Home Blog Page 3810

‘பட்ஜட்’ வந்ததும் அடுத்த கட்சி தாவல் அரங்கேறும்

எதிரணியைச் சேர்ந்த மேலும் சில எம்.பிக்கள் அரசாங்கத்துடன் இணையவுள்ளனர் எனவும் இதற்கான பேச்சுகள் வெற்றியளித்துள்ளது எனவும் அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் நவம்பர் 17 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

இவ்வாறு முன்வைக்கப்படும் ‘பட்ஜட்’டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே எதிரணி உறுப்பினர்கள், மொட்டு அரசுடன் சங்கமிக்கவுள்ளனர். இதில் சிறுபான்மையின நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேவேளை, அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்த 8 எம்.பிக்களில் இருவருக்கு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த எம்.பியொருவருக்கும், தமிழ் எம்.பியொருவருக்குமே இவ்வாறு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளது.

அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவியை வகிக்கும் சமல் ராஜபக்ச ராஜாங்க அமைச்சு பதவியொன்றையும் வகிக்கின்றார். அந்த அமைச்சு கைமாறும். அதேபோல இராஜாங்க அமைச்சராக இருக்கும் ஒருவர் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சராக நியமிக்கப்படக்கூடும் என தெரியவருகின்றது.

‘நன்கு சமைத்த மீன் ஊடாக கொரோனா பரவாது’

நன்கு சமைத்த மீன் ஊடாக கொரோனா பரவாது என்ற விஞ்ஞானப்பூர்வ ஆதாரத்தினை சுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கை வருமாறு,

இறைச்சிக்காக மாடுகளை கொண்டுவந்த இருவர் கம்பளையில் கைது!

கம்பளை, குறுந்துவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேரிவல தோட்டத்திலிருந்து அனுமதி பத்திரமின்றி, இறைச்சிக்காக மூன்று மாடுகளை சிரியரக லொறியொன்றில் ஏற்றிவந்த இருவர் இன்று (25) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரவுநேர வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த குறுந்துவத்த பொலிஸாராலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், லொறியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

அனுமதி பத்திரமின்றி இறைச்சிக்காக மாடுகளை கொண்டுசென்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள, கம்பளை, கஹட்டபிட்டிய பகுதியைச் சேர்ந்த இருவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கம்பளை நிருபர்

அட்டன் உள்ளிட்ட பகுதிகளில் மீன் விற்பனையுடன் தொடர்புபட்ட ஐவருக்கு கொவிட் உறுதி

(க.கிஷாந்தன்)

அட்டன் நகரிலும் அதனை அண்மித்த பகுதிகளிலுமுள்ள, மீன் வியாபாரத்துடன் தொடர்புடைய ஐவருக்கு கொவிட் – 19 வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து இவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்களும், பழகியவர்களும் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

பேலியகொடை கொரோனா கொத்தணி ஊடாகவே இவர்களுக்கு வைரஸ் தொற்றியுள்ளது எனவும், இவர்கள் சென்று வந்த இடங்கள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டுவருவதாகவும் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

பேலியகொடை மீன் சந்தைக்கு சென்று வந்தர்கள் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் மேற்படி ஐவரிடமும் நேற்று முன்தினம் (23.10.2020) பீ.சீ.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. பீ.சீ.ஆர் பரிசோதனை முடிவுகள் நேற்றிரவு (24.10.2020) வெளியான நிலையில், அவர்களுக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி பேலியகொடை மீன் சந்தைக்கு சென்று வந்து, அட்டன் நகரில் மீன் விற்பனையில் ஈடுபடும் நிலையமொன்றின் ஊழியருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து புதிய மற்றும் பழைய சந்தை கட்டடத் தொகுதிகள் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

இவருடன் தொடர்பை பேணியவர்கள் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர், அவர்களிடமும் பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

அத்துடன், கினிகத்தேன, மில்லகாமுல்ல – சந்திரிகம பகுதியைச் சேர்ந்த மீன் வியாபாரியொருவர் பேலியகொடவுக்கு சென்று மீன் எடுத்துவந்து லக்ஷபான மற்றும் நோட்டன் பிரிட்ஜ் பகுதிகளிலுள்ள மீன் விற்பனை நிலையங்களுக்கு மீன் வழங்கியுள்ளார்.

