Home Blog Page 3813

டெல்லி அணியை வீழ்த்தி பஞ்சாப் வெற்றிநடை

டெல்லி கேபிடல்ஸ் அணியை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். 2020 கிரிக்கெட் போட்டியின் நேற்று 38 ஆவது ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும்,கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின.

துபாயில் நடைபெற்ற இந்தப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ஓட்டங்களைச் சேர்த்தது. டெல்லி அணியில் துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 61 பந்துகளில் 106 ஓட்டங்களை எடுத்தார்.

இதையடுத்து, 165 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை துவக்கிய பஞ்சாப் அணி 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 167 ஓட்டங்கள் எடுத்து வெற்றியை பதிவு செய்தது.

நாட்டில் மேலும் 120 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 120 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மினுவாங்கொட கொத்தணி பரவல் ஊடாகவே இவர்களுக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 37 பேருக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்த 83 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளமை பீசீஆர் பரிசோதனைமூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய தினம் இதுவரையில் 180 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மினுவாங்கொட கொத்தணி பரவலின் எண்ணிக்கை 2342 ஆக உயர்வு.

அதேவேளை, நாட்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 805 ஆக அதிகரித்துள்ளது. இதில் 3 ஆயிரத்து 457 பேர் குணமடைந்துள்ளனர். 2 ஆயிரத்து 335 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

5ஆவது நாளாகவும் தொடர்கிறது போராட்டம் – வலுக்கிறது ஆதரவு!

கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட ஹெல்பொட, காச்சாமலை தோட்டத்தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று (20) ஐந்தாவது நாளாகவும் தொடர்ந்தது.

பல தசாப்தங்களாக இயங்கிய தொழிற்சாலையை மூடுவதற்கு நிர்வாகம் எடுத்த முடிவைக்கண்டித்தும், தொழிற்சாலையை மீள திறக்குமாறு வலியுறுத்தியுமே தொழிலாளர்கள் போராடிவருகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தோட்ட காரியாலயத்துக்கு முன்பு இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இவ்விகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாரும் பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன், இதற்கான தீர்வு நாளை 21/10/2020 புதன்கிழமை எட்டப்படும் என்று குறிப்பிட்டார்.

தகவல் : நீலமேகம் பிரசாந்த்

‘உதவி ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்’ – முற்போக்கு கூட்டணியின் அழுத்தமும் காரணம்!

” மலையக பெருந்தோட்ட ஆசிரிய உதவியாளர்களில் ஒரு தொகுதியினருக்கு நிரந்தர நியமனம் கிடைக்கப்பெறவுள்ளமைக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் அழுத்தமும் ஓர் காரணமாகும்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களின் ஒரு தொகுதியினர் தமது தொழில் தகைமைகளைப் பூர்த்தி செய்து கொண்ட போதும் அவர்களுக்கு நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்குவது தொடர்பில் பல்வேறு பட்ட இழுபறி நிலைமைகள் காணப்பட்டன.

இந்நிலையில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், பாராளுமன்றத்தில் பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர் நியமனம் தொடர்பில் ஒத்திவைக்கப்பட்ட பிரேரணை ஒன்றை முன்வைத்தார். இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினரான வேலுசாமி ராதாகிருஷ்ணன், உதயகுமார் மற்றும் சில பாராளுமன்ற உறுப்பினர்களும் தத்தம் கருத்துக்களை முன் வைத்தனர்.

இந்தப் பிரேரணை தொடர்பில் பதிலளித்த கல்வி அமைச்சர் ஜி. எல் .பீரிஸ் பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர் பிரச்சினைகளை ஆராய்ந்து அவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் இவ்விடயம் தொடர்பில் மாகாண சபைகளுக்கு அறிவிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இதன் அடிப்படையில் மத்திய மாகாணத்தில் தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ள ஆசிரிய உதவியாளர்களுக்கு நிரந்தர ஆசிரிய நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ள சகல தரப்பினருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

பெருந்தோட்ட ஆசிரிய உதவியாளர்களாக உள்வாங்கப்பட்டவர்கள், ஆசிரியர் கலாசாலைகளில் தமது ஆசிரியர் பயிற்சி மற்றும் பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்து நிரந்தர ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கப்படவுள்ள ஆசிரியர்களுக்கு எமது ‌ நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.” – என்றார்.

’20’ எவ்வாறு நிறைவேறும்? நீதி அமைச்சர் விளக்கம்

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் மாத்திரமே நிறைவேற்றப்படும், சர்வஜன வாக்கெடுப்புக்கு வழிவகுக்கும் சரத்துகள் நீக்கப்படும் – என்று நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் சட்டவியாக்கியானம் சபாநாயகரால் இன்று நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

திருத்தங்கள் சகிதம் நாடாளுமன்றத்தில் விசேட பெரும்பான்டையுடன் 20ஆவது திருத்தச்சட்டமூலத்தை நிறைவேற்ற முடியும் என சபாநாயகர் அறிவித்துடன், 4 சரத்துகள் அரசியலமைப்புக்கு முரண் என்பதால் சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நீதி அமைச்சர்,

” சர்வஜன வாக்கெடுப்புக்கு வழிவகுக்கும் சரத்துகள் நீக்கப்படும். மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் சட்டமூலம் நிறைவேற்றப்படும்.” – என்றார்.

பாராளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்படாது – சபாநாயகர் அறிவிப்பு!

இரண்டாம் உலகப்போரின்போது லண்டன் நகரில் குண்டுமழை பொழிந்தபோதுகூட பாராளுமன்றம் கூடியது. எனவே, எக்காரணம்கொண்டு பாராளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்படாது – என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றம் இன்று (20) முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.இதன்போது ஒழுங்குப்பிரச்சினையொன்றை எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,

” முகக்கவசம் அணிதல், சமூகஇடைவெளியை பேணுதல் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை கட்டாயப்படுத்தி சுகாதார அமைச்சால் புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், விதிமுறைகளை மீறினால் தண்டனையும், தண்டப்பணமும் அறவிடப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, குறித்த வர்த்தமானி அறிவித்தலில் உள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் சபைக்குள் சமூக இடைவெளி இல்லை. எனவே, சபை அமர்வுகளை தற்காலிகமாக இடைநிறுத்தியாவது சமூக இடைவெளியை பேணும் விதத்தில் கதிரைகளை ஒதுக்கி சபை அமர்வை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கவும்.” – என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர்,

” இரண்டாம் உலகப்போரின்போது லண்டன் நகருக்கு குண்டுமழை பொழிந்த தருணத்தில்கூட பாராளுமன்றம் கூடியது. எனவே, பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படாது. ” – என்று திட்டவட்டமாக அறிவித்தார்.

’20’ தொடர்பில் அனுசா விடுத்துள்ள அறிவிப்பு!

மலையக மக்களின் அரசியல் உரிமைகளுக்கான சரத்துக்கள் எதுவும் உள்ளடக்கப்படாத எந்த தீர்வு திட்டங்களும் முழுமை பெறாது என்று எனது தந்தை சந்திரசேகரன் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளார் என்று சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அனுசா மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” எமது சமூகத்தின் தொழிற்சங்கம் தாண்டிய அரசியல் உரிமைகளுக்காக எனது தந்தை இலங்கையின் தேசிய கட்சிகளுடனும் வடகிழக்கு அமைப்புகளுடனும் , முஸ்லிம் தலைமைகளுடனும் தெளிவான திட்டங்களை முன்வைத்து கொள்கைப் போராட்டம் நடாத்தினார். அது போல் மலையகத்தின் அனைத்து அமைப்புகளையும் நேச சக்தியாக இணைந்து செயற்பட்டார்.

இன்று அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதால் இதனை ஒரு மலையக அமைப்பு ஆதரிப்பது பற்றியும் அங்கம் வகிக்காக உறுப்பினர்னள் எதிர்க்கவுள்ளமை பற்றியும் செய்திகள் வெளிவருகின்றன. அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதால் ஆதரிப்பதும் அல்லது எதிர்ப்பதும் ஒரு தெளிவான ஆரோக்கியமகன முடிவாக அமையாது.

குறிப்பிட்ட இந்த 20ஆவது திருத்தச்சட்டம் அமுலாக்கப்பட்டால் இது எவ்வாறு எமக்கு சாதக பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என்பதனை முதலில் இவர்கள் மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும். இது வெறுமனே அரசாங்கத்துக்கு ஆதரவா அல்லது எதிர்ப்பா என்பதுடன் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. இதனை எதிர்க்கும் மலையக பிரதிநிதிகளுக்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நிலை ஏற்பட்டால், அப்போதும் இவர்கள் எதிர்ப்பார்களா என்பது சந்தேகமே.

இது பதவிசார்ந்த சலுகை சார்ந்த விடயமல்ல என்பதனையும் பத்து லட்சத்துக்கும் இதிகமாக இந்நாட்டில் வாழும் எம் இனத்தின் உரிமைச்சம்பந்தப்பட்ட விடயம் என்பதனை இருசாராரும் ஏற்று செயற்பட வேண்டும்.

விளக்கமில்லாத போட்டி மனப்பான்மையால் எம் தொழிலாளர்களுக்குரிய சம்பளத்தை கூட அதிகாரத்திலிருக்கும் போது பெறமுடியாமல் ஒருவரை ஒருவர் குற்;றம் சுமத்தி காலம் கடத்துவது போல இந்த விடயத்தில் மலையக பிரதிநிதிகள் முதிர்ச்சியற்ற முடிவினை எடுக்ககூடாது.

அரசாங்கம் இதனை தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறுவதும் 20ல் என்ன இருக்கிறது என்பதனை தெரிந்த பின்னர், தான் முடிவு எடுப்போம் என்று கூறுவதும் இயவாமையின் வெளிப்பாடே ஆகும்.இதில் என்ன சரத்துக்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதனை அரசாங்கத்துக்கு வலியுருத்தும் தெளிவு இவர்களிடம் இருக்க வேண்டும்.

