Home Blog Page 3811

பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திலும் தனிமைப்படுத்தல்

பம்பலப்பிட்டியில் நான்கு பொலிசார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பேலியகொட மீன் சந்தைக்கு அண்மையில் சென்றுவந்த பம்பலப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் நான்கு உத்தியோகத்தர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களுடன் நெருக்கமாக பழகியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பம்பலப்பிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரியொருவர் தெரிவித்தார்.

தற்போது குறித்த பொலிசார் அதிகாரிகள் வேறு எங்கெல்லாம் சென்றார்கள் என்பது குறித்து விசாரிக்கப்பட்ட வருகிறது.

கொழும்பில் 5 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு

கொழும்பில் மட்டக்குளி, முகத்துவாரம், வெல்லப்பிட்டிய, கிராண்ட்பாஸ் மற்றும் புளுமெண்டல் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மறுஅறிவித்தல் விடுக்கப்படும்வரை ஊரடங்கு அமுலில் இருக்கும்.
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் கம்பஹா மாவட்டம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்திலும் 6 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் கொழும்பு மாவட்டத்திலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

 

ஐ.தே.கவின் தலைவர் பதவிக்கு போட்டியிடுவேன் – நவீன் அறிவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவிக்கு போட்டியிடப்போவதாக அக்கட்சியின் உறுப்பினர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தலைமைப்பதவியில் இருந்து விலகுவதற்கு ரணில் விக்கிரமசிங்க விலகுவதற்கு முடிவு செய்துள்ள நிலையிலேயே தான் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

” ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக யார் இருக்க வேண்டும் என்பதை கட்சியின் செயற்குழுவால் மட்டுமே தீர்மானிக்க முடியாது, ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் அனைத்து உறுப்பினர்களின் கருத்தையும் கேட்டு புதிய தலைவரை நியமிக்க முற்பட வேண்டும்.” – என்றும் கூறினார்.

இதேவேளை, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வரலாற்று தோல்வியை தழுவிக்கொண்டது. இதனையடுத்து தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ரணில் அறிவித்திருந்தார். கடந்த மாதம் ருவான் விஜேவர்தன ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய பிரதித் தலைவராக தெரிவுசெய்யப்பட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் மத்தியில் ஒரு இரகசிய வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் ருவான் விஜேவர்தன புதிய பிரதி தலைவராக தெரிவுசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதியின் மகளுக்கு ஆபாச மிரட்டல் விடுத்தவர் இலங்கையில்?

நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு சமூக வலைத்தளத்தில் பாலியல் மிரட்டல் விடுத்த நபர் இலங்கையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் 800 என்ற தலைப்பில் திரைப்படம் தயாரிக்கப்போவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

நடிகர் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள் நடந்தன. இந்த படத்தில் விஜய்சேதுபதி நடிப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த நிலையில் முத்தையா முரளிதரன் விஜய் சேதுபதிக்கு விடுத்த வேண்டுகோளில் 800 என்ற திரைப்படத்தில் நடிக்க வேண்டாம் என்று கூறி இருந்தார். அதை ஏற்று விஜய் சேதுபதி 800 திரைப்படத்தில் நடிப்பதில் இருந்து விலகிக்கொண்டார்.

இதற்கிடையில் விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்து, நபர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆபாச கருத்துகளை பதிவிட்டிருந்தார். இதற்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்து இருந்தார். சம்பந்தப்பட்ட நபர் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கனிமொழி தனது கண்டனத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

இது தொடர்பாக நேற்று இரவு பொலஸ் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தனது டுவிட்டர் பக்கத்தில், விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்த நபர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியிட்டார்.