அவருக்கு வைரஸ் தொற்று உறுதியான நிலையில் மேற்படி நகரங்களிலுள்ள மீன் விற்பனை நிலையங்களும் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை மூடப்பட்டுள்ளன.

அதேபோல பேலியகொடை மீன் சந்தைக்கு சென்று வந்த கினிகத்தேன, பாலகடவல பகுதியைச் சேர்ந்த மீன் வியாபாரி ஒருவருக்கும் வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

பொகவந்தலாவ கொட்டியாகல பகுதியிலுள்ள மீன் வியாபாரியின் சாரதி ஒருவர், மீன் கொள்வனவுக்காக பேலியகொடை சென்று வந்த நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

அதேவேளை, பேலியகொடையிலிருந்து மஸ்கெலியா, பிரவுன்லோ பகுதிக்கு வருகைதந்த நபரொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட கங்கேவத்த பிரிவில் உள்ள 41 வயதுடைய நபர் ஒருவர் பேலியகொடை மீன் சந்தையில் தொழில் புரிகின்றார். இவர் கடந்த 17 ஆம் திகதி மஸ்கெலியா கங்கேவத்த பிரிவில் உள்ள அவரது இல்லத்துக்கு வருகை தந்துள்ளார்.

அவ்வாறு வரும்வழியில் மஸ்கெலியா நகரில் பல இடங்களுக்கு சென்றுள்ள அவர், மீண்டும் 19 ஆம் திகதி போலியகொடை சென்றுள்ளார்.

இந்நிலையில் அவரிடம் நேற்று 23 பீசீஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதன்போது கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பபட்டுள்ளார்.

ஹட்டனிலும் அண்மித்த பகுதிகளிலும் 5 மீன் வியாபாரிகளுக்கு கொரோனா!

ஹட்டன் நகரிலும் அதனை அண்மித்த பகுதிகளிலுமுள்ள, மீன் வியாபாரத்துடன் தொடர்புடைய ஐவருக்கு கொவிட் – 19 வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து இவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்களும், பழகியவர்களும் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

பேலியகொடை கொரோனா கொத்தணி ஊடாகவே இவர்களுக்கு வைரஸ் தொற்றியுள்ளது எனவும், இவர்கள் சென்றுவந்த இடங்கள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டுவருவதாகவும் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

பேலியகொடை மீன் சந்தைக்குசென்றுவந்தர்கள் பீசீஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றனர், அந்தவகையில் மேற்படி ஐவரிடமும் நேற்று முன்தினம் (23.10.2020) பீசீஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. பீசீஆர் பரிசோதனை முடிவுகள் நேற்றிரவு (24.10.2020) வெளியான நிலையில், அவர்களுக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி பேலியகொடை மீன்சந்தைக்குசென்றுவந்து, ஹட்டன் நகரில் மீன் விற்பனையில் ஈடுபடும் நிலையமொன்றின் ஊழியருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து புதிய மற்றும் பழைய சந்தை கட்டடத் தொகுதிகள் மறுஅறிவித்தல் விடுக்கப்படும்வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இவருடன் தொடர்பை பேணியவர்கள் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர், அவர்களிடமும் பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

அத்துடன், கினிகத்தேன, மில்லகாமுல்ல – சந்திரிகம பகுதியைச் சேர்ந்த மீன் வியாபாரியொருவர் பேலியகொடவுக்குசென்று மீன் எடுத்துவந்து லக்‌ஷபான மற்றும் நோட்டன் பிரிட்ஜ் பகுதிகளிலுள்ள மீன் விற்பனை நிலையங்களுக்கு மீன் வழங்கியுள்ளார்.அவருக்கு வைரஸ் தொற்று உறுதியான நிலையில் மேற்படி நகரங்களிலுள்ள மீன் விற்பனை நிலையங்களும் மறுஅறிவித்தல் விடுக்கப்படும்வரை மூடப்பட்டுள்ளன.

