Home Blog Page 3824

A/L பரீட்சை ஆரம்பம் – கடும் குளிரிரும் மலையக மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்பு

கல்விப் பொதுத் தராதர உயர்தப் பரீட்சை கடும் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இன்று காலை (12.10.2020) ஆரம்பமானது. மலையக பகுதிகளில் இன்று காலையும் ஆங்காங்கே மழை பெய்தது, கடும் குளிரும் நிலவியது. எனினும், மாணவர்கள் உற்சாகத்துடன் பரீட்சை நிலையங்களை நோக்கி சென்றதை காணமுடிந்தது.

கண்டி, நுவரெலியா, மாத்தளை, பதுளை, மொனறாகலை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள மாணவர்கள் நேரங்காலத்தோடு பரீட்சை நிலையங்களுக்கு சென்றதுடன் சுகாதார வழிகாட்டல்களையும் முழுமையாக பின்பற்றிருந்தனர்.

எனினும், ஒரு சில மாணவர்கள் முகக்கவசம் அணிவதற்கு மறந்திருந்தனர். அவ்வாறானவர்களுக்கு பாடசாலை அதிபர்களால் உரிய ஆலோசனை வழங்கப்பட்டு, முகக்கவசம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முகக்கவசம் அணியாமல் பரீட்சை நிலையங்களுக்கு வரக்கூடாது எனவும் ஆலோசனை வழங்கப்பட்டது.

பாடசாலைகளுக்கு முன் கைகளை கழுவுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தொற்றுநீக்கம் செய்யப்பட்டு, சமூக இடைவெளியைக் கடைபிடித்து உரியவகையில் பரீட்சை நிலையங்களும் தயார் செய்யப்பட்டிருந்தன. சில மாணவர்களை பெற்றோர் அழைத்து வந்திருந்தனர்.

அந்தவகையில், அட்டன் கல்வி வலயத்தில் 26 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 3161 மாணவர்கள் பரீட்சை எழுதவுள்ளனர். தமிழ் மொழி மூலம் 1392 மாணவர்களும், சிங்கள மொழி மூலம் 800 மாணவர்களும், தனியார் பரீட்சாத்திகள் 969 பேரும் பரீட்சை எழுத அனுமதியை பெற்றுள்ளனர்.

இம்முறை 3 இலட்சத்து 62 ஆயிரத்து 824 பரீட்சாத்திகள் உயர்தர பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இவர்களில் 3 இலட்சத்து 19 ஆயிரத்து 485 பேர் புதிய பாடத்திட்டத்திலும் 43 ஆயிரத்து 339 பேர் பழைய பாட திட்டத்திலும் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

புதிய பாடத்திட்டத்தில் 2 இலட்சத்து 77 ஆயிரத்து 580 பேர் பாடசாலை மூல பரீட்சாத்திகளாவர். எஞ்சிய 41 ஆயிரத்து 905 பேர் தனியார் பரீட்சாத்திகளாவர். உயர்தர பரீட்சைகளுக்காக நாடளாவிய ரீதியில் 2648 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், 316 ஒருங்கிணைப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

உலகளவில் 3 கோடியே 77 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா – இலங்கையிலும் எகிறும் எண்ணிக்கை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 லட்சத்து 81 ஆயிரத்தை கடந்தது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

தற்போதைய நிலவரப்படி, 3 கோடியே 77 லட்சத்து 40 ஆயிரத்து 724 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 83 லட்சத்து 12 ஆயிரத்து 45 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 68 ஆயிரத்து 719 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவில் இருந்து 2 கோடியே 83 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 752 ஆக அதிகரித்துள்ளது.