கலகத்தை தூண்டுதல், ஆபாச கருத்து பதிவிடுதல் மற்றும் தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் போன்ற 3 சட்டப்பிரிவுகளில் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சைபர் கிரைம் பொலிஸார் நடத்திய தீவிர விசாரணையில்,

நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு ஆபாச மிரட்டல் விடுத்தவர் இலங்கையில் இருப்பது தெரியவந்துள்ளது. மிரட்டல் விடுத்தவரின் ஐபி முகவரி மூலம் இலங்கையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இண்டர்போல் உதவியுடன் இலங்கையில் உள்ளவரை பிடிக்க மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதாக சைபர் கிரைம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

’19’ என்பது சாபக்கேடு – ’20’ ஐ நிறைவேற்றியே தீருவோம்! ரமேஷ் சூளுரை

கடந்த ஆட்சியின்போது நாட்டில் அபிவிருத்தி திட்டங்கள் முடங்கி, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதற்கு 19ஆவது திருத்தச்சட்டமே காரணம் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (21) நடைபெற்ற அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலம்மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது ஒரு குடும்பத்தை பழிவாங்கவே 19ஐ கொண்டுவந்தார்கள். ஆனால் கடந்த காலங்களை மீட்டுப்பார்த்தால் நாட்டில் எவ்வித அபிவிருத்தியும் இடம்பெறவில்லை.

யுத்த காலத்தில் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதிபதியாக இருந்த போது எம் மலையக இளைஞர்கள் கொழும்பில் கைதுசெய்யப்பட்டார்கள். அப்போது அமரர் ஆறுமுகன் தொண்டமான் இரவோடு இரவாக அவர்களை மீட்டு வந்தார். இதெல்லாம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிமுறை இருந்ததாலே சாத்தியமானது.

ஜனாதிபதி தேர்தலின்போதுகூட நாட்டை செழிப்படைய வைப்பதற்காகவே 69 லட்சம் வாக்குகளை கொடுத்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை தெரிவு செய்தனர்.மக்களும் 20ஆவது சீர்த்திருத்தத்தையே விரும்புகின்றனர். எனவே மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் 20ஆவது திருத்தச்சட்டமூலத்தை நிறைவேற்றுவோம்.” – என்றார்.

நீலமேகம் பிரசாந்த்

களுத்துறை மாவட்டத்திலும் 5 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்

களுத்துறை மாவட்டத்தில் அகலவத்த பிரதேச செயலாளர் பிரிவில் 4 கிராம சேவகர் பிரிவுகளும், பாலிந்த நுவர பகுதியில் ஒரு கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மறுஅறிவித்தல் விடுக்கப்படும்வரை தனிமைப்படுத்தல் அமுலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அகலவத்த பிரதேச செயலாளர் பிரிவு

1.கொரக்கொட

2.பேரகம

3.தாபிலிகொட

4.கெகுலாந்தர வடக்கு

பாலிந்த நுவர பிரதேச செயலாளர் பிரிவு

1.பெல்லன

‘மதுஷ் வெளிப்படுத்திய தகவல்களை ஒருபோதும் மூடிமறைக்க முடியாது’

” மாகந்துரே மதுஷ் மரணித்துவிட்டார் என்பதற்காக விசாரணைகள் நிறுத்தப்படாது, அவை தொடர்ந்தும் இடம்பெறும். அதேபோல் அவர் வெளிப்படுத்திய எல்லா பதிவுகளும் பொலிஸ் புத்தகத்தில் உள்ளன. எனவே, எதனையும் மூடிமறைக்கமுடியாது.”  – என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண இன்று (21) தெரிவித்தார்.

மாகந்துரே மதுஷ் கொல்லப்பட்டுள்ள நிலையில் அவர் வெளிப்படுத்திய அனைத்து தகவல்களும் மூடிமறைக்கப்படும், அதேபோல் அவருடன் தொடர்பு வைத்திருந்த 80 அரசியல்வாதிகளும் தப்பிவிடுவார்கள் என்று எதிரணி உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளரிடம் வினவியபோது அவர் கூறியவை வருமாறு,

” ஏதேனும் ஒரு விசாரணை  நடைபெறும்போது அது தொடர்பான தகவல்கள், தரவுகள் முன்னர் பொலிஸ் புத்தகத்தில் மாத்திரமே பதிவுசெய்யப்படும், ஆனால் தற்போது ஒலி மற்றும் ஒளிப்பதிவும் செய்யப்படும் நடைமுறையும் இருக்கின்றது. மாகந்துரே மதுஷிடம் பல மாதங்கள் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன். அவை தொடர்பான தகவல்கள் பொலிஸ் புத்தகத்திலும், குற்றப்புலனாய்வுப் பிரிவின்  ‘பேட்’டிலும் விசேட இலக்கத்துடன் உள்ளன.

பொலிஸ் புத்தகத்தில் தகவல்களை பதிவிட்டுவிட்டு அவற்றை அவ்வாறே வைத்திருக்கமுடியாது, தாமதமின்றி அது தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும். தேவையேற்படின் அந்த புத்தகங்களை கொண்டுவந்து விசாரிக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு இருக்கின்றது.சிலசமயங்களில் அதன் பிரிதிகளைக்கூட மாற்று தரப்புகளுக்கு வழங்கலாம்.

எனவே, பொலிஸ் புத்தகத்தில் பதிவான தகவல்களை ஒருபோதும் மறைக்க முடியாது, அவை நிச்சயம் வெளிச்சத்துக்குவரும். நீங்கள்கூறுவதுபோல யாராவது குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டிருந்தால் நிச்சயம், விசாரணைகள் இடம்பெறும். கடந்தகாலங்களில் அவ்வாறான விசாரணைகள் இடம்பெற்றுள்ளன. ஆகவே, வெளிப்படுத்திய தகவல்களை எவராலும் மறைக்கமுடியாது, நீதிமன்றத்தின் முன்னிலையில்தான் அவை முடிவுக்குவரும்.

தகவல்கள் நீதிமன்றத்துக்கு வழங்கப்படும்.
அதேவேளை, போதைப்பொருள் விவகாரம், நிதிமோடி, கடத்தல் ஆகியவற்றுடன் தொடர்புடையவர்கள் குறித்த தகவல்களை மதுஷ் வெளியிட்டிருந்தால் நிச்சயம் விசாரணை நடைபெறும், ஒருவர் மரணித்துவிட்டார் என்பதற்காக அதனுடன் தொடர்புட்ட ஏனைய சந்தேக நபர்கள் விடுபடமுடியாது, அதற்கு சட்டத்திலும் இடமில்லை.” – என்றார்.

’19’ ஏன் நீக்கப்படுகின்றது? சபையில் பிரதமர் விளக்கம்!

நாட்டை அராஜகப்படுத்தும் 19ஆவது திருத்தத்தை நீக்குவதற்கே 20 ஆவது திருத்தம் கொண்டு வரப்படுகிறது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று நாடாளுமுன்றத்தில் தெரிவித்தார்.

20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இந்த சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் எமக்கு இன்றைய தினம் மிகவும் முக்கியமான நாளாகும். அரசியலமைப்பு திருத்தங்கள் மூன்றின் கீழ் இந்த கௌரவ சபையை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இன்னொரு இருப்பாராயின் அது கௌரவ உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார ஆவார்.

நான் இந்த பாராளுமன்றத்தில் 1970 ஆம் ஆண்டு பதவியேற்றது சோல்பரி அரசியலமைப்பு திருத்தத்தின் கீழாகும். அது மகாராணிக்கும் பிரித்தானிய மகுடத்திற்கும் ஆதரவாக.அதன் பின்னர் பிரித்தானியாவிலிருந்து விலகி முழுமையான குடியரசாக மாறிய குடியரசு அரசியலமைப்பு சிறிமாவோ பண்டாரநாயக்கவின் கீழ் அது எவ்வாறு நிறைவேற்றப்பட்டது என்பது எனக்கு நினைவிருக்கிறது.

அன்று 1972 குடியரசு அரசியலமைப்பை நிறைவேற்றி பாராளுமன்ற கட்டிடத்தில் கூடவில்லை. அன்று கொழும்பு றோயல் கல்லூரியின் அரங்கில் ஒன்றுகூடியே புதிய அரசியலமைப்பு முன்வைக்கப்பட்டது. அங்கு ஒன்றுகூடியே நாம் குடியரசு அரசியலமைப்பை நிறைவேற்றினோம். பேரரசிடமிருந்து முழுமையான சுதந்திரம் கிடைத்த அரசியலமைப்பிற்கு நாம் மிகுந்த கௌரவத்துடன் கைகளை உயர்த்தினோம். நாட்டிற்கு முழுமையான சுதந்திரத்தை பெற்றுத்தரும் அவ்வாறான அரசியலமைப்பிற்காக கை உயர்த்தியர் என்பதை நான் மிகுந்த பெருமையுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

அடுத்ததாக 1977 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற ஜே.ஆர்.ஜயவர்தனவினால் புதிய பாராளுமன்றம் அமைக்கப்பட்டது. அன்று இருந்த குடியரசு அரசியலமைப்பை நீக்கி ஜே.ஆர்.ஜயவர்தன அவர்கள் 1978ஆம் ஆண்டு இன்று நாம் ஆளப்படுகின்ற புதிய அரசியலமைப்பை கொண்டுவந்தார்.

