Home Blog Page 3821

காஜல் திருமண ஏற்பாட்டில் திடீர் மாற்றம்

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வாலின் திருமணத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாம்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வாலுக்கும் மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் கௌதம் கிச்சலுவுக்கும் திருமணம் முடிவாகி உள்ளது.

இவர்களது திருமணம் வருகிற அக்டோபர் 30 ஆம் திகதி நடைபெறவிருந்தது. மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திருமணத்தை நடத்த திட்டமிட்டு இருந்தனர்.

இந்நிலையில் தற்போது இந்த திருமணத்தில் ஒரு சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு பதிலாக காஜல் அகர்வால் வீட்டிலேயே திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்துள்ளார்களாம்.

தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை அபிராமபுரத்தில் உள்ள நடிகர் தனுஷ் வீட்டுக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் தொடர்புகொண்ட மர்ம நபர், அபிராமபுரத்தில் உள்ள நடிகர் தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். மோப்ப நாய், வெடிகுண்டு தடுப்பு பிரிவு பொலிஸார் நடத்திய சோதனையில் அது புரளி என தெரிய வந்தது,

விஜயகாந்த் வீட்டிற்கு மிரட்டல் விடுத்த அதே நபர் தான் தனுஷ் வீட்டிற்கும் மிரட்டல் விடுத்துள்ளார் என தெரியவந்துள்ளது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

களமிறங்குகிறார் அதிரடி மன்னன்! மீண்டெழுமா பஞ்சாப் அணி?

கிறிஸ் கெய்ல் வயிற்று கோளாறில் இருந்து மீண்டு வந்துள்ளதால், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக களம் இறங்க வாய்ப்புள்ளது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு இந்த ஐபிஎல் தொடரும் பெரிதாக அமையவில்லை. 7 போட்டிகளிலும் ஆறில் தோல்வியடைந்து கடைசி இடத்தில் உள்ளது.

நாளை மறுநாள் ஆர்சிபி அணியை எதிர்கொள்கிறது. ஒருவேளை இந்த போட்டியில் தோல்வியடைந்தால் அந்த அணிக்கு பிளேஆப்ஸ் சுற்று வாய்ப்பு இல்லாமல் போய்விடும்.

பஞ்சாப் அணியில் கிறிஸ் கெய்ல் உள்ளார். அவர் இதுவரை களம் இறங்கவில்லை. வயிற்று கோளாறு காரணமாக ஓய்வில் இருந்தார். தற்போது அதில் இருந்து குணமடைந்து விட்டார். இதனால் ரோயல் சேலஞ்சர்ஸ் அணிக்கெதிராக விளையாட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே, கிறிஸ் கெய்ல் எங்கள் அணிக்கு வெற்றியை தேடிக்கொடுப்பவர் என்று கேஎல் ராகுல் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

’20’ வேண்டாம் – கத்தோலிக்க ஆயர்கள் பேரவையும் வலியுறுத்து

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்தை முன்நோக்கி கொண்டுச்செல்ல வேண்டாம் என்று கத்தோலிக்க ஆயர்கள் பேரவை, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், புதிய அரசியலமைப்பை இயற்றும் பணிக்கு முன்னுரிமை வழங்குவதே சிறப்பு எனவும், 20 ஆவது திருத்தச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் அது தொடர்பில் மீள் பரீசிலனை செய்யவேண்டும் எனவும் ஆயர்கள் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை இன்று (13) விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

மக்களின் இறைமை அனைத்து சந்தர்ப்பங்களிலும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுடன், 20 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட முன்னர் அதனை விரிவாக ஆராய வேண்டும் எனவும் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்து அதிகாரங்களும் தனி ஒருவர் வசமாவது ஜனநாயக நாட்டிற்கு பாதகமான விடயமாக அமையும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மக்களின் உண்மையான ஜனநாயக நிலைப்பாட்டை காண்பிப்பதில்லையெனவும் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தின் அரசியலமைப்புப் பேரவையூடாக புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்க வேண்டும் எனவும் பொருட்கோடலை மேற்கொள்ள முடியாத வகையில் குறைபாடுகளின்றி அதனை தயாரிக்க வேண்டும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, 20 ஆவது திருத்தச்சட்டமூலம் அவசியமில்லை என்று இலங்கை அமரபுர ராமஞ்ஞ சாமக்ரி சங்க சபை நேற்று வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் 4,893 பேருக்கு கொரோனா – 3,328 பேர் குணமடைவு! 1,552 பேருக்கு சிகிச்சை

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 11 இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3,328 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் ஆயிரத்து 552 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதல் இற்றைவரை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 893 ஆக அதிகரித்துள்ளது.

