Home Blog Page 3812

இலங்கையில் 5,811 பேருக்கு கொரோனா – 3,501 பேர் குணமடைவு!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 44  பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3,501 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 2 ஆயிரத்து 297  பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதல் இற்றைவரை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 811 ஆக அதிகரித்துள்ளது.

இதில் மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை கொத்தணி பரவலாலேயே அதிகளவானோருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. மினுவாங்கொட கொத்தணிபரவல்மூலம் இதுவரையில் 2 ஆயிரத்து 300 ஆக அதிகரித்துள்ளது.

இழுத்தடிப்புகளுக்கு மத்தியில் ’20’ ஐ ஆதரிக்க சுதந்திரக்கட்சி முடிவு!

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது.

சுதந்திரக்கட்சியின் மத்தியசெயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது 20ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.

இதனையடுத்தே சில திருத்தங்களை முன்வைத்து, 20 இற்கு ஆதரவு வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மத்தியகுழு கூட்டத்தின் பின்னர் சுதந்திரக்கட்சி எம்.பிக்கள், தேரர்கள் சிலரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

கம்பஹா மாவட்டம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு!

கம்பஹா மாவட்டம் முழுவதும் இன்றிரவு 10 மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என்று கொரோனா ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு இவ்வாறு அமுலில் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு முன்னர் கம்பஹா மாவட்டத்தில் 19 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு அமுலில் இருந்தது.

கம்பளையில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று!

கம்பளை, தொலுவ பிரதேச செயலகத்துக்குட்பட்ட மில்லகாமுல – கோணட்டுவல கிராமத்தில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. பீசீஆர் பரிசோதனைமூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து அம்மூவரும் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

மேற்படி கிராமத்தில் கொரோனா தொற்றாளர்கள் இருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில், வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கில் கிராமம் நேற்று முதல் முடக்கப்பட்டது.

குறித்த கிராமத்தில் 425 குடும்பங்கள் வாழ்கின்றன, இதில் 35 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

கம்பஹா, வெயாங்கொட பகுதியிலுள்ள விகாரையொன்றில் தொழில்செய்த நிலையில் கடந்த 3 ஆம் திகதி இருவர் மேற்படி கிராமத்திலுள்ள தமது வீடுகளுக்கு வந்துள்ளனர்.

இவ்விருவரிடமும் கடந்த 16 ஆம் திகதி பீசீஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. வைரஸ் தொற்று உறுதியானது, இதனையடுத்து அவர் மாத்தளை, லக்கல பல்லேகம வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

இதனையடுத்து 50 பேரிடம் பீசீஆர் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் மூவருக்கெ இன்று வைரஸ் தொற்று உறுதியானது. வைரஸ் தொற்றுக்கு இலக்கான ஒருவரின் குடும்ப உறுப்பினர்களே இருவர்.

அதேவேளை, கம்பளை பகுதியில் இதுவரையில் 9 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மலையக குருவியின் சிறப்புச் செய்தியாளர்

49 பேருக்கு கொரோனா – மூடப்பட்டது பேலியகொட மீன் சந்தை!

பேலியகொட மீன் சந்தையிலுள்ள 49 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து மீன் சந்தை மறுஅறிவித்தல் விடுக்கப்படும்வரை மூடப்பட்டுள்ளது.

105 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனைமூலமே அதில் 46 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

மினுவாங்கொட கொரோனா கொத்தணி ஊடாகவே இவர்களுக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

கொரோனா சமூகத்தொற்று இல்லை – சுகாதார அமைச்சர் மீண்டும் அறிவிப்பு

நாட்டில் இன்னமும் கொரோனா சமூகத் தொற்று நிலைமை ஏற்படவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என சுகாதார அமைச்சின் விஞ்ஞான தொற்றுப்பிரிவு தெரிவித்துள்ளது. எனவே, பொய்யான தகவல்களை பரப்பவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.

மினுவாங்கொட கொத்தணிபரவலையடுத்து ஒரு லட்சம் பேருக்கு மேல் பீசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 21 ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.” – என்றார்.