இந்த அரசியலமைப்பு நிறைவேற்றப்படும் போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து எமக்கு பாராளுமன்றத்தில் இருக்க இடமளிக்கப்படவில்லை. பாராளுமன்றத்தில் இருந்திருந்தால் இந்த அரசியலமைப்பிற்கு எதிராக முதலாவதாக எனது கையும் உயர்ந்திருக்கக்கூடும் என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன். அதற்கு காரணம் இந்த அரசியலமைப்பிற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அன்று எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இந்த அரசியலமைப்பு போன்று விமர்சனங்களுக்கு உள்ளான அரசியலமைப்பொன்று இல்லை.

இந்த அரசியலமைப்பிற்கு முதலாவதாக எதிர்ப்பை வெளியிட்ட கலாநிதி என்.எம், கொல்வின், சரத் முத்தெடுவேகம போன்றோர் இன்று உயிருடன் இல்லை. எனினும் இன்னும் இந்த அரசியலமைப்பை கொண்டு செல்ல வேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த அரசியலமைப்பிற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எதிர்ப்பு தெரிவித்தாலும், இதன் கீழ் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நான்கு ஜனாதிபதிகள் தோற்றம் பெற்றுள்ளனர். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ஜே.ஆர்.ஜயவர்தன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அதிகாரத்திற்கு வருவதற்கு முடியாத வகையில் இந்த அரசியலமைப்பை உருவாக்கினாலும் அதன் கீழ் அதிக ஜனாதிபதிகளை தோற்றுவித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியே அதிகளவான காலம் நாட்டை ஆட்சி செய்துள்ளது என நான் எண்ணுகின்றேன்.

அதனால் நாம் இந்த அரசியலமைப்பின் கீழ் அரசியல் ஏளனத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளோம். ஆனால் எமக்கு இந்த அரசியலமைப்பை மாற்றுவதற்கு முடியாது போயுள்ளது. அவ்வாறு அரசியலமைப்பை மாற்றுவதற்கு முடியாது போனமைக்கு காரணம் ஒரு கட்சிக்கு இந்த பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்ள முடியாமல் போனமையே ஆகும்.

எனினும், ஒருபோதும் இந்த தேர்தல் முறையின் கீழ் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்றுக் கொள்ள முடியாது என்ற விடயத்தை வரலாற்றில் முதன் முறையாக நாம் பொய்யாக்கிக் காட்டியுள்ளோம்.நாட்டின் மக்களுக்கு தேவையாகவிருந்தது நிலையான பல்வேறு கும்பல்களுக்கும், சர்வதேச சக்திகளுக்கு அடிபணியாது மக்கள் இறையாண்மையை காக்கும் அரசாங்கமொன்றை உருவாக்குவதே ஆகும்.

அதற்காகவே இந்த விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை மக்கள் எமக்கு பெற்றுக் கொடுத்துள்ளனர். நாம் இந்த 20ஆவது திருத்தத்தை கொண்டுவந்து தயாராவது, இந்த அரசியலமைப்பை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கு அல்ல. இந்நாட்டு மக்கள் எதிர்பார்த்த தேசத்தை கட்டியெழுப்பும் புதிய அரசியலமைப்பை விரைந்து கொண்டுவரும் வரை இந்நாட்டின் பணிகளுக்கு ஏற்ப முன் கொண்டு செல்வதே ஆகும்.

13ஆவது திருத்தம் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட சந்தர்ப்பத்தில் அது தொடர்பில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு எனக்கு நினைவிருக்கின்றது. 13ஆவது திருத்தத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை பகிர்வதன் மூலம் எமது நாட்டின் ஒற்றுமை பாதுகாக்கப்படுவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி காணப்படுவதனாலேயே என உச்சநீதிமன்றம் அன்று அறிவித்தது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு அதிகாரம் இருப்பதனாலேயே நாட்டின் ஒற்றுமை பாதுகாக்கப்படுகின்றது.