இதில் மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை கொத்தணி பரவலாலேயே அதிகளவானோருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. இன்று இதுவரையில் 49 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.மினுவாங்கொட கொத்தணிபரவல்மூலம் இதுவரையில் ஆயிரத்து 446 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

மினுவாங்கொட கொத்தணி பரவல் – மேலும் 49 பேருக்கு கொரோனா

இலங்கையில் மேலும் 49 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள்  இன்று (13) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மினுவங்கொடை தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிப் பழகிய 17 ​பேருக்கும் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 32 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மினுவாங்கொட கொத்தணிபரவல்மூலம் இதுவரையில் ஆயிரத்து 446 பேருக்கு  வைரஸ் தொற்றியுள்ளது.

‘நுவரெலியா மாவட்டத்தில் 123 குடும்பங்கள் தனிமையில் – 204 பேருக்கு பீசீஆர் பரிசோதனை

நுவரெலியா மாவட்டத்தில் 123 குடும்பங்களை சேர்ந்த 517 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். அவர்களில் 204 பேருக்கு பி.சீ.ஆர்.சோதனை நிறைவடைந்துள்ளன. இன்னும் 313 பேருக்கான பி.சீ.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு வருவதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் எம்.பி.ஆர் புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்ட கொரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான அரசாங்க உயர் மட்ட கலந்துரையாடல் இன்று (13.10.2020) காலை நுவரெலியா மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் எம்.பி.ஆர் புஸ்பகுமார தலைமையில் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில் நுவரெலியா மாவட்ட பிரதேச செயலாளர்கள் வைத்தியர்கள் நுவரெலியா பொலிஸ் திணைக்கள உயர் அதிகாரிகள் கல்வித் திணைக்கள அதிகாரிகள் சுகாதார துறையின் முக்கியஸ்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக தொடர்ந்து கருத்து தெரிவித்த மாவட்ட செயலாளர் எம்.பி.ஆர் புஸ்பகுமார
” நுவரெலியா மாவட்டத்தில் 123 குடும்பங்களை சேர்ந்த 517 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அம்பகமுவ பகுதியில் 9 பேரும் பொகவந்தலாவ பகுதியில் 15 குடும்பங்களை சேர்ந்த 80 பேரும் அங்குரண்கெத்த பகுதியில் 26 குடும்பங்களை சேர்ந்த 100 பேரும் கொட்டகலை பகுதியில் 4 குடும்பங்களை சேர்ந்த 4 பேரும் கொத்மலையில் 40 பேரும் மஸ்கெலியாவில் 2 குடும்பங்களை சேர்ந்த 14 பேரும் மதுரட்ட பகுதியில் 5 குடும்பங்களை சேர்ந்த 10 பேரும்
புதிய திஸ்பனை பகுதியில் 47 குடும்பங்களை சேர்ந்த 200 பேரும் நுவரெலியா மாநகர சபை எல்லைக்குட்பட்ட 13 குடும்பங்களை சேர்ந்த 30 பேரும் இராகலை பகுதியை சேர்ந்த 2 குடும்பங்களில் 4 பேரும் வலப்பனை பகுதயில் 9 குடும்பங்களை சேர்ந்த 26 பேரும் தங்களுடைய வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் விபரங்களை கிராமசேவகர்களும் சுகாதார அதிகாரிகளும் இணைந்து எங்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும்.இதன்போது வருமானம் குறைந்த குடும்பங்களுக்கும் உதவிகள் தேவைப்படும் குடும்பங்களுக்கும் தேவையான உதவிகளை நுவரெலியா மாவட்ட செயலகத்தின் ஊடாக முன்னெடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
அதே நேரம் நுவரெலியாவில் புத்தகசாலை விக்டோரியா பூங்கா படகு சவாரி குதிரை சவாரி மற்றும் உலக முடிவு ஆகிய சுற்றுலா தளங்கள் மறு அறிவித்தல்வரை மூடப்பட்டள்ளது.அத்துடன் நுவரெலியா நகரில் பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றும் மறு அறிவித்தல்வரை மூடப்பட்டுள்ளது.அந்த உணவக உரிமையாளர்களும் அங்கு கடமைபுரிந்தவர்களும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் அரசாங்கத்தின் ஏற்பாட்டில் பத்தனை ஸ்ரீ பாத கல்வியல் கல்லூரி தனிமைப்படுத்தல் நிலையமாக தெரிவு செய்யப்பட்டு அதில் தற்பொழுது தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.இங்கு ஒரே நேரத்தில் 250 பேர் தனிமைப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் இருக்கின்றது.
