Home Blog Page 3825

தனிமைப்படுத்தல் முகாமாக மாறியது ஶ்ரீபாத கல்லூரி – மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பிவைப்பு!

ஹட்டன், ஶ்ரீபாத கல்வியற் கல்லூரி,தற்காலிக தனிமைப்படுத்தல் முகாமாக இயங்கவுள்ளது. இதற்காக மேற்படி கல்லூரியை இராணுவம் இன்று (11) பொறுப்பேற்றதாக கல்லூரியின் பீடாதிபதி கே. துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

அத்துடன், இங்கு தங்கியிருந்த கல்விபயின்ற மாணவர்களுக்கு மறுஅறிவித்தல் விடுக்கப்படும்வரை விடுறை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் பாதுகாப்பான முறையில் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இதற்காக இராணுவம் 10 பஸ்களை ஈடுபடுத்தியது.

மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை கொரோனா கொத்தணி பரவலையடுத்து நாட்டில் ஆங்காங்கே கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுவருகின்றனர். அவர்களுடன் பழகியவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றனர்.

இந்நிலையிலேயே முன்பாதுகாப்பு ஏற்பாடாக ஶ்ரீதாப கல்வியற் கல்லூரியும் கொரோனா தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

க.கிசாந்தன்

இலங்கை – 4,628 பேருக்கு கொரோனா -3,307 பேர் குணமடைவு! 1,308 பேருக்கு சிகிச்சை

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் ஒருவர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3,307 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் ஆயிரத்து 308 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதல் இற்றைவரை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 628 ஆக அதிகரித்துள்ளது.

இதில் மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை கொத்தணி பரவலாலேயே அதிகளவானோருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

கித்துள் மரம் முறிந்து விழுந்ததால் கம்பளையில் போக்குவரத்து தடை

கம்பளை, போவல பகுதியில் இருந்து உனம்புவ என்ற கிராமத்துக்கு செல்லும் பிரதான வீதியில் பாரிய கித்துள் மரமொன்று முறிந்து வீழ்ந்ததால் அப்பகுதிக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டதுடன், மின்சார தடையும் ஏற்பட்டது.
கம்பளை பகுதியில் நேற்று   (10) இரவு கடும் மழைபெய்த நிலையிலேயே மரம் முறிந்து விழுந்துள்ளது. இதனால் நேற்று   இரவு முதல் இன்று (11) மதியம்வரை போக்குவரத்து தடைபட்டிருந்தது.  அத்துடன், மின் கம்பிகள்மீது மரம் விழுந்ததால் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில் மின் இணைப்பை வழங்கும் நடவடிக்கையில் இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று காலை முதல் ஈடுபட்டனர். மரத்தை வெட்டி அகற்றும் பணியும் இடம்பெற்றுவருகின்றது.
மரம் முறிந்து விழும்போது இருவர் பாதைவேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர் எனவும், அவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பினர் எனவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

அரசின் விதிமுறையைமீறி ஹட்டனில் ஆராதனைக் கூட்டம்! 145 பேருக்கு எச்சரிக்கை!!

ஹட்டன் பகுதியில் உள்ள கத்தோலிக்க மதஸ்தானமொன்றில் 50 இற்கும் மேற்பட்டவர்களுடன் ஆராதனை நடத்திய ஸ்தானத்தின் பொறுப்பாளருக்கு, ஹட்டன் பொது சுகாதார பரிசோதகர்கள் கடும் எச்சரிக்கை விடுத்தனர்.
 
குறித்த தேவ ஆராதனையில் 50 இற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டிருப்பதாக கிடைத்த தகவலுக்கு அமையவே குறித்த நிலையம் சோதனைக்குட்படுத்தப்பட்டது.
 
அதன் போது 145 பேர் இந்த ஆராதனையில் கலந்து கொண்டிருந்தனர். குறித்த நபர்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றியிருந்த போதிலும் அரசாங்கம் அங்கீகரிக்கப்பட்ட 50 பேரை விட அதிகமானவர்கள் கலந்து கொண்டிருந்ததனால் இவர்கள் எச்சரிக்கப்பட்டனர்.
 
இனிவரும் காலங்களில் குறித்த நடைமுறைகளை பின்பற்றாவிட்டால் வழக்கு தாக்கல் செய்யப்போவதாகவும் பொது சுகாதா பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
 
க.கிசாந்தன்

மீண்டும் பந்துவீச்சு சர்ச்சையில் சிக்கிய சுனில் நரேன்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் சுனில் நரேனின் பந்துவீச்சு மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

அபுதாபியில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் 24ஆவது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

இப்போட்டியில் கொல்கத்தா அணியின் பவுலர் சுனில் நரேன் வீசிய கடைசி ஓவரில் மேக்ஸ்வெல்லின் விக்கெட்டை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

இந்நிலையில், பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சுனில் நரேன் பந்துவீசிய விதம் ஐசிசியின் பந்துவீச்சு விதிமுறைகளுக்கு முரணாக இருப்பதாக, கள நடுவர்கள் ஐபிஎல் அமைப்பிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த முறைப்பாட்டால் தற்போது சுனில் நரேன் எச்சரிக்கைப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அடுத்துவரும் போட்டிகளில் சுனில் நரேன் பந்துவீசத் தடையில்லை. ஒருவேளை மீண்டும் நடுவர்கள் முறைப்பாடு செய்யும் பட்சத்தில் ஐபிஎல் தொடர் முழுவதும் சுனில் நரேன் பந்துவீசத் தடை விதிக்கப்படுவார். அதேநேரத்தில் அவரது அணிக்காக அவர் பேட்டிங் செய்யலாம்.

பிசிசிஐ அமைப்பின் பந்துவீச்சு சந்தேக ஆராய்வு குழுவின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்புதான் மீண்டும் நரேன் பந்துவீச அனுமதிக்கப்படுவார்.

சுனில் நரேன் கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து தனது பவுலிங் முறையால் பிரச்னைகளைச் சந்தித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் 70 லட்சம் பேருக்கு கொரோனா – ஒரு லட்சத்து 8 ஆயிரம் பேர் பலி

கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில்  918 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அந்நாட்டின் மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில்  கடந்த 24 மணிநேரத்தில் 74 ஆயிரத்து 383 பேருக்கு புதிய பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் 70 லட்சத்து 53 ஆயிரத்து 806 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. இதில் 60 லட்சத்து 77 ஆயிரத்து 976 பேர் குணமடைந்துள்ளனர். ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 371 பேர் பலியாகியுள்ளனர். 8 லட்சத்து 67 ஆயிரத்து 459 பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

தலவாக்கலையில் ஆட்டோ விபத்து! மூவர் படுகாயம்!! 

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஆட்டோவொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
வட்டகொடை பகுதியிலிருந்து தலவாக்கலை நகரத்திற்கு சென்றுக்கொண்டிருந்த ஆட்டோவே நேற்றிரவுதலவாக்கலை – பூண்டுலோயா பிரதான வீதியில் ஒலிரூட் பகுதியில் வீதியை விட்டு விலகி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஆட்டோ ஓட்டுநருக்கு ஆட்டோவின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரும் படுங்காயமடைந்த நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். இதில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டி சாரதி உட்பட மூவரும் மது போதையில் இருந்ததாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் தலவாக்கலை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.
க.கிசாந்தன்

நாட்டில் மேலும் 103 பேருக்கு கொரோனா தொற்று!

மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை கொரோனா கொத்தணிபரவல் மூலம் நாட்டில் மேலும் 103 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

மேற்படி ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் இருவர் மற்றும் ஊழியர்களுடன் தொடர்பைபேணிய 101 பேர் என மொத்தம் 103 பேருக்கு வைரஸ் பரவியுள்ளமை பீசீஆர் பரிசோதனைமூலம் உறுதியாகியுள்ளது.

மினுவாங்கொட கொத்தணி பரவல்மூலம் இதுவரையில் ஆயிரத்து 186 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

கோட்டைவிட்டது பஞ்சாப் – 2 ஓட்டங்களால் கொல்கத்தா வெற்றி

பஞ்சாப் அணியுடான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் கொல்கத்தா அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். 2020 கிரிக்கெட் போட்டியின் இன்றைய 24ஆவது ஆட்டத்தில் லோகேஷ் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதியது.  .

இதில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற கொல்கத்தா அணியின் தலைவர் தினேஷ் கார்த்திக் பேட்டிங்கை தெரிவு செய்தார். கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுல் திரிபாதி-ஷுப்மன் கில் களமிறங்கினர். பஞ்சாப் பந்துவீச்சாளர் சமி வீசிய பந்தில், ராகுல் திரிபாதி(4 ரன்கள்) பவுல்ட் ஆனார். அடுத்து களமிறங்கிய நிதிஷ் ரானா 2 ரன்களில் ரன் அவுட் ஆனார்.

தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து கொல்கத்தா அணி சற்று தடுமாறியது. மறுமுனையில் நிதானமாக ஆடிய ஷுப்மன் கில் 57 ரன்கள் எடுத்த நிலையில், ரன் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த இயன் மார்கன் 23 ரன்களிலும் அண்ட்ரே ரசல் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதற்கிடையில் கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் 8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் விளாசி 27 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார். இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது.

இதனை தொடர்ந்து 165 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர். நிதானமாக நிலைத்து நின்று ஆடிய இருவரும் அரை சதத்தைக் கடந்தனர்.

இந்நிலையில் மயங்க் அகர்வால் 56 ரன்கள் எடுத்த நிலையில் கொல்கத்தா பந்துவீச்சாளர் பிரசித் வீசிய 15வது ஓவரில் கேட்ச் ஆகி விக்கெட்டை இழந்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் 16 ரன்களில் பவுல்ட் ஆனார். அடுத்து வந்த சிம்ரன் சிங்(4 ரன்கள்) பிரசித் பந்துவீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய கே.எல்.ராகுல் 58 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து, பிரசித் பந்துவீச்சில் பவுல்ட் ஆனார். ஆட்டத்தின் இறுதியில் 2 பந்துகளில் 7 ரன்கள் தேவை என்ற நிலையில் மந்தீப் சிங்கின் விக்கெட் பறிபோனது. இதனால் 1 பந்திற்கு 7 ரன்கள் என்ற நிலை உருவானது. அப்போது சுனில் நரேன் வீசிய கடைசி பந்தை மேக்ஸ்வெல் பவுண்டரியை நோக்கி அடித்தார்.

பந்து பவுண்டரி லைனுக்கு மிக அருகில் சென்று விழுந்ததால் முடிவில் சிறிது குழப்பம் ஏற்பட்டு பின்னர் 4 ரன்கள் வழங்கப்பட்டது. இதன் மூலம் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

‘சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பரீட்சை நிலையங்கள் தயார்’

” பரீட்சை நிலையங்களில் அனைத்து சுகாதார ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. எனவே, புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களை அச்சமின்றி ,அனுப்பிவையுங்கள்.” – என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.
மாலபே ராஹுல மகளிர் பாடசாலைக்கு இன்று (10) கண்காணிப்பு பயணம் மேற்கொண்ட கல்வி அமைச்சர், பரீட்சை நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வை செய்தார். பரீட்சைகள் ஆணையாளர் நாயகமும் இதன்போது சென்றிருந்தார்.
மேற்பார்வை மேற்கொண்ட பின்னர் கருத்து வெளியிடுகையிலேயே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை நாளை நடைபெறவுள்ளது. 2 ஆயிரத்து 936 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

இறைவரித் திணைக்களத்தின் திறனை மேம்படுத்துவது குறித்து ஆராய்வு!

0
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. வரி வருவாயை விரிவுபடுத்துதல், வரி இணக்கத்தை அதிகப்படுத்துதல் மற்றும் நிலுவையில் உள்ள...

களுத்துறை மண்ணில் கல்வி கௌரவ விழா!

0
களுத்துறை மண்ணில் கல்வி கௌரவ விழா! கல்வி அமைச்சின் பெருந்தோட்டப் பாடசாலைகள் அபிவிருத்திக் கிளையின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சின்னையா ஜெயக்குமாருக்கான வரவேற்பு நிகழ்வும், களுத்துறை மாவட்டத்தின் தமிழ் பெருந்தோட்ட பாடசாலைகளின் அதிபர்களையும், ஓய்வுநிலை அதிபர்களையும்...

கலமுதுனை தமிழ் வித்தியாலயத்தில் உதயமாகிறது பழைய மாணவர் சங்கம்!

0
நூற்றாண்டு நோக்கிய பயணம்: கலமுதுனை தமிழ் வித்தியாலயத்தில் உதயமாகிறது பழைய மாணவர் சங்கம்! தொலஸ்பாகை, கலமுதுனை தமிழ் வித்தியாலய பழைய மாணவர் சங்க அங்குரார்ப்பன நிகழ்வு எதிர்வரும் மே 2 ஆம் திகதி பாடசாலை...