Home Blog Page 3820

கண்டி 5 மாடி கட்டட விவகாரம் – சி.சி.டி.வி. காட்சிப் பதிவுகள் அழிப்பு!

கண்டி பூவெலிக்கட – சங்கமித்த வீதியில் இடிந்து விழுந்துள்ள ஐந்து மாடி கட்டிடங்களின் சி. சி. டிவி காணொளி காட்சிகள் அழிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக நேற்று (13) கண்டி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையிபோது கண்டி பிரதான பொலிஸ் பரிசோதகர் எம்.வை.எஸ் பண்டார சாட்சியமளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்த ஐந்து மாடிக் கட்டடத்தின்நான்கு மாடிகளுக்கான ஆவணங்கள் இருந்தபோதிலும் முழு கட்டடம் தொடர்பான ஆவணங்களைக் கண்டுபிடிப்பது மிகவும் கடிமெனவும் முழு தகவல்களையும் பெற்றுக்கொள்ள சிறிது காலம் எடுக்கமெனவும் பொலிஸார் நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர்.

அதேவேளை,  கட்டட உரிமையாளரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை தடுத்துவைக்க கண்டி மேலதிக மஜிஸ்திரேட் சம்பத் கமகே நேற்று உத்தரவிட்டார்.

வழக்கு விசாரணை மூன்று பேரை கொலைசெய்த சம்பவம் என்பதால் தண்டனைச் சட்டத்தின் 298 ஆவது பிரிவைத் தாண்டி அதிக குற்றச்சாட்டுகளுக்குச் செல்லும் போக்கு இருப்பதால், இந்த விவகாரத்தில் சுயாதீன விசாரணைக்குத் தேவையான பின்னணியை உருவாக்கும் பொருட்டு இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் மீண்டும் சிறையில் அடைக்கப்படுவாரென கண்டி மேலதிக மாஜிஸ்திரேட் திறந்த நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இறந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கைகள் மற்றும் வழக்கை உயர்நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்வதற்கு சாத்தியமா? என்பது தொடர்பான விடயங்கள் அந்த நேரத்தில் பரிசீலிக்கப்படுமென்றும் மேலதிக நீதவான் கூறினார்.

எழுச்சி பெற்றது சென்னை அணி – 3ஆவது வெற்றியையும் பதிவு செய்தது

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத்தை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 ஆவது வெற்றியை பதிவு செய்தது.

13ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு துபாயில் அரங்கேறிய 29ஆவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், ஐதராபாத் சன்ரைசர்சும் மல்லுகட்டின.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அணியின் தலைவர் டோனி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். இந்த சீசனில் சென்னை அணி முதலில் துடுப்பாட்டம் செய்வது இதுவே முதல்தடவையாகும்.

அது மட்டுமின்றி இந்த முறை தொடக்க வரிசையிலும் மாற்றம் செய்யப்பட்டது, வாட்சன் 2ஆவது வரிசைக்கு தள்ளப்பட்டார். இதையடுத்து சாம் கர்ரனும், பாப் டு பிளிஸ்சிஸ்சும் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர். இந்த புதிய வியூகத்துக்கும் பலன் கிடைக்கவில்லை.

பிளிஸ்சிஸ் (0) சந்தித்த முதல் பந்திலேயே விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவிடம் சிக்கினார். இதன் பின்னர் சாம் கர்ரனுடன், ஷேன் வாட்சன் இணைந்தார். கலீல் அகமதுவின் ஒரே ஓவரில் 2 பவுண்டரி, 2 சிக்சர் விரட்டி அமர்க்களப்படுத்திய சாம்கர்ரன் (31 ரன், 21 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) சந்தீப் ஷர்மாவின் பந்து வீச்சில் ஏமாந்து போல்டு ஆகிப்போனார்.

