Home Blog Page 3822

‘மஞ்சள் தட்டுப்பாடு தற்காலிகமானது – 2021 இல் தீர்வு கிடைத்துவிடும்’

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள மஞ்சள் கொள்கலன்கள் அனைத்தும் சட்டவிரோதமானவை என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும் அமைச்சருமான ரமேஷ் பத்திரண இன்று தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று முற்பகர் அரச தகவல்திணைக்களத்தில் நடைபெற்றது.

இதன்போது எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

” மஞ்சள் இறக்கு மதிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் இறக்குமதி செய்துள்ளனர். அவற்றை மீள ஏற்றுமதி செய்வது பற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது மஞ்சளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது என்பதை ஏற்கின்றோம். இதற்காக நுகர்வோரிடம் மன்னிப்பு கோருகின்றோம். ஆனால் 2021 ஆம் ஆண்டளவில் உள்நாட்டு உற்பத்தியே போதுமானதாக இருக்கும்.” – என்றும் அவர் கூறினார்.

‘ஊடகவியலாளர்கள்மீது தாக்குதல் ‘ – பக்கச்சார்பற்ற விசாரணைக்கு உத்தரவு!

முல்லைதீவில் ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தி, உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று (13) அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

இதன்போது ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

‘ரயிலை தடம்புரள வைத்து கொள்ளையடிக்க முயன்ற நால்வர் கைது’

கொழும்பிலிருந்து பதுளைக்குவந்து கொண்டிருந்த பொடிமெனிகே ரயிலை விபத்துக்குள்ளாக்க இளைஞர்கள் சிலர் முயன்றபோதிலும், ரயில் சாரதியின் பாரிய முயற்சியினால் ஏற்படவிருந்த அனர்த்தம் மயிரிழையில் தடுக்கப்பட்டது.

தெமோதரை–எல்ல ரயில் பாதையில் 41ஆவது சுரங்கப் பாதையருகே, நேற்று இவ் விபத்து ஏற்படவிருந்தது.

எல்ல பகுதியைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள், ரயில் பாதையில் பெரும் பாறைக் கற்களை குவித்து,பொடிமெனிகே ரயிலைதடம் புரள வைக்கமுயற்சிசெய்திருந்தனர்.

ரயிலை செலுத்தி வந்த சாரதி, ரயில் பாதையில் கற்பாறைகள் குவிக்கப்பட்டிருப்பதைக் கண்டு, பாரிய முயற்சிகளை மேற்கொண்டு, ரயிலைநிறுத்தி, ஏற்படவிருந்த பாரிய விளைவுகளை தடுத்துநிறுத்தினார்.

ரயில் நிறுத்தப்பட்டதும், ரயில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட முயற்சியினால் தப்பியோடிய ஒரு இளைஞன் பிடிக்கப்பட்டு, எல்லபொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
ஒப்படைக்கப்பட்ட இந் நபர் விசாரணைக்குற்படுத்தல் போது, ஏனைய மூன்று இளைஞர்களுடன், ரயிலை விபத்துக்குள்ளாக்கி கொள்ளையில் ஈடுபடமுயற்சித்தமை தெரியவந்துள்ளது.

வழங்கிய தகவலின் பிரகாரம் ஏனைய மூன்று இளைஞர்களையும் கைதுசெய்ய,எல்ல பொலிசார் தேடுதல் நடவடிக்கைகளைமேற்கொண்டுள்ளனர்.

விபத்தைதடுத்த ரயில் சாரதியைபயணிகள் பலரும், இரயில் நிலைய அதிபரும் வெகுவாகப் பாராட்டியதையும்,நன்றிதெரிவித்தமையையும் அவதானிக்கமுடிந்தது.

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 506 கிலோ மஞ்சள் மீட்பு

தமிழகம், ராமேஷ்வரம் மண்டபம் அருகே உள்ள முயல் தீவில் இருந்து இலங்கைக்கு கள்ளத்தோணியில் கடத்த இருந்த 506 கிலோ சமையல் மஞ்சள் மூட்டைகளை இந்திய கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பான கடத்தல்காரர்களை தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள முயல் தீவில் இருந்து இலங்கைக்கு சமையல் மஞ்சள் கடத்த இருப்பதாக மண்டபம் கடலோர காவல் படைக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து கடலோர காவல்படை வீரர்கள் ரோந்து படகில் குழுக்களாக பிரிந்து மன்னார் வளைகுடா கடற்பகுதியில் உள்ள தீவுகளில் ரோந்து மேற்கொண்டனர்.