அதற்கு முன்னர் எமது சமூகம் என்னென்ன அரசியல் உரிமைகளுக்கு உரித்தானது என்பதில் நாம் பொது உடன்பாட்டுக்கு வர வேண்டும். நாம் என்ன செய்தாலும் எமக்கு வாக்குகள் கிடைக்கும் என்றும் தேர்தல் காலத்தில் மக்களை திருப்திப் படுத்துவதற்கு தேவையானதை செய்தால் போதும் என்றும் வென்ற பின்னால் மக்கள் சகலதையும் மறந்து விடுவார்கள் என்றும் தப்புக்கணக்குப் போடுவது தற்காலிகமாக வெற்றியளிக்கலாம்.

ஆனால் இந்த துரோகங்களை மலையக வரலாறு தன்னுள் அழுத்தமாகப் பதிந்துக் கொள்வதை தடுக்கமுடியாது. ” – என்றும் அனுசா குறிப்பிட்டார்.

இலங்கையில் 5,685 பேருக்கு கொரோனா – 3,457 பேர் குணமடைவு!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 17 இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3,457ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 2 ஆயிரத்து 215  பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதல் இற்றைவரை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 685 ஆக அதிகரித்துள்ளது.

இதில் மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை கொத்தணி பரவலாலேயே அதிகளவானோருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. மினுவாங்கொட கொத்தணிபரவல்மூலம் இதுவரையில் 2 ஆயிரத்து 220 ஆக அதிகரித்துள்ளது.

’20’ மீதான விவாதம் நாளை ஆரம்பம்! 8 கட்சிகள் எதிர்ப்பு!!

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலம்மீதான விவாதம் நாளை (21) முற்பகல் 10 மணிக்கு நாடாளுமன்றத்தல் ஆரம்பமாகவுள்ளது. பிற்பகல் 7.30 மணிவரை விவாதம் தொடரும்.

மறுநாள் 22 ஆம் திகதி இரவு 7.30 மணிக்கு விவாதம் முடிவடைந்ததும் குழு நிலை ஆரம்பிக்கப்படும். அதன்பின்னர் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு 20ஆவது திருத்தச்சட்டமூலம் வாக்கெடுப்புக்கு விடப்படும், சிலவேளை ’20’ நிறைவேறுவதற்கு இரவு 10 மணிகூட தாண்டலாம்.

அதேவேளை, அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலத்தில் சர்வஜன வாக்கெடுப்புக்கு வழிகோலும் சரத்துகளை நீக்கிவிட்டு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றுவதே அரசாங்கத்தின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளில் ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை தமிழ் அரசுக்கட்சி, தேசிய மக்கள் சக்தி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி , முஸ்லிம் தேசியக் கூட்டணி, மக்கள் காங்கிரஸ், முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன ’20’ ஐ எதிர்ப்பதற்கு தீர்மானித்து எதிராக வாக்களிக்கவுள்ளன.

அத்துடன், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி , தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, தேசிய காங்கிரஸ் மற்றும் ஈ.பி.டி.பி. ஆகியன ஆதரவாக வாக்களிக்கவுள்ளன.

ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் எமது மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் இன்னும் எம்.பிக்களை நியமிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு – கோட்டை உலக வர்த்தக நிலையத்தின் ஊழியர் ஒருவருக்கும் கொரோனா

கொழும்பு – கோட்டை உலக வர்த்தக நிலையத்தின் அலுவலகமொன்றின் பணியாளர் ஒருவரும் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.

உலக வர்த்தக நிலையத்தின் மேற்குக் கட்டிடத் தொகுதியின் 32ஆவது மாடியில் இயங்கும் அலுவலகமொன்றின் பணியாளர் ஒருவரே இவ்வாறு தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பணியாளருடன் நெருக்கமாக செயற்பட்டவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த அலுவலகம் தற்போது மூடப்பட்டுள்ளதுடன், ஊழியர்களிடமும் பீ.சீ.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நிலையில், உலக வர்த்தக நிலையத்தின் செயற்பாடுகளை சுகாதார அதிகாரிகள் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய சித்திரா பௌர்ணமி விழா

0
நுவரெலியா ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த சித்திரா பௌர்ணமி முத்தேர்த்திருவிழாவை முன்னிட்டு, பால்குட பவனி இன்று (30.04.2026) வியாழக்கிழமை காலை மிக விமரிசையாக நடைபெற்றது. இன்று காலை 9.00 மணியளவில் நுவரெலியா லேடி...

‘வாழ்வுரிமை’க்காக டேசன் தோட்டத்தில் 2ஆவது நாளாகவும் தொடர்கிறது போராட்டம்!

0
கம்பளை, புப்புரஸ்ஸ – டெல்டா வடக்கு (டேசன்) தோட்டப் பகுதி மக்கள் இன்று (30) இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். 'டித்வா' பேரிடரால் குறித்த தோட்டத்தில் பாதிக்கப்பட்ட 22 குடும்பங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகளை...