!!

மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னணி ஆகியவற்றின் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு முன்னிணியின் அரசியல் பிரிவுத் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமாருக்கு தற்காலிக தடைவிதிக்கப்பட்டுள்ளது.

20 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தது தொடர்பில் விளக்கமளிப்பதற்காக அவருக்கு 14 நாட்கள் அவகாசம் வழங்குவதற்கும், அவர் வழங்கும் பதிலின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் இராதாகிருஷ்ணன் எம்.பி. தெரிவித்தார்.

மலையக மக்கள் முன்னணியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று (25.10.2020) கொட்டகலையில் நடைபெற்றது. கூட்டம் முடிவடைந்த பின்னர் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக வாக்களிப்பதென மலையக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியன தீர்மானித்திருந்தன. இந்நிலையில் இம்முடிவைமீறி சட்டமூலத்துக்கு ஆதரவாக அரவிந்தகுமார் எம்.பி., வாக்களித்தது தொடர்பில் மத்தியகுழு கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.

கொவிட் – 19 தாக்கத்தால் சுமார் 60பேர்வரையே கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். பதுளை மாவட்ட உறுப்பினர்களை முக்கியமாக அழைத்திருந்தோம்.

அந்தவகையில் இது விடயம் தொடர்பில் அரவிந்தகுமார் எம்.பியிடம் விளக்கம் கோருவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. 14 நாட்களுக்குள் அவர் உரிய விளக்கத்தை முன்வைக்கவேண்டும். மத்திய செயற்குழுவின் இந்த முடிவு செயலாளர் ஊடாக அரவிந்தகுமார் எம்.பிக்கு அனுப்பிவைக்கப்படும்.

14 நாட்களுக்கு பின்னர் மத்திய குழுவும், கவுன்ஸிலும் மீண்டும் கூடும். அவர் விளக்கமளித்திருக்கும் பட்சத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அதுவரையில் மலையக மக்கள் முன்னணி, மலையக தொழிலாளர் முன்னணி ஆகியவற்றின் செயற்பாடுகளில் அவர் ஈடுபடக்கூடாது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகளுக்கு தனிப்பட்ட நிலைப்பாடுகள் இருக்கலாம், ஆனால் கட்சி, கட்டமைப்பு என வரும்போது கூட்டாக எடுக்கும் முடிவை எடுத்தாக வேண்டும்.  ” – என்றார்.

மஸ்கெலியா நகருக்கு வெளி வியாபாரிகள் வரத்தடை!

தீபாவளி பண்டிகை விற்பனைக்காக மஸ்கெலியா பிரதேச சபை எல்லைக்குள் வெளி மாவட்ட வியாபாரிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மஸ்கெலியா நகரில் நடைபாதை வியாபாரம், வர்த்தக நிலையங்களை வாடகைக்கு விடுதல் ஆகியவற்றுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது எனவும், இவற்றை மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மஸ்கெலியா பிரதேச சபை தவிசாளர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தைக்கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் பொலிஸ் நிலையத்தில் பதிவுசெய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிராம சேவருக்கும் தகவல் வழங்க வேண்டும்.

மஸ்கெலியா நிருபர் – பெருமாள்

ஹட்டன் நகரிலுள்ள அனைத்து கடைகளுக்கும் பூட்டு!

ஹட்டன் நகரிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் அவசரமாக மூடப்பட்டுள்ளன. தற்போது ஹகரிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் தொற்று நீக்கி தெளிக்கும் நடவடிக்கை ஹட்டன் – டிக்கோயா நகரசபையால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

பேலியகொடை மீன்சந்தைக்குசென்றுவந்த ஹட்டன் நகரத்தில் உள்ள மீன் வியாபாரி யொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதியானது. இது குறித்தான தகவல் இன்று காலை வெளியானது, இதனால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டது.