அதேபோல பேலியகொடை மீன்சந்தைக்குசென்றுவந்த கினிகத்தேன, பாலகடவல பகுதியைச் சேர்ந்த மீன் வியாபாரி ஒருவருக்கும் வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

பொகவந்தலாவ கொட்டியாகல பகுதியிலுள்ள மீன் வியாபாரியின் சாரதி ஒருவர், மீன் கொள்வனவுக்காக பேலியகொடை சென்றுவந்த நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

அதேவேளை, பேலியகொடையிலிருந்து மஸ்கெலியா, பிரவுன்லோ பகுதிக்கு வருகைதந்த நபரொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட கங்கேவத்த பிரிவில் உள்ள 41 வயதுடைய நபர் ஒருவர் பேலியகொடை மீன் சந்தையில் தொழில் புரிகின்றார். இவர் கடந்த 17 ஆம் திகதி மஸ்கெலியா கங்கேவத்த பிரிவில் உள்ள அவரது இல்லத்துக்கு வருகை தந்துள்ளார்.

அவ்வாறு வரும்வழியில் மஸ்கெலியா நகரில் பல இடங்களுக்கு சென்றுள்ள அவர், மீண்டும் 19 ஆம் திகதி போலியகொடை சென்றுள்ளார்.

இந்நிலையில் அவரிடம் நேற்று 23 பீசீஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதன்போது கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பபட்டுள்ளார்.

க.கிசாந்தன்

samsung நிறுவனத்தின் தலைவர் லீ குன் ஹீ காலமானார்!

தென்கொரியாவை சேர்ந்த சாம்சங் (samsung) நிறுவனத்தின் தலைவர் லீ குன் ஹீ இன்று காலமானார்.

உலக அளவில் மின்னணு சாதன பொருட்கள் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் நிறுவனங்களில் ஒன்று சாம்சங்.தென்கொரியாவை சேர்ந்த இந்த நிறுவனத்தின் தலைவர் ஆக இருந்த லீ குன் ஹீ உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 78.

தென்கொரிய நிறுவனத்தை உலக அளவில் ஜாம்பவான் நிறுவனங்களில் ஒன்றாக கொண்டு சேர்த்த லீ குன் ஹீ, கடந்த 2014- ஆம் ஆண்டு மாரடைப்பால் பாதிக்கப்பட்டார். அதன் பிறகு படுத்த படுக்கையாகவே இருந்த அவர் இன்று உயிரிழந்தார்.

உலகின் 12ஆவது மிகப்பெரிய பொருளாதார நாடான தென்கொரியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சாம்சங் நிறுவனத்தின் துணை தலைவர் லீ ஜே யோங், கடந்த 2014- ஆம் ஆண்டு முதல் நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்று நடத்தி வருகிறார்.

கொழும்பின் மேலும் சில இடங்களில் ஊரடங்கு

மாளிகாவத்தை, வாழைத்தோட்டம், டாம் வீதி, ஆட்டுப்பெட்டித் தெரு, கொச்சிக்கடை கரையோரப் பொலிஸ் பிரிவுகளில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி தற்போது இலங்கையில் 56 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் 33 பொலிஸ் பிரிவுகளிலும், கொழும்பு மாவட்டத்தில் 15 பொலிஸ் பிரிவுகளிலும், குளியாப்பிட்டிய பிரதேசத்தில் 5 பொலிஸ் பிரிவுகளிலும், களுத்துறை மாவட்டத்தில் 3 பொலிஸ் பிரிவுகளிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்ப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட பிரதேசங்களில் உள்ள மக்கள் வெளியே வருவதைத் தவிர்த்து, வீடுகளில் பாதுகாப்பாக இருக்குமாறு பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கை முழுமையாக கடைப்பிடித்து, இந்த வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு உதவிடுமாறும் பொதுமக்களிடம் அவர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