மாத்தளை மாவட்டத்தில் 5000 ஏக்கர் நிலப்பரப்பில் உப உணவு பயிர்ச்செய்கை!

மாத்தளை மாவட்டத்தில் பெரும் போகத்தில் 5000 ஏக்கர் நிலப்பரப்பில் உப உணவுபயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையச் செய்யும் அரசின் கொள்கையின் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்திற்கமைய உப உணவுச் செய்கை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

விவசாயத் திணைக்களத்தின் அனுசரணையில் மெதரட விவசாய அமைப்பின் ஏற்பாட்டில் மாத்தளை மாவட்டத்தில் உப உணவுப் பயிர்ச் செய்கையில் முதற்கட்டமாக தம்புள்ள,கலேவெல,சீகிரியா,தேவஹவ,நாவுல,லக்கல,வில்கமுவ,யடவத்த ஆகிய பிரதேசங்களில் 5000 ஏக்கர் விவசாய நிலங்களில் சோளம்,எள்ளு,மிளகாய் ஆகிய பயிர்கள் இந்த பெரும் போகத்தின் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த பயிர்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் 5000 பேருக்கு விவசாயத்துக்கு தேவையான விதை, உரம் என்பன மானிய அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதோடு, சலுகை அடிப்படையிலும் வங்கிக் கடனும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

உப உணவுப் பயிர் உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு மூன்று இலட்சம் ரூபாய் வரையிலான கடன் குறைந்த வட்டியில் வங்கிகள் ஊடாக வழங்கப்பெற்று கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், அறுவடைசெய்யும் விவசாய உற்பத்திகளை கூடிய விலைக்கு சந்தைப்படுத்துவதற்கான உரிய வசதிகளையும் ஏற்படுத்தித் தருவதாக மெதரடகொவி திட்ட தம்புள்ள காரியாலயத்தின் அதிகாரி திலகே தெரிவித்தார்.

எப்போது புது வழி பிறக்கும்?

புஸல்லாவை, பெரட்டாசி தோட்ட பிரதான பாதையில் சமகிபுர பிரேசத்தில் இருந்து டெல்டா தோட்டம் வழியாக புப்புரஸ்ஸ ,கலஹா ,தெல்தோட்டை ஹேவாஹெட்ட ஆகிய நகரங்களுக்கு செல்லும் பிரதான பாதையே இது.

இப்பாதையின் ஒரு பகுதி புனரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படுகின்றது. மழைக்காலத்தில் சேறுபாதையாக மாறிவிடுவதால் மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்த பாதையானது நுவரெலியா – புஸ்ஸல்லாவ ஊடாக கலஹா, தெல்தோட்டை, ஹேவாஹெட்ட, கித்துல்கல ஊடாக கண்டி போன்ற இடங்களுக்கு செல்லும் ஒரு கிட்டிய பாதையாகும்.

தற்போது மேற்படி பிரதேசங்களுக்கு மக்கள் கம்பளை மற்றும் பேராதனை கலஹா சந்திக்கு சென்றே செல்கின்றனர். இது இவர்களுக்கு நீண்ட நேரத்தையும் நீண்ட தூரத்தையும் அதிக செலவையும் கொடுக்கின்றது. இவ்வாறான நிலையில் இந்த பாதை திருத்தி அமைக்கப்படுமானால் இந்த பாதையை நாளாந்தம் பாவித்து வரும் மக்கள் பெரும் நன்மை அடைவர்.

தற்போது இந்த பாதையில் தனியார் வாகனங்கள் முச்சக்கரவண்டி ஆகியனவே சேவையில் ஈடுபட்டு வருகின்றன. அரச போக்குவரத்து இங்கு இல்லை. இதனால் பாடசாலை மாணவர்களும் பெருந்தோட்ட தொழிலாளர்களும் பாதித்து வருகின்றனர். குறித்த பாதையில் ஒரு தொகுதி செப்பனிடப்பட்டு இருந்தாலும் பெரும்பாலான பகுதி செப்பனிடப்படவில்லை. இதனை கவனத்தில் கொண்டு சம்பந்தபட்டவர்கள் இந்த பாதையை திருத்தி அமைத்து கொடுக்க வேண்டியது கட்டாயமானதாகும்.