இதைத் தொடர்ந்து வாட்சனும், அம்பத்தி ராயுடும் கைகோர்த்து மிடில் ஓவர்களில் அணியின் ஸ்கோரை சீரான வேகத்தில் நகர்த்தினர். கடினமான கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பித்த இவர்கள், ரஷித்கானின் சுழலில் சிக்சரை பறக்க விட்டு அசத்தினர். அணியின் ஸ்கோர் 116 ரன்களாக (15.2 ஓவர்) உயர்ந்த போது அம்பத்தி ராயுடு 41 ரன்களில் (34 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார். தொடர்ந்து ஷேன் வாட்சனும் (42 ரன், 38 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்) வெளியேறினார். அவர் தமிழகத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் வீசிய புல்டாஸ் பந்து வீச்சில் கேட்ச் ஆனார்.

இதன் பின்னர் கேப்டன் டோனியும், ரவீந்திர ஜடேஜாவும் ஸ்கோரை உயர்த்துவதில் கவனம் செலுத்தினர். நடராஜனின் ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரி ஓடவிட்ட டோனி அவரது மற்றொரு ஓவரில் 102 மீட்டர் தூரத்திற்கு பிரமாதமான ஒரு சிக்சரை நொறுக்கினார். ஆனால் அடுத்த பந்திலேயே நடராஜன் பழிதீர்த்துக் கொண்டார்.

ஆப்-சைடில் சற்று புல்டாசாக விழுந்த பந்தை டோனி (21 ரன், 13 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) அடித்த போது சரியாக ‘கிளிக்’ ஆகாத அந்த பந்தை வில்லியம்சன் கேட்ச் செய்தார். பின்னர் இறங்கிய வெய்ன் பிராவோ டக்-அவுட் ஆனாலும் கடைசி ஓவரில் ஜடேஜா பவுண்டரி, சிக்சர் அடித்து அணியின் ஸ்கோரை 160 ரன்களை கடக்க வைத்தார்.

20 ஓவர் முடிவில் சென்னை அணி 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா 25 ரன்களுடனும் (10 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்), தீபக் சாஹர் 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். ஐதராபாத் தரப்பில் டி.நடராஜன், சந்தீப் ஷர்மா, கலீல் அகமது தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

அடுத்து 168 ரன்கள் இலக்கை நோக்கி களம் கண்ட ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களை சென்னை பவுலர்கள் சீக்கிரமாகவே கபளீகரம் செய்தனர். கேப்டன் டேவிட் வார்னர் (9 ரன்), சாம்கர்ரனின் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் ஆனார். மற்றொரு தொடக்க வீரர் பேர்ஸ்டோ (23 ரன்) ரவீந்திர ஜடேஜாவின் சுழலில் கிளீன் போல்டு ஆனார். இதற்கிடையே 2-வது விக்கெட்டுக்கு இறங்கிய மனிஷ் பாண்டே (4 ரன்) ரன்-அவுட் ஆனார்.

ஒரு கட்டத்தில் 59 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து தத்தளித்த ஐதராபாத் அணிக்கு கேன் வில்லியம்சன் நம்பிக்கை கொடுத்தார். நேர்த்தியாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டார். இருப்பினும் ரன்தேவை அதிகரித்துக் கொண்டே போனதால் அவரும் நெருக்கடிக்குள்ளானார். மறுமுனையில் பிரியம் கார்க் 16 ரன்னிலும், விஜய் சங்கர் 12 ரன்னிலும் வீழ்ந்தனர்.

சென்னை அணியினரை அச்சுறுத்திக்கொண்டிருந்த வில்லியம்சன்( 57 ரன், 39 பந்து, 7 பவுண்டரி) 18-வது ஓவரில் கரண் ஷர்மாவின் பந்து வீச்சை சிக்சருக்கு அடிக்க முயற்சித்து கேட்ச் ஆனார். அதன் பிறகே சென்னை வீரர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அடுத்து வந்த ரஷித்கான் 14 ரன்னில் அவுட் ஆனார். பரபரப்பான கடைசி ஓவரில் ஐதராபாத்தின் வெற்றிக்கு 22 ரன் தேவைப்பட்டது. இந்த ஓவரை வீசிய மிதவேகப்பந்து வீச்சாளர் வெய்ன் பிராவோ ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டும் வீழ்த்தி சிக்கலின்றி வெற்றியை உறுதி செய்தார்.

ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 147 ரன்களே எடுத்தது. இதன் மூலம் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்தது. சென்னை தரப்பில் கரண் ஷர்மா, வெய்ன் பிராவோ தலா 2 விக்கெட்டும், சாம் கர்ரன், ஜடேஜா, ஷர்துல் தாகூர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 8-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணிக்கு இது 3-வது வெற்றியாகும். ஏற்கனவே இதே மைதானத்தில் ஐதராபாத்திடம் 7 ரன் வித்தியாசத்தில் அடைந்த தோல்விக்கும் சுடச்சுட பதிலடிகொடுத்து விட்டது. ஐதராபாத்துக்கு இது 5-வது தோல்வியாகும்.

கெலேகால கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதி தாழிறங்கும் அபாயம்

நுவரெலியா மாநகர சபைக்குட்பட்ட கெலேகால கிராமத்திற்கு செல்லும் வீதியில் பாரிய வெடிப்புகளும் குழிகளும் ஏற்பட்டுள்ளதுடன், வீதி தாழ் இறங்கும் அச்சம் நிலவுவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கெலேகால கிராம வீதிக்கு அருகிலுள்ள தேசிய பாடசாலையொன்றின் விளையாட்டு மைதானம் புனரமைப்பதற்காக கடந்த இரண்டு வாரமாக பாரவூர்திகள் மூலம் மண் கொண்டு செல்வதால் வீதியில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பாதை உடைந்து தாழ் இறங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வீதியின் அடியில் செல்லும் மாநகர சபையால் விநியோகிக்கப்படும் குடிநீர் குழாயும் உடைந்து பாதையில் கசிந்து வருகின்றது.

நுவரெலியா நகரிலிருந்து ஒரு கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது கெலேகால கிராமம். நுவரெலியாவின் கிராமங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற கிராமமாக இது இருக்கின்ற போதிலும் இந்த வீதி தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்துவதில்லை.

நுவரெலியா மாநகரசபைக்குட்பட்ட பத்து வட்டாரங்களிலும் வீதிகள் அனைத்தும் காபட் பாதைகளாக புனரமைக்கப்பட்ட போதிலும் இந்த கெலேகால வீதி மாத்திரம் இதுவரை புனரமைக்கப்படாமல் இருக்கின்றது. இது தமிழ், சிங்கள,முஸ்லீம் மக்கள் ஒற்றுமையாக வாழும் கிராமமாகும்.

கடந்த தேர்தல் காலங்களில் மட்டும் வீதிக்கு காபட் இட்டு தருவதாகவும் இக் கிராமத்தின் குறைகளையும் தீர்த்து வைப்பதாகவும் வாக்குறுதிகள் வழங்கும் அரசியல்வாதிகள் தேர்தலின் பின்னர் இந்த வீதியைப் பற்றி சிந்திப்பதே இல்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

நுவரெலியா கிரகரி வாவிக்கு அருகாமையில் இக்கிராமம் இருப்பதால் பெருந்தொகையான சுற்றுலா பயணிகளும் இங்கு வருகை தருகின்றனர். எனவே நுவரெலியா மாநகரசபை எல்லைக்குள் இவ்வீதி இருப்பதால் பாரவூர்திகள் மண் ஏற்றி செல்வதை தடை செய்ய வேண்டும். உடைந்த வீதியை திருத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தலவாக்கலை நிருபர்

3 கோடியே 83 லட்சம் பேருக்கு கொரோனா – இலங்கையிலும் எகிறும் எண்ணிக்கை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 லட்சத்து 90 ஆயிரத்தை கடந்தது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

தற்போதைய நிலவரப்படி, 3 கோடியே 83 லட்சத்து 53 ஆயிரத்து 231 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 84 லட்சத்து 16  ஆயிரத்து 372 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 69 ஆயிரத்து 961 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவில் இருந்து 2 கோடியே 88 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 38 ஆக அதிகரித்துள்ளது.