நாட்டின் ஒற்றுமையை பாதுகாக்கவிருந்த ஜனாதிபதியின் அதிகாரத்தை வரையறுக்கும் செயற்பாடே 19இன் மூலம் முன்னெடுக்கப்பட்டது. அந்த வரையறைகள் மேற்கொள்ளப்பட்டு மூன்று ஆண்டுகளில் அதற்கான பிரதிபலன்களை நாம் கண்டோம். உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் சுமார் பத்தாயிரம் பேர் அறிந்திருந்ததாக புலனாய்வுத்துறை பிரதானி தெரிவித்திருக்கிறார். பத்தாயிரம் பேர் அறிந்திருந்தும் தாக்குதலை தடுக்க முடியாது போயிற்று.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணை ஆணைக்குழுவில் தெரிவிக்கும் விடயங்களை கேட்டும்போது மதிப்பிற்குரிய சபையில் பொறுப்பு கூற வேண்டிய எம் அனைவருக்கும் அவமானமாகவுள்ளது. ஜனாதிபதிக்கு நாட்டை பாதுகாப்பதற்கு எதுவுமில்லை;. பிரதமருக்கும், பாதுகாப்பு செயலாளருக்கும், பொலிஸ்மா அதிபருக்கும் ஒன்றும் செய்வதற்கில்லை. பாதுகாப்பு அமைச்சர் தொடர்பில் அறிந்த எவரும் இல்லை. இதனால் ஒன்றும் அறியாத பல குழந்தைகள் உயிரிழக்க நேரிட்டது.

ஏன் இவ்வாறு இடம்பெற்றது?

நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாக்குகளின் மூலம் நியமிக்கப்பட்ட அரச தலைவருக்கு இவ்வாறானதொரு அசம்பாவிதம் இடம்பெற்றதன் பின்னராவது பொலிஸ்மா அதிபரை நீக்க முடியாது போனது. பாராளுமன்றத்திற்கும் அவரை நீக்க முடியாது. இவ்வாறானதொரு அசம்பாவிதம் இடம்பெற்றிருக்கும்போது பொலிஸ்மா அதிபருக்கு விலகுமாறு ஜனாதிபதி கூறும்போதும் அவர் விலகாதுள்ளார்.

ஜனாதிபதிக்கும் இதுவரை பொலிஸ்மா அதிபரை விலக்க முடியவில்லை. 69 இலட்சம் பேர் வாக்களித்தது பொலிஸ்மா அதிபரொருவரை நீக்கிக் கொள்ள முடியாத ஜனாதிபதி பதவிக்கா?

அதுமாத்திரமன்றி 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட பொலிஸ் ஆணைக்குழு பொறுப்பு கூற வேண்டியது யாருக்கு என்ற பிரச்சினையும் தற்போது எழுந்துள்ளது.

இந்த அரசியலமைப்பின் கீழ் இரண்டு முறை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை வகித்தவர் நான். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி இருந்திருக்காவிடின் 2006ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் கட்சி மாறியவர்களால் யுத்தம் நடத்துவதை நிறுத்தியிருக்க வேண்டியிருந்திருக்கும். அன்று கொழும்பில் ஆயிரக்கணக்கான தற்கொலை குண்டுதாரிகள் தங்களது இலக்கை நோக்கி செல்வதற்கு முன்னர் தடுத்து நிறுத்தினோம். லக்ஷ்மன் கதிர்காமர் அவர்கள் கொலை செய்யப்பட்டது எனது காலப்பகுதியில் அல்ல. எனினும், அந்த கொலையாளிகள் அனைவரையும் எனது ஆட்சிக் காலத்தில் பிடிக்க முடிந்தது.

