Home Blog Page 3823

மல்லியப்பு சந்தியில் விபத்து – ஒருவர் காயம்!

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் மல்லியப்பு சந்தி பகுதியில் இன்று (12.10.2020) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். அவர் சிகிச்சைக்காக டிக்கோயா, கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கொட்டகலையிலிருந்து அட்டன் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள், அட்டனிலிருந்து கொட்டகலை நோக்கி சென்ற காருடன் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் இருவருக்கிடையில் ஏற்பட்ட போட்டியால் இருவரும் வேகமாக பயணித்துள்ளனர். இதனையடுத்து இரு சைக்கிள்களும் ஒன்றுடன் ஒன்று மோதுண்டதில் ஒரு மோட்டார் சைக்களில் காரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதனால் காரும், மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளன. மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மற்றைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தப்பிச்சென்றுள்ளார். பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

க.கிசாந்தன்

‘கொரோனா மட்டுமல்ல சீரற்ற காலநிலையும் சவாலாக மாறிவிட்டது’

கொரோனா அச்சத்துக்கு மேலதிகமாக சீரற்ற காலநிலையும் பெருந்தோட்ட துறை மக்களின் வாழ்க்கையில் சவாலாக மாறியுள்ளது என்று சட்டத்தரணியான அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

கடுமையான மழை மண்சரிவு காற்று போன்ற இயற்கை அனர்த்தங்கள் பற்றி விழிப்பாக இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்படுகின்றது. ஆனால் ஒழுகும் கூரை தற்காலிக குடிசை பாதுகாப்பு இல்லாத குடியிருப்பு அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் எமது மக்கள் எப்படி தங்களை இவ்வாறான அனர்த்தங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பது பற்றி எதுவித விளக்கங்களுமே தரப்படுவதில்லை.

மண்சரிவு அபாயம் காரணமாக வெளியேறுங்கள் என்ற அறிவிப்பு மாத்திரமே வெளியிடப்படுகிறது. எங்கு எப்படி எவ்வளவு காலத்துக்கு மாற்று இடங்களில் தங்கியிருப்பது என்று எவரிடமுமே விளக்கங்களோ திட்டங்களோ இல்லை.ஏற்கனவே இவ்வாறான அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பலர் வருடக்கணக்காக தற்காலிக கொட்டகைகளிலேயே வசித்து வருகிறார்கள்.

தீவிபத்து அல்லது வேறு அனர்த்தங்கள் ஏற்படும் போது மாத்திரம் அவர்களுக்கு சிறு சிறு நிவாரணம் வழங்குவதோடு மக்கள் பிரதிநிதிகள் எனப்படுபவர்களும் தங்களின் கடமைகளை முடித்துக் கொள்கிறார்கள்.

ஆனால் அதன் பின்னர் இம்மக்களின் பிரச்சினைகள் எவ்வாறு தீர்க்கப்படுகின்றன என்பது பற்றி எதுவிதுமான அக்கறையும் நடவடிக்கையும் எடுக்கப்படுவதே இல்லை.
மக்களின் நலனை பற்றி கடந்த காலங்களில் தேர்தல் மேடை பிரசாரங்களில் ஒலித்ததுடன் சரி அதன் பின்னர் இந்த மக்களை திரும்பிப் பார்ப்பார் யாருமில்லை.
எங்களை தெரிவு செய்தால்தான் உங்கள் வாழ்வு ஒளிமயமாகும் என்றவர்கள் எங்கு ஒளிந்திருக்கிறார்கள் என்றும் தெரியவில்லை.

ஆகவே இனியாவது மக்களும் ஓரளவாவது நிலைமைகளை புரிந்து கொண்டு செயற்பட வேண்டும். மக்கள் நலனுக்காக சம்ந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நானும் என்னால் முடிந்தவரையில் அழுத்தங்களை வழங்கிக்கொண்டிருக்கிறேன் எனவும் அனுசா சந்திரசேகரன் தெரிவித்தார்.

அனுஷ்கா எடுத்துள்ள திடீர் முடிவு

அனுஷ்கா நடிப்பில் வெளியான சைலன்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாததால், அவர் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.

நடிகை அனுஷ்கா, கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான பாகமதி படத்திற்கு பின், சுமார் 2 ஆண்டுகள் சைலன்ஸ் படத்தை தவிர்த்து எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார். இப்படத்தின் வெற்றியை எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால் படமோ எதிர்பார்த்த வரவேற்பை பெறாததால், தற்போது அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார் அனுஷ்கா.