அப்போது முயல் தீவில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சாக்கு மூட்டைகள் மணலில் புதைத்து வைக்கபட்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக மண்னை தோண்டி பார்த்த போது அதில் இலங்கைக்கு கடத்துவதற்காக மண்ணுக்கு அடியில் புதைக்கபட்டிருந்த 12 மூட்டைகளில் சமையல் மஞ்சள் இருந்தது தெரியவந்ததையடுத்தது மஞ்சள் மூட்டைகளை கைபற்றிய கடலோர காவல் படை வீரர்கள் மண்டபத்தில் உள்ள கடலோர காவல் படை முகாமிற்க்கு எடுத்த வந்தனர்.கைப்பற்றப்ட்ட மூட்டைகளில் சுமார் 506 கிலோ சமையல் மஞ்சள் இருந்துள்ளது.

இந்த கடத்தல் மஞ்சளை தமிழக்ததில் இருந்து கடத்தி செல்ல இலங்கையை சேர்ந்த நபர்கள் யாரும் தீவு பகுதியில் மறைந்துள்ளனரா அல்லது தமிழகத்ததை சேர்ந்த கடத்தல்காரர்கள் கடலோர காவல்படை வீரர்கள் தீவுக்குள் வருவதை கண்டதும் தீவுகளில் மறைந்துள்ளனரா என்பது குறித்து கரை ஓரங்களிலும் தீவு பகுதிகளிலும் கடலோர காவல்படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

‘மலையக மக்களின் காணி உரிமைக்கு களம் அமைத்த வேலாயுதம்’

மலையகத்தின் சிரேஷ்ட தொழிற்சங்க தலைவராகவும் அமைச்சராகவும் செயற்பட்ட அமரர் கே. வேலாயுதம் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்றாகும். (13.05.2020) இதனைமுன்னிட்டு பதுளையில் பல இடங்களிலும் இன்று (13) சுகாதார நடைமுறைகளைப்பின்பற்றி ஆன்மீக வழிபாடுகள் இடம்பெறவுள்ளன.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக்கருத்திற்கொண்டும், கொரோனா வைரஸ் ஒழிப்பு வேலைத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாகவும் நினைவஞ்சலிக்கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது எனவும், இறைவழிபாடுகள் மட்டுமே அதுவும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இடம்பெறும் எனவும் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

கொரோனா வைரஸ் கட்டுக்குள்வந்து, நாடு வழமைக்கு திரும்பிய பின்னர் நினைவஞ்சலிக் கூட்டம் நடத்தப்படும். அது தொடர்பான அறிவித்தல் பிறகு விடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டனர்.

1950 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி நுவரெலியா, உடபுஸல்லாவ கார்கிலிஸ் தோட்டத்தில் பிறந்த அமரர் கே. வேலாயுதம் ஆரம்பக் கல்வியை தோட்டப் பாடசாலையிலும், உயர் கல்வியை பதுளை ஊவா கல்லூரியிலும் பயின்றார். தனது ஆரம்ப கால தொழிலாக ஆங்கில தனியார் கல்வி நிறுவனம் ஒன்றை நடத்திவந்த அவர் சிறிதுகாலம் பத்திரிகை நிருபராகவும் செயற்பட்டார்.

1971 காலப்பகுதியில் அரசியலுக்குள் பிரவேசித்த அவர், ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கமான இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் உத்தியோகத்தராக இணைந்து செயற்படத் தொடங்கினார். ஜே.ஆர். ஜயவர்தன, ரணசிங்க பிரேமதாச, காமினி திஸாநாயக்க போன்ற ஐ.தே.கவின் மூத்த தலைவர்களுடன் நேரடி – நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தார்.

தொழிற்சங்க மற்றும் அரசியல் பயணத்தின்போது ஆரம்பம் முதலே பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்காக துணிந்து குரல் கொடுத்த அவர், தொழிலாளர்களுக்காக போராட்டங்களையும் முன்னெடுத்து – தீர்வுகளை பெற்றுக்கொடுத்தார். இதன்காரணமாகவே மக்கள் மனங்களில் இன்றும் அவர் தொழிற்சங்க தலைவராக வாழ்கின்றார். மலையக அரசியல் தலைவர்களும் இவர்மீது அதிக மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தனர். தற்போதுள்ளவர்களும் வைத்துள்ளனர்.

தொழிலாளர்களின் நலன்கள் தொடர்பாகவும் அவர்களின் சட்டங்கள் தொடர்பாகவும் ஆழமான அறிவையும் சிந்தனையையும் கொண்ட அமரர் கே. வேலாயுதம், தொழில் சட்டங்கள் தொடர்பாக பல்வேறு நாடுகளுக்கும் சென்று அது தொடர்பான கலந்துரையாடல்களிலும் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டவர். கல்வி, அனுபவம், ஆளுமை ஆகியவற்றால் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியிலும் நெடுநாள் இருந்தனர். தொழிற்சங்க கல்வி என்ற கட்டமைப்பை இவரே ஏற்படுத்தினார். அதன்மூலம் பலருக்கு முன்நோக்கி பயணிக்க களம் அமைத்துக்கொடுத்தார்.

ஊவாவில் மாகாண சபை உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர், பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் என அரசியல் கட்டமைப்பிலும் பல உயர் பதவிகளை வகித்துள்ளார்.

அதேவேளை, தொழிற்சங்கத்துக்காக மட்டுமல்ல மலையக தமிழர்களின் கலை, கலாசார – பண்பாட்டு விழுமியங்களையும் பாதுகாப்பதற்கும் பல நடவடிக்கைகளை முன்னெடுத்தவர். குறிப்பாக
ஊவா மாகாணத்தில் தமிழ் சாகித்திய விழாக்களையும் கலை, கலாசார விழாக்களையும் முன்னின்று நடத்தியவர். கல்விசார் சமூகத்துடன் நல்ல உறவைப் பேணிவந்ததுடன் அவர்களின் கருத்துக்களுக்கு என்றும் மதிப்பளித்தவர்.

நல்லாட்சி அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின்போது, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தனிவீட்டுத் திட்டத்தை ஆரம்பித்தபோது அவர்களுக்கு அதற்கான ஒரு உறுதிப்பத்திரத்தையும் வழங்க வேண்டும் என்பதில் உறுதியான நின்று – அதற்காக முழுவீச்சுடன் செயற்பட்டனர். பசுமைபூமி திட்டம்மூலம் மலையக மக்களுக்கு காணி உரிமை கிடைக்க பிள்ளையார்சுழிபோட்டவர். தொழிற்சங்க பலத்தை பயன்படுத்தி தோட்ட கம்பனிகளையும் வழிக்குகொண்டுவந்தனர்.

46 வருடங்களாக ஐ.தே.கவில் பயணித்த அவர், கட்சித் தாவல் என்ற பேச்சிற்கே தனது அரசியலில் இடம் கொடுக்காத ஒருவர். ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கட்சியை விட்டு வெளியேறிய வேளையிலும், இவர்தான் கொண்ட கொள்கையில் விடாப்பிடியாக நின்றவர். பட்டம் பதவிகளுக்காக என்றும் ஆசைப்படாத வித்தியாசமான ஒரு தொழிற்சங்க வாதியாகவும் அரசியல் வாதியாகவும் செயற்பட்டவர்.

ஐக்கிய தேசியக் கட்சியையே தனது உயிர் மூச்சாக நினைத்து செயற்பட்டவர். என்றுமே எதிர்க்கட்சியில் அமரத் தயங்காதவர்.
தான் உயிருடன் இருக்கும் வரை கடுகளவும் மக்களுக்கும், கட்சிக்கு துரோகம் இழைக்காத ஒருவர். மக்களுக்காகவே அரசியல் என்பதற்கும் அதேபோல் தொழிலாளர்களுக்காகவே தொழிற்சங்கம் என்பதற்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய வேலாயுதம் அவர்கள், எம்மை விட்டு பிரிந்திருந்தாலும் அவரின் கொள்கை வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றது.

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் என்றால் வேலாயுதம் எனக்கூறுமளவுக்கு அதன் பரிமாண வளர்ச்சியில் இவருக்கு பெரும் பங்குண்டு. பல மலையக இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்துள்ளார்.

முறிந்து விழுந்தது பாரிய மரம் – 3 மணிநேரம் போக்குவரத்து தடை!

தலவாக்கலை – டயகம பிரதான வீதியில் லிந்துலை – அகரகந்தை பகுதியில் இன்று (13) அதிகாலை பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததால் அவ்வீதியினூடான போக்குவரத்து தடைபட்டது.

இதனையடுத்து அப்பிரதேச வாசிகள் மற்றும் லிந்துலை பொலிஸார் ஆகியோர் இணைந்து வீதியின் குறுக்கே வீழ்ந்த மரத்தினை வெட்டி அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தனர். இதனையடுத்து போக்குவரத்து வழமைக்கு திரும்பியது.

குறித்த மரம் முறிந்து வீழ்ந்ததால் சுமார் மூன்று மணித்தியாலயத்திற்கு மேல், போக்குவரத்து தடைபட்டிருந்தது. இதனால் டயகம, அக்கரப்பத்தனை, மெராயா ஆகிய பகுதிகளுக்கு சென்ற பொது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.

அத்தோடு தொலைபேசி இணைப்புகள் மீது முறிந்து வீழ்ந்ததால் அப்பகுதிக்கான தொலைதொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

‘முகக்கவசம் அணியாவிட்டால்கூட கைது’ – பொலிஸார் எச்சரிக்கை

கொரோனா வைரஸின் கொடூரத்தை நாட்டு மக்கள் இன்னும் உணரவில்லை. எனவே, கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் பேரு நாட்டின் நிலைமை ஏற்படும். புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிடவேண்டிய தேவையும் இதனால்தான் ஏற்பட்டுள்ளது – என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண  தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ பேரு நாடு ஆரம்பத்தில் மிகவும் சிறப்பான முறையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தியது, எனினும், அதன்பிறகு அந்நாட்டு மக்கள் சுகாதார நடைமுறைகளையும், அரச அறிவித்தல்களையும் உரியவகையில் கடைபிடிக்காததால் வைரஸ் வேகமாக பரவியது. சனத்தொகை அடிப்படையில் ஒப்பிட்டால் அந்நாட்டில்தான் அதிக மரணங்களும் இடம்பெற்றுள்ளன.

எமது நாட்டிலும் கொரோனா வைரஸ் பரவலை நாம் சுமார் ஒன்றரை மாதங்களில் கட்டுப்படுத்தினோம்.ஏனைய நாடுகளில் கிராமத்துக்கு கிராமம் மரணங்கள்,குடியிருப்புகளில் மரணங்கள் என வைரஸின் கொடூரத்தன்மை உணரப்பட்டது. இங்கு 13 பேர்தான் உயிரிழந்துள்ளனர். கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் 2ஆவது இடத்தில் இருக்கின்றோம். எனவே, இந்த வைரஸின் கொடூரத்தன்மையை நாட்டு மக்கள் இன்னும் உணரவில்லை.

அதனால்தான் சிலர் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதில்லை.
இதுவரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறுபவர்கள்தான் கைது செய்யப்பட்டனர், புதிய வர்த்தமானி அறிவித்தல் வந்ததும் பொதுவெளியில் சமூகஇடைவெளியைப் பின்பற்றாதவர்கள், முகக்கவசம் அணியதாவர்கள், சுகாதார நடைமுறைகளை பின்பற்ற மறுப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள், அப்பாவி மக்களை ஒடுக்குவது இதன் நோக்கம் அல்ல, மாறாக வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தி மக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே இலக்காகும்.

அதேவேளை, தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நீடிக்குமா அல்லது தளர்த்தப்படுமா என்பது மக்களின் நடத்தையிலேயே தங்கியுள்ளது. உரிய வகையில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றினால் சாதகமான நடவடிக்கைகளை முன்னெடுக்கமுடியும் என்பதுடன், சுகதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றுமாறு மீண்டும் கேட்டுக்கொள்கின்றோம். ‘ – என்றார்.