19ஆவது திருத்தத்தின் பின்னர் எதிரான கட்சிகளின் அரசியல்வாதிகளின் பின்னர் துரத்திச் செல்வதற்கே குற்றப்புலனாய்வு பிரிவினர் பயன்படுத்தப்பட்டனர். குற்றப்புலனாய்வு பிரிவினர் பெற்றிருந்த பயிற்சிகள் வீணாக்கப்பட்டன. தற்போது ரிஷாட் பதியூதீனை கைது செய்ய குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு முடியவில்லை. பயங்கரவாதிகளுடன் தொடர்பை பேணியதாக கூறப்படும் ரிஷாட்டின் தம்பிக்கு பொலிஸார் பிணை வழங்கி வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். தற்போது அவற்றை தடுப்பதற்கு எவராலும் முடியாது.

20 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டு இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்திய 19 ஆவது திருத்தம் நீக்கப்படும் இந்நேரத்தில் 20 வது திருத்தத்தின் கீழ் கணக்காய்வு ஆணைக்குழு இல்லை என்று சமீபத்தில் இந்த நாட்டில் பாரிய சர்ச்சை ஏற்பட்டது. கணக்காய்வு ஆணைக்குழுவின் மூலம் மோசடி இல்லாத அளவிற்கு நாடு கட்டியெழுப்பப்பட்டுள்ளது என்று எல்லோரும் நினைக்கிறார்கள். இந்த ஆணைக்குழுவிற்கு அலரி மாளிகை, ஜனாதிபதி மாளிகையையும் கூட கணக்காய்வு செய்ய அதிகாரம் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இந்த சுயாதீன கணக்காய்வு ஆணைக்குழு ஜனாதிபதி மாளிகை அல்லது அலரி மாளிகையை கணக்காய்வு செய்ததா?

கடந்த காலங்களில் ஊழல் தடுப்பு குழுவை நடத்துவதற்காக சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் அலரி மாளிகைக்கு அழைத்து வரப்பட்டனர். அந்தக் குழுவைப் பராமரிக்க ஐந்து ஆண்டுகளாக அலரி மாளிகையினால் நிறைய பணம் செலவிட்டன. அப்போதைய அட்டர்னி ஜெனரல் திணைக்கள அதிகாரிகள் கூட இந்தக் குழு சட்டவிரோதமானது என்று பகிரங்கமாகக் கூறியிருந்தனர். ஆனால் இந்த குழுவிற்கு செய்யப்பட்ட பெரும் செலவினங்களை சுயாதீன கணக்காய்வு ஆணைக்குழு கணக்காய்வு செய்துள்ளதா? அத்தகைய கணக்காய்வின் பின்னர் இந்த நாட்டிற்கு ஒரு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதா?

அது மட்டுமல்லாமல், சுயாதீன கணக்காய்வு ஆணைக்குழு இந்த நாட்டின் அமைச்சகங்களையேனும் முறையாக கணக்காய்வு செய்யவில்லை. புத்தசாசன அமைச்சின் கீழ் இருந்த மத்திய கலாசார நிதியிலிருந்து கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த விடயத்தை சுயாதீன கணக்காய்வு ஆணைக்குழு கணக்காய்வு செய்துள்ளதா என்பதை அறிய விரும்புகிறோம்.

அதுமாத்திரமன்றி, இந்த சுயாதீன என்று கூறப்படும் கணக்காய்வு ஆணைக்குழு எந்தவொரு ஆணையத்தின் நடவடிக்கைகளையும் கணக்காய்வு செய்யவில்லை.

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் இரண்டு வாகனங்களைப் பயன்படுத்துகிறார். உத்தியோகபூர்வ இல்லத்தைப் பயன்படுத்தும் போது, வாடகைக்கு தனியாக கட்டணம் பெற்றுக் கொள்ளப்படுகிறது. அவை நன்கு அறியப்பட்ட விடயங்கள். ஆனால் அவர்களில் யாராவது சுயாதீன கணக்காய்வு ஆணைக்குழுவால் கணக்காய்வு செய்யப்பட்டுள்ளார்களா? கணக்காய்வு ஆணைக்குழுவால் சுயாதீனமாக என்ன வேலை செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மாளிகை அல்லது அலரி மாளிகையில் கணக்காய்வு செய்யப்பட்டுள்ளதா?