இந்தநிலையில் இன்று (25.10.2020) நகரத்திற்கு வருகை தந்த மக்கள் விடயம் அறிந்து பதற்றத்திற்குள்ளாகினர். அதேநேரத்தில் திடீரென கடைகள் மூடப்படும், ஹட்டன் நகரம் முடக்கப்படும் என்ற அச்சத்தால் மக்கள், பொருட்களை கொள்வனவு செய்வதில் முந்தியடித்ததை காணக்கூடியதாக இருந்தது.

அதேநேரம் மக்களின் நலன் கருதி ஹட்டன் டிக்கோயா நகர சபை துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து சிறிது நேரம் கடை வியாபாரங்களை முன்னெடுக்க வாய்ப்பினை அளித்தது. இதன்போது மக்கள் பொருட்களை கொள்வனவு செய்து கொண்டு விரைவாக நகரத்தை விட்டு வெளியேறினார்கள்.

ஹட்டன் பொலிஸாரின் ஊடாக நகர சபையும் இணைந்து பொது மக்களுக்கு கொரோனா தொற்று தொடர்பில் விழிப்புணர்வை எற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதன்போது நகரத்தின் அனைத்து கடைகளையும் மூட வேணடும் என அறிவித்ததையடுத்து அட்டன் நகரில் உள்ள கடை உரிமையாளர்கள் தங்களது கடைகளை மூடினர்.

இதனை தொடர்ந்து அட்டன் நகர சபை ஊடாக அட்டன் நகரத்தில் குறித்த மீன் கடை பகுதிகளுக்கும், நகரத்தின் கடைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் தொற்று நீக்கி கிருமி நாசினி தெளிக்கப்பட்டு நகரம் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

க.கிசாந்தன்

‘பிரதமர் பாதுகாப்பு பிரிவில் எந்தவொரு அதிகாரிக்கு கொரோனா இல்லை’

“பிரதமர் அலுவலகம், அலரி மாளிகை மற்றும் விஜேராமவிலுள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் சேவையாற்றும் பிரதமர் பாதுகாப்பு பிரிவின் எந்தவொரு அதிகாரியும் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகவில்லை.” – என பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரியொருவருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டிருப்பதாக பரவிவரும் செய்தியில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லாததுடன், பிரதமர் பாதுகாப்பு பிரிவுடன் இணைந்த வெளிப்புற பிரிவொன்றின் அதிகாரியொருவரே கொவிட் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

 பிரதமர் பங்கேற்கும், வெளி நிகழ்வுகளின் பூரண பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான தயார்படுத்தல்களின்போது மாத்திரம் பங்கேற்கும் குறித்த அதிகாரி கடந்த ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி முதல் சேவைக்கு சமூகமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் மேலும் 4 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு!

கொழும்பு கோட்டை, புறக்கோட்டை, பொரளை மற்றும் வெலிக்கடை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இன்று (25) மாலை 6 மணி முதல் மறுஅறிவித்தல் விடுக்கப்படும்வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

“மலையகப் பெண்கள் எவரிடமும் கையேந்தாத நிலையை உருவாக்க வேண்டும்”

0
மலைவாஞ்ஞன் மலையகப் பெண்கள் எந்தவொரு சூழலிலும் பிறரிடம் கையேந்தாத ஒரு தன்னம்பிக்கையான நிலையை உருவாக்க வேண்டும் என ஸ்ரீ சிகரம் (Sri Sigaram) நிறுவனத்தின் ஸ்தாபக தலைவி அகிலா கைலைநாதன் தெரிவித்தார். நுவரெலியா மாவட்டத்தின் பொகவந்தலாவ,...

ஈரானின் ட்ரோன் தாக்குதலை எதிர்கொள்ள புதிய ஆயுதத்தை களமிறக்கும் இஸ்ரேல்!

0
ஈரானின் ட்ரோன் தாக்குதலை எதிர்கொள்ள, இஸ்ரேல் புதிதாக உருவாக்கிய ‘அயர்ன் பீம்’ ‘Iron Beam என்ற ஆயுதம் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மேற்படி ஆயுதத்தில் உள்ள லேசர் கற்றைகள், ஈரான் ட்ரோன்களை நடுவானிலேயே...