பாராளுமன்ற பொலிஸ் புலனாய்வுப் பிரிவு அதிகாரியொருவருக்கு கொரோனா

பாராளுமன்ற பொலிஸ் புலனாய்வு பிரிவின் ஒரு பொலிஸ் அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பொலிஸ் அதிகாரி பேலியகொட மீன் சந்தைக்கு சென்றுள்ள நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து குறித்த பொலிஸ் அதிகாரியுடன் நெருங்கிய தொடர்பை பேணிய 7 பேருக்கு பி.சி.ஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தின் படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.
இதேவேளை, கொரோனாவால் பாதிக்கப்பட்ட குறித்த பொலிஸ் அதிகாரி, பிரதான பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் வேலை செய்யவில்லை என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஒருவாரத்தில் சாதகமான பதில்’ – ஜீவன் தொண்டமான் உறுதி!

” எல்பொட காச்சாமலை தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பில் இன்னும் ஒரு வாரத்தில் சாதகமான பதில் பெற்றுக்கொடுக்கப்படும்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் உறுதியளித்துள்ளார்.

தம்ரோ பெருந்தோட்ட யாக்கத்தின் கீழ் இயங்கும் எல்பொட தோட்டத்தில், மூடப்பட்ட தொழிற்சாலையை மீள திறக்குமாறு வலியுறுத்தி தொழிலாளர்கள் சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்துக்கு கொண்டுவந்தயடுத்து, குறித்த தோட்டத்தை சேர்ந்த மாவட்ட தலைவர், தோட்ட தலைவர்கள் , தலைவிகள் ஆகியோரை அழைத்து நேரில் கலந்துரையாடினார்.

இதன்போது இன்னும் ஒரு வாரத்தில் தோட்ட நிர்வாகத்துடன் கலந்துரையாடி தீர்க்கமான தீர்வு எட்டப்படும் என்ற உறுதிமொழியை ஜீவன் தொண்டமான் வழங்கியுள்ளார்.

இக் கூட்டத்தில் இ,தொ,காவின் உப தலைவர்களில் ஒருவரான சட்டத்தரணி மாரிமுத்து மற்றும் இ.தொ.காவின் மாநில காரியாலயத்தின் உத்தியோஸ்தர்கள் குறித்த தோட்ட தலைவர்,தலைவிகள் கலந்துகொண்டனர்.

வெள்ளவத்தை, பலப்பலப்பிட்டிய பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு என்ற செய்திகளில் உண்மை இல்லை

வெள்ளவத்தை, பலப்பலப்பிட்டிய, ஆகிய பொலிஸ் பிரிவுகளில் ஹொரண, மீகொட ஆகிய பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவதாக வெளியாகியுள்ள செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென பொலிஸ் பேச்சாளர். பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

வெள்ளவத்தைஇ பம்பலப்பிட்டிய பொலிஸ் பிரிவுகளில் மறு அறிவித்தல் வரையும் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதுடன், ஹொரண, மீகொட ஆகிய பொலிஸ் பிரிவுகளில் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரையும் ஊரடங்கு அமுலில் இருக்கும் என இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தாக செய்தியொன்று பரவி வருகிறது.

இந்தச் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன உறுதிப்படுத்தினார்.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

த.வெ.க. வெற்றிநடை! மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது தி.மு.க.!

0
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தற்போதைய நிலைவரப்படி தமிழக வெற்றிக் கழகம் 107 தொகுதிகளில் முன்னிலை வகித்து பெரும்பான்மையை நோக்கி நகர்ந்துவருகின்றது. ஆளுங்கட்சியான முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. தி.மு.க....

மலையக மக்களுக்கு காணி உரிமைகோரி கொழும்பில் நாளை போராட்டம்!

0
இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்தில் அரங்கேறிய வன்முறை – அடக்குமுறைச் சம்பவத்தைக் கண்டித்தும், மலையக மக்களுக்கான காணி உரிமையை வலியுறுத்தியும் கொழும்பில் நாளை (05.05.2026) “நாம் நீலகாமம்” அறவழிப் போராட்டம் இடம்பெறுகின்றது. கொழும்பு ஐந்துலாம்பு...