இந்த ஆணைக்குழு சுயாதீனமாக செயற்பட்டதா? இந்த ஆணைக்குழுக்களினால் பொதுமக்கள் அதிகாரத்தை சுயாதீனமாக செயற்படுத்த அனுமதிக்கப்பட்டதா? அரச சார்பற்ற நிறுவனங்களின் முகவர்கள். அவர்கள் நாட்டு மக்களுக்கு பொறுப்பு கூறுபவர்களா? 19 வது திருத்தத்திற்கு இணங்க செயற்படுவதாயின் வாக்களித்து மக்கள் ஏன் நாடாளுமன்றத்திற்கு பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து தேர்வு செய்கிறார்கள்?

நான் நிறைவேற்று ஜனாதிபதியாக இருந்தபோது ஒன்றன் பின் ஒன்றாக நாம் தேர்தல்களை நடத்தினோம். அந்த நேரத்தில் எதிர்க்கட்சியில் இருந்தவர்கள் தொடர்ந்து தேர்தல்களை நடத்துவதற்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அத்தகைய சூழ்நிலையில் தேர்தல்களை சுயாதீனமாக நடத்த ஒரு சுயாதீன தேர்தல் ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. ஆனால் அந்த தேர்தல் ஆணைக்குழு சுயாதீனமானதா? அதன் உறுப்பினர் ஒருவர் பகிரங்கமாக அரசியலில் ஈடுபடுவது மட்டுமல்லாமல், தேர்தல்களை நடத்த வேண்டாம் என்று நீதிமன்றத்திற்கு செல்கிறார். அந்த செயற்பாடு சுயாதீனமானது என்பதை இந்த சபைக்கு ஏற்றுக்கொள்ள முடியுமா? ஒரு சுயாதீன தேர்தல் ஆணைக்குழு இருந்தபோதுதான் அரசாங்கத்தின் நிதியை செலவிட்டு ரிஷாட் புத்தளத்திலிருந்து மக்களை வாக்களிப்பதற்காக கிழக்கிற்கு அழைத்துச் சென்றார். மக்கள் நல்லாட்சி அரசாங்கத்தை மாற்றியிருக்காவிடின், ரிஷாட் இன்றும் சுதந்திரமாக இருந்திருப்பார்.

ஜம்போ அமைச்சரவையை மினி அமைச்சரவையாக நியமித்துக் கொண்டோம் என்பது, 19 ஐ நிறைவேற்றிக் கொண்டவர்கள் பெருமையாக கூறிக்கொள்ளும் ஒரு விடயமாகும். 19 இல் அமைச்சர்களின் எண்ணிக்கை 30இற்குள் வரையறுக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. எனினும் தேசிய அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளுக்கு வரையறை இல்லை என்று. இந்த பிரிவை கொண்டு வந்த 19ஆவது திருத்தத்தின் கீழ் தான் இந்நாட்டில் அதிக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த பிரிவு காணப்படும்போது சுமார் 100 பேர் அமைச்சு பதவிகளுக்கு நியமிக்கப்பட்டனர்.

20ஆவது திருத்தத்தை நாம் கொண்டுவருவது இந்த மோசடி மிகுந்த 19ஆவது திருத்தத்தை நீக்குவதற்கே. அரசாங்கமொன்றை கொண்டு இயங்க மூன்றில் இரண்டு அவசியமில்லை. 115 வாக்குகள் இருப்பின் அரசாங்கமொன்றை கொண்டு செல்ல முடியும். அவ்வாறானதொரு சந்தர்ப்பத்திலும் நாம் ஏன் மூன்றில் இரண்மை கோரியிருந்தோம்? இந்நாட்டின் ஐக்கியத்தை பாதுகாக்க. தேசிய பாதுகாப்பை பாதுகாக்க. மீண்டும் அன்று காணப்பட்ட மரண அச்சம் இன்றி வாழக் கூடிய நாட்டை உருவாக்க.

இந்த பொது தேர்தலில் மாத்திரமின்றி கடந்த ஜனாதிபதி தேர்தலும் இந்த சபையில் தாக்கம் செலுத்தும். இவ்விரு தேர்தல்களின் மூலம் மக்கள் 19 ஐ நீக்குவதனையே எதிர்பார்க்கின்றனர் என்பது புலப்பட்டுள்ளது. நாட்டின் ஐக்கியம் ஜனாதிபதியின் மூலமே வெளிப்படும். ஜனாதிபதிக்கு வாக்களிப்பதன் மூலம் ஒரு சட்டத்தின் கீழ் ஒரு நாட்டை முன்னோக்கி நகர்த்த மக்கள் விரும்புகிறார்கள். அப்படியானால், இந்த சபை ஜனாதிபதியின் ஆணை குறித்தும் சிந்திக்க வேண்டும்.  எனவே, 20 ஐ கொண்டுவந்து தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதுடன், நாட்டை அராஜகப்படுத்தும் 19 ஐ தோற்கடிக்கப்படும்.