மும்பை அணி வெற்றிநடை – புள்ளி பட்டியலிலும் முதலிடம்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லியை வீழ்த்தி மும்பை அணி 5ஆவது வெற்றியை பதிவு செய்தது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அபுதாபியில் நேற்றிரவு நடைபெற்ற 27-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொண்டது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் ஓவரிலேயே பிரித்வி ஷா (4 ரன்) கேட்ச் ஆனார். ஆனால் இந்த முறை மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவான் நிலைத்து நின்று ஆடினார். ஆனால் பெரிய அளவில் அவரால் அதிரடியாக ஆட முடியவில்லை. மறுமுனையில் ரஹானே (15 ரன்), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (42 ரன்), ஸ்டோனிஸ் (13 ரன்) சீரான இடைவெளியில் வெளியேறினர்.

20 ஓவர் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்தது. இந்த சீசனில் முதல்முறையாக அரைசதம் கடந்த ஷிகர் தவான் 69 ரன்களுடனும் (52 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்), அலெக்ஸ் கேரி 14 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

பின்னர் 163 ரன்கள் இலக்கை நோக்கி மும்பை அணி ஆடியது. கேப்டன் ரோகித் சர்மா 5 ரன்னில் ஏமாற்றினாலும் குயின்டான் டி காக்கும், சூர்யகுமார் யாதவும் ஜோடி சேர்ந்து அரைசதம் விளாசி அணியை தூக்கி நிறுத்தினர்.

டி காக் 53 ரன்களில் (36 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) அஸ்வின் சுழலில் சிக்கினார். சூர்யகுமார் யாதவ் 53 ரன்களில் (32 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) ரபடாவின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா ரன் இன்றியும், இஷான் கிஷன் 28 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர். இதனால் கடைசி பகுதியில் சற்று தடுமாறிய மும்பை அணி வெற்றிக்காக கடைசி ஓவர் வரை போராட வேண்டியதாகி விட்டது.

மும்பை அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 166 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பொல்லார்ட் (11 ரன்), குருணல் பாண்ட்யா (12 ரன்) அவுட் ஆகாமல் நின்றனர்.

7-வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணிக்கு இது 5-வது வெற்றியாகும். இதன் மூலம் 10 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தை எட்டிப்பிடித்தது. டெல்லிக்கு 2-வது தோல்வியாகும்.

டோனியின் மகளுக்கு மிரட்டல் விடுத்த சிறுவன் கைது!

மோசமான ஆட்டத்தால் தோனியின் மகளுக்கு எதிராக மிரட்டல் விடுத்ததற்காக 12ஆம் வகுப்பு மாணவர் ஒரு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஐ.பி.எல் கிரிக்கெட் செப்டம்பர் 19ஆம் திகதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ச்சியாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறது.

முதல்போட்டியில் மும்பை கிங்ஸ் அணிக்கு எதிரானப் போட்டியில் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வியைத் தழுவியது.

பின்னர், பஞ்சாப் அணிக்கு எதிரான ஒரு வெற்றியைப் பதிவு செய்தது. பின்னர், கொல்கத்தா அணிக்கு எதிரானப் போட்டியில் மீண்டும் தோல்வியைத் தழுவியது. இந்தப் போட்டியில் நல்லத் தொடக்கம் கிடைத்த போதிலும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டத்தால் சென்னை தோல்வியைத் தழுவியது.

டோனியும் இந்தப் போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்தநிலையில், சமூக வலைதளங்களில் இருக்கும் சிலர் டோனி , சாக்ஷி தோனியின் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஒழுங்காக விளையாடவில்லையென்றால் டோனியின் ஐந்து வயது மகளான ஷிவா தோனியை பாலியல் வன்கொடுமை செய்துவிடுவோம் என்று அருவருக்கத்தக்க வகையில் பதிவிடப்பட்டது.

இது குறித்து ராஞ்சி பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரைத்து வந்தனர்.

தோனியின் மைனர் மகளுக்கு எதிராக மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குஜராத்தின் முந்த்ராவில் இருந்து 16 வயது சிறுவன் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

நம்னா கபயா கிராமத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவர் கைது செய்யப்பட்டார்” என்று கட்ச் (மேற்கு) காவல் கண்காணிப்பாளர் சவுரப் சிங் தெரிவித்தார்.

இலங்கைக்கு மீண்டும் கொரோனா வந்தது எப்படி? மர்மம் நீடிப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை தாக்கத்தின் மூலம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் புலனாய்வுப் பிரிவினரும், சுகாதார அதிகாரிகளும் இணைந்து வைரஸ் எவ்வாறு பரவியது என்பதை கண்டறியும் கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.

மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த திவுலப்பிட்டிய பகுதி பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து அத்தொழிற்சாலை ஊழியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் பலருக்கு வைரஸ் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டது.  அவர்களுடன் நெருங்கி பழகியவர்களுக்கும் வைரஸ் பரவியுள்ளது.

இதன்படி மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை கொரோனா கொத்தணி பரவல்மூலம் நாட்டில் இன்று (11) காலைவரை ஆயிரத்து நூறுக்கும் மேற்பட்டவர்களுக்கு வைரஸ் தொற்றியுள்ளமை பீசீஆர் பரிசோதனைமூலம் கண்டறியப்பட்டுள்ளது. நேற்று (10) மாத்திரம் 4 ஆயிரத்து 754 பீசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திவுலப்பிட்டிய பெண்ணுக்கு எவ்வாறு வைரஸ் தொற்றியது என்பது தொடர்பில் பலகோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.இந்நிலையில்  இது தொடர்பில் இராணுவத்தளபதியிடம் வினவியபோது,

” திவுலப்பிட்டிய பெண் காய்ச்சால் காரணமாக 30 ஆம் திகதியே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அத்தொழிற்சாலையில் பணிபுரிந்த ஊழியர்கள் சிலருக்கு 21 ஆம் திகதி முதலே இருமல், தடிமல் போன்ற நோய் அறிகுறிகள் இருந்துள்ளன என்று தொழிற்சாலையின் வைத்திய பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கும், மற்றையவர்களுக்கு தொற்றாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதுமே எமது பிரதான பணியாக இருக்கின்றது. வைரஸ் தொற்றின்மூலம் இன்னும் உரியவகையில் கண்டறியப்படவில்லை.” – என்றார்.

நாட்டில் மேலும் 60 பேருக்கு கொனோர தொற்று

நாட்டில் மேலும் 60 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை பீசீஆர் பரிசோதனைமூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மினுவங்கொட ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 48 ​பேருக்கும், அவர்களுடன் நெருங்கி பழகிய 12 பேருக்குமே இவ்வாறு வைரஸ் பரவியுள்ளது.

இதன்படி திவுலபிட்டிய கொத்தணியில் இதுவரை பதிவாகியுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 307 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் மேலும் 61 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 61 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை பீசீஆர் பரிசோதனைமூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மினுவங்கொட ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிப் பழகிய 22 ​பேருக்கும்,தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 39 பேருக்குமே இவ்வாறு கொரோனா தொற்றியுள்ளது.

இதன்படி திவுலபிட்டிய கொத்தணியில் இதுவரை பதிவாகியுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 247 ஆக அதிகரித்துள்ளது.

மன்னாரில் இரு பகுதிகள் முடக்கம்!

மன்னார் – பட்டித்தோட்டம் மற்றும் பெரியகடை ஆகிய கிராமங்கள் இன்றிலிருந்து மறு அறிவித்தல் விடுக்கப்படும்வரை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன என்று கொரோனா ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காகவே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

119 கொரோனா நோயாளிகள் தலைமறைவா? பொலிஸார் மறுப்பு

கொரோனா தொற்றாளர்கள் 119பேர் தப்பிச் சென்றுள்ளனர் என வெளியாகியுள்ள தகவல் உண்மைக்கு புறம்பானது என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஆடை தொழிற்சாலை கொரோனா வைரஸ் கொத்தணி பரவலுடன் தொடர்புடைய மற்றும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதியாகியுள்ள 119 பேர் தலைமறைவாகியுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இவை உண்மைக்கு புறம்பானவை.