20 ஆம் திகதிக்கு பின்னரே ’20’ குறித்து இறுதி முடிவு

” பௌத்த பீடங்களின் கோரிக்கை உட்பட அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பான அடுத்தக்கட்ட நகர்வுகள் 20ஆம் திகதிக்கு பின்னரே முன்னெடுக்கப்படும்.” – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின்போத அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் இலங்கை அமரபுர ராமஞ்ஞ சாமக்ரி சங்க சபை விடுத்துள்ள கூட்டறிக்கை தொடர்பில் அமைச்சரிடம் கேள்வி எழுப்பட்டது. இதற்கு அவர் நேரடி பதிலை வழங்கவில்லை. மழுப்பல் போக்கில் பதிலளித்தார்.

” அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பரீசிலனை செய்த உயர்நீதிமன்றம் தனது சட்டவியாக்கியானத்தை சபாநாயகருக்கு அனுப்பிவைத்துள்ளது. உயர்நீதிமன்றின் சட்டவியாக்கியானத்தை சபாநாயகர் எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அறிவிப்பார்.

சபாநாயகர் இவ்வாறு அறிவித்த பின்னரே 20 தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.”-  என்றும் அமைச்சர் கெஹலிய குறிப்பிட்டார்.

மினுவாங்கொட கொத்தணி பரவல் – மேலும் 145 பேருக்கு கொரோனா

இலங்கையில் மேலும் 145 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இன்று (13) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மினுவங்கொடை தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிப் பழகிய 97 ​பேருக்கும் , தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 48 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மினுவாங்கொட கொத்தணிபரவல்மூலம் இதுவரையில் ஆயிரத்து 591 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

ரொனால்டோவுக்கும் கொரோனா தொற்று

உலகப்புகழ் பெற்ற உதைப்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

ரின்மீன், பருப்பு, சீனி, வெங்காயத்துக்கான இறக்குமதி வரி நீக்கம்

ரின் மீன், சீனி, பருப்பு மற்றும் வெங்காயம் ஆகியவற்றுக்கான இறக்குமதி வரியை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இவ்வாறு இறக்குமதி வரி நீக்கப்படுவதால் இன்றிரவு (13) முதல் மேற்படி பொருட்களின் விலையும் குறையவுள்ளது.

இதன்படி ரின்மீன் (பெரிய செமன் ரின்) ஒன்றை 200 ரூபாவுக்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோவை 100 ரூபாவுக்கும், சீனி ஒரு கிலோவை 85 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்,இவ்வத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட ரூபா 500 இற்கு மேல் மதிப்புள்ள பொருட்களை, சதொச நிறுவனத்தில் கொள்வனவு செய்யும் போது ஒரு கிலோ பருப்பின் விலை ரூ. 150 இற்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தெங்கு அபிவிருத்தி சபை, குருணாகல் பெருந்தோட்ட நிறுவனம், சிலாபம் பெருந்தோட்ட நிறுவனம் ஆகியன தற்போது கொழும்பு நகரத்திற்கான தேங்காய் விநியோகத்தை அதிகரித்துள்ளன. எனவே, வாடிக்கையாளர்கள் சதொச விற்பனை நிலையங்களிலிருந்து நியாயமான விலையில் தேங்காய்களைப் பெற முடியும் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

வாழ்க்கைச்சுவை மற்றும் கொரோனா வைரஸ் தாக்கம் ஆகியவற்றைக்கருத்திற்கொண்டே மக்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. 

 

‘என்னை மன்னித்து விடுங்கள்’ – மக்கள் மத்தியில் கண்கலங்கிய வடகொரிய ஜனாதிபதி

வடகொரியாவில் நடைபெற்ற இராணுவ அணி வகுப்பு நிகழ்ச்சியின் போது, அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜாங் உன் உணர்ச்சிவசமாக பேசி கண்கலங்கியுள்ளார்.

வடகொரியாவில் ஆளும் தொழிலாளர் கட்சியின் 75-வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, இராணு அணி வகுப்பு, கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த இராணுவ அணி வகுப்பு வடகொரியா ஹவாசோங் -16என்ற புதிய ஏவுகணையை அறிமுகப்படுத்தியது. வடகொரியா இந்த புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஆயுதம் பயங்கரமானது என்று பல்வேறு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன

இந்நிலையில், இந்த இராணுவ அணி வகுப்பு நிகழ்ச்சியில் போது பேசிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

அவர் பேசியது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், எங்கள் நாட்டு மக்கள் வானத்தை விட உயரமாகவும், கடல் போன்று ஆழமாகவும் என் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள்.