பாகுபலி, ருத்ரமாதேவி போன்ற சரித்திர கதையம்சம் உள்ள படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதால், அடுத்ததாக புராண கதையில் நடிக்க அனுஷ்கா திட்டமிட்டுள்ளாராம். சகுந்தலம் என்ற புராண படத்தில் நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடக்கிறதாம். இந்த படத்தை ருத்ரமாதேவி படத்தை இயக்கி பிரபலமான குணசேகர் இயக்குகிறார்.

விசுவாமித்ர முனிவருக்கும், மேனகைக்கும் பிறந்த சகுந்தலா, துஷ்யந்தனை காதலிக்கிறார். பின்னர் துருவாச முனிவர் கோபத்துக்கு ஆளாகி சாபம் பெற்று சகுந்தலை காதலையே துஷ்யந்தன் மறக்கும் நிலை ஏற்படுகிறது. பல்வேறு கஷ்டங்களுக்கு பிறகு துஷ்யந்தனுடன் எப்படி இணைகிறார் என்பதே கதை.

இதில் சகுந்தலை வேடத்தில் நடிக்க அனுஷ்காவை படக்குழுவினர் அணுகி உள்ளனர். ஏற்கனவே சகுந்தலை வாழ்க்கையை மையமாக வைத்து சில புராண படங்கள் வந்துள்ளன. மறைந்த கர்நாடக இசைப்பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி நடிப்பில் 1940-ல் சகுந்தலை படம் வெளிவந்துள்ளது. 1961-ல் அசாம் மொழியிலும் 1965-ல் மலையாளத்திலும் சகுந்தலை கதை படமாகி வெளியானது.

4,791 பேருக்கு கொரோனா – 3,317 பேர் குணமடைவு! 1,461 பேர் சிகிச்சையில்!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 10 இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.  இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3,317 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் ஆயிரத்து 461 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதல் இற்றைவரை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 791 ஆக அதிகரித்துள்ளது.

இதில் மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை கொத்தணி பரவலாலேயே அதிகளவானோருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. இன்று இதுவரையில் 39 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஹட்டனில் ஆணின் சடலம் மீட்பு! கொலையா என பொலிஸார் தீவிர விசாரணை!!!

ஹட்டன் , ஹிஜ்ஜிராபுர பகுதியில் வீடொன்றினுள் இறந்தநிலையில் ஆணொருவரின் சடலம் இன்று (12.10.2020) மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். வீட்டு உரிமையாளர் வழங்கி தகவலினை அடுத்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்டவர் பழணியாண்டி, வயது 60 மதிக்கதக்கவர் என்றும் இவர் ஒரு ஆட்டோ ஓட்டுநனர் என்றும்  ன்று நாளுக்கு முன் இறந்து இருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தனது வீட்டுக்குள் முன்னுள்ள வீதியில் கடந்த 2 நாட்களுக்கு முன் குறித்த நபர் முச்சக்கர வண்டியினை நிறுத்தி விட்டு சென்ற நிலையில் திரும்பி தனது முச்சக்கர வண்டியினை எடுக்காததால் சந்தேகம் கொண்ட வீட்டு உரிமையாளர் அவரின் குடும்பத்தினருக்கு அறிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து அவரின் உறவினர்கள் இவர் பற்றி தகவல் எதுவும் தெரியாது என தெரிவித்ததனை அடுத்து உரிமையாளர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.அதனை தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுத்த பொலிஸார் அவர் நிர்வாணமாக வீட்டினுள் இறந்து கிடப்பதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் கூலிக்காக இந்த வீட்டில் தனது 2வது முறை திருமணமான மனைவியுடன் வாழ்ந்து வந்தாகவும் 2 நாட்களுக்கு முன் அவரின் மனைவி வீட்டை விட்டு சென்றதாகவும் அதன் பின் குறித்த நபரையும் காணவில்லை. என்றும் மின்சார பட்டியில் மற்றும் தபால் காரர்கள் வந்து கதவு தட்டிய போதும் திறக்கப்படவில்லை என்றும் அயலவர்கள் தெரிவித்தனர்.