6 ஆயிரத்தை நெருங்குகிறது கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை

இலங்கையில் மேலும் 109 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பேலியகொடை மீன் சந்தையில் 49 பேருக்கும், தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்த 39 பேர் மற்றும் மினுவங்கொட ஆடை கைத்தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்பில் இருந்த 23 பேரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய இன்றைய தினத்தில் அதனடிப்படையில் மினுவங்கொடை கொத்தணியில் இதுவரையில் 2451பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 920 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் தொற்றுக்கு இலக்கான 3 ஆயிரத்து 501 பேர் குணமடைந்துள்ளனர். 2 ஆயிரத்து 406 பேர் சிகிச்சைபெறுகின்றனர்.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் மக்களிடம் கருத்து கோரல்

புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்கான சட்டமூலத்தை உருவாக்குவதற்கு பொது மக்களிடமிருந்து நீதி அமைச்சு கருத்து, முன்மொழிவு, யோசனைகளைக் கோரியுள்ளது.

இதன்படி தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய ஏதேனுமொரு மொழியில் எதிர்வரும் நவம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் மேற்படி யோசனைகளை, கருத்துகளை பதிவுத் தபாலில் அல்லது மின்னஞ்சல் ஊடாக அனுப்பிவைக்கமுடியும்.

அரசின் தன்மை, அடிப்படை உரிமை, மொழி, அரசக்கொள்கையை வழிநடத்தும் கோட்பா, , நிறைவேற்று அதிகாரம்,  சட்டவாக்கம்,  மக்கள் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு ( வாக்குரிமை, தேர்தல்), அதிகார பரவலாக்கல் – அதிகாரப்பகிர்வு, நீதிமன்றம்,  அரச நிதி, மக்கள் பாதுகாப்பு, ஏனைய விடயங்கள் என  12 தலைப்புகளின்கீழ் யோசனைகளை முன்வைக்கமுடியும்.

Secreatary, Experts committee to draft a new constitution
Room No, 32 (Block 02) BMIC, Bauddhaloka Mawatha, colombo 7என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கமுடியும். அவ்வாறு இல்லாவிட்டால் expertscommpublic@yahoo.com என்ற மின்னஞ்சலுக்கும் யோசனைகளை அனுப்பிவைக்க முடியும் என நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலதிக தகவல்கள் நீதி அமைச்சின் இணையத்தளத்தில் உள்ளது. www.moj.gov.lk

புதிய அரசியலமைப்புக்கான வரைவு நகலை தயாரிப்பதற்கு அரசாங்கத்தால் நிபுணர்கள் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

” உருட்டு பிரட்டு திருட்டு” – சஜித் அணியின் மே தினக் கூட்டத்தில் முற்போக்கு கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு!

0
ஐக்கிய மக்கள் சக்தியின் 2026 ஆம் ஆண்டிற்கான தேசிய மே தின கூட்டம் நாளை கொழும்பு மாளிகாவத்தை பீ.டி.சிரிசேன விளையாட்டு மைதானத்தில் பிற்பகல் 02.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின்...

என்.பி.பி. ஆட்சியிலும் எந்த மாற்றமும் இல்லை!

0
"இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசுகள் இனவாதத்தையே மூலதனமாகக் கொண்டுள்ளன. " என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். கிளிநொச்சி, சோரன்பற்று பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு...

யூதர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பிரிட்டனிடம் இஸ்ரேல் வலியுறுத்து!

0
பிரித்தானியாவில் யூதர்களுக்கு எதிராகத் தொடர்ந்து அதிகரித்து வரும் வெறுப்புணர்வுத் தாக்குதல்களைக் கட்டுப்படுத்த தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது. வெறும் கண்டனங்கள் மட்டும் போதாது என்றும்,...