த.வெ.க. வெற்றிநடை! மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது தி.மு.க.!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தற்போதைய நிலைவரப்படி தமிழக வெற்றிக் கழகம் 107 தொகுதிகளில் முன்னிலை வகித்து பெரும்பான்மையை நோக்கி நகர்ந்துவருகின்றது.

ஆளுங்கட்சியான முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. தி.மு.க. கூட்டணி 59 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. 65 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய் இரட்டைத் தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டிலும் அவர் முன்னிலை வகிக்கின்றார்.

கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு.க. ஸ்டாலின் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி எந்த தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றது.
விஜயகாந்தின் மனைவியும் பின்னடைவை எதிர்கொண்டுள்ளார்.

Related Articles

Latest Articles