குறித்த நபர் நோய்வாய்க் காரணமாக இறந்தாரா அல்லது வேறு ஏதும் காரணங்களால் இறந்தரா என்பது தொடர்பாக பல்வேறு கோணங்களில் அட்டன் கைரேகை அடையாளப் பிரிவு மற்றும் அட்டன் பொலிஸார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

க.கிசாந்தன்

ஊரடங்கு அமுலில் உள்ள பகுதிகளில் வர்த்தக நிலையங்களும் பூட்டு!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள பகுதிகளில் நாளை (13) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வியாழக்கிழமை வரை வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேற்படி பகுதிகளில் ஊரடங்கு அமுலில் இருந்தாலும் மருந்தகங்கள் மற்றும் அத்தியாவசிய உணவுப்பொருள் விற்பனை நிலையங்கள் ஆகியவற்றை திறப்பதற்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
 
எனினும், சுகாதார பாதுகாப்பு நலனைக்கருத்திற்கொண்டே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் 18 பொலிஸ் பிரிவுகளிலும், மன்னாரில் இரு பகுதிகளிலும் ஊரடங்கு அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கட்டுநாயக்கவில் மேலும் 7 பேருக்கு கொரோனா

கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தின் மேலும் 7 பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

அதற்கமைய கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.

‘விவசாயம், வர்த்தகம், சுற்றுலா துறைகளில் ஈடுபட விரும்புபவர்களுக்கு அரிய வாய்ப்பு’

விவசாயம், வர்த்தகம், சுற்றுலா ஆகிய துறைகளில் ஈடுபட விரும்பும் எமது சமூக இளைஞர், யுவதிகள் ஆகியோர் அத்துறைகளில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பம் கிட்டியுள்ளதென்று பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் விடுத்துள்ள அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அவ் அறிக்கையில் “மேற்படி தொழிற் துறையில் ஆற்றலுள்ள எமது சமூக இளைஞர் சமூகத்தினருக்கான அடிப்படை வளங்களை அரசிடமிருந்து பெறக்கூடிய வாய்ப்புக்கள் இருந்து வருகின்றன.

அத்துடன் தொழில் முயற்சி ஆற்றல்களை விருத்தி செய்வதற்கான வசதிகளும் கிடைக்கவுள்ளன. மேலும் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவதே மேற்படி திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்;டத்தின் ஊடாக தொழில் முயற்சிகளில் ஈடுபடுவோருக்கு பெருமளவிலான ஆதாயமும் கிடைக்கவுள்ளது.

ஆகவே 18 வயது தொடக்கம் 45 வயதுள்ள இலங்கை பிரஜைகளிடமிருந்து காணி அமைச்சு விண்ணப்பப்பங்களை கோருகின்றன. இதன் இறுதித் திகதி இம்மாதம் 31 ஆம் திகதியாகும். அத்திகதிக்குள் விண்ணப்பங்களை பூரணப்படுத்தி, பதிவுத்தபால் மூலம் காணி முகாமைத்துவம் சுற்றுலா அரச தொழில் முயற்சி காணிகள் மற்றும் சொத்துக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சுக்கு அனுப்பப்படல் வேண்டும்.

இதற்கான மேலதிக விபரங்களை மலையக மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர்கள், அமைப்பாளர்கள் மற்றும் காரியால உத்தியோகத்தர்கள் ஊடாகவும்,விண்ணப்பப்படிவங்களை பெற்றுக்கொள்ள முடியும். இச்சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்தி கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றேனென்று மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எம். செல்வராஜா, பதுளை

‘சர்வஜன வாக்கெடுப்பின்றி 20 ஐ நிறைவேற்ற அரசு முடிவு’

சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லாமல் நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் மாத்திரம் 20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் சட்டவியாக்கியானம் சபாநாயகருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதில் 4 சரத்துகளை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையும், சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே சர்வஜன வாக்கெடுப்புக்கு வழிவகுக்கும் சரத்துகளை நீக்கிவிட்டு, மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் மாத்திரம் 20 ஐ நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கைவிடப்பட்ட நிலையில் கண்டி, உடுவலை வீட்டுத்திட்டம்

கண்டி ஹந்தான உடுவலை தோட்டத்தில் வீட்டு வசதிகளற்ற குடும்பங்களில் தேர்தெடுக்கப்பட்ட இருபத்தி ஐந்து குடும்பங்களுக்கு ஏழு பேர்ச் காணியில் வீடுகளை கட்டுவதற்க்கு இரண்டாயிரத்து பதினேழாம் ஆண்டு உடுவல தோட்டத்தில் வீட்டுத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினூடாக இதற்கான ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் நடந்தன. கடந்த பதினெட்டு மாதகாலமாக கட்டுமானப் பணிகள் முடங்கிப்போயுள்ளன. வீட்டு கட்டுமான பணிக்காக அரசால் ஐந்து இலட்சம் ரூபா பணம் வழங்கப்பட்டு வீடுகளை தாமாக அமைத்துக்கொள்ள தொழிலாளர்களுக்கு வசதியளிப்பதே இந்த வேலைத்திட்டம்.