ஆனால், அதை நான் திருப்திகரகாக செய்ய தவறிவிட்டேன். நான் உங்களுக்கு ஒன்றும் செய்யவில்லை, இதற்காக மிகவும் வருந்துகிறேன். இந்த நாட்டை வழிநடத்திய தந்தை மற்றும் தாத்தாவைப் பற்றி கூறிய கிம் ஜாங், அதன் பின் இந்த நாட்டை வழி நடத்தும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கு மக்கள் என் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி, என் முயற்சிகள் எப்போதும் நேர்மையாகவே இருக்கும், தங்கள் வாழ்க்கையில் உள்ள சிரமங்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்று தந்தை மற்றும் தாத்தாவை மேற்கோள் காட்டி பேசியுள்ளார்.

குறித்து பேசும் போது, கிம் கண்கலங்கிவிட்டதாகாவும், கிம்மின் உரையைக் கேட்டு அங்கிருக்கும் மக்கள் பலரும் கண்கலங்கிவிட்டதாகவும், இராணுவ வீரர்களுக்கு அவர் ஆற்றிய உரையைக் கண்டு சில இராணுவ வீரர்களும் உணர்ச்சியில் கண்கலங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், கிம்மின் இந்த உணர்ச்சிவசமான உரையைக் கண்ட ஆய்வாளர்கள் பலரும், கிம் மக்களின் அனுதாபத்தை பெறுவதற்காக இப்படி பேசியுள்ளதாக கூறுகின்றனர்.

கெட்டபுலாவில் முறிந்து விழுந்தது மரம் – போக்குவரத்து ஸ்தம்பிதம்!

தலவாக்கலை – நாவலப்பிட்டி பிரதான வீதியில் கெட்டபுலா பகுதியில் இன்று (13.10.2020) மதியம் பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததால் அவ்வீதியினூடான போக்குவரத்து தடைபட்டது.

இதனையடுத்து அப்பிரதேச வாசிகள் இணைந்து வீதியின் குறுக்கே வீழ்ந்த மரத்தினை வெட்டி அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

குறித்த மரம் முறிந்து வீழ்ந்ததால் சுமார் இரண்டு மணித்தியாலயத்திற்கு மேல், போக்குவரத்து தடைபட்டிருந்தது. இதனால் கெட்டபுலா, நாவலப்பிட்டி ஆகிய பகுதிகளுக்கு சென்ற பொது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.அத்தோடு தொலைபேசி இணைப்புகள் மீது முறிந்து வீழ்ந்ததால் அப்பகுதிக்கான தொலைதொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

இறைவரித் திணைக்களத்தின் திறனை மேம்படுத்துவது குறித்து ஆராய்வு!

0
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. வரி வருவாயை விரிவுபடுத்துதல், வரி இணக்கத்தை அதிகப்படுத்துதல் மற்றும் நிலுவையில் உள்ள...

களுத்துறை மண்ணில் கல்வி கௌரவ விழா!

0
களுத்துறை மண்ணில் கல்வி கௌரவ விழா! கல்வி அமைச்சின் பெருந்தோட்டப் பாடசாலைகள் அபிவிருத்திக் கிளையின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சின்னையா ஜெயக்குமாருக்கான வரவேற்பு நிகழ்வும், களுத்துறை மாவட்டத்தின் தமிழ் பெருந்தோட்ட பாடசாலைகளின் அதிபர்களையும், ஓய்வுநிலை அதிபர்களையும்...

கலமுதுனை தமிழ் வித்தியாலயத்தில் உதயமாகிறது பழைய மாணவர் சங்கம்!

0
நூற்றாண்டு நோக்கிய பயணம்: கலமுதுனை தமிழ் வித்தியாலயத்தில் உதயமாகிறது பழைய மாணவர் சங்கம்! தொலஸ்பாகை, கலமுதுனை தமிழ் வித்தியாலய பழைய மாணவர் சங்க அங்குரார்ப்பன நிகழ்வு எதிர்வரும் மே 2 ஆம் திகதி பாடசாலை...