மக்கள் செய்தியாளர் பா. திருஞானம்

மாகந்துரே மதுஷ் உடன் 80 அரசியல்வாதிகளுக்கு தொடர்பு – ஜே.வி.பி. பரபரப்பு தகவல்

மதுஷ் படுகொலை செய்யப்பட்டதன் ஊடாக அவருடன் தொடர்படைபேணிய 80 அரசியல்வாதிகள் பாதுகாக்கப்பட்டுள்ளனர். அவர் கொல்லப்பட்டதன் நோக்கமும் இதுவாகவே இருக்கக்கூடும் ” – என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“மதுஷ் கொல்லப்பட்டுள்ளார், அவரின் உயிரிழப்பு பிரச்சினை இல்லை, ஆனால் கொல்லப்பட்ட விதம்தான் பிரச்சினைக்குரிய விடயமாகும். அரசியல் வாதிகளுடன் தொடர்பிருப்பதாக ஜனவர் 28 ஆம் திகதி வானொலியொன்றின் ஊடாக மதுஷ் தகவல் வெளியிட்டிருந்தார்.

அதேபோல் மதுஷ் வழங்கிய தகவலின் பிரகாரம் 80 அரசியல் பிரமுகர்களின் பெயர்கள் வெளியாகியிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். அதாவது போதைப்பொருள் வியாபாரிகள் நாடாளுமன்றத்திலும் இருக்கின்றனர் என்ற தகவல் மதுஷால் வெளியிடப்பட்டிருந்தது.

மதுஷ் கொல்லப்பட்டுள்ளதால் போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் தொடர்பை பேணிய அரசியல்வாதிகளின் தகவல்கள் மூடப்பட்டுள்ளன. மதுஷ் விவகாரம் நீதிமன்றம் சென்றிருந்தால் அவரின் வாயாலே எல்லா விடயங்களும் வெளியாகியிருக்கும், அரசியல்வாதிகளின் பெயர்களும் தெரியவந்திருக்கும். எனவே, மதுஷை கொன்றுவிட்டு, அரசியல்வாதிகள் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.” – என்றார் விஜித ஹேரத் எம்.பி.

ஊரடங்கு உத்தரவைமீறிய 513 பேர் கைது!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தைமீறிய 125 பேர் கடந்த 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

அத்துடன், தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டி நாளில் இருந்து இன்று காலை 6 மணிவரை, ஊரடங்கைமீறிய 513 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அத்துடன், 63 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ன.

அதேவேளை, கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக சுகாதார நடைமுறைகளையும், அரசாங்கத்தின் அறிவித்தல்களையும் முறையாக பின்பற்றுமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

என்.பி.பி. ஆட்சியிலும் எந்த மாற்றமும் இல்லை!

0
"இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசுகள் இனவாதத்தையே மூலதனமாகக் கொண்டுள்ளன. " என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். கிளிநொச்சி, சோரன்பற்று பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு...

யூதர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பிரிட்டனிடம் இஸ்ரேல் வலியுறுத்து!

0
பிரித்தானியாவில் யூதர்களுக்கு எதிராகத் தொடர்ந்து அதிகரித்து வரும் வெறுப்புணர்வுத் தாக்குதல்களைக் கட்டுப்படுத்த தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது. வெறும் கண்டனங்கள் மட்டும் போதாது என்றும்,...

ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய சித்திரா பௌர்ணமி விழா

0
நுவரெலியா ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த சித்திரா பௌர்ணமி முத்தேர்த்திருவிழாவை முன்னிட்டு, பால்குட பவனி இன்று (30.04.2026) வியாழக்கிழமை காலை மிக விமரிசையாக நடைபெற்றது. இன்று காலை 9.00 மணியளவில் நுவரெலியா லேடி...