ஆடை தொழிற்சாலையில் கொரோனா வைரஸ் பரவல் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன

அதன்போது வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்கள் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஏனையவர்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த நபர்களுடன் தொடர்பினை பேணியதாக கருதப்படும் நபர்கள் தொடர்பிலும் தகவல்கள் திரட்டப்பட்டு தற்போது அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுடன் தொடர்பு கொண்டவர்கள் எவரேனும் இன்னமும் சமூகத்தில் இருப்பார்களாயின் அவர்களை உடனே தொடர்பு கொண்டு தகவல்களை வழங்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம். அதற்கமைய வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படும் 119 பேர் தலைமறைவாகியுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி உண்மைக்கு புறம்பானது என்றும் அவர் கூறியுள்ளார்.

‘3 லட்சம் ரூபா கொள்ளை’ – பொய் முறைப்பாடு செய்தவர் பசறையில் கைது!

பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள உப தபாலகமொன்றில் கடமையாற்றும் தபால் ஊழியர் ஒருவர் தனது 3 இலட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக பொய்யான முறைப்பாடு செய்ததன் பேரில்   பொலிஸாரால் நேற்று  கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தபால் ஊழியர், பகுதி நேரமாக கணணி நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் பணியை செய்து வந்துள்ளார்.

அவர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக ஒரு தொகை பணத்தை வங்கியிலிருந்து மீள எடுத்து, சம்பள பணத்தை ஊழியர்களுக்கு வழங்கி விட்டு மீதி 3 இலட்சம் ரூபாவுடன் பசறை வீதி 8ஆம் கட்டை பகுதியில் உள்ள வீடு நோக்கி சென்றுள்ளார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரை தாக்கி மிளகாய் தூளை தூவி விட்டு பணத்தை கொள்ளையடித்து சென்றதாக பசறை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். எனினும் அப்பகுதியில் உள்ள சீ.சீ.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து, அவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரது சகோதரியை விசாரித்த போது அவர் கூறியது பொய் என தெரியவந்தது.

குறித்த பணத்தை அவர் தனது மருமகனிடம் கொடுத்து வைத்ததும் தெரியவந்தது. தான் வட்டிக்கு கடனாக பெற்ற பணத்தை திருப்பி செலுத்தாமல் இருக்க இவ்வாறு நாடகமாடியது தெரிய வந்துள்ளது.

பொய்யான தகவலை வழங்கி முறைப்பாடு பதிவு செய்ய முயன்றமைக்கு எதிராக பசறை பொலிஸார்இவர் மீது வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

இறைவரித் திணைக்களத்தின் திறனை மேம்படுத்துவது குறித்து ஆராய்வு!

0
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. வரி வருவாயை விரிவுபடுத்துதல், வரி இணக்கத்தை அதிகப்படுத்துதல் மற்றும் நிலுவையில் உள்ள...

களுத்துறை மண்ணில் கல்வி கௌரவ விழா!

0
களுத்துறை மண்ணில் கல்வி கௌரவ விழா! கல்வி அமைச்சின் பெருந்தோட்டப் பாடசாலைகள் அபிவிருத்திக் கிளையின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சின்னையா ஜெயக்குமாருக்கான வரவேற்பு நிகழ்வும், களுத்துறை மாவட்டத்தின் தமிழ் பெருந்தோட்ட பாடசாலைகளின் அதிபர்களையும், ஓய்வுநிலை அதிபர்களையும்...

கலமுதுனை தமிழ் வித்தியாலயத்தில் உதயமாகிறது பழைய மாணவர் சங்கம்!

0
நூற்றாண்டு நோக்கிய பயணம்: கலமுதுனை தமிழ் வித்தியாலயத்தில் உதயமாகிறது பழைய மாணவர் சங்கம்! தொலஸ்பாகை, கலமுதுனை தமிழ் வித்தியாலய பழைய மாணவர் சங்க அங்குரார்ப்பன நிகழ்வு எதிர்வரும் மே 2 ஆம் திகதி பாடசாலை...