இவ்வீடுகளை அமைக்கும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கட்டம் முடிவடைந்ததும் அதிகாரசபை அதற்கான பணத்தை செலுத்தும். இதுதான் இவ் வீடமைப்புத் திட்டத்தின் அடிப்படை. எனினும் கட்டுமான பணிகள் பல உப கட்டங்கலாக பிரிக்கப்பட்டு. ஒவ்வொரு கட்டடத்திற்கும் குறித்த கட்டுமானப் பணிகள் முடிய அதற்கான பணம் அதிகார சபையின் ஊடாக வழங்கப்பட வேண்டும்.

முதலாம் இரண்டாம் கட்டங்களின் பின்னரான பணம் கடந்த ஒன்றரை வருடகாலமாக வழங்கப்படவில்லை. வீட்டு வசதியற்ற தொழிலாளர்கள் வீடு கிடைக்கும் மகிழ்ச்சியில் கடன உடன்பட்டு வீடுகளை கட்ட ஆரம்பித்தனர். இடைநடுவில் கட்டுமாானம் இடை நிறுத்தப்பட்டமை குறித்து கவலை தெரிவிக்கின்றனர்.

அரசு நிர்வகிக்கும் ஜனவசம தோட்டம் வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் தான் வேலை கிடைக்கின்றது. குறைந்ந வருமானத்தில் வாழ்க்கை வணடியை ஓட்டி கொன்டிருக்கும் இவர்களுக்கு மேலும் கடன்படுவது சாத்தியமல்ல.கட்டுமானம் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளதால் மழையில் நனைந்து சேதமடைந்து வருகின்றது.

கட்டுமான பணிக்காக கொண்டுவரப்பட்ட கட்டுமானப் பொருட்கள் விரயமாகின்றன. இந்த வீடுகளுக்கான தொழிலாளர் குடும்பங்களைத் தேர்ந்தெடுக்கும்போது தோட்டத்தில் தொழில் செய்யாதவர்களுக்கு வீடுகள் வழங்கப்படவில்லை என தோட்டத் தொழில் இல்லாதவர்கள் கூறுகின்றனர். இத்தோட்டப் பகுதிகளில் தோட்டத் தொழிலில் ஈடுபடுபவர்கள் குறைவு. கண்டி நகர் அருகில் இருப்பதால் வெளி வேலைகளுக்காக பலர் வெளியே சென்று விடுகின்றனர்.

ஆர்.நவராஜா

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

இறைவரித் திணைக்களத்தின் திறனை மேம்படுத்துவது குறித்து ஆராய்வு!

0
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. வரி வருவாயை விரிவுபடுத்துதல், வரி இணக்கத்தை அதிகப்படுத்துதல் மற்றும் நிலுவையில் உள்ள...

களுத்துறை மண்ணில் கல்வி கௌரவ விழா!

0
களுத்துறை மண்ணில் கல்வி கௌரவ விழா! கல்வி அமைச்சின் பெருந்தோட்டப் பாடசாலைகள் அபிவிருத்திக் கிளையின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சின்னையா ஜெயக்குமாருக்கான வரவேற்பு நிகழ்வும், களுத்துறை மாவட்டத்தின் தமிழ் பெருந்தோட்ட பாடசாலைகளின் அதிபர்களையும், ஓய்வுநிலை அதிபர்களையும்...

கலமுதுனை தமிழ் வித்தியாலயத்தில் உதயமாகிறது பழைய மாணவர் சங்கம்!

0
நூற்றாண்டு நோக்கிய பயணம்: கலமுதுனை தமிழ் வித்தியாலயத்தில் உதயமாகிறது பழைய மாணவர் சங்கம்! தொலஸ்பாகை, கலமுதுனை தமிழ் வித்தியாலய பழைய மாணவர் சங்க அங்குரார்ப்பன நிகழ்வு எதிர்வரும் மே 2 ஆம் திகதி பாடசாலை...