’20’ இற்கு பௌத்த பீடங்கள் எதிர்ப்பு – கடும் நெருக்கடியில் அரசு!

ஜனாதிபதி கோட்டாபய அரசு கொண்டு வரும் அரசமைப்புக்கான இருபதாவது திருத்தத்துக்கு எதிராக பெளத்த மத பீடங்கள் திடீரெனக் கிளர்ந்துள்ளன என்ற செய்தி கொழும்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

சர்வாதிகாரத்துக்கு வழி செய்யும் இந்த அரசமைப்புத் திருத்த முயற்சிகளைத் தோற்கடிக்குமாறு பெளத்தத்தின் நான்கு பிரதான மத பீடங்களில் இரண்டான அமரபுர பீடமும், ராமன்ய பீடமும் இன்று பகல் பகிரங்க செய்தியாளர் மாநாடு கூட்டி, அறிக்கை வெளியிட்டு அரசியல்தலைவர்களையும் பொதுமக்களையும் கோரியிருக்கின்றன.

பெளத்தத்தின் மற்றைய இரு மதபீடங்களான அஸ்கிரிய பீடமும், மல்வத்தை பீடமும் கூட இந்த நிலைப்பாட்டைக் கைக்கொள்ளக் கூடும் என விடயமறிந்த வட்டாரங்கள் ஊகம் தெரிவித்தன.

கோட்டாபயவை ஜனாதிபதி பதவிக்கும் பொதுஜன பெரமுனவை ஆட்சிப்பீடத்துக்கும் கொண்டு வருவதற்கு அயராது உழைத்த நாரஹன்பிட்டிய அபேராம விஹாரையைச் சேர்ந்தவரும், “துறவிகள் குரல்’ அமைப்பின் தலைவருமான முருத்தெட்டுவேகம ஆனந்த தேரர்,

வெல்லம்பிட்டிய விகராதிபதி மெதகொடஅபேதிஸ்ஸ தேரர், எல்லே குணவங்ஸதேரர் போன்ற பலரும் அண்மைக் காலத்தில் இருபதாவது அரசமைப்புத் திருத்தத்துக்கு எதிராகக் கடுமையான கண்டனங்களை பகிரங்கமாக வெளியிட்டு வரும்
சமயத்திலேயே, இன்று பகல் அதிரடிக்காய் நகர்த்தலாக அமரபுர மற்றும் ராமன்யபீடங்களின் சார்பில் அவற்றின் செயலாளர்கள் செய்தியாளர்கள் மாநாடு கூட்டி,இது தொடர்பான பகிரங்க அறிவிப்பைவிடுத்தனர்.

இரண்டு மத பீடங்களினதும்சார்பில் ஒப்பமிடப்பட்ட கூட்டறிக்கைஅங்கு வெளியிடப்பட்டது. அரசமைப்பின் இருபதாவது திருத்தத்துக்கான மூன்றில் இரண்டு பங்குபெரும்பான்மை ஆதரவை நாடாளுமன்றத்தில் பெறுவதற்குத் தீவிரமாக முயற்சித்து வரும் கோட்டாபய அரசுக்கு பெளத்தபீடங்களின் திடீர் கிளர்ச்சி பெரும் பின்னடைவு என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேவேளை, அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை அரசாங்கம் நிறைவேற்றக்கூடாது என வலியுறுத்தி அமரபுர − ராமஞ்ஞ ஆகிய பௌத்த பீடங்களின் மகா சபை வெளியிட்டுள்ள கூட்டறிக்கையை ஐக்கிய மக்கள் சக்தி வரவேற்றுள்ளது.

‘விஜய் சேதுபதியே பொருத்தமானவர்’ – முரளி தெரிவிப்பு

” விஜய் சேதுபதி மிகத் திறமையான ஒரு நடிகர். எனது பயோபிக்கான ‘800’இல் எனது பந்துவீச்சு முறையை அவர் அப்படியே சிறப்பாகச் செய்து காட்டுவார் என்ற நம்பிக்கை உள்ளது.” – என்று இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

முத்தையா முரளிதரனின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் ‘800’ என்கிற திரைப்படம் உருவாகிறது. விஜய் சேதுபதி இதில் முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2021 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் தொடங்கி வருடக் கடைசியில் படம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 800 விக்கெட்டுகளை எடுத்த ஒரே கிரிக்கெட் வீரர் முரளிதரன் தான். ஒரு நாள் போட்டிகளில் 534 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்தத் திரைப்படம் தமிழில் எடுக்கப்படுகிறது. முரளிதரனின் புகழை மனதில் வைத்து இந்தி, வங்காளம், சிங்களம் எனப் பல மொழிகளில் டப்பிங் செய்யப்படவுள்ளது. ஆங்கில சப்டைட்டில்களோடு ஒரு ஆங்கில வடிவமும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் படம் பற்றிப் பேசியிருக்கும் முரளிதரன், “திரைக்கதை தயாரானவுடன், இதில் விஜய் சேதுபதியைத் தவிர வேறு யாரும் சிறப்பாகப் பொருந்தமாட்டார்கள் என்று நினைத்தோம். அவர் மிகவும் திறமையான நடிகர் என நான் நினைக்கிறேன். எனது பந்துவீச்சு முறையை அவர் கண்டிப்பாக அப்படியே செய்து காட்டுவார். அவர் மிக உயர்ந்த நடிகர்களில் ஒருவர் என்பதால் அவரை நான் முழுமையாக நம்புகிறேன். கண்டிப்பாக இந்தப் படத்தில் அவர் அற்புதங்களைச் செய்வார்” என்று கூறியுள்ளார்.

விஜய் சேதுபதி பேசுகையில், “முரளிதரனின் கதையைக் கேட்டது, அவருடன் செலவிட்ட நேரம் எல்லாம் மிக நன்றாக இருந்தது. அவர் எங்கு சென்றாலும் அங்கு ஒரு முத்திரையை ஏற்படுத்தும் வசீகரமான ஆளுமை. அவரது வாழ்க்கை எனக்குப் பிடிக்கும். ஏனென்றால் ரசிகர்கள் அவரைக் களத்தில், ஆட்டத்தில் பார்த்திருக்கிறார்கள். ஆனால், ஒரு சிலர்தான் களத்தைத் தாண்டி அவரது ஆளுமையைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். மிகவும் போற்றத்தகுந்த, நேசிக்கத்தகுந்த மனிதர். மிகவும் அழகான மனிதர், அவரது கதை கண்டிப்பாகச் சொல்லப்பட வேண்டியது” என்று கூறியுள்ளார்.

நாட்டில் மேலும் 51 பேருக்கு கொரோனா தொற்று

இலங்கையில் மேலும் 51 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இன்று (12) மாலை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மினுவங்கொடை தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிப் பழகிய 36 ​பேருக்கும் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 15 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மினுவாங்கொட கொத்தணிபரவல்மூலம் இதுவரையில் ஆயிரத்து 397 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

இறைவரித் திணைக்களத்தின் திறனை மேம்படுத்துவது குறித்து ஆராய்வு!

0
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. வரி வருவாயை விரிவுபடுத்துதல், வரி இணக்கத்தை அதிகப்படுத்துதல் மற்றும் நிலுவையில் உள்ள...

களுத்துறை மண்ணில் கல்வி கௌரவ விழா!

0
களுத்துறை மண்ணில் கல்வி கௌரவ விழா! கல்வி அமைச்சின் பெருந்தோட்டப் பாடசாலைகள் அபிவிருத்திக் கிளையின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சின்னையா ஜெயக்குமாருக்கான வரவேற்பு நிகழ்வும், களுத்துறை மாவட்டத்தின் தமிழ் பெருந்தோட்ட பாடசாலைகளின் அதிபர்களையும், ஓய்வுநிலை அதிபர்களையும்...

கலமுதுனை தமிழ் வித்தியாலயத்தில் உதயமாகிறது பழைய மாணவர் சங்கம்!

0
நூற்றாண்டு நோக்கிய பயணம்: கலமுதுனை தமிழ் வித்தியாலயத்தில் உதயமாகிறது பழைய மாணவர் சங்கம்! தொலஸ்பாகை, கலமுதுனை தமிழ் வித்தியாலய பழைய மாணவர் சங்க அங்குரார்ப்பன நிகழ்வு எதிர்வரும் மே 2 ஆம் திகதி பாடசாலை...