மேலும் வெளிநாடுகளில் இருந்து வருகை தருகின்றவர்களை தனிமைப்படுத்துவதற்காக நுவரெலியாவில் நட்சத்திர விடுதி ஒன்று செயற்பட்டு வருகின்றது.அதில் கடந்த காலங்களிலும் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.எனவும் நுவரெலியா மாவட்ட செயலாளர் எம்.பி.ஆர் புஸ்பகுமார மேலும் தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த நுவரெலியா மாவட்ட தொற்று நோய் தடுப்பு பிரிவின் வைத்தியர் மதுர செனவிரத்ன கருத்து தெரிவிக்கையில்
நுவரெலியா மாவட்டத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 517 பேரில் இதுவரை 204 பேருக்கு பி.சீ.ஆர் பரிசோதனை நிறைவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கான முடிவுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. அவர்களில் யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.எஞ்சியுள்ள 313 பேருக்கு தற்பொழுது பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படுகின்றது.அவர்களுக்கான முடிவுகள் கிடைக்கப்பெற்றவுடன் அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
மினுவாங்கொடை பகுதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட கொரோனா தொற்று உறுதியானவர்களில் 13 பேர் நுவரெலியா மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அவர்களில் 5 பேர் நுவரெலியா மாவட்டத்தில் நவதிஸ்பனே வலப்பனை ஹங்குரண்கெத்த கந்தப்பளை கொட்டகலை ஆகிய பகுதிகளுக்கு வந்து சென்றுள்ளனர். இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இங்கு கருத்து தெரிவித்த நுவரெலியா மேலதிக வலய கல்வி பணிப்பாளர் எம்.மோகன்ராஜ்
நுவரெலியா மாவட்டத்தில் நடைபெற்று முடிவடைந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 125 பாடசாலைகளை சேர்ந்த 12900 பேர் பரீட்சைக்கு முகம் கொடுத்தனர். இவர்களில் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் இருந்து வருகை தந்த கொத்மலை பகுதியை சேர்ந்த 8 மாணவர்களும் ஹட்டன் பகுதியை சேர்ந்த 2 மாணவர்களுமாக மொத்தம் 10 மாணவர்களுக்கு அந்தந்த பாடசாலைகளில் விசேட பரீட்சை முகாம்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு பரீட்சைக்கு தோற்றுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
அதே நேரம் தற்பொழுது நடைபெற்று வருகின்ற க.பொ.த உயர்தர பரீட்சையில் 10874 மாணவர்கள் 83 பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள்.இவர்களுக்கு தேவையான சுகாதார நடவடிக்கைகள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அத்துடன் வீடுகளில் தனிமைப்படுத்தப்படடிருக்கின்ற 3 மாணவர்களும் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.இவர்களுக்கு தனியான அறைகள் ஒதுக்கப்பட்டு அவர்கள் பரீட்சைக்கு முகம் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் அந்தந்ந பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு

‘தெஹிவளையில் ஒருவருக்கு கொரோனா’ – 27 ஆம் திகதி புத்தக கண்காட்சிக்கு சென்றுள்ளார்

தெஹிவளை, படோவிட பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நபரொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மினுவாங்கொட கொத்தணி பரவல் ஊடாகவே இவருக்கு வைரஸ் தொற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இவர் கடந்த 27 ஆம் திகதி கொழும்பு, சர்வதேச புத்தக கண்காட்சியை பார்வையிடவும் சென்றுள்ளார். இவருடன் நெருங்கி பழகியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

‘தோட்ட தொழிலாளர்களுக்கு விற்கப்படவிருந்த பழுதடைந்த 500 கிலோ அரிசி மீட்பு’

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு விற்பனை செய்யும் நோக்கில் வைக்கப்பட்டிருந்த சுமார் 500 கிலோ பழுதடைந்த அரிசி, கொட்டகலை நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில் இருந்து இன்று (13) மீட்கப்பட்டுள்ளன.

கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்கள் இன்று (13) திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. பொது சுகாதார பரிசோதகர் சௌந்தராகவன் உட்பட சுகாதார பரிசோதகர்கள் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போதே இரு வர்த்தக நிலையங்களில் இருந்து பழுதடைந்த அரிசிமூடைகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த வர்த்தகர்களுக்கு எதிராக எதிர்வரும் 23 ஆம் திகதி ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படவுள்ளது.

இத்தகைய திடீர் சோதனை நடவடிக்கைகள் தொடரும் எனவும், சில வர்த்தகர்களுக்கு இதன்போது கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது எனவும் பொது சுகாதார பரிசோதகர் சௌந்தராகவன் தெரிவித்தார்.

கொட்டகலை நகரை சூழவுள்ள பகுதிகளில் பெருந்தோட்டத்தொழிலாளர்களே அதிகம் வாழ்கின்றனர். அவர்களை இலக்குவைத்தே இந்த அரிசி தொகை விற்பனை செய்யப்படவிருந்தது எனக் கூறப்படுகின்றது.

(மலையக குருவியின் சிறப்புச்செய்தியாளர்)

‘சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றுமாறு மக்களிடம் கோரிக்கை’

கொவிட் 19 வைரஸ் தொற்று மீண்டும் நாட்டில் பரவுவதை முழுமையாக கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் சமகால அரசாங்கத்திற்கு இருப்பதாக பெருந்தோட்டத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ரமேஷ் பத்திரண இன்று தெரிவித்தார்.

உலக மக்களை பெருமளவில் அச்சுறுத்திவரும் இந்த தொற்று பரவலை கட்டுப்படுத்திய நாடுகளில் இலங்கை தொடர்ந்தும் முக்கிய இடத்தை வகித்து வருகின்றது.

இந்த நிலையை தக்கவைத்துக்கொள்வதுடன் இந்த வைரசை கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான சமகால அரசாங்கத்திற்கு இருப்பதாகவும், இதில் திடமாக நம்பிக்கையை அரசாங்கம் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்ததுடன் இதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திவுலப்பிட்டிய மினுவாங்கொடையில் உள்ள தனியார் நிறுவனங்கள் மூலமான வைரஸ் கொத்தணியில் இதுவரையில் 1394 பேர் தொற்றுக்குள்ளானமை பதிவாகியுள்ளது.

24,778 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 10,281 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நாளாந்தம் இந்த தொற்று தொடர்பில் அரசாங்கம் கண்காணித்து வருகின்றது.

இதற்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பொது மக்கள் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் சுகாதார பாதுகாப்பு வழிகாட்டி ஆலோசனைகளை கடைப்பிடிப்பதுடன், அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் கேட்டுக்கொண்டார்

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

இறைவரித் திணைக்களத்தின் திறனை மேம்படுத்துவது குறித்து ஆராய்வு!

0
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. வரி வருவாயை விரிவுபடுத்துதல், வரி இணக்கத்தை அதிகப்படுத்துதல் மற்றும் நிலுவையில் உள்ள...

களுத்துறை மண்ணில் கல்வி கௌரவ விழா!

0
களுத்துறை மண்ணில் கல்வி கௌரவ விழா! கல்வி அமைச்சின் பெருந்தோட்டப் பாடசாலைகள் அபிவிருத்திக் கிளையின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சின்னையா ஜெயக்குமாருக்கான வரவேற்பு நிகழ்வும், களுத்துறை மாவட்டத்தின் தமிழ் பெருந்தோட்ட பாடசாலைகளின் அதிபர்களையும், ஓய்வுநிலை அதிபர்களையும்...

கலமுதுனை தமிழ் வித்தியாலயத்தில் உதயமாகிறது பழைய மாணவர் சங்கம்!

0
நூற்றாண்டு நோக்கிய பயணம்: கலமுதுனை தமிழ் வித்தியாலயத்தில் உதயமாகிறது பழைய மாணவர் சங்கம்! தொலஸ்பாகை, கலமுதுனை தமிழ் வித்தியாலய பழைய மாணவர் சங்க அங்குரார்ப்பன நிகழ்வு எதிர்வரும் மே 2 ஆம் திகதி பாடசாலை...